வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, April 05, 2010

குருவாயூர் கோயில்: பிற மதத்தவர் நுழையக்கூடாது என்ற தடை தகர்ந்தது!

பொதுவாக இந்து மதக் கோயில்களில் பிற மதத்தவர் செல்லக்கூடாது என்ற தடை உண்டு; ஏன், விளம்பரப் பலகைகூட இந்து மதக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.


குருவாயூர் கோயிலில் இந்த பேதம் நீண்ட காலமாக உண்டு. இப்பொழுது வழக்கு ஒன்றில் கேரள உயர்நீதிமன்றம், ஜேசுதாஸ் குருவாயூர் கோயிலுக்குள் செல்லத் தடையில்லை என்று மண்டையில் அடித்துக் கூறியுள்ளது.

குருவாயூர் கோயிலுக்குள் செல்ல புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாசுக்கு அனுமதி அளிக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலுக்குள் இந்து மதத்-தினரை தவிர வேறு மதத்தினர் யாரும் செல்லக்கூடாது. இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற கச்சேரியில் பாடுவதற்காக புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ் சென்றார்.

அப்போது, அவர் பிற மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்-சினையில் தலையிட்ட அமைச்சர் சுதாகரன், ஜேசுதாசை கோயி-லுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று கூறினார்.

வேறு மதத்தவர்கள் கோயி-லுக்குள் சென்றதால், கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி தோஷம் கழித்த சம்பவங்களும் இதற்குமுன் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், குருவாயூர் கோயிலுக்குள் ஜேசுதாசை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி, கோழிக்கோட்டைச் சேர்ந்த லலிதா பாஸ்கரன் என்பவர் கேரள உயர்நீதி-மன்றத்-தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், குருவாயூர் கோயிலுக்குச் செல்ல ஜேசுதாசுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. அதற்காகப் பொதுநலன் வழக்கு தொடரவேண்டிய அவசியமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர்.

----- நன்றி விடுதலை (04.04.2010)

7 comments:

Deepak Kumar Vasudevan said...

இந்த சிறிய விஷயங்களுக்கு தங்களுக்குள் சுமுகமாக தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தின் நேரத்தினை வீண் செய்ய வேண்டாமே!

Unknown said...

நம்பிக்கை உள்ளவர்களை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அனுமதிக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு நல்லதொரு மாற்றம். இதே போல் பெரியாரின் படைப்புக்களை நாட்டுடமை ஆக்க நீதிமன்ற உத்தரவு வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

பரணீதரன் said...

பெரியார் நூல்கள் நாட்டுடமை பற்றி யாரும் கவலை பட தேவை இல்லையே தோழரே....கிழே உள்ள பதிவை படியுங்கள்

http://paraneetharan-myweb.blogspot.com/2008/11/blog-post_06.html
http://paraneetharan-myweb.blogspot.com/2008/10/blog-post.html

CM ரகு said...

வணக்கம்.
பகுத்தறிவை பரப்பும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்,
இந்து மதத்தை எதிர்ப்பதுதான் பகுத்தறிவா?
ஏனென்றால் எனக்கு தெரிந்தவரையில் பகுத்தறிவுவாதிகள் இந்து மதத்தையும்,
இந்துக்களின் பழக்கவழக்கங்களையும் எதிர்பதையுமே வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிறந்த உதாரணம் : தன்னை பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் பிறந்தவன் என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி, எப்போதும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் கருத்துக்களை கூறுவார். அதே நேரம் கிறித்துவ,முஸ்லிம்
மக்களின் விழாக்களில் பங்கெடுப்பார்,வாய் கூசாமல் நோன்பு கஞ்சியும் குடிப்பார்.
இது தான் பகுத்தறிவா(?) என்று எனக்கு புரியவில்லை. நான் அறிந்தவரையில் பெரியாரால் வலியுறுத்தப்பட்ட பகுத்தறிவுக்கொள்கையில்
கடவுள் மறுப்பு என்பதுதான் பிரதான இடம் பிடித்திருந்தது. ஆனால் தற்போது?
ஒரு மதத்துக்கெதிரான நடவடிக்கைகள் தான் பகுத்தறிவு பிரச்சாரமோ என்று என்ன தோன்றுகிறது.
என் கருத்தை பதிவு செய்யும் நோக்கில் தான் இதை தெரிவித்துள்ளேன். மற்றபடி எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
நன்றி
CM ரகு

பரணீதரன் said...

இந்து மதத்துல பார்பான்,பறையன்,பல்லன்,நரிக்குறவர் எல்லாரும் கட்டியணைத்து ஒரே இடத்தில அமர்ந்து கஞ்சி என்ன கூழ் குடிக்க கூப்பிட்ட கூட வர தயாராகத்தான் இருக்கிறார் தமிழக முதல்வர். பெரியார் தொண்டர்களுக்கு என்ன இந்து மதத்தில் மட்டும் வெறுப்ப என்ன மனிதனை அடிமை படுத்தி பிரித்து மூடநம்பிக்கை வளர்க்கும் யாரும் விமர்சனத்திற்கு உட்படவரே. இதன் அடிபடையில் அதிகமா அருவருப்பான பார்பனர்கள் என்ற ஒரே இனத்திற்கு மட்டும் சாதகமாக உள்ள இந்து மதம் முதல் வரிசையில் இருக்கிறது அவளவுதான்.

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்?

பாழடைந்த மாளிகையில் பறக்குமாம் வௌவால். சரிந்த சுவற்றில் வளை அமைத்து வாழுமாம் பாம்பு! குழியிலே நெளியும் தேள்! அதுபோலவே ஆபாசக் கருத்துக்களில், அறிவுக்குப் புறம்பான புராணங்களில், இழுக்கைத் தரும் இதிகாசங்களில், புல்லரும், சுயநலமிகளும் புகுந்து கொண்டிருப்பர். இந்து என்பது அவர் இட்டுக்கொண்டப் பெயர். அது நமக்கப் பொருந்துமா?

நாலு தலை, மூன்று கண் சாமி, ஆயிரம் கண் ,ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள்,காக்கை மீது பறக்கும் கடவுள்,என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே!நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும்.இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய பாசத்தை நாம் தலை...யில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!


அமெரிக்கா செல்வபுரியல்லவா? அமெரிக்காவில் ஏசுநாதருக்குத் தங்கத்தேர் செய்யமுடியாதா? இத்தலியில் செய்ய முடியாதா? இது வரையில் நம்மை ஆண்ட பிரிடிஷ் ஏகாதிபத்யம் நினைத்தால் ஏசுநாதருக்கு கருட வாகனம் செய்யமுடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்? நம் நாட்டில்தான் தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள் எல்லாம்!இ...ந்திய அரசாங்கத்தார் இந்தியாவை அடமானம் வைத்து, உலக பாங்கியிலிருந்து கடன் வாங்கப்போகிறார்கள்.

Unknown said...

பெரியார் எழுத்துக்களை நாட்டுடமை தடை கட்டாயம் நீக்கப்பட வேண்டியது தான். வீரமணி அவர்கள் நினைத்தால் உடனே நடக்கும். ஒவ்வொரு தடையும் களையப் படவேண்டியதே.
மேலும், தாங்கள் இந்து கடவுள்களை வசை பாடியது மிக அருமை. தினக் கடமைகளை செய்வதை போல் இந்து/பார்ப்பன எதிர்ப்பு அனல் கக்குகிறீர்கள். தாங்கள் வெளி நாட்டு மதங்களை விமர்சனம் செய்ய மாட்டீர்கள்; பெரியார் காலம் தொட்டு மழுப்பல் பதில் மட்டுமே. போலி பகுத்தறிவாளர்கள் வெளி நாட்டு மதங்களை எதிர்க்க துணி வில்லாதவர்கள் - காரணம் 13 + 3 விழுக்காடு வோட்டு வங்கி.
மேலும் அன்பரே நம் இந்து மதத்தில் எதுவம் கட்டாயம் இல்லை. அனைத்தும் சுதந்திரமே. இஷ்ட தெய்வம்/ வழிபாட்டு முறை,போற்றுதல், துதித்தல், தூற்றுதல், விரதம், அலங்காரம், அப் இஷேகம் இன்னப் பிற அனைத்தும் இங்கு அவரவர் அபிமானம். நாத்திகம் இந்து மதத்தின் ஒரு அங்கமே. இதற்கு அத்தாட்சி தங்களை ப் போன்றவர்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பதால். நீங்கள் எல்லாம் இந்து கடவுள் எதிர்ப்பாளர்கள் மட்டுமே. ஆத்திகர்களை விட கடவுளை அதிகம் நினைப்பது உங்களைப் போன்றோரே.
தொடரட்டும் உங்கள் தூற்றும் பணி.

Unknown said...

தங்களுடைய 2008 வருட பதிவைக் கண்டேன். உங்கள் வாதம் பலமில்லாதது. கருத்துகள் மாற்றம் செய்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேலும் இன்றைய தலைமுறையினரிடம் பெரியாரின் தாக்கம் மிகக் குறைவு. காரணம் பெரியாரின் சீடர்கள் பின்பற்றும் மத/இன துவேஷம் தான்: விடுதலை பத்திரிக்கையை , எழுதுவதும், மிகச் சிலர் அதை படிப்பதும், பரப்புவதும் தான்.
சம கால பிரச்சனைகளை அதிகம் கவலைப் படுங்கள்.எழுதுங்கள். பகுத்தறியுங்கள். அரைத்த மாவை கொஞ்சம் விலக்கி வையுங்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]