வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 09, 2010

மக்களுக்காகப் பேசாமல், குழுவிக் கற்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.திமு.க., உறுப்பினர் செந்தமிழன் அவர்கள் சென்னையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நடை-பாதைகளில் உள்ள 260 கோயில்களை இடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது _ அக்கோயில்களை இடிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தர வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று முக்கிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பொறுப்பு வாய்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் நடைபாதைக் கோயில்களைப்பற்றி பேசுவதற்கு-முன் அக்கோயில்கள் அரசு அனுமதியுடன் கட்டப்பட்டதா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு பேசியிருக்க வேண்டும்.

அரசு அனுமதியில்லாமல் நடைபாதைக் கோயில்களைக் கட்டக் கூடாது; அப்படிக் கட்டியிருந்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும் என்று மத்திய _ மாநில அரசுகளின் ஆணை-கள் தெளிவாகவே இருக்கின்றன.

அதற்குமேலே உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பாண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எப்.எம். இப்புராஹிம் கலிபுல்லா அவர்களும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள எந்த மதக் கோயில்களையும் அகற்றிட வேண்டும் என்று தெளிவாகவே ஆணை பிறப்பித்-துள்ளனர்.

அறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தம் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுக இந்தப் பிரச்சினையில் அண்ணாவின் நிலைப்பாடு என்னவென்று குறைந்தபட்சம் தெரிந்து வைத்துள்ளனரா?

அண்ணா அவர்கள் 1967இல் முதல் அமைச்சர் பொறுப்பு ஏற்றவுடன் தெளிவாக ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் கடவுள்களின் படங்கள், சிலைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலிருந்து நீக்க வேண்டும் (G.O.No.7553/66-2 ஏப்ரல் 1968) என்று அண்-ணாவின் அரசு ஆணை பிறப்பித்துள்ளதே_ இதுவரை தெரியவில்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினரைக் கேட்டுக் கொள்கிறோம்.

குந்தக் குடிசையின்றி மனிதன் அல்லல்படு-கின்றான். அரசுக்குச் சொந்தமான இடத்தில் குடிசை போட்டால் சாலை விரிவாக்கம் கருதி அவற்றை அகற்றி விடுகின்றனர். உணர்வுள்ள மனிதர்கள் விஷயத்திலேயே சட்டம் தன் கடமையைச் செய்யும் போது, குழவிக் கற்களாக அடித்து வைக்கப்பட்டுள்ள அஃறிணைப் பொருள்களான கோயில்களை, கடவுள்களை அகற்றக் கூடாது என்று சொல்லுவது பகுத்தறிவுதானா? மனிதாபிமான சிந்தனைதானா?

நடைபாதைக் கோயில்களால் பொது மக்களுக்கு எப்படிப்பட்ட அவதிகள்! நடை-பாதைக் கோயில்களால், மக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல், வாகனங்கள் செல்லும் பகுதி-களில் நடக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது; அதன் காரணமாக சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக சட்டப் பேரவை உறுப்பினர் உயிருள்ள மக்களுக்காகப் பேசாமல், குழுவிக் கற்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில், மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு சிந்திப்பதுதான் _ செயல்படுவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை நினைவூட்டுகின்றோம். இந்து முன்னணி இராம. கோபாலன் கூறுகிறார் என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களோடு அண்ணா பெயரை ஒட்டிக் கொண்டு இருக்கிறவர்கள் கை கோக்கலாமா?

----- நன்றி விடுதலை தலையங்கம் (08.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]