வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, April 19, 2010

பார்வதி அம்மையாரை அழைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரை சென்னைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம்_ 2002 இல் அ.தி.மு.க. முதலமைச்சராகவிருந்த ஜெயலலிதா அம்மையார் மத்திய அரசுக்கு எழுதி பெற்றுக்கொண்ட கடிதம்தான் என்பதையும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்-குண்டு, பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இலங்கை-யிலிருந்து மலேசியாவிற்குச் சென்று, அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ள நிலையில், 16.4.2010 அன்று விமான நிலை-யத்தில் அவரை இறங்கவிடாமல், திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்திருந்தோம் (17.4.2010).

பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர். அ.தி.மு.க.வைத் தவிர!

மூல காரணம் அ.தி.மு.க.வே!

இன்று சட்டப்பேரவையில் இந்நிலை ஏற்பட்டதற்கு மூல காரணம் 2002 இல் பிரபாகரனின் தாய், தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில், அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால், அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை _ மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும். அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்! நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

அதோடு, பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்; நம் முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு, அவர்கள் இம்முயற்சியைச் செய்யவேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்குமுன்புகூட, ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து, அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் கலைஞர் அரசின் மனிதநேயம் _ மனித உரிமைக் காப்பினைக் காட்டுவ-தாகும்.

எனவே, இதற்குக் காரணமான அ.தி.மு.க. ஆட்சிபற்றி தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துகொள்வது முக்கியமாகும்.19.4.2010

சென்னை                                                                                            தலைவர், திராவிடர் கழகம்.

                                                                                                                               

7 comments:

kantha said...

அடயப்பா.. முன்னாள் ஜெ தான் இதற்கும் காரணமா.. ஏன் ஜெவின் ஆட்சி காலத்தின் எத்தனையோ திட்டங்கள் வழிமுறைகள் எத்தனையோ மாற்றி இருக்கிறார்களே.. அதற்கு வரலாறு இருக்குதே ... ஓகோ... ஓகோ.. எதற்கும் இதுவும் இருக்கட்டும் என் விட்டுவைத்தார்கள் போலும்.. அடாடாடாடா... ஜெ யாக இருந்தால் எத்தனை சந்தோசமாக கூப்பாடு போட்டிருக்கலாம்.. நம்மாள் ஆயிற்றே.. சற்று அடக்கித்தான் ..அதாவது ஏற்பாடு அதாவது ஏற்பாடு செய்ய வேண்ண்ண்டுகிறோம் என்று அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.. சரி சரி.. புரியுது.. புரியுது...
கந்தசாமி

தங்க முகுந்தன் said...

யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சங்கமித்திரன் said...

மிகவும் நன்றி முகுந்தன்.......தொடர்ந்து உங்களின் பங்களிப்பை தாருங்கள்

சங்கமித்திரன் said...

/* அதற்கு வரலாறு இருக்குதே ...*/

@கந்தா
கொஞ்சம் சொல்லலாமே அந்த வரலாறை....தோழரே

kantha said...

//// அந்த வரலாறை....தோழரே//////
அன்று அந்த காஞ்சி அர்ச்சகன் கோயிலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டானே.. அந்த சாட்சிகள் இந்தக் காட்சியில் அதாவது இந்த ஆட்சியில் பிறழ் சாட்சியாகிப் போனார்களே.. என்னவாக இருக்கும்.. யோசித்து யோசித்துவிட்டுச் சொல்லுகிறேன் கொஞ்சம் பொறுங்கள் அய்யா..
கந்தசாமி

சங்கமித்திரன் said...

/*இந்த ஆட்சியில் பிறழ் சாட்சியாகிப் போனார்களே*/

அவர்கள் பிறழ் சாட்சி ஆக ஆனது உண்மைதான். அதற்க்கு அரசு என்ன செய்ய வேண்டும் இல்லை என்ன செய்ய முடியும். மகா (அயோக்கியன்) பெரியவா இவளவு செய்தும் அந்த சென்மத்துக்கு பவள விழா எடுப்பது யார். அவரை நல்லவன் என்று இன்னும் சித்தரிப்பது விடுதலை பத்திரிக்கையோ ,முரசொலியோ இல்லை . அந்த மகா பெரியாவவை நல்லவர் என்று தூக்கி வைத்து ஆடுவது தினமல(ம்)ர்,தினமணி,இந்து,இந்திய டுடே,துக்களக். இவைகள் தான் சாட்சியை பிறழ் சாட்சியாக மாற்றியவை. அந்த பெருமை இவர்களை தான் சாரும். இவர்கள் அனைவரும் எப்போ தி.மு.க அரசிற்கு கேட்ட பேரு வாங்கி கொடுப்பது என்று யோசிப்பவர்கள். அதனை செய்து கொண்டும் இருக்கிறார்கள். எனவே அரசுக்கு இதுக்கும் எந்த சம்பதமும் கிடையாது தோழரே. கொஞ்சம் இந்த பத்திரிக்கைகளை கண்டியுங்கள். இவைகள் அனைத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரிந்துகட்டிக் கொண்டு போவது பெரியார் திடல் அதனை வழிநத்தும் ஆசிரியரும்தான். என்ன செய்வது.......

kantha said...

//வது தினமல(ம்)ர்,தினமணி,இந்து,இந்திய டுடே,துக்களக். இவைகள் தான் சாட்சியை பிறழ் சாட்சியாக மாற்றியவை////
இல்லை தோழர் நீங்கள் தெரிந்துதான் இதை கூறுகிறீர்கள் என்பதை ஏற்க முடியாது.. அவர் எந்த காலத்தில் எதிராக எழுதினார்கள். (அம்பாள் எந்த காலத்தில் பேசினாள் என்பதை போல).. பிறழ் சாட்சிக்காரன காரணம் வெள்ளிடைமலை.. இதை விவாதித்து பயன் இல்லை.. வீணாக பிரச்சனைதான் திசைதிரும்புகிறது
கந்தசாமி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]