வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 02, 2010

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மதவெறி

டென்னிஸ் விளை-யாட்டு வீராங்கனை சானியா மிர்சாவின் திரு-மணம் தேவையற்ற சர்ச்-சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது.


பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சோயிப் மாலிக்கும், சானியாவுக்கும் திருமணம் வரும் 15ஆம் தேதி அய்-த-ரா-பாத்தில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை _ இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் எப்படி திருமணம் செய்துகொள்ள-லாம் என்ற வினாவை இந்துத்துவாவாதிகள் கிளப்பு-கின்றனர்.

இந்து மக்கள் கட்சி என்றும் பஜ்ரங் தள் என்னும் (பஜ்ரங் என்றால் குரங்கு என்று பொருள்) சொல்லிக் கொள்ளும் இந்து வெறி அமைப்புகள் சானியாவின் படங்களைத் தீயிட்டுக் கொளுத்தியி-ருக்கின்றனர்.

ஒருவர் யாரைத் திருமணம் செய்துகொள்வது என்று அந்த ஒருவரின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் குறுக்கிட இந்தக் குரங்குகள் கூட்டத்திற்கு அதி-காரம் கொடுத்தவர்-கள் யார்?

இந்துத்துவா கும்பலின் கண்மூடித்தனமான மதவெறி-தான் இதில் தலை கொழுத்து நிற்கிறதே தவிர, அறிவுப்பூர்வமான தலையீடு இதில் கிஞ்-சிற்றும் இருக்கிறதா?

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் திரு-மணம் செய்துகொள்ளக் கூடாது என்று தடை சட்ட ரீதியாக ஏதேனும் உள்ளதா?

இவ்வளவுக்கும் பார்த்-தால் திருமணம் செய்து-கொள்ளப் போகும் இரு-வரும் இஸ்லாமியர்கள் _ மத மறுப்புத் திருமணம்-கூட இல்லை. சானியா இந்துவாக இருந்து, பாகிஸ்-தான் முஸ்லிமை திரு-மணம் செய்துகொண்-டால், அடேயப்பா நாடே பற்றி எரிந்திருக்குமோ!

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட இந்தியா வந்த நிலையில் ஆடுகளத்-தையே சேதப்படுத்திய வானரக் கும்பல் ஆயிற்றே!

பிரிட்டீஷ் ராணியும், போப்பும் இந்தியா வந்த-போதுகூட, அவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய வானரப் படை-கள் எதைத்தான் செய்ய-மாட்டார்கள்?

மத உணர்வோடு இது-போன்ற போக்கிரித்தன-மான வேலைகளில் ஈடு-படுபவர்களை இரும்புக்-கரம் கொண்டு ஒடுக்க-வேண்டாமா?

வன்முறைக்கு வைத்-தியம் சட்டரீதியான அடக்குமுறைதான். இல்லாவிட்டால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்தான்!

- விடுதலை மயிலாடன் (02.04.2010)


1 comment:

ஸ்ரீநி said...

nyayamaana padhivu...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]