வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 11, 2010

விகடன் குழுமமும் மூடநம்பிக்கையும் (மேலுலகமாம்! கடவுளாம்!! எண்ணெய்க் கொப்பரைச் சட்டியாம்!)

ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து புற்றீசல்-போல பல இதழ்கள் வெளிவந்து கொண்டி-ருக்கின்றன. இன்னும் நாளேடு நடத்தவேண்டியது-தான் பாக்கி.


அந்தப் புற்றீசலில் நாணயம் விகடன் என்ற ஓர் இதழில் ஒரு செய்தி:

கடவுள் என்ற ஒருவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தில், எந்த ஆசாபாசங்களுக்கும் மயங்காமல் வாழ்ந்து முடித்து மேலுலகம் செல்கிறார் ஒருவர். அங்கே போனால் கடவுள் என்று ஒருவரே கிடையாது என்பது தெரிய வர அதிர்ச்சியாகிறார்!

அதேபோல், இன்னொருவர் கடவுள் இல்லை என்ற எண்ணத்தில் உலகில் போடாத ஆட்டம் எல்லாம் போட்டுவிட்டு இறுதியில் மேலுலகம் செல்கிறார். அங்கே போனால் கடவுள் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையுடன் காத்திருக்கிறார்...!

கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவருக்கு கடவுள் இல்லாவிட்டாலும் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. ஆனால், கடவுள் இல்லை என்று ஆடாத ஆட்டம் ஆடிவிட்டு போனவருக்கு மிகப்பெரிய தண்டனை காத்திருந்தது. ஒருவேளை கடவுள் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் அவர் அப்படி ஆடியிருக்கமாட்டார். அதுபோலத்தான் ஒருவர் முதலீடு செய்யும்போது நஷ்டம் வரலாம் என்ற எண்ணத்துடன், தன்னால் எவ்வளவு நஷ்டத்தை தாங்க முடியுமோ அதை அளவுகோலாக வைத்து முதலீட்டில் இறங்கவேண்டும்.

சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நாணயம் விகடன் நடத்திய வாசகர்களுக்கான கேளுங்கள், சொல்-கிறோம் என்ற நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீஸஸின் இயக்குநர் எஸ். கார்த்திகேயன் இப்படி ஒரு எடுத்துக்காட்டுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க, ஆரம்பமே அமர்க்களப்-பட்டது! அதைத் தொடர்ந்து பல வகையான முதலீடுகளைப் பற்றியும் அவற்றில் நாம் செய்யும் தவறுகள் குறித்தும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.   (நாணய விகடன், 15.4.2010)

மேலுலகமாம்! கடவுளாம்!! எண்ணெய்க் கொப்பரைச் சட்டியாம்!

இவர்கள் எல்லாம் எந்தக் காலகட்டத்தில் எந்த உலகத்தில் இருக்கிறார்கள்?

என்னதான் படித்திருந்தாலும், அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி இதழ்களை அச்சிட்டு வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த ஆபாச அழுக்குக் குட்டையை விட்டு கரையேற மறுக்கிறார்களே!

நாம் வாழும் காலத்தில் கடவுள் பிரச்சினைபற்றி பல விவாதங்களை அறிவு இயக்கம் முன்னெடுத்து வைத்துள்ளது.

தந்தை பெரியார்தம் வாழும் காலத்திலேயே கம்பீரமாக அறிவாயுதங்களை எடுத்து வீசினார்.

தந்தை பெரியார் வீற்றிருந்த மேடையிலே பட்டையும், கொட்டையும் கட்டிக்கொண்டு பேசிய பெரியவர்கள்கூட, அய்யா மன்னிக்கணும், எங்-களுக்குக் கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டு என்று, கடவுள் நம்பிக்கை என்பதைக் குற்ற-வுணர்வோடு சொல்ல வைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுவாதிகள் இதுவரை எழுப்பிய வினாக்களுக்கெல்லாம் விடை எழுப்ப வக்கற்ற விலா எலும்பு இல்லாதவர்கள், ஏதோ ஓர் அரங்-கத்தில் கூடிக்கொண்டு அரட்டைக் கச்சேரி அடிப்பதும், அதில் கடவுள் மறுப்பாளர்களைச் சீண்டுவதும் அறிவு நாணயம் ஆகாது.

மேல் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? ஆகாயத்திலா? சந்திர மண்டலத்துக்கு அருகிலா? அல்லது சூரியனுக்குப் பக்கவாட்டிலா? செவ்வாய்க் கிரகத்தின் வாலிலா?

அயல்கிரகங்களுக்கெல்லாம் விண்கலம் அனுப்பிப் புதுமைகளை அறிவியல் சிண்டைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருக்-கிறதே _ இவர்கள் கூறும் மேலுலகம், கீழுலகம் எங்கே இருக்கிறது என்று குறைந்தபட்சம் அட்ரசையாவது கொடுக்கவேண்டாமா?

அன்பே உருவானவன் ஆண்டவன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு கடவுள் இல்லை என்பவர்களைச் சித்திரவதை செய்வதற்காகக் கொப்பரைச் சட்டியுடன் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லுவது _ கடவுளையேகூட கேவல-மாகச் சித்திரிப்பதுதானே! கடவுளைக் கொடூரன் என்று காட்டுவது ஆகாதா?

உருவமற்றவனான கடவுள் எப்படி அங்கு நின்று கொண்டு இருந்தானாம்? இவர் போய் நேரில் பார்த்து வந்தாரோ!

கடவுள் இல்லை என்பவர்கள் ஒரு விழுமிய கருத்தை முன்வைக்கிறார்கள் அறிவார்ந்த முறையில்.

ஆனால், கடவுள் நம்பிக்கைக்காரர்கள்தான் கடவுளுக்கு உருவம் கற்பித்து பெண்டாட்டிகளைக் கட்டி வைத்து, வைப்பாட்டி வீடுகளை ஏற்பாடு செய்து, கற்பழிப்புப் புராணங்களை உண்டாக்கி, நாலாந்தரக் காலிகளைவிட கீழான கடைந்தெடுத்த அயோக்கியர்களாகக் கடவுளைக் காட்டுகின்றனர்.

அரட்டைக் கச்சேரிகளில் விளம்பரத்துக்காக சிலர் உளறுகின்றனர் என்றால், அதை வெளியிடும் இந்த ஆனந்தவிகடன் குழுமத்துக்குப் புத்தி எங்கே போயிற்று?

-------நன்றி விடுதலை (04.04.2010)  கருஞ்சட்டை
1 comment:

மோகனன் said...

அருமை தோழரே... அபபட்டமான உண்மைகளுக்கு பகுத்தறிவே கூராயுதம்...

இங்களைப் போன்றோருடன் நட்பு கொள்ள விழைகிறேன்... என்னையும் தங்களது சங்கமத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்..!

moganan@gmail.com

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]