வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, April 17, 2010

உள்ளம் குமுறுகின்றது...பார்வதி அம்மாள் செய்த குற்றம்தான் என்ன? பிரபாகரனுக்குத் தாயாக இருந்ததுதானா?


பிரபாகரனின் தாயார் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டவர். அவர் ராஜபச்சே அனுமதியோடு சிகிச்சை பெற சென்னை வந்தால், மத்திய அரசு அதிகாரிகள் அவரை கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்புவதா? பாகிஸ்தானி யருக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கின்றீர்கள். மத்திய அரசின் அதிகாரிகள் பிரபாகரனின் வயதான தாயாரை திருப்பி அனுப்பியது மனிதநேயமற்றது, மாபெரும் கண்டனத்திற்குரியது. உலகமே வெட்கித் தலை குனிய வேண்டிய செயல் என்று தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரபாகரனின் தாயார் பார்வதி

இலங்கையில், ஈழப் பகுதியில்_ அதுவும் ராஜபக்சே அரசின் கண்காணிப்பில்_- முகாமில் வாழ்ந்த விடு-தலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் (அவர் ஓய்வு பெற்ற (யாழ்ப்-பாணத்தில்) அரசு ஊழியர்). இயக்க நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தவர். அவரது துணைவியார்_ பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் (வயது 81).

பக்கவாதத்தால் தாக்கப்பட்டவர்

ஏற்கெனவே, அவர் பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பக்க வாதத்தினால் தாக்கப்பட்டவர்; தனது கணவர் திரு. வேலுப்பிள்ளை இறந்த செய்தியைக்கூட சரி-வரத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்-நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தவர்.

கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பினர்

இன்று காலை சில செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திப்படி, நேற்றிரவு 10.30 மணிக்கு (16.4.2010) மலேசி-யத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மருத்துவ சிகிச்-சையை சென்னையில் பெறுவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், தனக்கு உதவியாக ஒரு நர்சு-டன் வந்துள்ள அவரை, சென்னையில் இறங்கி சிகிச்சை பெற அனுமதிக்க முடியாது என்று, விமான நிலைய அதிகாரிகள் மறுத்து, அதே விமானத்திலேயே வைத்து அவரை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி அனுப்பிள்ளார்கள் என்று தெரிய வருகிறது.

முறைப்படி எல்லாம் இருந்துள்ளது

அவரிடம் முறைப்படி மருத்துவ சிகிச்சை பெறு-வதற்கான விசாவும் இருந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அப்படியிருந்தும் அந்த முதுமையடைந்த தாயை 81 வயதில் பக்கவாதத்திற்கு சென்னையில் சிகிச்சை பெறக்கூட அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பப்படுவதைவிட மனிதாபிமானம் அறவே அற்ற கொடுஞ்செயல் வேறு இருக்க முடியுமா?

மத்திய அரசா? ராஜவிசுவாச அதிகாரிகளா?

இதற்கு யார் பொறுப்பானவர்கள்_- மத்திய அரசா அல்லது அதில் பணிபுரியும் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாச அதிகாரிகளா என்பது நமக்குப் புரியவில்லை.

யார் இதற்குக் காரணமானாலும் உலகமே வெட்கித் தலைகுனியக் கூடிய, மத்திய அரசின் செயல் கண்-டனத்திற்குரிய செயலாகும் இது _ உண்மையில் அவர்-கள் ஆணையிட்டிருப்பார்களானால்!

பாகிஸ்தானியருக்கு இங்கு சிகிச்சை

தீவிரவாதிகளைப் பாதுகாக்கும் காசாப்புகளுக்கு கவசமாக உள்ளது என்று குற்றம் சாற்றப்படும் பாகிஸ்-தானத்திலிருந்து நோயாளிகள் இங்கே வந்து அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து திரும்பவில்லையா?

தீவிரவாதம் இங்கே புகுந்து கொள்ளுமா?

81 வயதான அந்த அம்மையாருக்கு சிகிச்சை அளித்-தால் தீவிரவாதம் இங்கே வந்து புகுந்துகொள்ளுமா?

மலேசிய நாடு அவரை ஏற்றுத் தங்க வைத்துக் காட்டும் நிலையில், தமிழ்நாட்டுக்கு தொப்புள்கொடி உற-வுள்ள 30 கல் தொலைவில் உள்ள ஈழம், இலங்கையில் இருந்து வந்தவர் மனித உரிமை அற்றவரா?

கலைஞர் அரசுக்கு அல்லவா கெட்ட பெயர்?

எவ்வகையில் இது நியாயம்? நீதி? மத்திய அரசோ, அதன் அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளோ, அல்லது உளவுத் துறையோ இந்தச் செயலைச் செய்தாலும், சென்னை விமான நிலையத்தில் இக்கொடுமை நடந்-துள்ளபடியால், தி.மு.க. அரசுக்கும், கலைஞர் ஆட்சிக்-கும் அவை சில கெட்டப் பெயரைத் தருவதாக அமை-யாதா?

ராஜபக்சே அரசு கூட அனுமதித்திருக்கிறது

இலங்கையின் ராஜபக்சே அரசுகூட அந்தத் தாய், மருத்துவ சிகிச்சை பெற, மலேசியா செல்வதற்கு விசா வழங்கி அனுமதித்துள்ள நிலையில், இந்திய அரசு இப்படி இதயமற்ற செயலில் இறங்குவது முறையா?

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை என்றும், தீவிரவாதத்தினைத் தான் நாங்கள் எதிர்ப்பவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கிறார்களே, அதன்படி பார்த்தால் திருமதி பார்வதி அம்மாள் செய்த குற்றம்தான் என்ன? பிரபாகரனுக்குத் தாயாக இருந்ததுதானா?

உள்ளம் குமுறுகின்றது

நமது உள்ளம் குமுறுகின்றது. மனிதாபிமானம் இப்படி செத்து சுண்ணாம்பாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதானா நம் கடமை? அந்தோ வெட்கம்! வேதனை!! இனியாவது பரிகாரம் தேடட்டும்!

--------- நன்றி விடுதலை (17.04.2010)

6 comments:

Anonymous said...

நல்ல தலைவன்.
நல்ல நடிப்பு.
நல்ல அறிக்கை.

பரணீதரன் said...

ஆமாம் நாங்கள் நடித்து உங்களை ஏமாற்றி ஓட்டா பொறுக்க போறோம்.

ttpian said...

veeramany samikal is the close friend of manjal thundu/cabara dancer:why veeramani is not asking his friend to do the needful?

Unknown said...

இது என்ன கருணாநிதிக்கு தெரியாமல் நட்ந்ததா.
மத்திய அரசு இப்படித்தான் என்று தெரியும், இதில் மாநில அரசின் பங்கு என்ன?

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள்.
http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html

Admin said...

இந்தியாவே வெட்கி தலை குனிய வேண்டிய செயல்.

இவ்வளவு நடந்தும் நீங்கள் என்ன அரசுக்கு எதிராக போர்க்கொடியா தூக்கப் போகிறீர்கள்? அச்செயலை செய்தது உங்கள் தோழன்(?) என்பதால் வெறும் அறிக்கையுடன் முடியப்போகிறது, அவ்வளவு தானே?

Deepak Kumar Vasudevan said...

உண்மையில் அரசியல்வாதிகளின் மனதாபிமானத்திர்க்கு பக்கவாதம் பிடித்துள்ளது. எங்கே வீரத்தினை/விவேகத்தினை காட்டுவது என்று தெரியாமல் போதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]