வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 22, 2010

(அதிகாலை ஒரு மணி) உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று சுப.வீ டம் கேட்ட தோழர் தியாகு

கடந்த சில நாள்களாக, மிகுந்த பர-பரப்புடன் பேசப்பட்டு வரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்ட-மிட்டு மறைக்கப்பட்டுள்ளன என்பதை இப்-போது அறிய முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனித நேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம். மக்களவை-யிலேயே தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில், உண்மைகளை மூடிமறைத்துக் கலைஞரின் மீது பழி போட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்ற ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.


இது தொடர்பாக மேலும் சில செய்திகளை இங்கு பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பு-கிறேன்.

விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் (அதிகாலை ஒரு மணி) தோழர் தியாகு, என்னைத் தொலை பேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகை-யாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்குச் செய்தி கிடைத்ததாகக் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா? என்றும் வினவினார்.

இந்த நேரத்தில் அய்யாவை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்? என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர். இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட முடியுமா? என்று கேட்டார்.


அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்-துடன் அவரிடம் சொன்னேன். கலைஞரையும், அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும் இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன் கூட்டியே பேசியிருக்கக்-கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன். இல்லை-யில்லை. விசா கிடைத்துவிட்டால், பரபரப்-பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்-கும் சொல்லவில்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால், வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படித் தெரிந்தது? என்ற என் கேள்விக்கு, அவருக்கும் விடை தெரியவில்லை.

வயதான தாயை அழைத்து வந்து, அவருக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.

விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் கலைஞரைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.

எத்தனை பெரிய மோசடிகள் இவை! 2003 ஆம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்-கூடாது, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காதவர்கள், அவரால்-தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்-பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசை திருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.

பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் கலைஞரைத் தமிழ்ச் சமுதாயம் போற்றும்.

வயது முதிர்ந்து, நோயினாலும் பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

அதே நேரத்தில், திருப்பி அனுப்பிய பாவிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்ப-வர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.

நீங்கள் தேடும் அந்தப் பாவி போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்-டத்தை நடத்துங்கள்.

(நன்றி: முரசொலி, அய்யா சுப.வீரபாண்டியன் எழுதியது, 22-.4.-2010

2 comments:

rouse said...

//இந்த நேரத்தில் அய்யாவை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்? என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார்.//

தூங்குபவரை(கலைஞரை)எழுப்புவது அநியாயம் !!!-

அதனால் வயதான அம்மாவை திருபியனுபுவது -மிக சரியான நியாயம் !!!

//முதல்வருக்கு தெரியாமல் -இந்த நிகழ்ச்சி நடந்தது !!!//

ஏன்? எதற்கு ? என்று கேள்வி கேக்க -சொல்லி விட்டு

பின் எதற்கு இந்த பொய்யான பேச்சு -அய்யா சுப.வீ?
-tsekar

tamil said...

DMK is the ruling party.Now I understand that it faithfully follows orders issued by Jayalalitha.So is Jayalalitha ruling still through DMK.How long will it take for a CM to issue a new order or instruct that old order should be ignored.When DMK came to power in 2006 it could have reviewed or rescinded the earlier orders.Why that was not done.An enemy anyday is better than a traitor who pretends to be an ally.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]