வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 17, 2010

மாணவர்களைக் காப்பாற்றும் இயக்கம்....திராவிடர் மாணவரணி....மாநாட்டின் முத்தாய்ப்பான தீர்மானங்கள்


திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு _ வரலாற்றுப் பெருமை தாங்கும் வகை-யில், எல்லா வகையிலும் நிறைவு ஒளி வீசும் வகையில் சென்னை பெரியார் திடலில் மிகக் கம்பீரமாக நடைபெற்றது. மாலை 5 மணிவரை பெரியார் திடலிலும், அதன்பின் சென்னைப் புரசைவாக்கம் தாணா தெருவிலும் பல்வேறு அணிகலன்களை உள்ளடக்கி ஒரு பெரும் மாநாடாக நடைபெற்றது.


மாநாட்டில் பொறுக்கு மணிகளென பத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்-களின் அருமையை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர் பெரிதும் பாராட்டினர்.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாடு தொடங்கி இன்றுவரை நடைபெற்றுவரும் கழக மாநாடுகளின் தீர்மானங்கள் _ நாளைய அரசுகளின் சட்டங்-களாகவும், திட்டங்களாகவும் மாறியிருக்கின்றன என்ற கருத்தைக்கூட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திறந்தவெளி மாநாட்டில் மிகச் சரியாகக் கணித்துக் கூறினார்.

இன்றைய சூழலில் மாணவர்கள் பல்வேறு போதைகளின் தாக்குதலுக்கு ஆளாகி நிலைகுலைந்து போயிருக்கின்றனர். இதனைப் பலரும் விமர்சனமாகக் கூறினாலும், இப்போக்-கிலிருந்து மாணவ உலகத்தை மடைமாற்ற எந்த ஓர் உருப்படியான ஆக்க ரீதியான ஆலோ-சனைகளையும், நிவாரணங்களையும் சொன்ன-தில்லை.

உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது என்பது யோக்கியமான சமாதானமாக இருக்க முடியாது.

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் துப்பாக்கிகளுடன் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லுகின்றனர்; சில நேரங்களில் சக மாணவர்களைச் சுட்டுக் கொன்றும் விடுகின்றனர் என்பதற்காக, நமது நாட்டிலும் இத்தகைய போக்குகள் வளர்ந்தால் குற்றம் இல்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

கல்வி நிறுவனங்களில், விடுதிகளில் உள்ள பழைய மாணவர்கள், புதிய மாணவர்களிடம் மேற்கொள்ளும் கேலி (ஈவ்டீசிங்) அளவு கடந்து மிகவும் அநாகரிகமாக, படு கொச்சைத்தனமாக நீள்கின்றனவே, இது சட்டப்படி குற்றம், சிறைத்-தண்டனை என்று சொல்லப்பட்டாலும், இந்தக் குற்றம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது என்கிற தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதானி-ருக்கின்றன.

இந்தப் போக்கால் மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது கூட நடந்துகொண்டுதானிருக்-கிறது.

மாணவிகளின் விடுதிகளும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. படிக்கும் மாணவர்கள் இப்படி பண்பற்ற வகையிலே நடந்துகொள்கிறார்-களே, பொது இடங்களில் பேரிரைச்சல் போடுகிறார்களே, பேருந்துகளின் செல்லும்போது அவர்கள் அடிக்கும் அரட்டைக் கச்சேரிகள் கண்ணியமானவர்களைக் கூனிக் குறுகச் செய்கின்றனவே_

மது, சினிமா, கிரிக்கெட் என்று பல்வேறு போதைகளில் சவாரி செய்துகொண்டு இருக்-கிறார்கள் (இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்).

இதுகுறித்து மாணவர்கள் மத்தியிலே விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை!

மாணவர்களின் சிந்தனை நேர்வழியில் செலுத்தப்பட விளையாட்டு, நூலகங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திசைகளில் கொண்டு செலுத்தலாமே!

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள்_ மாண-வர்கள் என்ற ஓர் இணைப்பு தேவைப்படுகிறது. தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படவேண்டும்.

விஞ்ஞான வளர்ச்சி தறிகெட்டு மாணவச் சமுதாயம் அழிவதற்குக் காரணிகளாக இருப்பது மாபெரும் அவலமே! கைப்பேசி, இணைய தளம் என்பதெல்லாம் மாணவச் சமுதாயத்தை அரித்துத் தின்னும் ஆபாச மிருகங்களாகவா மாற-வேண்டும்?

இதுகுறித்து திராவிடர் மாணவர் எழுச்சி மாநில மாநாடு முதல் தீர்மானமாகவே சில கருத்துகளைக் கூறியிருக்கிறது.

தீய விளைவுகளிலிருந்து மாணவர்களை, இளைஞர்களைக் காப்பாற்றிட ஊர்தோறும் ஓர் அமைப்பினை (Save Our Youths - Movement) ஏற்-படுத்த-வேண்டும் என்று முதல் தீர்மானம் கூறுகிறது.

கழக மாணவரணி, இளைஞரணிப் பொறுப்பாளர்கள் இதற்கான களப் பணிகளில் உடனே ஈடுபடுவார்களாக!

------------ நன்றி விடுதலை தலையங்கம் (17.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]