வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, October 29, 2009

மதம் பிடித்தது யாருக்கு? யானைக்கா? மனிதனுக்கா?


அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில், கவிஞர் கண்ணதாசன் எழுதினார்: அதற்குரிய மறுப்பினை பகுத்தறிவாளர் மஞ்சை வசந்தன் (எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்) அர்த்தமற்ற இந்துமதம் எழுதினார். பல பதிப்புகள் வெளிவந்து உலகம் முழுவதும் இதுவும் சென்றடைந்துள்ளது!

இந்து மதம் அர்த்தமுள்ளதா? அனர்த்தம் உள்ளதா? என்று பக்தகோடிகள் கேள்வி கேட்கும் அளவுக்கு பக்த கேடிகளைப் போன்று, வடகலைப் பார்ப்பனர், தென்கலைப் பார்ப்பனர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்துகொண்டவிதம், மந்திரங்களை உச்சரிப்பதைவிட ஆபாசமான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு அடிதடியில் இறங்கியுள்ள செய்தி, பார்ப்பன ஏடான ஜூனியர் விகடனே 1.11.2009 அன்று தேதியிட்டு நேற்று (28.10.2009 அன்று) வெளிவந்த இதழிலேயே கட்டுரை வடிவில் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. (அதை அப்படியே எட்டாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).

இந்த காஞ்சி வரதராஜபெருமாள் சன்னதியில்தான், சங்கராச்சாரிகளை முதல், இரண்டாவது குற்றவாளிகளாகக் கொண்டு நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்குக்குரிய கொலை சில ஆண்டுகளுக்குமுன் நடந்தது!

வரதராஜப்பெருமாள் அப்படியே ஆடாமல், அசையாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்; தனது கோயில் நிருவாகி இப்படி அநியாயமாகக் கொல்லப்படுவதற்காக ஒரு சிறு அனுதாபத்தைக்கூட தெரிவிக்காதது மட்டுமல்ல; ஒவ்வொரு சாட்சியாகக் கலைக்கும் பகவத் காரியங்கள் நடைபெறுகின்றன.

பல சாட்சிகள் தலைகீழ் அந்தர்பல்டி அடிக்கிறார்கள்; ஆனால் அந்த வரதராஜப் பெருமாளோ அன்று எப்படி குத்துக்கல்லாய் கிடந்து வேடிக்கை பார்த்தாரோ, அதேபோல இன்றும் உள்ளார்!

இப்போது அதே கோயிலில் அடிதடி ஆபாச வார்த்தைகள் பரிமாற்றம்; ரத்தக் காயங்கள். பகவான் வரதராஜனோ சிவனேன்னு வேடிக்கை பார்த்துண்டிருக்கான்.

பிரச்சினை என்ன சாதாரணமா? அற்ப தேசியப் பிரச்சினையா அல்லது சர்வதேசப் பிரச்சினையா? மிகப்பெரிய தீர்வு காண முடியாத பிரச்சினை அல்லவோ!

அங்குள்ள கடவுள்களுக்கு யார் மரியாதை செய்வது என்பதில் போட்டி! பகவான்கள் மரியாதை இழந்து பரிதாபமான நிலையில் இருப்பதால் ஜூ.விகடனுக்கு எஸ்.ஓ.எஸ். (S.O.S) கொடுத்துள்ளார்கள் போலும்!

நம்மாழ்வார் சந்நிதி அர்ச்சகர் எப்படி ஆரத்தி காட்டலாம், என்று வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை கிளப்பி, பகவான்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டார்கள் _ அதோடு மட்டுமா? தென்கலைப் பிரிவினர் நையப் புடைத்துவிட்டார்களாம்!

அதென்னய்யா வடகலைப் பிரிவு, தென்கலைப் பிரிவு என்று புதிதாக, அர்த்தமுள்ள ஹிந்துமதம்பற்றி அறியாதார் கேட்கக்கூடும்!

பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் இந்த வழக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு விசாரித்தது (நம் ஊரில் உச்சநீதிமன்றங்கள் வருவதற்குமுன் கடைசி அப்பீல் செய்யும் பெரிய கோர்ட் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில்தான்).

எல்லோரும் வெள்ளைக்கார நீதிபதிகள்தான் அங்கு. அவாளுக்கு வடகலை, தென்கலை சண்டை என்னவென்று விளங்காததால், அவாள் கேட்டள்,“What is Vadkalai and Thenkalai” தென்கலை என்றால் என்னவென்று.

உடனே அவாளுக்கு எளிதில் புரிய வைக்க,“These two partites fight for our English Alphapet) Y and U” (அதாவது பாதம் வைத்த நாமம், பாதம் வைக்காத நாமம்) சண்டை என்றவுடன், வெள்ளைக்கார நீதிபதிகள் கேட்டு சிரி சிரியென்று சிரித்துவிட்டு, அந்தக் கோயில் யானையின் நெற்றியில் எந்த நாமம் _ வடகலையா, தென்கலையா போடுவது என்பதற்குத்தானே அப்பீல் வழக்கு. அதுவும் நீச்ச பாஷை பேசும் மிலேச்ச ஜட்ஜ்கள்முன்!

யானையின் கருத்தை இதில் கேட்க முடியாதே! அதனால் ஆறு மாதம் வடகலை என்று போடுங்கள்; மற்றொரு ஆறு மாதம் தென்கலை என்று போடுங்கள் என்று விசித்திரத் தீர்ப்பு வழங்கினார்கள்.

நம் நாட்டின் கோர்ட்டுகளைத் தாண்டி வழக்கு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சிலுக்குச் சென்றபோதிலும், முடிந்தபாடில்லை இன்றுவரை! நேற்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் யானைக்குள்ள நாமப் பிரச்சினைபற்றி ஜூனியர் விகடன் செய்தியாளர் தரும் சுவையான தகவல் இதோ:

வடகலை, தென்கலை பிரிவினை பேதத்தின் காரணமாக யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்று இருதரப்பினரிடையே பலத்த போட்டி ஏற்பட்டது _ தனிக்கதை (மேலே சுருக்கமாக சொல்லப்பட்டது).

.... பின்னரும் பிரச்சினை தொடரவே, இரண்டு பிரிவுக்கும் தனித்தனியே யானைகள் வைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறார்கள்.

அத்துடனாவது பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அதுதான் இல்லை.

இருந்தும் திருவிழாக்காலங்களில் யானைகள் வீதியுலா வரும் சமயத்தில், எங்கள் யானைதான் முன்னால் நடந்து வரவேண்டும் என்று மீண்டும் இருதரப்பினரும் வாய்ச்சண்டை போட்டனர். ஆகவே, இரண்டு யானைகளும் ஒரே வரிசையில் ஒன்றுபோல் நடந்து வரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்!

நம் நாடு 21 ஆம் நூற்றாண்டில் எவ்வளவு முக்கியப் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது பார்த்தேளா?

இவ்வளவுக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் வரதராஜப்பெருமாள் வாயே திறக்கல்லே!

மதம் பிடித்தலைவது இந்த ஆறறிவுள்ள பக்தர்களா? அல்லது ஆறறிவு இல்லாத யானைகளா? இதைக் கண்டுபிடித்துச் சொல்பவருக்கு அந்த யானைமேல் சவாரி! வடகலை யானைமீது ஒருமுறை; தென்கலை யானைமீது ஒருமுறை. ஆனால், ஏககாலத்தில் எப்படி ஏறி அமர்வது? அதுதான் புரியாத புதிர்! அய்யய்யோ, சொல்ல வெட்கமாகுதே!

விடுதலை 29.10.09

2 comments:

passerby said...

வரவேற்கத் தகுந்த கருத்துகள்.

கடவுளின் பெயரை சொல்லும்பொதெலாம் எப்படி அடியார்கள் சொல்வரோ அப்படி மிகுந்த பக்தியுடன் சொல்லப்பட்டது இக்கட்டுரையின் சிறப்பு.

இறைவனைத்தாக்காமல் மனிதர்களை ‘மதம்’ பிடிததவர்கள் எனச்சாடியது ஆத்திர்கர்கள் கண்டிப்பாக பாராட்டுவார்கள்! இது வஞ்சப்புகழ்ச்சியல்ல!!

ஆம்...இந்த வடகலை-தென்கலை ்பிரச்சனை இந்துக்களுக்கு கெட்ட பெயரைத் தந்துகொண்டிருக்கிறது என்பது பரவலான கருத்து.

நீங்கள் ஆத்திகர்களின் சார்பில் அதைக்கோடிட்டு உங்கள் பாணியில் சொல்லியது அருமை...அருமை.

நிற்க. எபபடியும் இப்பிரச்சனையைப் பிய்த்துபிய்த்துச் சாட்லாம். இருப்பினும்...ஒரு நுணுக்கமான விடயததை உங்களுக்குத் தெரிவிப்பது ந்லம்.

இருகலைகளுக்குமிடையே நடப்பது வெறும் மனிதர்களுக்கிடையே நடக்கும் ஈகோ பிரச்னை அல்ல. இஃது ஒரு தியாலாஜிக்கல் கருத்து வேற்றுமை.

அத்தியாலாஜியில் நுணுக்கங்கள்் உங்களுக்குத் தேவையில்லை. எனவே நான் அஃதை உங்களுக்கு தொட்டுக்கூட காட்ட மாட்டேன்.

மாறாக, இவ்விருகலைகளுக்கிமிடையில் நடப்பதில் ஒரு அடிப்படையில் ஒன்று தென்கலாச்சாரமா அல்லது வடகலாச்சாரமா என்ப்தே. தமிழா அல்லது வடமொழியா என்பதே.

இறைவனைத் தமிழால் வணங்கமுடியும், வடமொழிதேவையில்ல என்பதுதான் தி.கவின் வலுவான கொள்கை. இறைவனே இல்லை என்றாலும், இறைவழிபாட்டில் தமிழுக்குத் தகுதியில்லை என்றால் நீங்கள் கொத்தித்துவிடுவீர்கள் இல்லயா? அதைச் சொல்கிறேன்.

ஆம்...அதைத்தான் சொல்கிறர்ர்கள் தென்கலையார்.

”வடமொழி வேதத்தின் சாரம் அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரங்களில் உள. திருவாய்மொழி ஒரு திராவிட வேதமாம்”

என ஓங்கி முழக்கமிட்டு ஆழ்வார் தமிழுக்கு தெய்வம் ஓடிவரும் (உங்கள் மொழியில் சொன்னால் தமிழ் இறைவழிபாட்டில் எம்மொழிக்கும் இளைத்ததல்ல!) என்பது தென்கலையார் கொள்கை.

இல்லை..”வடமொழி வேதங்களுக்கு மட்டுமே அச்சக்தி. ஆழ்வார் பாடல்கள் வெறும் பக்திப்பனுவல்கள்் மட்டுமே. அவற்றைப்பாடலாம்..ஆனால் வடமொழிக்கே முதல் மரியாதை.” இது வடகலையார் கட்சி.

சிதம்பரத்தில் கொதித்த நீங்கள் ஆழ்வார்களுக்கும் ஆழ்வார் தமிழுக்கும் மரியாதை தேடி ஆயிரக்கண்ககான ஆண்டுகளாக - ‘எங்கள் தாய்மொழி வடமொழி’ எனச்சொல்லும் வடக்லையாரிடம் மோதிக்கொண்டிருக்கும் தென்கலையாரைப்பற்றி எள்ளல் ஏன் தோழரே?

ஆழ்வார்கள் பச்சைத்தமிழர்கள். வடமொழியாதிக்கத்தில் தமிழர்கள் கோயில்வழிபாட்டில் யாதும் தெரியாமல் தமிழர்கள் தவித்தபோது, அவர்களுக்காகவே, தமிழில் பாடினார்கள்.

தமிழ் வாழட்டும். அப்பச்சைத்தமிழர்கள் செய்த செயல் வீறியத்துடன் என்றும் நில்வட்டும்.

உங்களப்பொறுத்தவரை, இது கடவுள், கோயில் எனப்பார்க்காமல், தமிழ், தமிழர் கலாச்சாரம் எனப்பாருங்கள்!

நம்பி said...

//இறைவனைத் தமிழால் வணங்கமுடியும், வடமொழிதேவையில்ல என்பதுதான் தி.கவின் வலுவான கொள்கை. இறைவனே இல்லை என்றாலும், இறைவழிபாட்டில் தமிழுக்குத் தகுதியில்லை என்றால் நீங்கள் கொத்தித்துவிடுவீர்கள் இல்லயா? அதைச் சொல்கிறேன்.//

இந்த மண்ணாங்கட்டி கொள்கை என்பது பார்ப்பனனுடைய வஞ்சக திரிப்பு கொள்கை...இதெல்லாம் திகவின் கொள்கை என்று எந்த இடத்திலும் கூறியது கிடையாது...

இறைவனே இல்லை என்பது தான் திகவின் கொள்கை...இறைவனே வடமொழியானின் கண்டுபிடிப்பு..இதை தமிழன் புரியாமல் வணங்குகிறான்...புரியாமல் மந்திரம் என்றபெயரில் அவன் ஓதுவதை நம்புகிறான்..அதற்கான அர்த்தம் கூட அவனுக்குத் தெரியாது. முதலில் அவனுடைய நம்பிக்கை என்ன? என்பதே அவனுக்கு தெரியாது.

நாங்கள் இதைமட்டும்தான் சொல்கிறோம். இது புரிந்துவிட்டால் போதும்.

வடமொழியான் சொன்னான் நான் நம்புகிறேன், ஆரியன் சொன்னான் அதனால் திராவிடனான நான் நம்புகிறேன் என்பது தான் இது.

பார்ப்பனன் சொன்னான் நான் நம்புகிறேன். இந்த வேறுபாட்டை உணரவைக்கவேண்டும். இதை பிரிக்க வேண்டும். அப்புறம் எல்லாம் ஆட்டோமெட்டிக்கா புரிந்தும், பிரிந்தும் விடும்.

தமிழில் சொன்னால் எல்லாவற்றையும் திராவிடன் புரிந்து கொள்வான் அதனால் அவன் நம்பிக்கையற்றுப் போய்விடுவான்...ஒவ்வொன்றிற்கும் கேள்விக் கேப்பான். என்று இதை மறைக்க ஆரியனான பார்ப்பனன் இதை வடமொழியிலேயே புரியாமல் திருட்டுக்கோட்டுத்தனமாக வைத்திருக்கிறான்.

இதை அவனவன் தாய்மொழியில் புரிகின்ற மொழியில் வந்தாலே அதிலுள்ள பித்தலாட்டங்கள் அனைத்தையும் புரிந்து கொள்வான்.

புரிந்தவுடன் என்ன செய்வான் ஏற்றுக்கொள்வானா? தன்னைத்தானே திட்டிக்கொள்வானா? தன் மகளை மக்களை, சமூகத்தை தாழ்த்திக்கொள்வானா..? அவனே எல்லாவற்றையும் தூக்கி எறிவான். அதுக்குத்தான்...திக வலியுறுத்துவது.

அதனால் தான் ஆரிய பார்ப்பனன் தடுக்கிறான்...இப்பொழுது புரிந்து இருக்குமே..?

எப்படி? ஆரியனான் பார்ப்பனன் திராவிடனுக்கு திருமணம் நடத்திவைக்கிறேன் என்று கூறி திராவிட மணப்பெண்ணையே தன் பொண்டாட்டியாக்கி கொண்டு பிறகு அசிங்கமாக மாப்பிள்ளைக்கு தாரை வார்ப்பதை புரியாமல் ஏற்றுக்கொள்கிறானோ? இவ்வளவு காலம் அதை புரியாமல் ஏற்றுக்கொண்டு வருகிறானோ? அதைப்போலத்தான்.

தமிழில் இந்த அர்த்தத்துடன் அனைவருக்கும் புரியும் படி ஒதினால் எந்த திராவிடனாவது ஏற்றுக்கொள்வானா? கல்யாண நிகழ்ச்சியே கலவரமாகும் அதற்காகத்தான் இதை வடமொழியில் ஒதுகிறான்.


அதற்காகத்தான் நாங்கள் தமிழ் மட்டுமல்ல அவரவர் தாய்மொழியில் நடத்திக்கொள். அர்ச்சனை செய்து கொள். தெலுங்கு காரர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லவில்லை.

அவருக்கு தெலுங்கில்......இப்பொழுது திக வின் கொள்கைகளை சரியாக புரிந்து கொள்ளும்.

தமிழில் வந்தாலே அதில் உள்ள மொத்த இழிவுகளும் வெளியே தெரிய ஆரம்பித்துவிடும். அப்பறம் அவனே அதை எதிர்க்க ஆரம்பித்துவிடுவான். நடக்கிறதா? இல்லையா? இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறதே? அதான் எம்பட சக்சஸ்.

உம்முடைய திரிப்பு கொள்கைகளை எல்லாம், தி.க வின் கொள்கைகளாக மாற்றாதீர்கள்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]