வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 18, 2010

கடவுள்கள் கோயில்கள் - ராபர்ட் கீரின் இங்கர்சால்

கருத்து எனும் ஆயுதம் ஏந்தி கடவுள் மற்றும் மதம் என்னும் மரபினை உடைத்தெறிந்து கேள்விக்கணைகளால் மதவாதிகளின் அரிதாரங்களை அம்பலமாகியவர் இங்கர்சால். தான் சார்ந்த கிறித்துவ மதத்தின் மீது கடும் தாக்குதல் தொடுத்த ராபர்ட் கீரின் இங்கர்சால் என்றழைக்கப்பட்ட இங்கர்சால் உலக பகுத்தறிவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராவர். அவர் எழுதி நூல் தான் "கடவுள்கள் கோயில்கள்".
நான் இந்த நூலினை சென்னை புத்தக கண்காட்சியில் (Jan-2010) வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலின் மூலமாக, அருமையான செய்திகள் மற்றும் தர்க்க ரீதியான விளக்கங்களை இங்கர்சால் அவர்கள் நம்மிடம் தந்துள்ளார். 159 பக்கங்களை கொண்ட இந்த நூலிலிருந்து இதோ சில பகுதிகளை இங்கே பார்ப்போம்.

"கடவுள் எப்படிப்பட்டவர் தெரியுமா? " என்று ஆரம்பிக்கும் முதல் பக்கத்தில், கடவுள் மனிதனுடைய கற்பனை. அவனால் கற்பனை செய்யப்பட்டவர் தான் கடவுள். ஆனால் அந்தக் கடவுள்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரியுமா? அவரிடம் அன்பு காட்டினாள் ஆதரவு காட்டுவார். துவேசித்தால் விரோதிகள் என்று கருதுகிறார். இது மட்டுமா! அந்தக் கடவுள்கள் அதிகாரம் உள்ளவர்களின் பக்கபலமாயும், வலிமையுள்ளவர்களை ஆதரித்துக்கொண்டும் தான் இருந்திருக்கிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் அந்த கடவுள்கள் தங்களுக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டன. அவர்களுக்கு அர்ச்சகர்கள்,ஆச்சாரியர்கள்,குருக்கள் என்றும் பெயரிட்டன. இந்த பெரிய கூட்டத்தினரையும், தன்னையும் ஏழை மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளன. ஏன்? வற்புறுத்தியும் வந்திருக்கின்றன.

இந்தக் கடவுள்களால் தாங்கள் உண்டாக்கிய உலகம் உருண்டையா? அல்லது தட்டையா என்பதும் புரிந்து கொள்ள முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகம் தட்டை என்று தவறாக கருதி வந்தன.

எனவேதான் கலிலியோ என்ற சாதாரண மனிதன் 1632  - ஆம் ஆண்டு அவனின் ஆராய்ச்சி நூலாகிய "உலக அமைப்பு" என்ற புத்தகத்திற்காக ஆலயவாசிகளால் கைதுசெய்யப்பட்டான். கொடும் சிறையில் அடைக்கப்பட்டான். முழங்கால் மண்டியிட்டு, பைபிளைக் கையிலேந்தி தான் செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கேட்க்குமாறு பலவந்தப்படுத்தப் பட்டான். ஒரு நாளல்ல; இரு நாட்களல்ல; பத்து பெரிய வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்தான்; இறந்தான். அவனுக்கு விடுதலை வாங்கித்தர மரணம்தான் மனமிரன்கியது. அவன் இறந்த பிறகும் கூட ஆலய வேந்தர்கள், புனித மானவர்கள் கலிலியோவின் உயிரற்ற உடம்பை எல்லோரையும் புதைக்கும் மயானத்தில் புதைக்கக் கூட அனுமதிக்கவில்லை.

மதத்தின் பெயரால் எவளவு துன்பங்கள் இழைக்கப்பட்டன. எவளவு கொடுமைகள் செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் தந்ததா? பயத்தை காட்டி, பல வந்த்தத்தை பிரயோகித்து, மிரட்டி மனத்தின் எண்ணங்களை கட்டிப்போட்டுவிடலாம் என்று நினைத்தார்களே, அது என்னவாயிற்று? பயம் காட்டி மனதை அடக்க முடியாது என்பதை நிருபித்து விட்டதல்லவா?.

இப்படி பட்ட ஒரு வக்கிரமான, மடமை நிறைந்தவர்கள் தான் கடவுள்களையும் கோவில்களையும் உருவாக்கியவர்கள் என்கிறார் இங்கர்சால். இவர்கள் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு மதமும் குறிப்பாக மேலே கலிலியோவுக்கு கொடுமை விளைவித்த இந்த கிருத்துவ மார்க்கம் தான் நல்ல போதனை கொடுக்க போகிறதா? என்று நம்மிடம் கேள்வி எழுப்புகிறார் (அவருடைய சூழல் கிருத்தவ சுழல் என்பதால் அவரின் கண்டிப்பு அந்த மதத்தை சார்ந்தே இருக்கும் ...நமக்கு இங்கு இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்பனியம்)

இங்கர்சால் அவர்கள்  கண்டிப்பதோடு நின்று விடாமல், மேலும் இவ்வாறு சொல்லுகிறார்

நாங்கள் எல்லா துறைகளிலும் முயன்று எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டோம் என்றோ, எங்கள் முடிவுதான் சரி என்றோ சொல்லமாட்டோம், சொன்னதில்லை. பின்னர் என்ன சொல்லுகிறோம் என்றால் கடவுள்களை கண்டு பயப்படுவதை விட நம்மை போன்ற மக்களிடம் அன்பு காட்டுவது மிக மிக சிறந்தது என்கிறோம்.

நாங்கள் எங்கள் வாழ்நாளிலேயே எல்லாக் காரியங்களையும் செய்து முடித்து விடுவோம் என்று நாங்கள் சொன்னதில்லை; நம்புவதில்லை. ஆனால் எங்களால் முடிந்ததை, மக்களுக்கு நன்மை அளிக்கும் என்று நாங்கள் நினைத்தவைகளை, சமுகத்தின் முன்னேற்றத்திற்க்காக நல்லெண்ணத்தோடு, சற்றும் அலுக்காமல் அயராமல் உழைப்போம், என்று கூறுகிறோம்.

கடவுள்களையும்,தேவதைகளையும்,பேய் பிசாசு,பூதங்கள் இவைகளையும் அழித்துவிடுவது மாத்திரம் எங்கள் எண்ணமல்ல; முடிவுமல்ல. அவை ஒரு சாதரணமான காரியமாகும். ஆனால் மனிதன் சுகமாக வாழவேண்டும், அவன் இன்ப வாழ்வு வாழ வழிகோல வேண்டும் என்பதுதான் எங்களின் மிக மிக உயர்ந்த உன்னதமான கொள்கையாகும். அதற்காகத்தான்  துணிவுடன் நாங்கள் தொண்டு செய்ய முற்பட்டோம். எங்கள் கருத்தும் அதுதான். எங்கள் செயல்களும் அதற்கே பயன்படும்! என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இன்றுள்ள மக்கள் சமுதாயம் எப்படி இருக்கிறது. ஒரு பக்கத்தில் கொடிசுவரர்களுக்கு பிரபுக்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உடல் மெலிந்து, கண் குழிவிழுந்து, ஓடு தாங்கி நிற்கும் மக்களுக்கு பிச்சைகாரர்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துகொண்டிருகிறது. ஒரு பக்கம் பண பலம் கொண்ட சோம்பலையும், மற்றொரு பக்கம், பண பலம் இல்லாத பஞ்சமுற்ற தொழிலையும் வைத்துக்கொண்டிருகிறது. ஒரு பக்கம் உண்மைக்கு கிழிந்து போன கந்தை தந்தும், மற்றொரு பக்கம் மூடநம்பிக்கைக்கு பட்டும், அணிகலன்களும், பொன்முடியும் அணிவித்து அதை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு வருகிறது. இவைகள் ஒழியும் காலத்தை நாங்கள் மிக விரைவில் மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த காலத்தை காண எங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம்.

இப்படியாக சொல்லும் இங்கர்சால் அவர்கள் கடைசியாக கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளையும் நமக்கு வைக்கிறார்.

கடைசியாக ஒரு வேண்டுகோள். அறிவு ஆட்சி செலுத்தும் அந்த நல்ல காலம் சீக்கிரமே உண்டாக நீங்கள் உங்களால் முடிந்ததை செய்ய முற்படவேண்டும். உங்களின் குழந்தைகளுக்கு மூட நம்பிக்கை என்ற நஞ்சு கலக்காதீர்கள். அறிவு அமுதை ஊட்டுங்கள். வாலிபர்கள் இந்த அறிவு அமுதை கண்மூடி வழக்கங்களை பின்பற்றும் பழமை விரும்பிகளுக்கு அளியுங்கள். இவ்விதம் ஒவ்வொரு தனி மனிதனும், செய்யவேண்டும். இதை விட நாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய வேலை கிடையாது. ஆகவே அறிவாளியை உலகெல்லாம்,மூலை முடுக்களிலெல்லாம் பரப்புங்கள்! இதை உங்கள் உயர்ந்த கடமை என்ற கருத்துடன் பணியாற்றுவதன் மூலம் அறியாமை நிரம்பிய, அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் நிரம்பிய, மூடத்தனம் நிரம்பிய, கண்மூடித்தனங்கள் நிரம்பிய உலகை சீர்திருத்துங்கள். அறிவு, ஆராய்ச்சி,அனுபவம் என்னும் இம்மூன்றையும் மறவாதீர்கள். உரிமையுடன் வாழுங்கள்!.

மேல் கண்டவாறு கூறி முடிக்கிறார் இங்கர்சால் அவர்கள்.

இது போல கடவுள் மற்றும் கோவில்கள் தோற்றம் பற்றியும் அதனால் பிழைப்பு நடத்தும் கூட்டம் பற்றியும் பல நல்ல அறிவுப்பூர்வமான கேள்விகளையும் அதன் மூலமாக நல்ல சிந்தனைகளையும் நம்மிடம் தூண்டுகிறார். அனைவரும் இந்த நூலினை வாங்கி பயனடையுங்கள்.

இதுபோன்ற நல்ல நூலின் மூலமாக மழுங்கி இருக்கும் பகுத்தறிவை சானைபிடித்து சாஸ்திரம்,சாதி,மதம், மூடநம்பிக்கைகள் மற்றும்  இவை அனைத்துக்கும் ஆணிவேராக இருக்கும் கடவுள் ஆகியவைகளை ஒழிப்போம். சமத்துவத்தை நிலைநாட்டுவோம்.

மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்                                                
                                                                                                                                              
                                                                                                                    
        

2 comments:

தமிழ்போராளி said...

வணக்கம் தோழர் . அருமையான கட்டுரை . முடிந்தால் அந்த நூலை முழுதாக வெளி இட்டால் அனைவரும் படித்து தெளிவு பெறுவார்கள் என்பது எனது ஆசை ..அன்புடன் வீரா

Khader Mohideen said...

அருமை......அருமை.......அருமை.
வாழ்க,நாத்திகம் !!!!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]