வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, October 31, 2009

பூணூல்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்-டுமல்ல, திருப்பதி ஏழு-மலை-யானுக்கே 3 கிலோ தங்-கத்தில் பூணூல் அணி-வித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளி-தில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்-களும் ஒரே ஜாதி; இன்-னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பது-தான் அவர்களின் நினைப்-பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்-கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிரா-மணர்கள் என்று சொன்-னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடு-கின்றன.

தேவாதீனம் ஜெகத்-சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்-களுக்-குக் கட்டுப்பட்டது; தேவர்-கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்-திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்-களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்-பனர்களை முதன்மைப்-படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியா-ளர்கள் என்பதற்கு அடை-யாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்-றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை _ பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்-கங்களை வெட்டவேண்-டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்-குகிறதா?

- மயிலாடன்

விடுதலை 30.10.2009

பிரதோஷம்

பிரதோஷம் பிர-தோஷம் என்று ஆன்-மிகத்-தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்-களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்-களும் பாற்கடலைக் கடைந்-தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவி-யியல் படித்த மேதாவி-கள் கொஞ்சம் சொல்லக்-கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்-களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனு-மதி பெறாமல் கடைந்த-தால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளை-யிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினா-னாம். பார்வதி தேவியா-கிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தா-ளாம். விஷம் இறங்கிய-தால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றா-னாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானா-னாம். (சிவன் சக்தி இவ்-வளவுதானா?) அப்-பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்-றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணி-வரை உள்ள அந்த நேரத்-தில் சிவனைத் தொழு-தால் கடன், வறுமை, துர்-மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடு-மாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபி-ஷே-கம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்-திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்-களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ண-வேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்-தனை அளவாவது அறி-வுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாத-தால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்-ளிட்டோர் சிவனை வேண்-டிக்கொண்டனர் என்-பதையும் வைஷ்ண-வர்கள் ஏற்றுக்கொள்-வார்களா?

எந்தப் பாவமும் நீங்-குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்-தானாம். (திருவிளை-யா-டல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திரு-நீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்க-வேண்-டாமா? சிந்திப்பீர்

விடுதலை 31-10-2009

Thursday, October 29, 2009

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. (அதை அப்படியே எட்டாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள் _ அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் _ வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது _ தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!

விடுதலை 29.10.09

தினமலத்தின் ஜாடை...........

வெள்ளை மாளிகையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஒபாமா தீபாவளி கொண்டாடியிருக்கிறார். உண்மையான ஜனநாயகம் அமெரிக்காவில்தான் நடக்கிறது. கிறித்துவ மதத்-தைச் சார்ந்தவராக இருந்-தாலும் மத வித்தியாசம் பார்க்க-வில்லை அமெரிக்க அதிபர்.

இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக அரசியல்-வாதிகள் கொண்டாடும்-போது இங்குள்ள தலைவர்கள், மக்களுக்கு வாழ்த்துச் செய்திகூட வெளியிடாமல், இருப்பது ஏன்? என்று தினமலர் சிண்டைப் பிய்த்துக் கொள்கிறது.

இப்படி வாயிலும், வயிற்-லும் அடித்துக்கொள்ளும் தினமலர் கூட்டத்தை நோக்கி திருப்பி அடிக்கி-றோம். அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்!

கிறித்துவரான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பெருந்தன்மை இருக்கிறது. அதே பெருந்தன்மை தின-மலர் கூட்டத்துக்கு உண்டா?

ஜனவரி முதல் தேதி ஆங்-கில வருடப் பிறப்பன்று கோயில்களுக்குச் சென்று இந்துக்கள் வழிபட்டு வரு-கிறார்கள். அதுகுறித்து காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

கிறித்துவ ஆண்டு பிறப்-புக்காக இரவு நேரத்தில் கோயிலைத் திறந்து வைப்-பதா? இது ஆகமத்துக்கு விரோதம், விரோதம் என்று கூக்குரல் போட்டாரே _ நினைவிருக்கிறதா?

இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. தலாய்லாமா இந்தியா வந்தார். அவர் அனைத்து மதக் கோயில்-களுக்கும் செல்ல விரும்பி-னார். கேரளாவில் புகழ்-பெற்ற செயின்ட் ஜோசப் சர்ச்சில் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கத் தயார் என்று கூறினார்கள். பாளயம் மசூதி இமாம் தலாய் லாமாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராக இருப்-பதாகவும், காலை சிற்றுண்டி அளித்து உபசரிக்க விரும்-புகிறோம் என்றும் அறி-வித்தார்.

அர்த்தமுள்ள இந்து மதத் தலைவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

தலாய்லாமா ஹிந்து மதத்தை ஏற்காதவர். அவரது பாரம்பரிய மத ரீதியான ஆடைகளைக் களைந்து-விட்டு, காலணிகளை வெளியே விட்டுவிட்டு வந்தாலும் எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் நுழைய தலாய்லாமாவை அனுமதிக்க-மாட்டோம் என்று சொன்-னார்-களே! (ஆதாரம்: தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 18.12.1992).

ஒபாமா தீபாவளி கொண்-டாட தயாராகிறார். இந்-துக்களோ தலாய்லாமாவை கோயிலில் உள்ளே நுழை-யக்கூட தடை போடுகிறார்-கள்.

இரண்டு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியவில்லையா?

ஒபாமாவின் ஜனநாயகத்-தைப் பாராட்டும் தகுதி தினமலர் வகையறாக்-களுக்கு உண்டா?

முதலமைச்சர் கலைஞர் தீபாவளி வாழ்த்துச் சொல்ல-வில்லையாம் _ அதற்குத்-தான் தினமலர் ஜாடை பேசுகிறது!

தீபாவளி கொண்டாடாத தீரர்களின் பட்டியலைச் சேர்ந்தவராயிற்றே கலைஞர் _ எப்படி தீபாவளி வாழ்த்து கூறுவார்?

நன்றி விடுதலை 28.10.09

Tuesday, October 27, 2009

மரகதலிங்கம்


நேற்று மாலை ஏடு-களில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்-புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயி-லுக்-குச் சொந்தமான மரக-த-லிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்-றாண்-டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தா-னாம். (இடையில் விட்டு-விட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்-தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகத-லிங்-கத்துக்கு என்ன கூடு-தல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்-கத்தை முசுகுண்ட சக்ர-வர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிர-திஷ்டை செய்து வழிபட்டு வரு-மாறு இந்திரன் கூறினா-னாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்-ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த _ அதுவும் தேவர்களின் தலைவ-னான இந்திரனே வழி-பட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்-கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்-லாம் அசல் டூப்பாக இருக்க-வேண்டும். இரண்-டில் ஒன்றுதானே உண்-மை-யாக இருக்கவேண்-டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்-கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்-கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்-பதை மரியாதையாக, நாண-யமாக ஒப்புக்கொள்ள வேண்-டுமா_ இல்லையா?

இந்த சிவலிங்கத் திரு-டர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநி-யா-யம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்க-லாமா? என்று அக்ரகாரத்-தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி _ ஆர்.எஸ்.எஸ். வகை-யறாக்கள் கூக்குரல் போட்-டாலும் போடுவார்கள் _ யார் கண்டது?

கடவுளையே கண்டு-பிடித்துக் கொடுக்க மனி-தர்கள் (காவல்துறை-யி-னர்)தான் தேவைப்படுகி-றார்கள்.

கடவுளை மற, மனி-தனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்-ததா இல்லையா?

- மயிலாடன்

நன்றி விடுதலை 27.10.09

கலசம் விழுந்தது - கலக்கம் பிறந்ததோ!


கைப்பேசியில் குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) வந்தாலும் வந்தது _ எது எதற்கெல்லாமோ பயன்பட ஆரம்பித்துவிட்டது _ கடவுள் சமாச்சாரங்கள் உள்பட!

ஒரு செய்தி: கோவை மாவட்டம் காங்கயம் சிவன் மணிமுருகன் கோயில் கொடிமரம் சாய்ந்தது!

இன்னொரு செய்தி: இராமேசுவரம் ராமநாதசாமி கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு கலசம் இடிந்து விழுந்துவிட்டது!

மற்றும் ஒரு செய்தி: திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைந்துவிட்டன.

இந்தச் செய்திகள் காட்டுத்தீபோல் பரவின. பக்தர்கள் மருண்டனராம்.

அய்யய்யோ, ஆபத்து, ஆபத்து! ஏதோ நடக்கப் போகிறது என்று பக்தர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். வீட்டில் உள்ள ஆண்களின் ஆயுளுக்குக் கேடு என்று யாரோ சொல்ல, அப்படியே இடிந்துபோய் விட்டார்களாம்.

அடுத்து என்ன நடக்கும்? கோயில்களில் சிறப்புப் பூஜைகள், காணிக்கைகள் இன்னோரன்ன சுரண்டல் விசேஷங்கள் ஜோராக நடந்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குமுன் திருமானூர் தாயாரம்மாள் தாலி அவிழ்ந்து விழுந்துவிட்டதென்று கூறி, அடேயப்பா எவ்வளவு களேபரம்!

பெண்கள் தங்கள் தாலி கயிறுகளைப் புதிதாகக் கட்டிக் கொண்டார்களாம்.

மக்களின் மூடத்தனத்தை_ பக்தியை எப்படியெல்லாம் ஒரு வணிகத் தன்மையில் மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலில் ஒன்றை அவர்கள் சிந்திக்கவேண்டாமா?

சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டு அதன் கோபுரம் இடிந்தது, கலசம் விழுந்தது, கொடிமரம் சாய்ந்தது என்பதெல்லாம் நடக்கும்போது பக்தர்கள் சிந்தனையில் எத்தகைய எண்ணம் ஏற்படவேண்டும்?

சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்றால், இவையெல்லாம் எப்படி நடக்கும் என்ற வினா எடுத்த எடுப்பிலேயே தோன்றியிருக்கவேண்டாமா?

அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால், கோபுரம் இடிந்ததற்கும், கலசங்கள் விழுந்ததற்கும், கொடிமரங்கள் சாய்ந்ததற்கும் கடவுள்தானே பொறுப்பு என்ற வினா இரண்டாவதாக ஏற்பட்டிருக்கவேண்டாமா?

மூன்றாவதாக இவை நடந்ததால் அதே கோயிலுக்குச் சென்று பூஜை போடுவதில், காணிக்கைகள் கொடுப்பதில் அர்த்தம் உண்டா?

நான்காவது முக்கியமாகக் கவனிக்கவேண்டியது _ இந்த சிறப்பு வழிபாடுகளும், காணிக்கைகளும் யாருக்குப் போய்ச் சேர்கின்றன?

கடவுள் சக்தி கேள்விக்குறியாகும்போதுகூட, அதன் பலன் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகப் போகாமல் (நியாயமாக அப்படித்தானே போகவேண்டும்) அந்தக் கடவுள் சம்பந்தமான கூடாரத்துக்கே இலாபமாக வருமானமாகப் போவதன் தன்மையை_ சூழ்ச்சியை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இதற்குப் பெயர்தான் பக்தி மயக்கும் என்பது _ மூளையில் மாட்டப்பட்ட விலங்கு என்பது; கடவுள் நம்பிக்கை. பக்தி என்று வந்துவிட்டால் சிந்தனைக்கே சிறிதும் இடமில்லாமல் ஒரு வழிப்பாதை என்பது இதுதான்!

எது நடந்தாலும் அதனை சொந்த இலாபகரமாக, சுயநலமாக ஆக்கிக் கொள்ளும் ஒரு புரோகிதச் சுரண்டல் முறை இதற்குள் மிகவும் பத்திரமாக இருப்பதை மக்கள் என்றைக்கு உணரப் போகிறார்கள்?

இந்தப் பாதுகாப்பில்தான் பார்ப்பனியம் மிகக் கெட்டியாக பலத்த அஸ்திவாரத்துடன் _ மற்றவர்களைப் பார்த்து கேலி செய்யும் தன்மையில் அமர்ந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு அதிக வேலைகள் இன்னும், இன்னும் ஏராளமாகவே இருக்கின்றன. கழகத் தோழர்கள் ஆங்காங்கே பரப்பப்படும் இதுபோன்ற செய்திகளை தோலுரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களாக!

சுயமரியாதை!

ஒவ்வொரு கிராமத்-திலும் கோயில் உள்ளது. ஆனால், புரோகிதர் மகன் புரோகிதம் செய்ய வருவ-தில்லை. கிராமத்தில் உள்ள புரோகிதனுக்கு 500 ரூபாய் கொடுத்தால் திருமணம் செய்து வைத்துவிடுவர். புதிதாகப் புரோகிதம் செய்யப் புறப்பட்டுள்ளவர்கள் வந்தால் 50 ஆயிரம் ரூபாய் செல-வாகும். கட்_அவுட் வைக்கவேண்டும் என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். இராமகோபாலன்-வாள் திருவாய் திறந்து தீர்த்தம் கொடுத்துள்ளார் காஞ்சி-புரத்தில் நடந்த புரோகிதர்கள் மாநாட்டில்.

புரோகிதப் பார்ப்பனர்கள் தட்சணை வாங்கிக்கொண்டு மனிதர்களுக்கு மட்டுமா கல்யாணங்களை நடத்தி வைக்கிறார்கள்? நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும்கூட மந்திரங்-களைச் சொல்லி நடத்தி வைத்துக்கொண்டுதானிருக்-கிறார்கள்.

சுயமரியாதைத் திரு-மணம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை-யல்ல. அது ஓர் இனத்தின் சுயமரியாதைப் பிரச்சினை. பார்ப்பனர் அல்லாதாருக்கு சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லக்கூடாது என்பதற்-காக ஒரு முகூர்த்த நாழி-கைக்கு மணமகனுக்குப் பூணூல் மாட்டி, தற்காலிக வருணப் பதவி உயர்வு கொடுத்து, மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை முடித்தவுடன், மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றிக் குப்பைக் கூடையில் போடு-வதன் பொருள் என்ன? பூணூலார் விளக்குவாரா?

அவர்கள் நடத்தும் கல்-யாணத்தில் எந்த வகை மந்-திரங்கள் சொல்லப்படுகின்-றன? கீழாத்தூர் சீனிவாசாச்-சாரி-யார் பி.ஓ.எல். என்ற பார்ப்-பனரால் மொழி பெயர்க்கப்-பட்டு விவாஹ சுபமுகூர்த்த போதினி என்ற பெயரால், பார்ப்பன நிறுவனமான தி லிட்டில் ஃப்ளவர் பதிப்-பகத்தால் வெளியிடப்பட்-டுள்ள நூல் 22 ஆம் பக்-கத்தில் அந்தக் கல்யாண மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஸோம; ப்ரதமோ விவிதே

கந்தர்வ விவத உத்தர: த்ருதீயோ

அக்னிஷ்டபதி: துரீயஸ்தே

மநுஷ்ய ஜா

இதன் பொருளும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ஸோமன் முதலில் இவளை (மணமகளை) அடைந்தான். பிறகு கந்தர்-வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னு-டைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளது

பார்ப்பனப் புரோகிதனை அழைத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னால், மண-மகள் அதற்குமுன் மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தாள் என்பதை ஒப்புக்-கொள்ளவேண்டுமே!

அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது பார்ப்பனர்களின் கலாச்சாரத்துக்கு வேண்டு-மானால் பொருத்தமாக இருக்கலாம். தமிழர்களுக்குப் பொருந்துமா?

பார்ப்பனர்களை அழைத்து தமிழர்கள் கல்-யாணத்தை நடத்தினால் மணமகளை விபச்சாரி என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள். மானம் கருதி அதனை ஒதுக்கி சுயமரியா-தைத் திருமணத்தை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி-னார் என்பதை ராமகோபால-னின் கூட்டம் தெரிந்து-கொள்ளட்டும்!

திருமணச் செலவுகூட ஒரு குடும்பத்தின் பத்து அல்லது 15 நாள் வரும்படிக்-குமேல் செல்லக்கூடாது என்பதுதான் தந்தை பெரி-யார் அவர்களின் கருத்தா-கும். (விடுதலை, 10.6.1970).

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

நன்றி விடுதலை 26-10-2009

Monday, October 26, 2009

தமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை


சுயராஜ்யா, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகளும் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்கார் போன்ற பிராமணத்தலைவர்களும் நம்முடன் தொடுக்கும் போர் முடிவு பெறாமல் இருக்கும் பொழுதே தமிழ்நாடு பத்திரிகையும் இது தான் சமயமென்று நம்மை வம்புச்சண்டைக்கிழுக்கின்றது. இம்மாதிரி வம்புச் சண்டைகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாதென்று எவ்வளவோ காரியங்களை சகித்துக் கொண்டு நமது உத்தேச காரியத்தை மாத்திரம் பார்த்துக் கொண்டு வந்தாலும் வேண்டுமென்றே வலியவரும் சண்டைகளுக்கு நாம் என்ன செய்யலாம்? தற்காலம் தமிழ் நாட்டில் சுயராஜ்ஜியக்கட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்டு பிராமணர் அல்லாதாரின் செல்வாக்கை அடியோடு ஒழிக்க வேண்டுமென்கிற கருத்தோடு சில பிராமணர்களும், அவர்கள் பத்திரிகைகளும் காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் மற்றும் உள்ள அநேக தியாகிகளின் பெயரையும் உபயோகப் படுத்திக்கொண்டு ஸ்தலஸ்தாபனங்களிலும், தேர்தல்களிலும் காங்கிரசிலும் செய்துவரும் கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் கண்டு உண்மையிலேயே மனம் பொறாதவராகி எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்-கிடையில் இவற்றைத் தடுக்க செய்துவரும் ஒருசிறு தொண்டிற்கும் பிராமணரல்லாதாரில் சில தலைவர்கள் என்போர் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நமது முயற்சிக்குக் கெடுதலாவது செய்யாது இருக்க வேண்டாமா என்றுதான் பிராமணரல்லாத தலைவர்களிடம் நாம் உண்மையாய் எதிர்பார்த்தது. இந்தநிலையில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் தேர்தல் சம்பந்தமான அபிப்பிராயங்கள் நமது முயற்சிக்கு சில இடங்களில் கொசவனுக்குப் பல நாளைக்கு வேலை, தடியடிக்காரனுக்கு ஒரே நாள் வேலை என்பது போல் பல தொந்தரவுகளை விளைவிப்பதாகப் பட்டதால் ஸ்ரீமான் நாயுடுவின் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. அதற்கு, சரியான சமாதானம் ஒன்றும் சொல்லாமல் ஸ்ரீமான் பட்டாபிராமய்யர் அவர்கள் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் சுயராஜ்ய கட்சி தேசத்து ரோகம் செய்து விட்டது என்று சொன்ன பொழுது ஸ்ரீமான் நேரு அதற்கு தகுந்த சமாதானம் சொல்வதற்கு யோக்கியதையில்லாமல் நான் உன்னை ஒரு தூசி போல் மதிக்கிறேன் என்று சொன்ன அகம்பாவமும்.... பொருந்திய பதில்போல் ஸ்ரீமான் நாயக்கரின் கோபத்திற்கும், பயமுறுத்தலுக்கும் பயந்து ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்நாடு பத்திரிகை வம்புச் சண்டைக்கு இழுக்கின்றது. சாதாரணமாக பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத்தலைவர்களும், தான் ஒருவரைப்பற்றி ஏதேனும் குறைகூற வேண்டுமென்று நினைத்துக் கொண்டால் ஒருவர் என்ன சொன்னார் என்ன பேசினார் என்பதை தங்கள் பத்திரிகையில் எடுத்துக் காட்டாமலும், அதைப் பொது ஜனங்களுக்குத் தெரியப்படுத்தாமலும் தங்களுக்குத் தோன்றியபடி பத்திரிகைகளில் எழுதி அவர்கள் இஷ்டத்திற்கு அனுசரணையான பிரச்சாரம் செய்வது வழக்கம், அதைப் பற்றி நாமும் பலதடவை கண்டித்திருக்கிறோம். அதே கொள்கையை தமிழ்நாடு பத்திரிகையும் பின்பற்றுவதென்றால் பிறகு நாம் அதை என்னவென்று நினைப்பது? அதனிடத்தில் இனி என்ன தான் எதிர்பார்க்க முடியாது? எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயக்கர் கோபித்துக் கொண்டார் எந்த விஷயத்தில் ஸ்ரீமான் நாயுடுவை பயமுறுத்தினார் என்று எழுதி அதன் பேரில் ஸ்ரீமான் நாயுடுவின் வீரப்பிரதாபத்தைக் காட்டியிருந்தால் ஒழுங்காயிருக்கும், அப்படியில்லாமல் வீண் வம்புச் சண்டைக்கு இழுப்பது தர்மமா?

நாம் எழுதியதில் ஏதேனும் குற்றமிருக்கின்றதா என்பதை பொது ஜனங்கள் அறியும்படி மறுபடியும் எழுதி இதற்குத் தமிழ்நாடு பத்திரிகை சொல்லும் பதிலையும் சொல்லி விட்டு நிறுத்திக் கொள்கிறோம். இதைப்பற்றி மறுபடியும் தமிழ்நாடு கண்டனமோ மறுப்போ சமாதானமோ எழுதுகிற பொழுது முன்போல் நடந்து கொள்ளாமல் நாம் எழுதியதைப் போட்டு சமாதானமோ கண்டனமோ, மறுப்போ எழுதுமென்று எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீமான் நாயுடுவின் பழைய அபிப்பிராயமாவது;

கோயமுத்தூர் தேர்தலின் பொழுது தேர்தலுக்கு நிற்பவர்களின் யோக்கியதையை அறிந்து ஓட்டுச் செய்ய வேண்டுமென்ற ஸ்ரீமான் நாயக்கர் கூறிவந்த பொழுது ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ்காரருக்கே வெற்றி ஏற்படுமாறு ஈசனைப்பிரார்த்திக்கிறேன் என்று ஒரு ஸ்ரீ முகம் விடுவித்தார்.

அதற்கு எதிர்க்கட்சியாளர் ஒரு கடித மெழுதியபொழுது (அக்கடிதம் ஆகஸ்டு மாதம் 30ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிக்கையின் 9-ஆவது பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.) சுயராஜ்யக் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர ஜனங்களை போலிகள் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்வது தேசியவாதிகளின் கடமையாகும்.... சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குச் சென்று அதை ஓடவிடாது தடுக்கவே கைப்பற்றுவதாகச் சொன்னார்கள். சட்ட சபைகளைத் தவிர முனிசிபாலிட்டிகளில் ஒத்துழையாமைக்கோ, முட்டுக்கட்டைக்கோ வழி இல்லை. நகர சபைகளில் எந்த விதத்தில் ஜனங்களுக்கு வேலை செய்யலாம் என்பதே அங்கத்தினர்களின் வேலையாயிருக்கிறதே ஒழிய எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரவர்க்கம் அங்கு இல்லை. இதனால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒருவர் இன்ன கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்கு மட்டும் ஓட்டுக்கொடுத்து விடக்கூடாது. ............. அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டுக்கொடுக்க வேண்டும். நீடித்த காங்கிரஸ்வாதியாயும், வெளிவேஷத்திற்கு மாத்திரமல்லாமல் எப்பொழுதும் கதர் கட்டிக்கொண்டிருப்பவராகவும் பார்த்து ஓட்டுச் செய்யவேண்டும் என்று 30-.8.19-25 தமிழ்நாடு பத்திரிகையில் மேற்படி கோயம்புத்தூர் நண்பருக்கு பதில் கூறு முகத்தான் ஒரு வியாசம் வரைந்துள்ளார். அதற்கு நான்கு நாளைக்குள் திருச்சியில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ்கூடிய ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஜாதி பேதமின்றி காங்கிரஸ்காரருக்கே ஓட்டுச் செய்ய வேண்டுமென்று ஒரு செய்தி அனுப்பினார். பாம்பன் பிரசங்கத்தில் காரியத்திற்குக் கதர் உடுத்தி காங்கிரஸ் பெயரைச் சொல்லித்திரியும் கசடர்கள் உங்களை ஏமாற்றி விடக்கூடாது.... நான் ஒரு கட்சியிலும் சேர்ந்தவனல்ல....... எனது வேலைத் திட்டம் எனது நண்பர்களின் யோசனையிலிருந்து வருகிறது .......... என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நகரசபையில் வேலை செய்யத்தகுதியுள்ள ஒரு பிராமணரும், ஒரு பிராமணரல்லாதாரும் அபேட்சகர்களாய் நிற்பார்களானால் கட்சிப்போக்கை கவனியாமல் பிராமணரல்லாதாருக்கேதான் ஓட்டுச் செய்ய வேண்டும். (இது சென்னையில் இரண்டு கனவான்கள் நேரில் கண்டு கேட்டபோது சொல்லியது.)

அதற்கு அடுத்த நாள் தமது அன்புள்ள ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நிர்மாண-திட்டத்தில் நம்பிக்கை இருப்பதாகத்தான் நம்புவதாயும், நிர்மாணத் திட்டத்தை நம்புபவரும் அனுஷ்டானத்தில் செய்து காட்டுபவரும் காங்கிரஸ் அபேட்சகர் என்று தான் நம்புவதாகவும், அவரை ஆதரிக்கவேண்டுவது பொது ஜனங்களின் கடமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராய-மாவது;

1. சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ்வாதிகளை ஸ்ரீமான் நாயுடு ஆதரித்து எழுதிய கடிதங்களை ஸ்ரீமான் நாயக்கர் கண்டிக்கப் புறப்பட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.

2. உண்மை தேசியவாதியான ஒரு பிராமணனும் காங்கிரசைச் சேராத ஒரு தமிழனும் தேர்தலுக்கு நின்றால் தேசிய பிராமணனைத்தான் தேசம் ஆதரிக்க வேண்டும். உண்மை தேசிய-வாதியான ஒரு பஞ்சமனுக்கும், மிதவாதியான ஒரு பிராமண-னுக்கும் போட்டி ஏற்பட்டால் பஞ்ச-மனைத்தான் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.

3. ஸ்தலஸ்தாபனங்களில் முட்டுக் கட்டைக்கு இடமில்லை என்பது வாஸ்தவமே. அவ்வித அபிப்பிராயம் நாம் அடிக்கடி கூறுவது உண்டு. ஆனால் அடிமைப்பட்ட நாட்டில் சர்க்காரால் ஏற்பட்டிருக்கும் சகல ஸ்தாபனங்களிலும் தேசியவாதிகள் நுழைந்து உட்கார்ந்து கொண்டால் சமயம் வாய்ந்த போது உள்நோக்கமும் சர்க்காரைத் காக்க அனுகூலமாகுமன்றோ?

4 அபேட்சகர்களின் உண்மையான யோக்கியதைகளை அறிந்தே ஓட்டர்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

5 ஆனால் ஒருவர் ஒழுக்கத்தில் தர்ம ராஜனாயிருந்தாலும் சர்க்காருக்குச் சாதகமானவ-ராயிருந்தால் அவருக்கு ஓட்டு கொடுக்கக்கூடாதாம்.

6 வேறொருவர் ஒழுக்கத்தில் குறைந்த வராயிருந்தாலும், தேசிய வாதியாயிருந்து நம்-முடைய ஓட்டினாலும், பேச்சினாலும், சர்க்காரின் செல்வாக்கைக் குறைக்கக் கூடியவராயிருந்தால், ஜனங்கள் அவரை ஆதரிக்க வேண்டுமாம்.

காங்கிரஸில் உயர்வு, தாழ்வு கொள்கையை பிராமணர்கள் செய்கையில் காட்டினால், நிர்தாட்சண்யமாக அப்படிப்பட்டவர்களை, காங்கிரசினின்று துரத்திவிடவேண்டுமாம். இதைக் குருகுலப் போராட்டத்தில் செய்து காட்டியிருக்கிறாராம் ........... மேற் கூறியவைகள்தான் ஸ்ரீமான் நாயுடுவின் தெளிவான அபிப்பிராயமாம். மேலும் இவ்வித அபிப்பிராயங்கள் ஸ்ரீமான் நாயுடுவுக்கு எவ்வளவு தெளிவான அபிப்பிராய-மாய் இருந்த போதிலும் பொது-ஜனங்களுக்கு எவ்வளவு தெளிவைக் கொடுக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேணுமாய் கோருகிறோம்.

மற்றபடி இவ்வபிப்பிராயத்தின் தத்துவங்-களைப் பின்னால் எழுதுவோம்.

ஸ்ரீமான் நாயுடு: தன்னைப்பற்றி அதிகமாய் நினைத்து கொண்டார் என்பதற்குபதில், நாயக்கர் நாயுடுவைப் பற்றி அதிகமாய் நினைத்தாராம், அதனால் தன்னைப் பற்றி அதிகமாய் நினைத்துக் கொள்வது மேலோர்தன்மை போலும்!

- குடிஅரசு, துணைத் தலைப்பு, 27.09.1925

Sunday, October 25, 2009

பரிகாரம்என்ன?


உலகில் நானறிந்த வரையில் நம் நாட்டு மக்களிடம் இந்துக்கள் என்பவர்களிடம் தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?

நமக்கு கடவுள் இல்லையா? நாம் கடவுள் பக்தி இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்குக் கடவுள்பயம் இல்லையா? கடவுள் நெறி இல்லையா? நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும் என்கின்ற-தான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் தெய்வீகத் தன்மை கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுப-வர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? நமக்கு நற்கதி அளிக்கும்-படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவையும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு, நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன-உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப் பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்-டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தனம், இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய லட்சிய-மாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்-கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்க்கையில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் - நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியத் தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து?

இது பற்றி நான் மிகவும் கவலையடை-கிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகவும் கவலைப்-படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் 30_-40 ஆண்டுகள்- இதற்காகவே நான் செய்து கொண்டு வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகவும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கிறேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டுகொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலை-யில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதால் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில் எல்லா மக்களை-யும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுய நலமில்லாமல் - எனக்குள்ள சகலத்-தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மை-யாகவே ஒரு தொண்டன் - தொண்டனாகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்-னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என்று கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை -அதாவது நம் மக்களில் யோக்கியமானவன் நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூடக் காண-முடியவில்லையே? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லையே? - என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.

இந்த நீண்ட நாள் கவலையில் - சிந்தனையின் பயனாக இதற்கு- அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்க-மானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளான-வன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் : நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலிவைகள்-தாம் என்கிற முடிவுக்கு வரவேண்டிய-வனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட-முடியாது என்துடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டிய-னாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்க-மாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்-பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடிய-வில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்கம் ஈனம், யோக்கிய ஈனம், நாணயமான காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத நிலைமை-யில்தானே நம் கடவுள்கள் இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்-கணக்கான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுள்களில் ஒரு கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது குருமார்களினா-லாவது கடவுள் கதைகளினாலாவது காட்ட-முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

மற்றும் வேத சாஸ்திர - தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத்-தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்-மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

தந்தை பெரியார் (விடுதலை தலையங்கம் 31-7-1942)

Friday, October 23, 2009

தீக்கதிர்

தீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்-கம் குறித்து அதன் முன்-னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடு-தலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ!
கும்பமேளா நடத்து-கிறவர்களும் சமாதா-ன-மும், சாங்கியமும் கூறத்-தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயி-லுக்குச் செல்லுகின்றவர்-களும் கொட்டி அளக்-கும் சரக்குகள் கொஞ்-சமா, நஞ்சமா?
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்-றால், சாதாரணமா? ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா? அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது! சிரிப்பு வருகுது!! விலா நோகச் சிரிப்பு வருகிறது!!!
மக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ?
அடேயப்பா! எப்படிப்-பட்ட டயலிட்டிக் மெட்-டிரியலிசம்!
கந்த சஷ்டி, சூரசம்-ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்-டங்கள்தாம்.
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்-தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்-கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்-களோ! அதற்கும் மலர் வெளியிடுவார்களோ!
மூட நம்பிக்கை-களைத் தவிர்த்து தீபா-வளி கொண்டாடலாமாம்! அப்படி ஒரு தீபாவளி-யிருக்கிறதோ?
தீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றா-லும், நவராத்திரி என்-றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறு-கிறார்களே, அந்த அசு-ரர்கள் என்றால் யார்? சுரர்கள் என்றால் யார்?
வரலாற்றை வகை-யாகப் படிக்கவேண்-டியவர்களுக்கு அரிச்-சுவடி சொல்லிக் கொடுக்-கும் நிலை ஏற்பட்டு-விட்டதே!
மூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்-களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கட-மையா? அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா?
கம்யூனிசம் பர-வாமல் இருப்பதற்குத்-தான் கம்யூனிஸ்ட் கட்-சியோ!

விடுதலை 23-oct-2009

Tamil 10 top sites [www.tamil10 .com ]