வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, April 19, 2010

இளைஞர்கள் என்னும் சுவரை இடித்துவிட்டு, எந்த சித்திரத்தை, யாரால்தான் தீட்ட முடியும்?

திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (16.4.2010).


கல்வி, வேலைவாய்ப்புகளை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்-துவது மிக முக்கியமான தீர்மானமாகும்.

மாணவர்கள், இளைஞர்களின் இன்றைய சீர்கேடான போக்கு பல்வேறு போதைகளில் கூண்டுக் கிளிகளாக மாறிய அவலம்குறித்து முதல் தீர்மானம் பேசுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணவர்கள் வன்முறைப் போக்குகளின் பக்கம் சாய்வதற்கான காரணங்களில் ஒன்று _- நமது கல்வித் திட்டத்தின் கோளாறுமாகும். வெறும் மனப்பாடக் கல்வி பண்பாட்டுப் பக்குவத்தை உண்டாக்கிப் பதப்படுத்துபவை-யல்ல. வெறும் மதிப்பெண்களைப் பெற்று வேலைக்கு விண்ணப்பம் போடுவதற்கு உதவக்கூடிய காகிதப் பட்டங்கள் அவை. தந்தை பெரியார் மொழியில் கூறவேண்டு-மானால் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சு என்ற அளவுக்கு மட்டுமே உள்ள காகிதப்பட்டமாகும்.

அறிவைக் கூர்தீட்டும் தன்மையதாக மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சியாக, தன்னம்பிக்கை வீரியத்தைக் கொடுக்கக்-கூடிய சத்து நிறைந்ததாக, சொந்தக்காலில் நிற்கும் தைரியமூட்டுவதாக, சம்பந்தப்பட்ட மாணவர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, அதனை மேலும் வளர்த்துக் கொடுக்கும் வகையைச் சேர்ந்ததாக, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதாக உள்ள கல்வித் திட்டத்தை வகுத்து, அதனை மாணவச் சமுதாயத்-திற்கான அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும்.

கல்வியில்லாதது களர் நிலமாகும்; கல்வி வளர்ச்சி என்பது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சகலவிதமான பரிணாமங்களைக் கொண்டதாகும்.

அதுபோலவே கல்வியைக் கட்டாயமாக, அடிப்படை உரிமையுடையதாக ஆக்கும் அரசு, அவர்களுக்கான வேலை வாய்ப்-பையும் அந்தப் பட்டியலில் சேர்த்தாக வேண்டும். - அதற்கான உத்தரவாதம் கண்டிப்-பாகத் தேவை.

அரசுத் துறைகளில் மட்டுமல்ல, தனியார் துறைகளிலும் கட்டாயம் அந்த வேலை வாய்ப்புக் கதவைத் தாராளமாக திறந்துவிட கட்டாய சட்டம் தேவை! தேவைதான்!!

இந்த அடிப்படையை மறந்துவிட்டு, காரணத்தைக் கைகழுவிவிட்டு, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வன்முறை தாண்டவமாடுகிறது_- நக்சலைட்டுகளாக மாறுகின்றனர் என்று பிலாக்கணம் பாடுவதில் அர்த்தம் ஏதும் இல்லை, இல்லவே இல்லை.

வேலை வாய்ப்பு என்பது, அவர்கள் சொந்தமாக நிறுவனங்களை நடத்துவதாக இருந்தால், அதற்கான வழிமுறைகள், பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளைச் செய்வது அரசின் அடிப்படைக் கடமையாக இருந்தாக வேண்டும்.

செல்வங்களில் மிகப்பெரிய செல்வம் இளைஞர்கள். அவர்களின்மீது அதிகபட்சம் கவனம் செலுத்துவது மிகமிகமிக முக்கியமானதாகும். அந்தச் சுவரை இடித்துவிட்டு, எந்த சித்திரத்தை, யாரால்தான் தீட்ட முடியும்?

அந்த வகையில் திராவிடர் கழக மாணவரணி மாநாட்டின் தீர்மானத்தை மாநில, மய்ய அரசுகள் ஊடுருவிப் பார்த்து, உண்மையை உணர்ந்து, உரிய செயல்-பாடுகளில் இறங்க வேண்டும், இறங்கியே ஆகவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

---------- நன்றி விடுதலை தலையங்கம் (19.04.2010)
                                                                                                                                                        




No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]