வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 23, 2010

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்....அடுத்த விசாரணை 2011 பிப்ரவரியாம்!

தமிழர்களின் நூற்றாண்டு கடந்த கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்  இப்பொழுது உச்சநீதிமன்றத்தின் அறைக்குள் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழினத்துக்கு விரோதமாக பார்ப்பனிய முறையில் சிந்தித்துக் கொண்டிருக்கிற செல்வி ஜெயலலிதாவும், தனக்குப் பின்னால் சொல்லிக் கொள்வதற்கென்று ஒற்றை ஆள்கூட இல்லாத _ அதேநேரத்தில் பார்ப்பனர்களின் காகிதங்களால் (பத்திரிகைகளால்) தூக்கி நிறுத்தப்படும் சு.சாமியும் முற்றிலும் தமிழர்களுக்கு விரோதமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என்ற ஒரே மூச்சில் உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கெஞ்சினார்கள்.

17 லட்சத்து 25 ஆண்டுகளுக்குமுன் ராமன் என்கிற கற்பனைப் பாத்திரம் ஒன்று பாலம் கட்டியதாம் _ சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரால் அந்தப் பாலத்தை இடிக்கிறார்களாம். அது தடுத்து நிறுத்தப்படவேண்டுமாம்; மெத்தப் படித்த உச்சநீதிமன்றமும் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரிப்பதோடு அல்லாமல், இப்பொழுது திட்டமிட்டுள்ள பாதைக்குப் பதிலாக வேறு பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள்பற்றி ஆராய ஆணையும் பிறப்பித்து விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் பகுதியில் (51_ஏ) விஞ்ஞான அணுகு-முறை, மக்களிடத்தே ஏற்பட ஒவ்வொரு குடி-மகனும் கடமையாற்றவேண்டும் என்று கூறி-யுள்ளது.

ஒருக்கால் நீதிபதிகளுக்கு அது பொருந்தாது, சாதாரண குடிமகனுக்குத்தான் பொருந்தும் போலும்!

ஏற்கெனவே திட்டத்தின் பெரும்பகுதிப் பணிகள் முடிந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்ட நிலையில், போகாத ஊருக்கு வழிகாட்டுவதுபோல, மாற்றுப் பாதை குறித்து ஆராய ஆணை பிறப்பிப்பது உகந்ததுதானா என்பது நியாயமான வினாவாகும்.

தொல்பொருள் இலாகா தேவையில்லை; பொறியியல் துறை தேவையில்லை; கடல்சார் அறி-வியல் துறையை மூட்டைக் கட்டி கடலுக்-குள் தூக்கி எறிந்துவிடலாம்; புராணம் என்ன சொல்லுகிறது? இதிகாசத்தில் எந்த இடத்தில் என்ன குறிப்பு இருக்கிறது? யாக்ஞ வல்கியர் யாது கூறியிருக்கிறார் என்று மனிதன் பின்னோக்கி நடக்கவேண்டியதுதானா?

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி புவியியல் ஆய்வுத் துறைத் தலைவர் திரு. ராமானுஜம் அவர்கள் இந்து ஏட்டில் (17.3.2007) தெளிவாகவே குறிப்பிட்டு இருந்தார்.

இது மனிதன் கட்டிய பாலம் அல்ல. இது புவியியல் நிகழ்வால் ஏற்பட்டது என்று கறாராகக் கூறியுள்ளாரே!

ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே நீண்ட நெடிய தூரத்திற்கு இத்தகு மணற்பாலங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டியது ராமனா என்று பேராசிரியை தமயந்தி ராஜதுரை அறிவியல் முறையில் வினா எழுப்பினார்.

இந்தக் கேள்விகள் எல்லாம் செல்வி ஜெய-லலிதா, சு.சாமிகளின் காதுகளில் விழாமல் இருக்-கலாம். உலகத்துக்கே நீதி சொல்லும் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நீதிபரிபாலனம் செய்யும் கனம் நீதிபதிகளின் கவனத்துக்குச் செல்லவில்லையா?

இந்த வழக்கு 21.4.2010 அன்று உச்சநீதிமன்றத்-திற்கு வந்தது. அடுத்த விசாரணை 2011 ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு விசாரணை நடந்து தீர்ப்பு கி.பி. 2020 இல் தான் கிடைக்கும் என்று நம்பலாம். ரூ.2,400 கோடி திட்டம் அப்பொழுது 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கக்கூடும்.

மக்கள் பணம் இப்படி நாசமாகப் போவதுபற்றி யாருக்குக் கவலை?

நம் தமிழர்களும் அந்தந்த நேரத்தில் சூடாக எகிறிக் குதிப்பார்கள். காலம் செல்லச் செல்ல அதைக் கண்டிப்பாக மறந்துவிடுவார்கள். உணர்ச்சிகளும் மரத்துப் போய்விடும்.

தமிழர்களின் இந்த இயல்பினை நம் இன எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஈரோட்டு எழுச்சி மூலிகைதான் தேவைப்படுகிறது.

கழகத் தோழர்களே, நமது பிரச்சாரமும், பணிகளும் மேலும் மேலும் தீவிரம் பெறட்டும் _ கூர்மை அடையட்டும்!

----------- விடுதலை தலையங்கம் (23.04.2010)

6 comments:

Unknown said...

சேது ஒரு அரசியலாரின் திட்டமே!பயன் அதிகமில்லை! பல்லாயிரம் கோடி செலவு செய்து ஒரு ஆண்டில் மிச்சம் நூறு கோடி அளவே! கடலிலே தோண்டப்படும் சேது கால்வாய், சூயஸ்/பனாமா கால்வாய்களை போல நிலங்களிலான கரைகளை கொண்டதல்ல. தோண்ட தோண்ட மீண்டும் மீண்டும் மணல் மூடிக்கொள்ளும். சென்னை/தூத்துக்குடி இடையே கப்பல் பொக்குவரத்தும் அதிகம் இல்லை. ஃபீடர் கப்பல்கள் மட்டுமே செல்லும். மதர் கப்பல்கள் இந்த வழியை உபயோகிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. குளச்சல் துறைமுகம் விரிவு படுத்தப்பட்டால் கொழும்பு படுத்துவிடும். சேதுவை எந்த வழியில் நிறைவேற்றினாலும் பண/கால விரையமே! இந்த நிலையில் ராமர் பாலம்,தமிழன் கனவு என்பதெல்லாம் உமக்கும் எமக்கும் உதவாத அரசியலாரின் பம்மாத்து லீலைகள்.

பரணீதரன் said...

சும்மா ஏதோ எதிர்க்கணும் என்ற நோக்கத்தில் பேசவேண்டாமே தோழரே ...உண்மை தமிழன் எல்லோரும் சேது திட்டத்தை ஆதரிப்பார்கள் ....அதில் நீங்கள் என்ன வகையோ........

Unknown said...

தம்பி சங்கமித்ரன்! நான் ஒன்றும் வெறுமன சேது கால்வாயை குறை சொல்லவில்லை. கடல் வழி வாணிபம் பற்றி எனக்கு பல்லாண்டுகளாக அறிமுகமும், அனுபவமும் உண்டு. தங்களைப் போல் தி.க/தி.மு.க அரசியலார் கூறும் அனைத்தையும் அப்படியே நம்பும் பக்குவம் எனக்கு வரவில்லை. விடுதலையால் மூளைச்சலவை செய்யப்பட்டவர் மட்டுமே உண்மையான தமிழனா?

பரணீதரன் said...

/*சென்னை/தூத்துக்குடி இடையே கப்பல் பொக்குவரத்தும் அதிகம் இல்லை. ஃபீடர் கப்பல்கள் மட்டுமே செல்லும். மதர் கப்பல்கள் இந்த வழியை உபயோகிக்கும் சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. */

அதுதான் அய்யா நீங்கள் நல்ல கடல் வழி அனுபவம் உள்ளவர் என்பது தெரிகிறது. நீங்கள் சொன்னவைகள் சேது திட்டம் நிறைவேறினால் காணமல் போய்விடும். நீங்கள் சொல்லும் ஃபீடர் மற்றும் மதர் கப்பல்கள் இந்த வழி செல்லும் தானே. இப்பொழுது ஆழம் இல்லாத ஒரே காரணத்தில் தானே இப்படி சுற்றி செல்லவேண்டிய நிலைமை....மேலும் சென்னை/தூத்துக்குடி இடையே கப்பல் பொக்குவரத்தும் அதிகரிக்கும் தானே அய்யா.

/*விடுதலையால் மூளைச்சலவை செய்யப்பட்டவர் மட்டுமே உண்மையான தமிழனா? */

கொஞ்சம் திருத்தி விடுதலையால் அறிவுபுகட்டபடவர்கள்......என்று வைத்துகொள்ளுங்களேன் அய்யா.

Unknown said...

ஐயா! கடல் வழி வாணிபம் என்பது நாடுகளுக்கிடையே தான் அதிகம்; இந்திய ஊர்களுக்கு இடையே குறைவு. மதர்/ஃபீடர் கப்பல்கள்/வழிகள் பற்றி , உங்கள் பாசறையில் யாரேனும், வாணிப அறிஞர்கள் இருப்பின் கேட்டு தெளியுங்கள்.

நம்பி said...

//rammy said...

ஐயா! கடல் வழி வாணிபம் என்பது நாடுகளுக்கிடையே தான் அதிகம்; இந்திய ஊர்களுக்கு இடையே குறைவு. மதர்/ஃபீடர் கப்பல்கள்/வழிகள் பற்றி , உங்கள் பாசறையில் யாரேனும், வாணிப அறிஞர்கள் இருப்பின் கேட்டு தெளியுங்கள்.
7:14 AM//
இதெல்லாம் அறியாமலா ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள்?...பாரளுமன்றத்தில் ஒப்புதல் கொடுத்தார்கள்?...ஏன்? இந்திய அரசிடம் கடல் ஆராய்ச்சி வல்லுநர்கள் இல்லாமலா? இதெல்லாம் செயல்படுத்தப்படுகிறது?...

அரசுக்கே அறிவுரை சொல்லுகிற அளவுக்கு ஆராய்ச்சியாளாரா? அல்லது கடல்சார் பொறியாளரா? அப்படியென்றால் அதற்கான ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரப்பூர்வமாக சமர்ப்பிக்கலாமே? மேட்டர் முடிந்ததே!...வெறும் வாயை மெல்லுவானேன்!....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]