வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, June 30, 2011

ஊழலுக்கு ஜாதியில்லை என்று சொன்னவர்கள்...இப்போ எங்கே போனார்கள்?

கருநாடக மாநிலத்தில் லிங்காயத் என்ற பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்; தேர்தலில் இவர்களின் பங்கு மிகவும் கணிசமானது.


கருநாடகத்தின் முதல் அமைச்சர் எடியூரப்பா இந்த சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர்.

எடியூரப்பாமீது தொடர்ந்து ஊழல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் லிங் காயத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் எடியூரப்பாவுக்காக அணி வகுத்து நிற்கிறார்களாம்.

தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக இருக்கிறார். அவரைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்கிற பாணியில் சிந்தனைகள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாக தினமலர் ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆ. இராசா - தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று கலைஞர் அவர்கள் சொன்னபோது ஊழலுக்கு ஜாதியில்லை; மதம் இல்லை - ஜாதியைக்காட்டி காப்பாற்றப் பார்க்கிறார் கலைஞர் என்று கதையைத் தூக்கிக் கொண்டு களம் காண வந்த பார்ப்பன ஏடுகள் இப்பொழுது கருநாடகாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையைக் குறித்து, அதே கண்ணோட்டத்தில் விமர்சிக்க முன் வராதது ஏன்?

குஜராத்தில் நரேந்திரமோடி அரச பயங்கரவாதக் கதாநாயகனாக மாறி சிறுபான்மை மக்களை வேட்டையாடியதை வன்முறை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால் அதனைப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, உண்மை உயிர் பிழைத்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் பார்ப்பனர் களுக்கே உரித்தான நயவஞ்சகமான சிந்தனையும், நரிக்குணமும் ஆகும்.

நில மோசடிப் புகார் கருநாடக மாநிலத்தையே ஒரு கலக்குக் கலக்கியது. விலை உயர்ந்த வீட்டுமனை களை தன் மகன் மற்றும் உறவினர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கம்பீரத்தை காட்டிக் கொண்டார் எடியூரப்பா.

சுரங்கத் தொழில் அதிபர்களான சகோதரர்கள் இருவருக்கும் அமைச்சர்கள் பதவி கொடுத்து, அவர்கள் எடுக்கும் கோலுக்கு எல்லாம் மந்தி(ரி)யாக ஆடினார். தொடக்கத்தில் மிஞ்சி பிறகு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எடியூரப்பா.

கருநாடக மாநில முதல் அமைச்சர் பதவியிலிருந்து இந்த மனிதரை நீக்கினால்தான் கட்சி பிழைக்கும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.

இவரோ டில்லிக்கே சென்று பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். அகில இந்திய பா.ஜ.க. தலைமை எடியூரப்பாவுக்கு அடிபணிந்து சலாமிட்டு ஓடிப் போய்ப் பதுங்கிக் கொண்டது. உள்ளதுக்கும் ஆபத்து வந்தால் என்ன செய்வது - தென்னிந் தியாவில் தங்களுக்கென்று இருக்கும் ஒரே ஆட்சி யையும் பறி கொடுத்து விடக் கூடாதே என்ற நினைப் பில் எடியூரப்பாவின் அத்தனை முறைகேடுகளுக்கும் வெண் சாமரம் வீசும் நிலைக்கு பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை தள்ளப்பட்டது பரிதாபமே!

தனக்கு எதிராகக் கிளம்பிய சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.

மறைந்த கருநாடக முன்னாள் முதல் அமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எடியூரப்பா என்ன பேசினார் தெரியுமா?

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட போதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கியுள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் (தினமலர் 4.12.2009) என்று பேசினாரே!

இப்படிப்பட்ட உத்தமப் புத்திரர்தான், ஜாதி வலைக்குள் புகுந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

இதெல்லாம் பார்ப்பன ஊடகங்களின் கண்களுக் குத் தெரியாது, தெரியவே தெரியாது என்று நம்பித் தொலைய வேண்டியதுதான்!

----- விடுதலை தலையங்கம், 30-06-2011


Saturday, June 25, 2011

அவா பற்று தலைக்கேரியதும் புத்தி புல் மேய போயிற்றோ?

திரிநூல் தினமணி எப்பொழுதும் காஞ்சி மடம் என்றால் அப்படியே புல்லரித்து செய்தி வெளியிடும்..அதுபோன்ற ஒரு செய்திதான் இன்று வந்தது...

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை வளாகத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ ராகவேந்திர மடாதிபதி சுவாமிகளும் வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்த காஞ்சி சுவாமிகள் அங்கு நித்ய, நைமித்ய பூஜைகளை நிகழ்த்தினார். மூல ராம பூஜையை மந்த்ராலய சுவாமிகள் (ஜூன் 22, 23) நிகழ்த்தினார். (---- தினமணி, 25-06-2011)

இதுல என்ன இருக்கிறது என்று நினைக்கீரீர்களா? ..இந்த செய்தியை பார்த்ததுமே சமச்சீர் கல்வியின் ஒரு சில வகுப்புகளில் தமிழ் பாடத்தில் சென்னை சங்கமம் பற்றிய தொகுப்புக்கு தினமணிகள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டது தான் நினைவுக்கு வந்தது..

கவிஞர் கனிமொழி அவர்களின் இலக்கியம் சார்ந்த சங்கமம் பற்றிய நிகழ்ச்சி சமச்சீர் கல்வியில் இடம் பெற்றதற்கு, இந்த தினமணி, தினமலர்...துக்ளக் எல்லாம் என்ன சொன்னது?.......இதனை நடத்தியவர் இப்போது திகார் ஜெயிலில் இருக்கும் போது அவர் நடத்திய சங்கமம் பற்றிய நிகழ்ச்சி பற்றி மாணவர்களுக்கு பள்ளியில் சொல்லித்தருவது உகந்தது அல்ல என்று மாணவர்கள் மீது அப்படியே அக்கறை உள்ளவர்கள் போல தன் பார்ப்பன புத்தியை காண்பித்தது........இப்போ இந்த காஞ்சி ஜெயந்திரன் என்று பார்ப்பனர்களால் அழைக்கபடும் சுப்பிரமணியன் யோகிதை என்ன? இவர் மாணவர் பக்கம் போகலாமா?..இவரின் யோகிதை என்ன?

சங்கராச்சாரியாராம் இந்த ஜெயந்திரன்....நானே கடவுள் என்று கூறிக் கொள்பவர்களாம்..... கொலையின் பீடம் அதுதான் என்று கண்டுபிடித்து ஒரு தீபாவளி நாளில் (11.11.2004) ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா சென்று அங்கிருந்து கம்பியை நீட்டி விடலாம் என்று திட்டம் போட்டிருந்தார் போலும்! காஞ்சிபுரம் கொண்டு வந்து, நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு 15 நாள் வேலூர் மத்திய சிறையில் தள்ளப்பட்டார்.

 அவர் மீதுள்ள உள்ள குற்றச்சாற்றுகளோ சாதாரணமானவை அல்ல. இ.பி.கோ. 302, 120 பி, 34,201 கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுசதி, பொய்யான சாட்சியங்கள் சமர்ப்பித்தல் கொலை வழக்குகளில் ஆசாமி சிக்கிக்கொண்டார், 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணினார் ஜெகத் குரு. எங்கு சென்றாலும் ஜாமீன் கிடைக்காது என்று உச்ச நீதி மன்றம் சென்று பெற்றுக் கொண்டு வந்தார்.

 சின்ன பெரியவாள் விஜயேந்திர சரஸ்வதியும் கைது செய்யப்பட்டு (10.01.2005) 31 நாள் கம்பி எண்ணினார்.நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மூன்று வாரம் நாள்தோறும் கையொப்பம் சாற்ற வேண்டும். கேடி லிஸ்டில் ஜூனியர் சங்கராச்சாரியார் இடம் பெற்றார்.

 இதுதான் இந்த தினமணி சங்கராச்சாரிகள் என்று அழைக்கும் ஜெயந்திரன்,விஜயேந்திரனின் யோகிதை..... இந்த ஜெயந்திரன் அவர் தம்பி விஜெயந்திரன் நீதிமன்ற காவல் கூட இல்லீங்க....போலிஸ் காவலில் இருந்தார்கள் (கனிமொழி நீதிமன்ற காவலில் இருக்கிறார்)........இந்த யோக்கிய சிகாமணிகளை, திரிநூல் தினமணி எந்தனை சுவாமிகள் போட்டு எழுதுகிறது பார்த்தீர்களா? எல்லாம் தினமணி ஆசிரியர் அஜாதசத்ரு அம்பி வைத்தி அவர்களின் இனப்பற்று......அதோடு மட்டுமா..சாஸ்த்ரா பலகலையில் இருக்கும் மாணவர்கள் இந்த ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் 60 நாள் வாழ்ந்த அயோக்கியர் காலில் விழலாம? இவர்களை மாணவர்கள் சந்திக்கலாமா?...இவர்கள் மாணவர்களுக்கு ஆசி வழங்கலாமா? யோசியுங்கள்.

 கலைஞர் அவர்களை ஆயிரம் முறை கருணாநிதி என்று சொல்லும் இந்த திரிநூல் தினமணி வைத்தி.......இந்த அயோக்கியனை பேர் சொல்லி எழுதினால் என்ன? கூப்பிடத்தானே பெயர் இருக்கு என்ற இந்த அம்பி கேட்டாரே? இப்போ அவா பற்று தலைக்கேரியதும் புத்தி புல் மேய போயிற்றோ?

 இந்த தினமணிதான் சொல்லுகிறது, சமச்சீர் என்ற பெயரில் திராவிடர் இயக்க கொள்கைககளை மாணவர்களிடம் திணிக்ககூடதாம்.....இது யார் நாடு....ஆரியர் நாடா? இல்லை திராவிட நாடா? (திராவிட உத்கல பன்காவா? இல்லை ஆரிய உத்கல பன்காவா? எது நம் தேசிய கீதத்தில் தாகூர் கூறியுள்ளார்).....இந்த திராவிடர் நாட்டில் திராவிட இயக்க தலைவர்கள் அவர்களின் கொள்கைகளை மாணவர்கள் படித்தால் என்ன குடி முழுகி போய்விடுகிறது.
ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டும் என்றால், முகநூளில் அறிமுகம் ஆனா ஒரு நண்பர் என்னுடன் விவாதம் செய்யும் பொழுது சில தீர்வுகள் சொன்னார்..இதோ அவர் கேட்ட கேள்விகள் அப்படியே தருகிறேன் .....

"--------எதனை பேருக்கு இன்று திராவிட கொள்கைக்கு விளக்கம் தெரியும் என்று நினைகிறீர்கள்? என்னை பொருத்தவரை நான் தமிழன். நான் திராவிடனா என்று கேட்டால் எனக்கு தெரியாது....இளைஞர்களை குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே. நமது பாட திட்டத்தில் திராவிட போராட்டத்தை பற்றியோ, மொழி போர் தியாகிகளை பற்றியோ எந்த ஒரு பாடமும் இல்லை. நாம் போராடி பெற்ற சுதந்திரத்தை பற்றி எத்தனை பாடங்கள்.. ஆனால் ஏன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடை பெற்றது என்ன விதமான ஹிந்தி திணிப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதை பள்ளிகள் தோறும ஒரு பாடமாகவோ அல்லது கண்காட்சியாகவோ ஏற்படுத்த தவறியது யார் குற்றம்? தாய் மொழியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரச்செய்யாதது யார் குற்றம்? நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள். உணர்ச்சி பிளம்பாக பேசுவதாலோ அல்லது எழுதுவதாலோ எந்த வித பலனும் ஏற்படபோவதில்லை. தவறு எங்கே என்று ஆராய்வோம். குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் தமிழ் உணர்வை ஊட்டுவோம்.------"

இப்படித்தான் அவர் கூறினார்....நாங்கள் உரையாடியது இரண்டு வாரங்களுக்கு முன்பு...அதனை நிருபிக்கும் வகையில் திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்ன மும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்...எப்படி பொருந்துகிறது பாருங்கள்...

நான் அவருக்கு கூறிய பதில் (இது சமீபத்தில் துக்ளக் அடித்த நக்கலுக்கும் பொருந்தும்), கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த பார்ப்பனியத்திடம் இருந்து விடுதலை பெற முயற்ச்சிக்க வேண்டியுள்ளது........என்னதான் திராவிடர் இயக்கம் ஆட்சி செய்தாலும்...தமிழ் வாழ்க என்று விளம்பர பலகை வைத்தால் வீட்டுக்கு பிரியாணி வருமா என்று கேட்கும் தி(இ)னமலர் இருக்கத்தான் செய்கிறது.......தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்றால் அதற்கும் ஒரு கூட்டம் பூணூலை முறுக்கிக்கொண்டு கிளம்புகிறது......இதனை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நாம் நாட்டிலேயே நம் உரிமைகளை,நம் கொள்கைகளை சட்டம் போட்டு இந்த இளைங்கர்களுக்கு பெற்று தரவேண்டியுள்ளது.....இதோ இந்த சமச்சீர் கல்வி பட புத்தகத்தை கொஞ்சம் பாருங்கள்......அதனை இந்த பார்ப்பன கும்பல் திராவிட பாசிசம் என்று சொல்லி முடக்க பார்கிறது.....

http://www.scribd.com/doc/57620956/Std10-Tamil-1-
http://www.scribd.com/doc/57621252/Std10-Tamil-2
http://www.scribd.com/doc/57621522/Std10-Tamil-3
நான் மேல் சொன்ன பதிலில் இருந்து அவர் சொன்னது மூன்று சதவிகிதம் இருக்கும் ஒரு இனம் முடக்க பார்ப்பது கண்டிக்கத்தக்கதே என்றார்......இது சமச்சீர் பற்றி விவாதம் செய்யும் பொழுது நடந்த நிகழ்வு
சரி இப்பொழுது விசயத்துக்கு வருகிறேன்...........வருணாசிரம தர்மத்தை வேரோடு சாய்த்து மனிதருள் அனைவரும் சமம் என்று சொல்லி மனிதனை நினை என்று சொன்ன அய்யா பெரியாரை பற்றியும் அவர் தோற்றிவித்த திராவிடர் இயக்கம் பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் படிக்கமால் வேறு யார் படிப்பது? ஒரு வேலை திரிநூல் தினமணியும்...துக்ளக் சோ வும் எதிர்பார்க்கும் அவா பெரியவா, தாழ்த்தப்பட்டவரை நேரடியாக கண்ணால் பார்க்கக் கூடாது என்பதற்காக, அமைச்சர் கக்கனுக்கும் தனக்கும் இடையில் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்துப் பார்த்தாரே செத்துப்போன சங்கராச்சாரி சந்திரசேகரன் அவர் எழுதிய "தெய்வத்தின் குரல்" பகுதிகளை சமச்சீர் கல்வியில் மாணவர்கள் படிக்கவேண்டுமா?  இல்லை விடுதலையில் சொன்னது போல தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக்குடுக்க வேண்டுமா? நீங்களே சிந்தியுங்கள்.....

 மீண்டும் சொல்லுவது என்னவென்றால், தாம்பரம் லலிதாவில் இருந்து ஸ்ரீரங்கம் உஷா வரை சில்மிஷம் நடத்திய அயோக்கியர், சங்கரராமன் கொலையில் முக்கிய குற்றவாளியாகிய ஜெயந்திரன் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளின் கண்ணில் லோக குரு..

இவர் மாணவர்களை சந்திக்கலாம், உரையாடலாம். கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரர் என்பதற்க்காகவே கனிமொழி குற்றவாளியா? அதற்காக கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சி பற்றி மாணவர்கள் படிக்ககூடாதா? யோசியுங்கள் தமிழர்களே....இப்பொழுதும் ஆச்சாரியார் போன்றதொரு அரசியல்வாதி கிடைத்தால் அவர்கள் நினைத்தை சட்டமாக்குவார்கள், கல்வியிலும் அவர்கள் நினைத்தை வைப்பார்கள். அனால் இப்பொழுது அதுபோன்ற ஒருவரை உருவாக்கத்தான் ஜெ அம்மையாரை சுற்றி வருகிறார்கள்....அதற்க்கு கலைஞர் குடும்பம் என்ற ஒரு துரும்பை பிடித்து திராவிடர் இயக்கத்தை, அதன் கொள்கைகளை வீழ்த்த நினைக்கிறார்கள்....அது சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் ஆரம்பிக்கிறது. உஷார்! உஷார்!!

குறிப்பு: (துக்ளக் மற்றும் காஞ்சி ஜெயேந்திரன் பற்றிய செய்திகள் உதவி விடுதலை நாளிதழ்)


Monday, June 20, 2011

சமச்சீர் கல்வி எதிர்ப்பில் முதலில் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமி

சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்ப் போர் யார்? அந்த வரிசையில் முதலில் துருத்திக் கொண்டு நிற்பவர் திருவாளர் சோ ராமசாமி. அவர்தானே இப்பொழுது பார்ப்பன இனத்துக்கு, அறிவிக்கப்படாத ஏகத் தலைவர் - அ.தி.மு.க. ஆட்சியின் ராஜகுரு!

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி அவர் என்ன திருவாய் மலர்கிறார்? எல்லா வகைக் கல்வியையும் கீழே இறக்கிச் சமன் படுத்துவது சமத் தாழ்வு கல்வி முறை என்று இதற்குப் பட்டம் சூட்டியுள்ளார்.

ஸ்டேட் போர்டு, ஓரியண்டல் ஸ்கூல் ஆஃப் எஜுகேஷன், ஆங்கிலோ இந்திய முறை, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.ஈ. என்ற பல கல்வி முறைப் பாடத் திட்டங்களும்  நடைமுறையில் உள்ளன. இதில் சி.பி.எஸ்.ஈ. என்பது அகில இந்திய அளவில் சமச்சீர் கொண்டதாகும்.

தமிழ்நாட்டளவில் இப்படிப் பல் வேறு கல்வி திட்டங்கள் இருப்பதாக ஒரு குழப்ப நிலை நீடிக்கிறதே!

மெட்ரிக்குலேஷன் படித்தால் ஒரு மாதிரி,- ஸ்டேட் போர்டு ஸ்கூலில் படித்தால் தரம் தாழ்ந்த மாதிரியான சமூக மதிப்பீடுகள் இருக்கவே செய் கின்றன. பாடத் திட்டங்கள் மாறி மாறி இருக்கும் நிலையில் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும்? தொழிற் கல்லூரிகளிலோ, கலைக் கல்லூரிகளிலோ சேருவதற்குப் பல்வேறு மாறுபட்ட கல்விக் கூடங் களில் படிப்போரின் மதிப்பெண்களை எப்படி அடிப்படையாகக் கொள்ள முடியும் என்பது போன்ற பிரச் சினைகள் இதில் உள்ளடக்கம்.

ஏழை- பணக்காரப் பேதம், சிறு வர்கள், மாணவர்கள் மத்தியிலே தெரி யக் கூடாது, - உணரக் கூடாது என்ப தற்காகத்தானே சீருடைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  அப்படி இருக்கும் போது கல்வித் திட்டத்தில் மட்டும் நெட்டைக் குதிரை, மட்டக் குதிரை என்ற வேறுபாடு ஏன் என்ற வினா நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

அதற்கொரு முடிவுதான் கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்டதுதான் சமச்சீர் கல்வித் திட்டம்! கடந்த ஆண்டே முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் அமல்படுத்தப்பட்டும் விட்டது.

தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு அ.இ. அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் ஏட்டிக்குப் போட்டி என்ற அணுகுமுறை இங்கே கிடுகிடுக்கிறது.

தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கல்வித் திட்டமா - ஏற்கமாட்டோம் என்று அவசர அவசரமாக சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இப்பொழுது நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய கையுடன் குழுக்கள் அமைக்கப் படுகின்றனவாம். ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். தலைமைச் செய லாளர்தான் இந்தக் குழுவின் தலைவ ராம்.

முதல் அமைச்சரின் மனப்பான்மை இதில் என்ன என்று தெரிந்துவிட்ட பிறகு அதிகாரிகள் என்ன முடிவு எடுப் பார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.  - எழுதி வைக்கப்பட்ட முடிவுதான்.  (இப்பொழுது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபடி பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆலோசகர்கள், கேட்கவும் வேண்டுமோ!)

சோ அய்யர் எழுதுவதைப் பார்த் தால் இதில் வெறும் அரசியல் கண் ணோட்டம் என்பதை விட வருணா சிரமக் கண்ணோட்டம் என்ற கொம்பு நீட்டிக்கொண்டிருப்பதை நன்றாகவே அறிய முடிகிறது.

சிலர் உயர் வகைக் கல்வியைப் பெறுவதை, தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்ட திட்டம் என்று சமச்சீர் கல்வியைக் குறிப்பிடுகின்றார். (துக்ளக் தலையங்கம் 22.-6.-2011)
யார் அந்த சிலர்? அந்த உயர் வகைக் கல்வி என்பது என்ன? என்ற கேள்வி எழுகிறது.

அந்தச் சிலர் என்பது பார்ப்பனர் களே! அவர்களுக்குத் தேவையானது என்பது. அந்த உயர் வகைக் கல்வி என்பதே! சமச்சீர் கல்வி என்று வந்து விட்டால் அந்தச் சிலர் - இந்தச் சிலர் என்ற வேறுபாடு இல்லாமல், அந்த உயர் வகைக் கல்வி _ இந்த வகைக் கல்வி என்ற மேடு பள்ளம் இல்லாமல் அனைத்துக் குடி மக்களும் ஒரே வகையான கல்வியைப் படிக்க வேண்டும் என்ற சமநோக்கும், அகலப் பார்வையும் வந்து விடுமே! ஏற்பார்களா மேட்டுக் குடியினர்?

இதுதான் அவர்களுக்குப் பிடிக்க வில்லை. பார்ப்பானுக்கும் பறையனுக்கும் ஒரே மாதிரியான கல்வியா என்கிற பார்ப்பனத்தனம் இதில்  திமிர் முறித்து பூணூல் கொழுப்புடன் எகிறிக் குதிக்கிறது.

நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் (ஜூன் 2011) இதழில் தலையங்கப் பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ள பகுதி முக்கியமானது. இது குறித்து விடுதலை யில் இதற்கு முன்பே தலையங்கமும் தீட்டியுள்ளது. (14.6.2011) உங்கள் நூலகம் தலையங்கம் என்ன கூறுகிறது?

ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப் போவதாக அறிவித் துள்ளார். அவர் நிறுத்தி வைத்துள் ளாரா? குப்பைத் தொட்டியில் வீசி விட்டாரா? என்று தெரியவில்லை. இது பற்றி வெளி வந்திருக்கும் செய்திகளுக்கு இணைய தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பின்னூட்டங்களாகப் பதிவு செய்துள்ளனர். அவற்றிலிருந்து பார்ப்பனியக் கருத்து நிலையை ஊக்க முடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட் டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட் டியில் வீசி விட்டதாக குதூகலிக்கின் றனர் என்று தெரிகிறது.

றீறீறீ
தினமலர் உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனிய கருத்து நிலை சார்ந்த ஊட கங்களும், உயர் நடுத்தர வர்க்கப் பிரி வினரும் சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் சமத்துவம் என்ற பேச்சே அவர்களுக்குக் கசக்கிறது : தகுதி, திறன் என்பன பற்றி யெல்லாம் வாய் கிழிய அவர்கள் பேசுகின்றனர். இன்னொரு புறம் இவர்கள் தங்கள் பார்ப்பனிய - சாதிய கருத்து நிலையையே பெரும் பகுதி யினரின் கருத்து நிலையாகக் காட்ட முயற்சிக்கின்றனர். தகுதி, திறமை பற்றிய பொய்மைகளைக் கிழித்தெறிய வேண் டியது நமது கடமை என்று உங்கள் நூலகம் தலையங்கத்தில் எழுதியிருப்பது உண்மைத் தன்மையதாகும்.

நல்லவர்களின் நாடித் துடிப்பு நம் வாழ்வு என்னும் கிறித்தவ அமைப்பு நடத்தி வரும் வார இதழில் (19-6-2011) ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது.

அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல்படுத்தப் படும். முதலடியே முதல் கோணலானது. நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும். சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக் கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச் சதியின் நூற்றாண்டு காலப் போராட்ட தொடர்ச்சியாக இனம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமா வளவன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற எழுத்தாளர் சின்னக் குத்தூசி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது (29-5-2011) ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வித் திட்டத்தை இங்கே நடைமுறைப்படுத்த விடக்கூடாது. அதை அழித்தே தீருவேன் என்கிற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டி ருக்கிறது

(தமிழ்மண் ஜூன் 2011 பக்கம் 10) என்று விமர்சித்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி, அதுவும் சம மான கல்வி என்பது பார்ப்பனியத்துக்கு எதிரானதே! சோவின் தலையங்கம் அதனை வெளிப்படையாகவே கூறுகிறது.

வெறிநாயை அடித்துக் கொல்லுவது போல வெகு மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை - இந்தக் கால கட் டத்திலும் சோ ஆதரித்து எழுதுகிறார் என்றால், அந்தப் பார்ப்பனப் புத்தி அனைவருக்கும் சமமான கல்வி என்னும் சமச்சீர் கல்வியை எப்படி ஏற்றுக் கொள்ளும்? சுருக்கமாகச் சொன்னால் சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் ஆச்சாரி யாரின் குலக்கல்வித் திட்ட புத்தி யுள்ளவர்கள். சமச்சீர் கல்வி வேண்டும் என்பவர்கள் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வழிபட்டவர்கள்.

இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமா?

சமச்சீர் கல்வி பார்ப்பனர் அல்லா தாருக்கானது. சமச்சீர் கல்வி எதிர்ப்பே பார்ப்பனர்களுக்கானது.

ஆம். குலக் கல்வித் திட்டப் போர்  வேறு ஒரு பெயரில் மூண்டுவிட்டது.

தமிழர்களின் கல்வியில் கை வைத்த வர்களைத் தமிழர்கள் தண்டிக்காமல் விட்டதில்லை. 1952 இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வர்களின் தலையில் கைவைத்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1980 இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சரியான அடி வாங்கினார். (மொத்தம் 39  இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றி பெற்றார்.)

சமச்சீர் கல்விக்கு எதிரானவர்களைக் கொண்ட ஒரு குழுவினை முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அறி வித்து விட்டார்.

அதற்கான விலையை இந்த ஆட்சி கொடுக்க வேண்டி வரும்; -இது கல்லின் மேல் எழுத்தாகும்.

குலக்கல்வித் திட்ட காதலர்கள் உஷார்! உஷார்!!      

அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும்; அரை நேரம் படித்தால் போதும் என்று கூறி அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தாரே -_ அந்தக் குலக் கல்வித் திட்டத்தை... இன்றைக்கும் ஆதரித்து எழுதுகிற பார்ப் பனர்கள், பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

அந்தக் குலக்கல்வித் திட்ட ஆதரிப்புக் கனவான்கள்தான் சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்பதை அடிக்கோடிட்டு மனதில் நிறுத்துக!

தினமலர் -_ வாரமலரில் (4.4.2010) கேள்வி ஒன்றக்குப் பதில் என்ன தெரியுமா?

கேள்வி: இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதைவிட, ஏதாவது கைத் தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு, ரோடு ரோடாக அலைந்து திரிவதைவிட கைத்தொழில் ஒன்றை கற்று தொழில் செய்யலாமே... தினமலர் அத்துமணியின் பதில் இதோ:

கற்றுத் தருவதைவிட என்பதைவிட, கற்றுத் தருவதுடன் நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத்தினாராம் (படித்து, கேட்டு தெரிந்து கொண்டதால், ராம் போட்டுள்ளேன்). அப் போது இந்தத் திராவிட கட்சிகள், குய்யோ முறையோ எனக் கத்தி, பைசா பெறாத காரணங்களையும், ஜாதிவெறியையும் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டு கல்வி, மாலையில் தொழிற்கல்வி) தொடர விடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம்! ஏதோ தினமலர் மட்டும்தான் இப்படி கூறுகிறது என்று கருத வேண்டாம்.

குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப் பட்ட 26 ஆண்டுகளுக்குப்பிறகு (1980 ஜூலை) கல்கி என்ன எழுதியது தெரியுமா?

ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம் இருக்கிற பள்ளிகளையும் ஆசிரியர்களையும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது. எந்தத் தொழிலானாலும் அதில் இழிவில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாதத் திண்டாட்டத்தைப் போக்குவது.

தொழிற்கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாய் இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதியது என்றால் அவாளின் இரத்தத்தில் சூடேறிக் கொதித்துக் கொண்டிருக்கும் அந்த உணர்வைத் தமிழர்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்!

தினமலரும், கல்கியும் மட்டுமா? இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற பெருந் தலைவர் யார் தெரியுமா? அவர்தான் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி.
குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட 34 ஆண்டு களுக்குப் பிறகு அவரின் துக்ளக்கில் (15.7.1988) எழுதுகிறார். ராஜாஜி கொண்டு வந்தது அருமையான திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் என்று எழுதினாரே!

இந்தக் கூட்டம்தான் தங்களுக்கு வசதியாக -_ இன ரீதியாக முதல் அமைச்சர் கிடைத்து விட்டார். என்றவுடன், சமத்துவக் கல்வி திட்டமாம் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு உலை வைக்கின்றனர். உஷார்! உஷார்!!


 ---- மின்சாரம் எழுதியது, விடுதலை ஞாயிறு மலர் (18-06-2011) 


Saturday, June 18, 2011

தினமல(ம்)ர் கருமாதி பத்திரிக்கையின் வீண்வம்பு?

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஊழலை ஒழிக்க நம் நாட்டில் திடீர் அவதாரங்களும், "டூப்ளிகேட்' மகாத்மாக்களும், புதிய கோடீஸ்வரர்களும், வருமானத்தில் பகுதியை கணக்கில் காட்டாத கண்ணியவாதிகளும், திடீரென, தேர்தலில் நிற்காமலேயே பார்லிமென்ட் சட்ட வரைவைத் தயாரிக்கும் குழு உறுப்பினர்களாகி விட்டனர்.

டவுட் தனபாலு: அறக்கட்டளையைப் பாதுகாக்க எல்லா தகிடுதத்தமும் பண்றவங்க... ஈ.வெ.ரா., புத்தகத்தைக் கூட அடுத்தவங்க பரப்ப அனுமதிக்காதவங்க, பகுத்தறிவு பேசிட்டே, மகன் காருக்கு ராசி நம்பர் வாங்குறவங்க எல்லாம் இருக்கும்போது, அந்த மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருக்கக் கூடாதா...?

இந்த தினமலம் டவுட்டு பார்ப்பானுக்கு திராவிடர் கழகத் தலைவர் அவர்களை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போலிருக்கு....சரி பரவாயில்ல......பார்பனர்களும் இப்படி அவா பத்திரிக்கையும் சேற்றைவாரி இறைத்தாலே நாம் சரியான வழியில் பீடு நடை போடுகிறோம் என்று ஒரு அளவற்ற மகிழ்ச்சி....சரி விசயத்து வரேன்....

அறக்கட்டளைய பாதுகாக்க என்ன தகிடு தத்தம் பண்ணினார் என்று விளக்கமா சொன்ன நன்னா இருக்குமே கருமாதி பத்திரிகை......அவா சங்கரமட அறக்கட்டளை போலவே நினைச்சுண்டு பேசுறா? ஜெயந்திரனுக்கும் அவர் தம்பி விஜேந்திரன் அவர்களும் பண்ணிய தகிடு தத்தம் அனைத்தும் "நானும் அவரும்" என்று சங்கரமடத்தில் ஜெயேந்திரனுக்கு வலதுகையாக இருந்த ரவிசுப்ரிமனியன் ...இந்த இரண்டு அயோக்கியர்களும் சங்கர மட மற்றும் அதன் அறக்கட்டளையை காப்பாற்ற என்ன என்ன தகிடு தத்தம் பண்ணினார்கள் என்று புட்டு புட்டு வைத்துள்ளார்........இது தினமலம் கருமாதி பத்திரிக்கைக்கு தெரியாத என்ன? எங்கே நீங்கள் வெளியிடுங்கள் திராவிடர் கழக தலைவர் என்ன தகிடு தத்தம் பண்ணினார் என்று? அயோக்கிய பொய்யர்கள்.....இப்படி பொய் சொல்லிதானே இந்த நாட்டு மக்களையே தங்கள் அடிமையா வைத்து இருந்தீர்கள்...இனி நடக்காது....

அப்புறம் ஈ.வே.ரா புத்தகத்தை அடுத்தவங்க வெளியிட விடாம தடுக்குரான்கலாம்...அடே அப்பா இந்த பார்ப்பானுக்கு என்ன கவலை...சொல்லும் போதே பெரியார் என்று கூட உச்சரிக்க முடியல இந்த அயோக்கியருக்கு.....இதுல அய்யாவின் நூல்கள் அடுந்தவங்கள் வெளியிடல என்று அப்படியே கவலை......முதல்ல டவுட்டு பார்ப்பானே நீங்கள் பெரியார் என்று உச்சரியுங்கள் பிறகு வாரும் புத்தி சொல்ல.....பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத தினமலம் கருமாதி பத்திரிகை அய்யாவின் நூல்கள் பற்றி கவலை படுவது வாயல சிரிக்க முடியலிங்கோ......

சரி அடுத்து செம காமெடி......பகுத்தறிவு பேசிட்டே, மகன் காருக்கு ராசி நம்பர் வான்குரான்கலாம்...யார்? அத சொல்லவே பயப்படுற அயோக்கிய டவுட்டு பார்ப்பான் இந்த பேச்சு முழு பொய் என்று நிருபணமாகிறது......சரி அப்படி வாங்கி இருந்தா அதனை பற்றி விபரம் சொல்லு? ..இப்படித்தானே பெண்கள் மாநாட்டில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தானே முன் உதாரணமாக பெயர் முன் மீ.கி.வீரமணி என்று தன் பெயரின் முன்னால் தன் தாயாரின் பெயரை சேர்த்ததற்கு ஒரு இட்டு கட்டி பொய்யை அவிழ்த்து விட்டு தன் கற்பனை குதிரையில் அவர் ஜோதிடம் பார்த்தார் என்று சொன்னியே நினைவு இருக்க? அப்புறம் ஆசிரியர் தான் இனி போடுவதில்லை ....இப்போ என்ன பண்ணுவே என்று கேட்டாரே? அதற்க்கு இதுவரை நீ பதில் சொன்னியா?....வெட்கம் கேட்ட மலமே...வேண்டாம் மோதல்.....ஆசிரியர் வீரமணி என்றும் வெல்வார்.....



Wednesday, June 15, 2011

தி(இ)னமலரின் குமுறல்......

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம், ஆசிரியர்களைக் கொண்டு, இந்த கணக்கெடுப்பை நடத்த அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் கூட செலவாகாது.
டவுட் தனபாலு: சரியாச் சொன்னீங்க... அதனால, கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வச்சிருக்கிற திராவிடர் கழகமும், இட ஒதுக்கீடு வாங்கித் தர்றதுக்காகவே பிறந்த உங்க கட்சியும் சேர்ந்து, 10 கோடி ரூபாயை செலவழிச்சு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திடுங்க... அதை தமிழக அரசு ஏத்துக்கும்படியா பார்த்துக்கலாம்...!  (தினமலர், 16-06-2011)
 
 
மேலே இனமலர் டவுட்டு தனபால் பார்ப்பான் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வச்சிருக்கிற திராவிடர் கழகமும் சொல்லி இருக்காரே......
 குமுதம் குளுமத்துகிட்ட இருக்குறது என்ன? ஜெயந்திரன் என்று அழைக்கப்படும் காஞ்சி சுப்பிரமணியன் வச்சு இருக்கிறது என்ன? நீங்கள் எல்லாம் சொத்து குவிச்சி வச்சுகிட்டு ஆரிய அக்கிரகார கூட்டத்துக்கு வக்காலத்து வாங்க இருக்கும் போது....திராவிடர் கழக சொத்த கணக்கு போட நீங்கள் யார்?..... பெரியாரை பெரியார் என்று சொல்லாத வக்கிர புத்தி கொண்ட கும்பல் சொத்து மட்டும் கண்ணுக்கு தெரியும்.......அயோக்கியர்கள்....
 
குறிப்பு: குமுதம் குழுமத்துல அண்ணன் தம்பி பிரச்சனை விசுவரூபம் எடுத்தபோது கொபலபுரத்துல போய் கிடையா கிடந்தது சொத்தை காப்பாத்தி கிட்டு வந்திங்களே நினவு இருக்க?
 
தமிழர்களே இனமலர் கருமாதி பத்திரிகை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்......
 
 


Saturday, June 11, 2011

தினமல(ம்)ர் டவுட்டு தனபால் பார்ப்பானின் பொறுப்பு...

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் பல இருந்தாலும், அத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளைப் படிப்படியாகக் களைய வேண்டும் என்று தான் பா.ம.க., வலியுறுத்தி வருகிறது.
 டவுட் தனபாலு: அது எப்படிங்க...? ஒருத்தன் கிணத்துல விழுந்துட்டு இருக்கான்... "கப்'புன்னு அவனைப் பிடிக்க தமிழக அரசு முயற்சி பண்ணுது... "இருங்க... முழுசா விழுந்து முடிக்கட்டும். அப்புறமா அவனைக் காப்பாத்திக்கலாம்'கிறீங்க... எது சரியா இருக்கும்...?

 அடே அப்பா அயோக்கிய தினமலர் டவுட் தனபால் பார்ப்பானுக்கு என்ன பொறுப்பு.....ஒருத்தன் கிணத்துல விழுந்துட்டு இருக்கானாம்....அவன் எவண்டா தினமலம் பார்ப்பானே? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் கொண்டுவந்த போதும் ஒருத்தன் கிணத்துக்குள்ள விழுந்துகிட்டு இருந்தான்ள்ள தினமலம் பார்ப்பானே? அவனே நீங்களும் உங்க வெட்கம் கெட்ட அரைநிர்வாண கூட்டமும் இதே மாறித்தானே காப்பாத்த பாடுபட்டீங்க.....அயோக்கிய பசங்களா........

 அப்புறம் அதே மாறி தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு என்று சொன்னப்ப ஒரு கூட்டமே கிணத்துக்குள்ள விழுந்துகிட்டு இருந்ததுள்ள தினமலம் பார்ப்பானே? அப்பொழுதும் நீங்களும் உங்க அக்கிரகார கூட்டமும் அவிங்களே காப்பாத்த பட்ட பாடு.....

 இவனுக தமிழன காப்பத்துரானுகலாம்....நம்புங்க தமிழர்களே........பெரியார் சொன்னது போல பார்ப்பானுக்க எதனை எதிர்த்தாலும் அது தமிழர்களாகிய நமக்கு நன்மை தருவதுதான் என்பதை உணர்த்து செயல்படுங்கள் தமிழர்களே.....வெற்றி நமக்கே.....
 


திரிநூல் தினமணியே பதில் சொல்...கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்பது யாரை வைத்து?



சாதி பேதங்களைக் களைந்து, மத வேறுபாடுகளை நீக்கி, சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றியதற்குக் காரணம். சமூகநீதிப் பிரச்சாரமும் பகுத்தறிவுவாதமும்தான் என்று திராவிட இயக்கத்தினர் தங்களது சாதனையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இன்றைய சமுதாயத்தில் சாதி -_ மத வேறுபாடுகளை உடைத்தெறிந்து, ஏற்றத் தாழ்வுகளைப் பெருமளவு அகற்றி யதன் அடிப்படைக் காரணமாக பெருந் தலைவர் காமராஜின் கட் டாயக் கல்வித் திட்டமும், அந்தத் திட்டம் வெற்றி பெற அவர் கையாண்ட இலவச மதிய உணவுத் திட்டமும் தான் என்பதே பேசப் படாத நிதர்சன உண்மை என்று தினமணி தலையங்கம் தீட்டுகிறது.

தினமணி தலையங்கத்தின்படி திராவிட இயக்கத்தின் சுயமரியாதைப் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. சமுதாயத்தில் ஏற்றத் -தாழ்வுகள் களையப்படுவதற்குத் தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொள் கிறார்களாம் திராவிட இயக்கத்தினர்.
தினமணி ஆசிரியர் தொடக்கத்தில் அரசல் புரசலாக ஒளிந்திருந்த ஆர்.எஸ்.எஸ். புத்தியை, பார்ப்பன நரித் தந்திரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது தன் பூணூல் கோத்திரத்தை துக்ளக் ஏட்டில் திருவாளர் சோ ராம சாமி அய்யரால் மனுதர்ம சல்லடையில் சலித்து எடுக்கப்பட்ட பேர்வழி என்பதை மிக வெளிப்படையாகவே சட்டைக்கு உள்ளிருந்த பூணூலை சட்டைக்கு வெளியே தூக்கிப் போட்டுக் கொண்டு திமிராகத் திரிகிறார் என்பதற்கு அடையாளம்தான் இந்தத் தலையங்கம்.

இதில் இன்னொரு விடயம் என்ன வென்றால் திராவிட இயக்கத்தையும் காமராசரையும் மோதவிடும் நரித் தந்திரம்தான்.

காமராசர் பச்சைத் தமிழராக, கல்வி வள்ளல் காமராசராக சொல்லப்படுவது - விளக்கப்படுவது எந்த அடிப்படையில்? கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார்; காரியம் காமராசர் என்று ஆனந்த விகடன் எழுதியதற்கு என்ன பொருள்?
காமராசர் பற்றிக் குறிப்பிடும்போது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி, அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தாரே -_ ஆச்சாரியார் ராஜாஜி அதனையும் குறிப்பிட்டு இருக்க வேண்டுமே _ அதனைக் குறிப்பிட்டு இருந்தால்தானே காமராசர் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் ஆன வரலாற் றின் பின்னணி உண்மையானதாக இருக்க முடியும்?
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்படுவதற்கு யார் காரணம்? தந்தை பெரியார் அல்லவா? திராவிடர் கழகம் அல்லவா _ திராவிடர் இயக்கம் அல்லவா!

ஆச்சாரியாரைப் பதவியை விட்டு விரட்டிய சூழலில் காமராசர் முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தது அதற்குத் துணிவு கொடுத்தது _ மக்கள் மத்தியில் அவரைக் கொண்டு சென்றது யார்? இயக்கம் எது?


கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டதே - _ அதன் பின்னணி என்ன?

காமராசரை ஆட்டுவிப்பவர், வழி நடத்துபவர் பெரியார் என்று கல்கியே ஒப்புக் கொண்ட பிறகு இந்த வைத்தியநாதய்யர்கள் யாவர்? அந்தக் கால கட்டத்தில் டவுசர், போட்டிருந்தாரோ என்னவோ!

மதிய உணவுத் திட்டம் காமராசர் காலத்தில் மட்டுமல்ல -_ நீதிக்கட்சித் தலைவர் பி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட சமூக நீதித் திட்டம் என்ற வரலாறு தினமணிகளுக்குத் தெரியுமா?

காமராசரை இந்தத் தினமணிக் கூட்டம் எப்படி யெல்லாம் கரித்துக் கொட்டியது என்பது நமக்குத் தெரியாதா? தமிழர்கள் அறிய மாட்டார்களா?

காமராசரால் கல்வி வளர்ச்சி பெற்றது. ஏற்ற தாழ்வு போக்கப்பட்டது என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் இந்தக் கூட்டம் இலவசக் கல்வி கொடுத்ததாலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதாலும் தகுதி -_ திறமை கெட்டுப் போய் விட்டது என்று கூச்சலிடவில்லையா?

அந்த நேரத்தில் இந்த பார்ப்பனக் கூட்டத்தைப் பார்த்து காமராசர் எழுப்பிய வினாக்கள் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கின்றனவே!

பறையனைப் படிக்க வச்சேன் என்ஜினீயர் ஆனான்; - எந்தப் பாலம் இடிந்தது சொல்!

பறையனைப் படிக்க வச்சேன். டாக்டர் ஆனான்; அவன் ஊசிப் போட்டு எந்தப் பிள்ளை செத்தது சொல்!

உன் தகுதியும் தெரியும், திறமையும் தெரியும். உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும். என்னை அழிக்க நினைத்தால் உன் அஸ்திவாரத்தையே ஒழித்து விடுவேன் -_ ஜாக்கிரதை! என்று காமராசர் சங்கநாதம் செய்தாரே -_ ஞாபகம் இருக்கிறதா!

இது யார் பேச்சு? பெரியார் பேச்சா _ காமராசர் பேச்சா? என்று விடுதலை தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டதெல்லாம் தெரியுமா -_ தினமணி திரிநூல்களுக்கு?

தி.மு.க. ஆட்சி போய் விட்டது. அதிமுக ஆட்சி வந்து விட்டது. இனி ஆனந்தராகம்தான் நமக்கு_ அவாள் கூடாரத்துக்குள்ளேயே ஒட்டகம் நுழைந்துவிட்டது.

திராவிடர் இயக்கத்துக்குள் ஊடுருவல் நடந்து விட்டது. புத்த மார்க்கத்தைத் தீர்த்துக் கட்டியது போல நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்று கணக்குப் போடுவதாக தெரிகிறது _ பூணூல் வளையம் பலமாக வைக்கப் படுகிறது.

உண்மையான திராவிடர் இயக்கங்களுக்கு உண்மையாகவே வேலை அதிகமாகிவிட்டது. எச்சரிக்கைகளும் அதிகமாகி விட்டன.

விழிப்பாக இருப்போம். வெப்பமாகத் தகிப்போம்!

நமது போராயுதமான விடுதலையும், வெளி யீடுகளும் தமிழர்களின் வீட்டுக்கு வீடு போய்ச் சேர்ந்தாக வேண்டும் _ வீரர்களே தயாராவீர்! தயாராவீர்!!

------------ மின்சாரம் அவர்கள் எழுதியது, விடுதலை ஞாயிறு மலர் (11-06-2011)


Thursday, June 09, 2011

ஆர்.எஸ்.எஸ் தினமணியே...சமச்சீர் கல்வியில் பகுத்தறிவு தேவை இல்லையா?


                                       படம்: தினமணி வைத்தியநாதன்

குறிக்கோள் மாறக் கூடாது என்ற தலைப்பில் தினமணி ஏடு இன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள் ளது. எழுதியது இந்து முன்னணி ராமகோபாலனா தினமணி வைத்திநாதய்யரா என்று சந்தேகப்படத் தேவையில்லை. இருவரும் ஆர்.எஸ்.எஸின் முகங்கள்தாம்.

சமச்சீர் கல்விபற்றி இந்து முன்னணி ராமகோ பாலய்யர் ஏற்கெனவே சொன்னவற்றை அப்படியே நகல் எடுத்துத்தான் தலையங்கமாக தினமணியில் தீட்டப் பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி என்ற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக்களைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி என்று தினமணி தலையங்கம் கூறுகிறது.

சமச்சீர் கல்வி எதிர்க்கப்படுவதற்கான காரணம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா? ஆம் பூனைக்குட்டி வெளியில்வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைசிறந்த படைப்பாளியில்லையா? எழுத்து லகில் அவருக்கென்று தனி சிம்மாசனம் இல்லையா? உரை நடை, கவிதை, சிறுகதை, புதினம், கவிதை என்று எழுத்துத் துறையில் சகல பரிமாணங்களிலும் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் இல்லையா? செம்மொழி குறித்து அவரால் எழுதப்பட்ட குறிக்கோள் பாடல் ஒன்று இடம் பெற்றது மாபெரும் குற்றமா?

பகுத்தறிவு வாதம் என்ற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக் களைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதாம்.

பகுத்தறிவு வாதம் என்பதே அவர்களின் கண்ணோட் டத்தில் குற்றமாகி விடுகிறது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் பகுத்தறிவுச் சிந்தனைகள் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே ஒரு கூட்டம் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மாணவர்களை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதன் நோக்கம் வெறும் நெட்டுருப் போடத்தானா? அவர்களின் பகுத்தறிவை பட்டை தீட்டி கூர்மைப்படுத்துவதுதானே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாம். அது ஒரு குற்றமாம். திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள்பற்றி தமிழ்நாட்டில் சொல்லிக் கொடுக்காமல் வேறு எங்குப் போய் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்? இவர்களைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்பட்டதாகப் பொருளா?

தந்தை பெரியார் அவர்களின் சமூகப் புரட்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மனிதாபிமானச் சிந்தனை களை அங்கீகரித்து அய்.நா. மன்றமே விருது அளித்து பாராட்டுகிறது. இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

ஆனால் இவர்கள் மட்டும் பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

பாடத் திட்டங்களில் கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மகாபாரதம், இராமாயணம் முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் அந்தரங்கத் துடிதுடிப்பு!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக் கொடுக்காமல், பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து! என்று சொன்ன பெரியாரின் கருத்துக்கள் பாட நூல்களில் இடம் பெறலாமா? அப்படி இடம் பெறுவது பிஞ்சு நெஞ்சங்களில் விஷ விதைகள் தூவுவதாகும் என்கிறது ஒரு கூட்டம்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அண்ணா பெயரையும், திராவிட இனச் சுட்டுப் பெயரையும் (அண்ணா திமுக) கட்சியிலும் கொடியிலும் தாங்கிக் கொண்டிருக்கக் கூடியதுதானே!

அப்படிப்பட்ட ஆட்சிக்குத் திராவிட இயக்கத் தோற்றம், அதன் சமூக நீதிப் பயணம் பற்றியும் சொல்லிக் கொடுக்க விருப்பம் இல்லை - திராவிட இயக்கத் தலைவர்கள், பற்றி பாடத் திட்டங்களில் கண்டிப்பாக இடம் பெறக் கூடாது என்று கருதுகிறதா என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விட வேண்டும்.

திராவிட இயக்கம் பேரால் உள்ள, அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு கட்சியை அதற்கு எதிரான கொள்கை வழியில் திசை திருப்பித் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

பார்ப்பனர் அல்லாதாரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி பார்ப்பனீயத்தை வளர்க்கும் வகையில் நடைபோடுகிறது என்ற எண்ணத்தைத்தான் பெரும்பான்மையான மக்களிடத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தும். எச்சரிக்கை!

-------- விடுதலை தலையங்கம், 09-06-2011


Wednesday, June 08, 2011

துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஆலோசனை கொடுத்தால் துக்ளக் ராஜபரிபாலனம் தானே நடக்கும்?

தொடக்கத்திலேயே முதல் கோணல் என்று கூறும் அளவுக்கு அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை அமைந்துவிட்டது.


எடுத்த எடுப்பிலேயே சட்டமன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. அடுத்த கட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்படுகிறது. ஒரு நெல்லுக்கு வைக் கப்பட்ட பெயர் கூட மாற்றப்படுகிறது என்றால், பாமர மனிதர்கூட இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளும் நிலைதான்.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் சமச்சீர் கல்வி கைவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறது என்று கூறமுடியாது. ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிகளும் கூடத்தான் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர்.

இதிலிருந்தே தெரியவில்லையா? பச்சையான அரசியல் கண்ணோட்டத்தோடு - தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் மாற்றுவது என்கிற மனப்பான் மையில் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது என்பது வெளிப்படையானதாகும். இந்த ஆட்சி இப்படி ஏட்டிக்குப் போட்டியாக நடைபோடுமே தவிர, மக்கள் பிரச்சினையை திறந்த மனத்தோடு அணுகாது என்பதை எடுத்த எடுப்பிலேயே இவ்வரசு காட்டிக் கொண்டுவிட்டது.

வாக்கு அளித்தவர்களுக்கு மட்டுமல்ல - எதிராக வாக்களித்தவர்களுக்கும் சேர்ந்துதான் ஆட்சியாகும்.

அந்த மனப்பான்மை இந்த ஆட்சிக்கு இருப்ப தாகத் தெரியவில்லை. இந்தத் தன்மை வெகு விரைவில் பொது மக்கள் மத்தியில் கெட்டப் பெயரைக் கொண்டு வந்து சேர்த்துவிடும்.

பதவியேற்ற நாளிலேயே அரசு நூலகங்களுக்கு விடுதலை நிறுத்தும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால், இதன் தன்மையை எளிதில் புரிந்து கொள்ள முடியுமே!

துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஆலோசனை கொடுத்தால் துக்ளக் ராஜபரிபாலனம் தானே நடக்கும்?

சமச்சீர் கல்வி என்பது ஒட்டுமொத்தமாக மக்களால் வரவேற்கப்படும் கல்வித் திட்டமாகும். நீண்ட காலமாக ஏற்றத் தாழ்வற்ற ஒரு கல்வி முறை செயல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்துள்ளது.

அந்தக் கோரிக்கைக்கான செயல் வடிவத்தைத் தான் கடந்த தி.மு.க. ஆட்சி அளித்தது. கடந்த ஆண்டே முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு அமல்படுத்தவும்பட்டுவிட்ட நிலையில், ஆடு- ஓநாய் கதை கூறி, அத்திட்டத்தை நிறுத்துகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன?

பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் கல்வியாளர் இல்லை என்று இவ்வாட்சி கருதுகிறதா? சட்டப்பேரவையில் இதுகுறித்து முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சமச்சீர் கல்வித் திட்டம் யார் யாரையெல்லாம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது; பல தரப்பினரின் கருத்து களுக்கு மதிப்பளித்து உருவாக்கப்பட்டது என்பது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க மசோதாவை நேற்று அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தொடக்கத்தில் என்ன கூறினார்? பாடத் திட்டத்தில் உள்ள சில குறை பாடுகள் நீக்கப்பட்டு, இவ்வாண்டே சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று செய்தியாளர் களிடம் கூறவில்லையா?

அதற்குள் ஏன் இப்படி தலைகீழ் மாற்றம்? காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும், முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் கூறியுள்ளது சரியே என்றுதான் பொதுமக்கள் கருதுவார்கள்.

இவர்கள் வேறு கல்வி நிபுணர்களை ஏற்பாடு செய்து திட்டத்தை உருவாக்கினாலும், அதில் குறைகளையே கண்டுபிடிக்க முடியாது என்று உத்தரவாதம் கூறுவார்களா? அதிலும் குறைகள், ஓட்டைகள் என்று விமர்சனங்கள் வரத்தான் செய்யும். எதிலும் நூற்றுக்கு நூறு துல்லியம் என்பது கிடையாதே! இந்த நிலையில், ஓர் அரசு கொண்டு வந்தத் திட்டத்தை இன்னொரு அரசு தூக்கி எறியும் என்றால், நாட்டில் ஆட்சி நடக்காது - மாறாக, எரிந்த கட்சி, எரியாத கட்சி வில்லுப்பாட்டுதான் நடக்கும்.

எந்த மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத் தார்களோ, அதே மக்கள் திருப்பிக் குத்த எவ்வளவு நாள் பிடிக்கும்?

நிதானம் தேவை - நெருப்புப் பார்வை தேவையில்லை!

----விடுதலை தலையங்கம், 08-06-2011


Tuesday, June 07, 2011

அன்றைய தினமணி தலையங்கம் தலைமைச் செயலக வாளாகத்தை பார்த்து.....இப்பொழுது?


மேலே இணைத்துள்ள படத்தை மேல் கிளிக் செய்து படிக்கவும், அது தினமணி தலையங்கம், 15.03.2010 அன்றைய முதல்வர் கருணாநிதியை பாராட்டியும், சட்ட மேலவை முதல்வர் கொண்டு வரவேண்டும் என்று தீட்டியது......இன்று அதன் நிலைப்பாடு என்ன? வாய் மூடி மௌனியாய் இருப்பது தான் நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையோ? பொது பத்திரிகை என்று சொல்லிகொள்ளும் தினமணி வண்டவாளம்.....ஆர்.எஸ்.எஸ் வைத்தியநாதன் அவா தர்மமும் இப்பொழுது தமிழர்களாகிய உங்களுக்கு வெளிச்சம்.....


இது சட்ட மேலவை முதல்வர் கலைஞர் பற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டு பூரித்து வெளியிட்ட செய்தி......இந்த யோகிதையும் தெரிந்துகொள்ளுங்கள்....ஆட்சி மாற்றம் வரும் போகும்....தமிழர்களுக்கு மக்களுக்கு என்று தன்னை பீற்றி கொள்ளும் தினமணிகள் இப்பொழுது எந்த தலையங்கம் தீட்டப்போகிரார்கள்?....அவா இனஉணர்வு என்று இப்பொழுதாவது இந்த தினமணிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் தமிழர்களே....


Sunday, June 05, 2011

கம்பன் கயமை கலா ரசிகர்களுக்கு அர்ப்பணம்...

கம்ப இராமாயணம்பற்றி மக்களிடம் பரப்பிடும் கயமைத்தனத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தினமணி இதில் முன்னிலை வகிக்கிறது. கம்ப இராமாயண ஆபாசக் கடலை - பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தொட்டு காட்டியுள்ளார் தந்தை பெரியார்.

வால்மீகி இராமாயணத்தைக் கம்பன் மாற்றி அதாவது, இராமன், சீதை முதலியவர்களை வால்மீகி, முறையே அயோக்கியர்களாகவும், இழிகுலப் பெண் போலவும் பல இடங்களில் சித்தரித்திருப்பதை அடியோடு புரட்டி, இராமனை கடவுளாகவும், சீதையைக் கடவுள் மனைவியாகவும் சித்தரித்துத் தமிழ் மக்களை அவ்விருவரையும் கடவுள்களாகக் கருதி வணங்கும்படி செய்து விட்டான் என்று சுயமரியாதைக்காரர்கள் சொல்லும் குறைபாட்டிற்கு தோழர் சோமசுந்தர பாரதியார் போன்ற சில கலாரசிகர்கள் சுயமரியாதைக் காரர்களை கல்வி அறிவற்றவர்கள் என்றும் இராமாயணத்தைப் படிக்காமல் பிதற்றுகிறார்கள் என்றும் கம்பன் இராமனை ஒரு தமிழ் மகனாகவும் சீதையை ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் சித்தரித்து அதாவது தமிழர்களுடைய பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் மேன்மைகளையும் எடுத்துக் காட்டுவதற்காக அப்படி எழுதினாரே தவிர மற்றபடி ஆரியக் கூலியாக இருந்து எழுதியதல்ல என்றும் கூறுகிறார்கள். சுயமரியாதைக்காரர்களுக்கு இந்த ரசிகர்களைப் போன்ற படிப்பு இல்லாமல் இருக்கலாம், அதற்காக சுயமரியாதைக்காரர்கள் சங்கடப்படுவ தில்லை. ரசிகர்களிடம் நற்சாட்சிப் பத்திரம் கேட்கவும் இல்லை.

கம்பன் வால்மீகி இராமாயணத்தை மாற்றி எழுதியது தமிழர் மேன்மையை விளக்கவா? என்றும், இதைப் பாரதியார் போன்றவர்கள் உண்மையாய், மெய்யாய், வாய்மையாய், சொல்லுகிறார்களா? அல்லது உண்மைக் கம்பனைப் போல் சொல்லுகிறார்களா? என்றும் அறிய ஆசைப்படுகிறேன். இதற்குப் பதில் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு படித்தவர்கள் எவ்வளவும் படிக்காதவர்களை மதித்துப் பதில் சொல்லுவது அவர்களது மானத்துக்கும், மரியாதைக்கும், பெருமைக் கும், படிப்புக்கும் இழுக்காகுமல்லவா? ஆதலால் பொது மக்கள் பார்த்து இதுதானா தமிழ் மக்கள் தன்மை? கம்பன் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகத்தான் சித்தரித்தானா என்பவற்றைத் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.


கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு
நல்குவதென் இனி    நங்கை கொங்கையைப்
புல்குவ பூணும் அக்   கொங்கை போன்றன;
அல்குலின் அணிகளும்    அங்குலாயின ;
பல்கலன் பிறவும்   அப்படிவம் ஆனவே.

இதுதான் கம்பர் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகச் சித்தரிக்கும் காட்சியாம். அதாவது சீதையை இராவணன் தூக்கிப் போகும்போது தேரில் இராவணன் மடிமேலிருந்த படியே சீதை தனது நகைகளைக் கழற்றி மேலாடையில் போட்டுக்கட்டி எறிந்துவிடுகிறாள். அதை வானரங்கள் எடுத்து வைத்திருந்து இராமனுக்கு காட்டுகின்றன. இராமன் அவைகளைப் பார்த்தவுடன் அந்த நகைகள் இராமனுக்கு அளிக்கும் காட்சித் தமிழ்ப் பெண்ணின் சடையில்லை, சடையலங்காரம், நெத்திச்சுட்டி, வங்கி, வாளி, மோதிரம், பாதரசம், பாடகம், தண்டை, பீலி, சுத்து, முதலிய கண்களுக்குத் தெரியும்படியான நகைகளைக் கம்பன் விட்டுவிட்டு கொங்கைகள் பூண்ட நகையையும், அல்குல் பூண்ட நகையையும் மாத்திரம் விளக்கிக் காட்டியதோடு அவைகள் அந்தந்த அவையவங்கள் போலவே காட்சி தந்தன என்கிறார்.

அணி என்பது காண்பவர்களுக்குக் காட்சியளிப்ப தற்கு அதாவது பார்வைக்கு அழகாய் இருப்பதற்கு ஆகவே நகை அணிவதாகும். அல்குலுக்கு அணிகள் உண்டா? அதுகாணும் படியான அவயவமா? அல்குலுக்கு மறைவு கட்டுவார்கள். அதுவும் குழந்தைப் பருவத்தில்தான் கட்டுவார்கள். ஆடை உடுக்கும் பருவம் வந்தவுடன் அதை அவிழ்த்து விடுவார்கள். சீதையோ வயிறு சரிந்த கிழவி என்று லட்சுமணனே சாட்சிப் பிரமாணமாகக் கூறியி ருக்கிறான். சூர்ப்பநகையும் சீதை எதிரிலேயே இராமனிடம் வயிறு சரிந்தவள் என்று கூறியிருக்கிறாள்.இந்த நிலையில் இந்தக் கிழவிக்கு அல்குல் அணியோ,மறைவோ தேவையிருந்து இருந்திருக்குமா?அய்யா! இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இராவணன் மடிமேல் இருக்கும்போது சீதை இராவணனுக்குத் தெரியாமலோ இராவணன் அந்த நகை இருந்த இடத்தைப் பார்க்காமலோ கவனிக்காமலோ இருக்கும்படியாவது அந்த நகையைக் கழட்டவோ அவிழ்த் தெடுக்கவோ முடியுமா? இந்த லட்சணத்தில் சீதை இந்த நகைகளைக் கழட்டிக் கழட்டித் தனது மேலாடையில் போட்டு பிறகு மூட்டையாகக் கட்டி நிலத்தில் போட்டாள் என்று இருக்கிறது. இந்தக் காட்சியை சற்று மனதில் நினைத்துப் பாருங்கள். மேலாடையும் இல்லாமல் கொங்கைப் புல்குவ பூணுகளையும் கழற்றி விட்டு அப்புறம் அல்குல் அணியையும் கழட்டுவதோ அவிழ்ப்பதோ செய்திருந் தால் அந்தக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கம்பர் சித்தரித்தது போன்ற காரியம் தேரின் மேல் நடந்திருக்குமானால் அங்கு அப்போது என்ன நடந்திருக்கும்? இராவணன் உடனே தேரை நிறுத்தி சீதையைக் கட்டிப்பிடிக்கும்படி செய்திருக்குமா இருக் காதா என்று கேட்கிறேன். அப்படி நடந்திருக்கவில்லை யானால் இராவணனின் மனோதிடமும், மேன்மையான குணமும் குன்றின் மேல் (லட்சம் காண்டில் பவர் எலக்ட் டிரிக்) விளக்குப்போல் விளங்குகிறதா? இல்லையா? என்று கேட்கிறேன்.

இந்த இடத்திற்கு ஏற்றது போல் வால்மீகி என்ன சொல்லுகிறார் என்றால், இலங்கை போய்ச்சேரும் போது சீதை மோகமுற்றிருந்தாள் என்று சொல்லுகிறார். எனவே கம்பர் சொன்னபடி காரியம் நடந்திருந்தால் வால்மீகி சொல்லுகிறபடி இருவருக்கும் மோகம் ஏற்பட்டிருப்பதில் ஆட்சேபணை சொல்ல இடமில்லை.

ஆகவே கம்பன் வருணனைப் புலவனே தவிர, நல்ல பொருள்சுவை அறிந்த ஒரு அறிவுப் புலவனல்ல என்பதற்கு இப்படிப்பட்ட கவிகள் இன்னும் அநேகம் காட்டலாம் என்பதோடு அவனுக்கு இராமாயணம் பாடும்போது தமிழ்ச்சொரணை கடுகளவு இருந்ததாகச் சொல்லுவதற்கில்லை என்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறேன்.

(குடிஅரசு - கட்டுரை - 25.12.1943)

------- தொகுப்பு விடுதலை, 05-06-2011


எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட்டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே!...


இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதி இந்து ஏட்டில் ஒரு செய்தி.

சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன் அந்தத் தற்கொலை? படிப்பில் அக் கறையில்லையா? புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது.

பட்டமேற்படிப்பில் இறுதியாண்டு பயிலும் இந்த மாணவர் படிப்பில் படுசுட்டி - ஒரு பாடத்தில் கூடத் தோல்வி அடைந்த தில்லை.

கெட்டிக்கார மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டானாம்?

மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் பிரச்சினையே!. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே என்ற ஆத்திரம்.

எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட் டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே! என்னும் உயர்ஜாதி பார்ப்பனப் பேராசிரியர் களின் கேலி - கிண்டல்!

மாணவன் மன உளைச்சலுக்கு ஆளானான். அதன் விளைவுதான் இந்தத் தற்கொலை! அந்த மாணவன் பெயர் ஜஸ் பிரித்சிங். அண்ணன் மாண்டான் என்ற வுடன் அவரது தங்கையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணும் கணினி பாடப் பட்டதாரி.

இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பால்முகுந்த். டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் படிக்க வந்தவர். 2010 மார்ச்சில் தற்கொலை செய்து கொண்டார்-_ காரணம் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட அதே நிலைப்பாடுதான். உயர் ஜாதி பார்ப்பனர்களின் கீழிறக்கமான பேச்சுகள் -சாடல்கள்தான்.

எய்ம்சில் ஜாதி பார்த்து மதிப்பெண் போடுகிறார்கள் பார்ப்பனப் பேராசிரியர்கள் என்று குமுறும் உள்ளத்துடன் மாணவர் கள் கூறியதுண்டு. தாழ்த்தப்பட்ட மாண வர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 18 பேர் என்று இன்சைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டில்லி உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடிசைவாசி. ஜாதி நாகம் கொட்டிய நஞ்சால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் அய்.அய்.டி. என்ற ஒரு பெரிய அக்ரஹாரம் இருக்கிறது. அங்கும் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை. ஆந்திராவைச் சேர்ந்த நிதின்குமார் (சித் தூரையடுத்துள்ள குத்தளம்பட்டு சொந்த ஊர்.)

பெங்களூருவில் வளாக நேர் தேர்வில் (கேம்பஸ் இன்டர்வியூ) நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் தன் திட்ட அறிக்கையை முடித்துக் கொடுத்துவிட்டு பெங்களூருவுக்குச் சென்று சேர்ந்திடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான்.

ஆனால் பார்ப்பனப் பேராசிரியர் என்ன சொன்னாராம்? உன் பிராஜக்ட் ரிப்போர்ட் சரியில்லை. இன்னும் ஆறு மாதம் தங்கி யிருந்து அறிக்கையைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்கிறார். மாண வனின் ஆசைக் கோட்டை அடியோடு நொறுங்கி விழுந்தது.

கடந்த மார்ச் 24 ஆத் தேதிதான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டு, பெற்றோர்கள் அதிர்ந்து ஓடி வருவதற்குள் நிதின் தன் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளான்.

நிதினின் மனக்கோட்டை மட்டுமல்ல; அவரின் பெற்றோர்கள் தங்கள் மனதில் நீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கிற கனவுகள் எல்லாம் அனலில் பட்ட பட்டாசாக வெடித்துச் சிதறிவிட்டதே!

இட ஒதுக்கீடு வாகனத்தில் ஏறியா எங்கள் கோட்டைக்குள் நுழைகிறீர்கள்? நீங்கள் எப்படி படித்து, எப்படி தேர்வு எழுதி, எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் பாணியில் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் ஆதிக் கம் செலுத்தும் பார்ப்பனப் பேராசிரியர்கள் நடந்து கொள்கிறார்கள்.

போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்கள் நயவஞ்சகமாக நசுக்கி வருகிறார்கள்.

இந்தியா முழுமையும் இயங்கி வரும் அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய். எம். போன்ற கல்வி நிறுவனங்களின் செயல் பாடுகள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துப் படிக்கும் மாணவர்களுக் கான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழுவின் சிபாரிசு கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்களை - திறந்த போட்டியில் இடம் அளிக்காமல், அவர் களுக்கான எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவுகளில் இடம் அளித்து, ஏற்கெனவே இந்தப் பிரிவுகளில் இடம் பெற்றவர்களை வெளியேற்றும் சமூக அநீதி பல ஆண்டு காலமாக நடை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதி மன்றம் இப்பொழுதுதான் இதில் தெளிவான வழியைக் காட்டியிருக்கிறது. இதன் காரணமாக இடைப்பட்ட காலங் களில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் சூழ்ச்சியால் பறிக் கப்பட்டனவே. இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? விதிகளை மீறி நடந்து கொண் டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் படவில்லை?

டில்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் மார்க்) நிர்ணயத்துள்ள முறை மிகக் கொடுமையானது -_ விஷமத்தனமானது!

திறந்த போட்டியில் கடைசி மதிப்பெண் ணிலிருந்து 10 மதிப்பெண்களைக் குறைத்து, அதுதான் இவர்களுக்கான கட்ஆஃப் மார்க் என்று அவர்களாகவே எந்த வித விதிமுறைகளுக்கும் ஆட் படாமல் ஆரிய அட்டகாசமாக நடந் துள்ளனரே!

டில்லி உயர்நீதிமன்றம் தலையில் குட்டியதற்குப் பிறகுதானே சரியான இடத் துக்கு சமூக நீதித் தேர் நகர்ந்து வந்துள்ளது.

இடைக்காலத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களுக்கு என்ன நட்ட ஈடு - என்ன பரிகாரம்? தவறு செய்த நிருவாகி களுக்கு என்ன தண்டனை?

சட்டங்களையும், விதிமுறைகளையும் குழியில் தள்ளி நயவஞ்சகமாக ஆதிக்கம் செலுத்தலாம் என்ற ஒரு போக்கு ஆரியப் பார்ப்பனர்களிடம் குடி கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. புரிந்து கொள்ளும் தன்மையோ போராடும் உணர்வோ இல்லை.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்; திராவிடர் கழகத்தின் பணியும் அப்படியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இயக்க ஏடுகளும், இதழ்களும் பரவியாக வேண்டும். வெளி மாநிலங்களில் தி மாடர்ன் ரேஷனலிஸ்டு அதிக அளவில் பரவும் வகை செய்தல் பெருக வேண்டும்.

தோழர்களே, நமது கழகத்துக்கு, நமது தொண்டர்களுக்கு நமது தலைவருக்கு பணி மேலும் மேலும் கூடிக் கொண்டே போகின்றது. தயாராவீர்! தயாராவீர்!!

----------- மின்சாரம்,விடுதலை ஞாயிறு மலர், 04-05-2011


Saturday, June 04, 2011

ஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?


ஊழலை ஒழிக்கும் உத்தமப் புத்திரர்கள் புற்றீசல் போல புறப்பட்டு விட்டார்கள். ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவர்கள் பால் பொது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வருகின்றனர்.

அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தியின் மறுபதிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, இதோ ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் ஒரு மகான்! பராக், பராக் என்று பத்திரிகைகள் முண்டாசு கட்டி ஊளையிட்டன.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல சில திரைமறைவு உண்மைகள் வெளிச்சத்தில் வந்து வீழ்ந்தன.

இந்த ஹசாரே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் - அதன் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தவர் என்று கூறப் பட்டது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்.
இவர் உண்ணாவிரதம் இருந்த டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மேடை என்பது ஆர்.எஸ்.எஸின் வாடை மிகக் கடுமையாக வீசும் வகையில் இருந்தது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மேடைகளில் இடம் பெறும் பாரத மாதா வந்து குதித்து விட்டார் - மேடை விரிப்புக்கூட காவி வண்ணத்தில்தான் வடிக்கப்பட்டு இருந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்காக 82 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது - யாரிடமிருந்து? பெரும் பண முதலைகளிடமிருந்து நன்கொடைகளைக் கணிசமாகத் திரட்டுபவர்களால் உண்மையில் ஊழலை ஒழிக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும்.

82 லட்சம் நிதி திரட்டப்பட்டதிலிருந்து நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்குள்ளிருக்கும் நேர்மையின் மாற்று என்ன?

லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக ஹசாரேயால் பரிந்துரைக் கப்பட்டவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லையே!

லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் - அதில் நான் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர்.

தான் உறுப்பினராக இருப்பதோடு, தன்னால் சொல்லப்படுபவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதெல்லாம் நேர்மையானது தானா என்ற கேள்வி எழவில்லையா?
சுவாமி அக்னிவேஷ், ராம் மாதவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற சாமியார் பட்டாளமும் ஹசாரேயின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.

பொதுவாக நாட்டில் சாமியார்களின் யோக்கியதை பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. பரலோகத்தைக் காட்டப் போகிறேன் என்று கோடி கோடியாகப் பணம் குவிக்கிறார்களே - இதன் பொருள் என்ன?

கோடிகளைக் குவிப்பதற்கு ஆன்மீகம், காவி, சாமியார் என்பது ஒரு புடம் போட்ட குறுக்குவழிமுறையே!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஹோதாவில் குதித்துள்ள இந்த ராம்தேவ் யார்? ஆர்.எஸ்.எஸின் பசு பாதுகாப்பு யாத்திரையில் (கோ ரக்ஷா) யோகா வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்வரை சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று தனி ஹெலிகாப்டரில் பறந்து திரிகிறாரே - இதற்கான பணபலம் வந்த வகை தொகை என்ன? வெளிப்படையாக விவரங்களை வெளியிடட்டுமே, பார்க்கலாம்.

இப்பொழுது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள பாபா ராம்தேவ் தம் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் ஒன்று என்ன தெரியுமா?

இங்கிலீஷ் இருக்கும் இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?

இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்ற முகத்திரை முழம் முழமாகக் கிழியவில்லையா?

பார்ப்பனீயம், சங்பரிவார்த்தனம் என்கிற பின்னணி யோடு ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சங்பரிவார்க் கும்பல் பெரும் சரிவை சந்தித்திருக்கும் கால கட்டத்தில், ஊழல் ஒழிப்பு என்ற குதிரையின்மீது சவாரி செய்து, மக்கள் மத்தியில் தங்கள் சட்டையை உரித்துக் காட்டுகிறார்கள். சட்டையை உரித்து விடுவதாலேயே பாம்பின் நஞ்சும் தேனாக மாறி விட்டது என்று நம்பினால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஊழல் ஒழிக்கப்படட்டும் - வரவேற்போம்! வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று நோயாளிகள் கேட்கும்படி இருக்கக் கூடாதல்லவா!

-------- விடுதலை தலையங்கம், 04-05-2011


காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா?

காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
ஊழலை ஒழிப்பது என்ற பெயரால் காவியாட்சியை மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், காவிகளின் மிரட்ட லுக்கு மத்திய அரசு அடி பணியலாமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். இதுகுறித்த அறிக்கை வருமாறு:

ஊழலை ஒழிக்கிறோம் என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா - மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டில்லியில் அரங் கேற்றுகின்றன.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.

அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக் களும், காவிகளும் ஆண்டவன் அவதாரங் களும், தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!

தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!

அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு யாதவர் திடீரென - யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளி நாட்டுப் பணக்காரர் களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!
அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை பயமுறுத்திட இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர் - பாபா ராமதேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

காவி ஆட்சியைக் கொண்டு வரும் திட்டம்

மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி - குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!

டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?

1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்

இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் என்ற அறிக் கையை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகா பாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!

இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் - அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?

மிரட்டுகிறவர்களுக்குப் பணிவதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இத னைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.

அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட - ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?

ஆட்சித் தலைமைக்குத் தெரியாதா?

பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?

ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை - ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!

ஜனநாயகக் கேலிக் கூத்து!

இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத் தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டி யது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
----- விடுதலை,04-05-2011


Tamil 10 top sites [www.tamil10 .com ]