வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 15, 2010

ஈழத் தமிழர்கள் நிலை....தமிழ்நாடு கொந்தளித்து எழக்கூடிய நிலைதான் ஏற்படும், -எச்சரிக்கை!

இலங்கையில் உள்நாட்டில் வாழ இயலாமல் கப்பல்மூலம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 254 தமிழர்கள் நடுக்கடலில் கடந்த ஆறுமாத காலமாகத் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசு இவர்களுக்கு அகதிகளாக அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் ஏற்பட்டதே இந்த அவல நிலைக்குக் காரணமாகும்.


ஆஸ்திரேலிய பிரதமர் கெவின்ரூட்டின் ஆணைப்படி இந்தோனேசியக் கடற்படை ஈழத் தமிழர்கள் பயணம் செய்த கப்பலை இடை-மறித்-தது. கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஈழத் தமிழர்கள் கப்பலை விட்டு இறங்க மறுத்துவிட்டனர்.

ஓர் ஆறு மாத காலம் கடலில் தத்தளிக்கும் மக்களின் அன்றாட வாழ்வு என்பது எவ்வளவு பெரிய தொல்லைகளுக்கும், மன உளைச்சலுக்கும், உடல்நலக் கேட்டிற்கும் ஆட்பட்டு இருக்கும் என்பதை மனித நேயம் உள்ள ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பிறந்து வளர்ந்து வளமாக வாழ்ந்த சொந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடைக்-கலம் நாடிச் சென்ற நாடும் நடுக்கடலில் வழி மறித்துவிட்டது. இந்த நிலையில், இத்-தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

ஈழத் தமிழர்களை கொடுங்கோலன் ராஜபக்சே கொன்று குவித்தபோதும் அய்.நா. தன் கடமையினைச் செய்ய முன்வரவில்லை; இந்த இக்கட்டான காலகட்டத்திலும் தன் மனித நேயக் கரத்தை நீட்ட முன்வரவில்லை.

மீண்டும் இலங்கைத் தீவுக்கே அனுப்பி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஈழத் தமிழர்-களை ஒரு பக்கம் உலுக்கிக் கொண்டி-ருக்கிறது.

இன்னும் முள்வேலி முகாமுக்குள் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

ராஜபக்சே அதிபர் ஆகிவிட்டார். நாடாளு-மன்றத் தேர்தலிலும் வெற்றியைக் குவித்து-விட்டார். இதனால் ஈழத் தமிழர்களுக்கு அடி-மேல் அடிதான். குடிக்கும் நீரைக்கூட நிறுத்தி-விட்டார் என்ற கொடுமையான தகவல்கூடக் கசிந்-தது. இந்த நிலையில் நடுக்கடலில் தத்-தளிக்கும் 254 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களேயானால் மிகப்-பெரிய அளவுக்குச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அழுத்தமாக குரல் கொடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் அய்.நா.விடம் வலியுறுத்தவேண்டும்.

ஆஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க மறுப்பதில் பிடிவாதமாக இருக்குமேயானால், இத் தமிழர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிட மற்ற நாடுகள் முன்வரவேண்டாமா? இந்தியாவுக்கு அந்தக் கடமையில்லையா? ஏற்கெனவே ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா, இந்த இக்கட்டான நேரத்திலாவது அரவணைத்துக் கொள்ள முன்வந்தால் அந்தக் கறையைக் கொஞ்சம் கழுவிக்கொள்ள ஒரு சிறிய வாய்ப்புக் கிடைத்தது என்று பொருளாகும்.

உலகின் மனித உரிமை அமைப்புகள் இம்-மக்களுக்கு உரியது செய்ய முன்வரவேண்டும். அவர்களும் ஏன் இப்பிரச்சினையில் தூங்கி வழிகிறார்கள் என்பது விளங்கவில்லை.

வெளியுலகத் தொடர்புக்கும் வழியில்லாமல் ஆக்கப்பட்ட இத் தமிழர்கள் வலுக்கட்டாயமாகக் கப்பலில் இறக்கப்படுவார்கள் என்று கருதிடவும் இடமிருக்கிறது. அப்படி செய்யப்பட்டால் அதைவிட மனித வதை வேறு ஒன்று இருக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு நொடியும் சித்திரவதை அனுபவிப்பதை விட கடலில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டால் என்ன என்று நினைக்கும் அளவுக்குக்கூட, சூழல்கள் அவர்-களை விரக்தியின் எல்லைக்குத் துரத்துமானால் அதற்கு ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அய்.நா. மன்றம் உள்பட உலக நாடுகள் அனைத்துமே பொறுப்பேற்க வேண்டிவரும்.

உலகில் மிகவும் பரிதாபத்துக்குரிய இனம் என்ற பட்டியலில் தமிழர்கள் முதலாவதாகவும், கடைசியானதாகவும் இருப்பார்கள் போலும்.

கடலில் தத்தளிக்கும் தமிழர்களுக்குப் புது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்காவிட்டால், தமிழ்நாடு ஏதோ ஒரு வகையில் மேலும் கொந்தளித்து எழக்கூடிய நிலைதான் ஏற்படும், -எச்சரிக்கை!

---- விடுதலை தலையங்கம் (15.04.2010)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]