வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 01, 2010

ஏப்ரல் முதல் தேதி மட்டுமல்ல. எல்லா நாள்-களிலும் முட்டாள்களாக இருக்கிறார்களே

இன்று ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் என்று உலகெங்கும் கடைப்-பிடிக்கப்படுகிறது.


ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஏற்காமல் பழைய ஏப்ரல் முதல் தேதியைப் புத்-தாண்டாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களைக் கேலி செய்வதற்காகத்-தான் இந்த ஏப்ரல் முதல் தேதியைத் தேர்ந்தெடுத்து முட்டாள் தினம் (கிஜீக்ஷீவீறீ திஷீஷீறீ) என்று அனுசரிக்கப்-படுகிறது.

அந்த வகையில் பார்த்-தால் தை முதல் நாள்-தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் தமிழர் பண்பாட்டு மறு-மலர்ச்சிக் கண்ணோட்டத்-தோடு அதிகாரப் பூர்வ-மாக, - சட்ட ரீதியாக அறி-விக்கப்பட்ட நிலையில் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்-ணன் என்ற ஆண் கட-வுளுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்றும் அது சித்திரை முதல்நாள்தான் தொடங்குகிறது என்றும் அடம் பிடிக்கும் அரட்-டைக் கச்சேரி நடத்தும் ஆரியர்களையும், அவர்-க-ளுக்குத் துணை போகும் தொங்கு சதைகளையும் இந்நாளை ஒரு குறியீடா-கக் கொண்டு ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கலாமே! என்ன சரிதானே! இது ஒரு புறம் இருக்கட்டும். ஏப்ரல் முதல் தேதி என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு அழைத்தாலுங்கூட மதக்-குட்டையில்நாளும் மூழ்கி, தொட்டதற்கெல்-லாம் தலையெழுத்து என்-றும், நமக்கு மேலே ஒரு-வன் இருக்கிறான் அவன் எல்லாம் பார்த்துக் கொள்-வான் _- நம் கையில் என்ன இருக்கிறது? ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தி-ருப்-பவன் அவன்தானே! உடம்பு முழுவதும் எண்-ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, ஆற்று மண-லில் உருண்டு புரண்டா-லும் உடலில் ஒட்டும் மண்தானே ஒட்டும்_ - மரம் வைத்தவன் தண்-ணீர் ஊற்றமாட்டானா? கல்லினுள் தேரைக்கும் அவன்தானே அன்றாடம் கறிசோறு போடுகிறான்_ - இந்த ஜீவாத்மா என்ப-தெல்லாம் பொய்த் தோற்-றம்_- பரமாத்மாவோடு அய்க்கியமாவதுதான் இந்த ஊத்தைச் சதையை நாம் தாங்கியிருப்பதன் பயன்_- அதற்கு நாம் ஆண்டவனிடம் சரணா-கதி அடைந்துவிட வேண்-டும். அரே ராமா! அரே கிருஷ்ணா, சிவசிவா என்ற நாமங்களை உச்-சரித்துக் கொண்டிடும் இருக்கும் மனிதர்களை ஒவ்வொரு நாளும், ஏன், ஒவ்வொரு நொடியும் கூட முட்டாள்கள், படு-முட்டாள்கள் பரமமுட்-டாள்கள் என்று நாம-கரணம் சூட்டி அழைத்-துக் கொண்டிருக்கலாமே! ஏப்ரல் முதல் தேதி மட்-டுமல்ல. எல்லா நாள்-களிலும் முட்டாள்களாக இருக்கிறார்களே, படித்தவர்கள் உள்பட என்ன செய்ய!

- விடுதலை மயிலாடன் (01.04.2010)No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]