வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 13, 2010

படைபோல் தடை உடைத்து பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!

ஏப்ரல் 16 வெள்ளியன்று சென்னையில் நடக்க விருக்கும் திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு குறித்தும், மாணவச் சிங்கக் குட்டிகளின் வருகை குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


வருகின்ற 16 ஆம் தேதி (16.4.2010) வெள்ளியன்று திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு சென்னையில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, இரவு புரசை தாணா தெருவில் நடைபெறும் திறந்த-வெளி அரங்கில் இரவு 9 மணிவரை மிகப்பெரிய அளவில் நடைபெற மாணவர் கழகப் பொறுப்-பாளர்-களும், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும் தேனீக்-களாக பறந்து திரிந்து ஏற்பாடுகளைச் செய்து வரு-கின்றனர்!

படாடோப மாநாடு அல்ல!

படாடோபம் இல்லாது, பசுமையான உள்ளங்-களோடு பறந்துவரும் சிட்டுக்களாக எமது பத்தரை மாற்றுத் தங்கங்களான மாணவக் கண்மணிகள் திசை-யெட்டிலுமிருந்து திரண்டு வர ஆயத்தமாகிவிட்டனர் என்ற செய்தி தேன் வந்து பாயும் செய்தியாக இருக்கிறது, இனிக்கிறது!

மாணவர்களின் கல்விக் கண்ணைப் பாதுகாக்கும் பணிதான் தந்தை பெரியார் என்ற அறிவு ஆசானின் ஈடு இணையற்ற பணி.

சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கம்

தற்குறிகளாக இருந்து, மனு தர்மத்தால் மடிந்து கொண்டிருந்த கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, ஒதுக்-கப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கண்ணொளி அனைவருக்கும் தரப்படல் வேண்டும் என்பதற்-காகவே பிறந்ததுதான் சமூகநீதி இயக்கமாம் _ நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் _ திராவிடர் இயக்கம் எல்லாம்!

கல்வி நீரோடை ஆரிய முதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, நம் பிள்ளைகள் இறங்கிட முடியாத நிலையை எதிர்த்துப் போராடி, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!

இடையில் எத்தனையோ தடைக்கற்கள்!

ஆச்சாரியார் போன்ற பெரிய மனிதர்கள் பதவிக்கு வந்து ஏற்கெனவே இருந்து வந்த பள்ளிகளை (ஆரம்பப் பள்ளிகளை) ஆயிரக்கணக்கில் இழுத்து மூடிய நிலையில், அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு, இன்று கல்வியை அடிப்படை உரிமையாக்கும் அளவுக்கு இந்த நாட்டை வளப்படுத்திய சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் இயக்கம்!

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்கள் நாம்!

அதே குல்லூகப்பட்டரால் குலதர்மக் கல்வித் திட்டம் 1952 இல் கொண்டு வந்து நுழைக்கப்பட்டபோது (அப்பன் தொழிலேயே மகன் செய்யக் கற்றுக்கொள்ள-வேண்டும்; அரை நேரத்தில் வெளுப்பவன் மகன் வெளுக்க-வேண்டும்; சிரைப்பவன் மகன் சிரைக்க-வேண்டும்; தோட்டியின் மகன் மலம் எடுக்கவேண்டும்) அதை எதிர்த்துப் போராடியதனால்தான் இன்று எங்கெங்கு காணினும் பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் முதலிய பட்டதாரிகள்!

இவை ஒரு காலத்தில் அக்கிரகாரத்தின் ஏகபோக உடைமைகள்! 1900-_த்தில் நூற்றுக்கு ஓரிருவர்கூட தமிழர்கள் படித்தவர்கள் இல்லை!

அந்த நிலை மாறாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஆச்சாரியார் எழுப்பிய தடுப்புச்
சுவர் _ குலக்கல்வித் திட்டம்!

வகுப்புரிமைக்கு உலை வைத்தார்களே!

அதற்குமுன் வகுப்புரிமை _ சமூகநீதி ஆணை _ செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பு; 1928 முதல் 1950 வரை நடைமுறையில் கிடைத்த உரிமைக்கு உலை வைக்கப்பட்டது!

அதை எதிர்த்து போர்ச் சங்கு ஊதிய தலைவர்தான் தந்தை பெரியார்!

இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு, அந்நிலையை மாற்றியவர் தந்தை பெரியாரே! சாவு மணி அடிக்கப்பட்ட சமூகநீதிக்கு மீண்டும் உயிரூட்டினார்கள்!

இன்று எங்கெங்கு திரும்பினும் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பூத்துக் குலுங்குகின்றன!

இவை சரஸ்வதி கடாட்சத்தினால், வந்தவை அல்ல.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் ஆட்சியில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தொண்டு, பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசரின் அரிய முயற்சி; அண்ணா வழியில் கலைஞர் ஆட்சியாலும் கைமேல் கிட்டிய பலன்கள்! இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட இடையூறுகள் ஆயிரம் ஆயிரம் என்றாலும், அந்தத் தடை ஓட்டப் பந்தயத்தில் (பிக்ஷீபீறீமீ) தாண்டி நிற்கும் ஒரே மண் தமிழ்மண்!

இட ஒதுக்கீட்டைப் பறிக்கச் சதி!

இன்றோ...? இட ஒதுக்கீட்டைப் பறிக்க மத்திய அரசின் மறைமுகச் சட்டங்களும், திட்டங்களும் தலைதூக்கப் பார்க்கின்றன. கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றி பொதுப் பட்டியலுக்குக் கொண்டுபோனதன் சூட்சமம் (சூழ்ச்சி) இன்று புரிகிறது! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இறக்குமதி செய்து, சமூகநீதிச் சட்டங்களை சவப்பெட்டிக்குள் வைக்கும் ஏற்பாடு அமைதியாக _ ஆனால், உறுதியாக மத்திய அரசின் கல்வித் துறையால் _ மனித வள மேம்பாட்டுத் துறையால் தொடங்கப்பட்டு, துணிச்சலுடன் நடைபெறுகிறது!

வருமுன் காப்போம்!

நம் மாணவர்களின் நிலை ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வேதனை மலிந்த நிலை! எப்போதும் விழிப்போடும், சமூகநீதியை கண்ணைக் காக்கும் இமைபோல நம் இயக்கம் செயல்படுவதால், வருமுன் காக்க வரிசையாக அணிவகுக்கத் தவறுவதில்லை நமது இயக்கமும், அதன் பாசறைத் தோழர்களும்! மதவெறியைப் பரப்பி, மனிதநேயத்தை மண்ணுக்குள் புதைக்க காவிக் கூட்டம் தனது அணியாகிய ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினை (ஏபிவிபி) ஆயத்தப்படுத்தி வருவது ஆபத்தான போக்காகும்!

சரியான நேரத்தில் மாணவரணி மாநாடு

எனவேதான், சரியான நேரத்தில் நமது மாணவர் அமைப்பு தலைநகரில் கூடுகிறது! கொள்கை சிங்கக் குட்டிகளே, பதவி, பட்டம், புகழ் என்ற போதை-களுக்கோ, ஜாதி, மதப் பேதங்கள் என்ற மயக்க பிஸ்-கெட்டுகளுக்கோ ஆளாகாத மாணவச் செல்வங்களே, உங்களைக் கட்டித் தழுவிடக் காத்திருக்கிறோம்!

உயர்நிலை காண உழைக்கும் தன்னலம் அறியாத தணலின் பிழம்புகளே _ உங்களால் சுட்டெரிக்கப்படக் கூடிய குப்பைகள் அநேகம். சுற்றுச்சூழலைப் பாது-காக்கும் வண்ணம் அதனையும் லாவகமாகச் செய்ய நல்ல திட்டங்களைத் தீட்டிட வாரீர்! வாரீர்!!

படைபோல் தடை உடைத்து வருகவே!

தலைநகர் நோக்கி, தந்தை பெரியார் திடலை நோக்கி வாருங்கள்!
உண்டிக்கல்ல, உயர்வுக்கல்ல;
தொண்டுக்காக தூயவர்களே வாருங்கள்!
அணி அணியாய் வந்து பணிமுடித்து மகிழ படைபோல் வருக!
சமூகத் தடை உடைக்க வருக!

---- நன்றி விடுதலை (13.04.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]