கருநாடகத்தின் முதல் அமைச்சர் எடியூரப்பா இந்த சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர்.
எடியூரப்பாமீது தொடர்ந்து ஊழல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் லிங் காயத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் எடியூரப்பாவுக்காக அணி வகுத்து நிற்கிறார்களாம்.
தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக இருக்கிறார். அவரைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்கிற பாணியில் சிந்தனைகள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாக தினமலர் ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆ. இராசா - தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று கலைஞர் அவர்கள் சொன்னபோது ஊழலுக்கு ஜாதியில்லை; மதம் இல்லை - ஜாதியைக்காட்டி காப்பாற்றப் பார்க்கிறார் கலைஞர் என்று கதையைத் தூக்கிக் கொண்டு களம் காண வந்த பார்ப்பன ஏடுகள் இப்பொழுது கருநாடகாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையைக் குறித்து, அதே கண்ணோட்டத்தில் விமர்சிக்க முன் வராதது ஏன்?
குஜராத்தில் நரேந்திரமோடி அரச பயங்கரவாதக் கதாநாயகனாக மாறி சிறுபான்மை மக்களை வேட்டையாடியதை வன்முறை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால் அதனைப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, உண்மை உயிர் பிழைத்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் பார்ப்பனர் களுக்கே உரித்தான நயவஞ்சகமான சிந்தனையும், நரிக்குணமும் ஆகும்.
நில மோசடிப் புகார் கருநாடக மாநிலத்தையே ஒரு கலக்குக் கலக்கியது. விலை உயர்ந்த வீட்டுமனை களை தன் மகன் மற்றும் உறவினர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கம்பீரத்தை காட்டிக் கொண்டார் எடியூரப்பா.
சுரங்கத் தொழில் அதிபர்களான சகோதரர்கள் இருவருக்கும் அமைச்சர்கள் பதவி கொடுத்து, அவர்கள் எடுக்கும் கோலுக்கு எல்லாம் மந்தி(ரி)யாக ஆடினார். தொடக்கத்தில் மிஞ்சி பிறகு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எடியூரப்பா.
கருநாடக மாநில முதல் அமைச்சர் பதவியிலிருந்து இந்த மனிதரை நீக்கினால்தான் கட்சி பிழைக்கும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இவரோ டில்லிக்கே சென்று பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். அகில இந்திய பா.ஜ.க. தலைமை எடியூரப்பாவுக்கு அடிபணிந்து சலாமிட்டு ஓடிப் போய்ப் பதுங்கிக் கொண்டது. உள்ளதுக்கும் ஆபத்து வந்தால் என்ன செய்வது - தென்னிந் தியாவில் தங்களுக்கென்று இருக்கும் ஒரே ஆட்சி யையும் பறி கொடுத்து விடக் கூடாதே என்ற நினைப் பில் எடியூரப்பாவின் அத்தனை முறைகேடுகளுக்கும் வெண் சாமரம் வீசும் நிலைக்கு பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை தள்ளப்பட்டது பரிதாபமே!
தனக்கு எதிராகக் கிளம்பிய சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.
மறைந்த கருநாடக முன்னாள் முதல் அமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எடியூரப்பா என்ன பேசினார் தெரியுமா?
பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட போதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கியுள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் (தினமலர் 4.12.2009) என்று பேசினாரே!
இப்படிப்பட்ட உத்தமப் புத்திரர்தான், ஜாதி வலைக்குள் புகுந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.
இதெல்லாம் பார்ப்பன ஊடகங்களின் கண்களுக் குத் தெரியாது, தெரியவே தெரியாது என்று நம்பித் தொலைய வேண்டியதுதான்!
No comments:
Post a Comment