வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 06, 2010

நாம் இந்து என்று கூறிக்கொள்ள முடியாது..ஏன்?




தோழர்கள் எழுப்பிய வினாவில் ஒன்று இந்து மதம் தாக்க படுவது குறித்து இதோ அவருடைய வினவும் அதற்க்கு என்னுட பதிலும் கீழே...

===================================================================================
CM ரகு said...
வணக்கம்.

பகுத்தறிவை பரப்பும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்,

இந்து மதத்தை எதிர்ப்பதுதான் பகுத்தறிவா?

ஏனென்றால் எனக்கு தெரிந்தவரையில் பகுத்தறிவுவாதிகள் இந்து மதத்தையும்,

இந்துக்களின் பழக்கவழக்கங்களையும் எதிர்பதையுமே வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிறந்த உதாரணம் : தன்னை பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் பிறந்தவன் என்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி, எப்போதும் இந்துக்களின் மனதை புண்படுத்தும் கருத்துக்களை கூறுவார். அதே நேரம் கிறித்துவ,முஸ்லிம்

மக்களின் விழாக்களில் பங்கெடுப்பார்,வாய் கூசாமல் நோன்பு கஞ்சியும் குடிப்பார்.

இது தான் பகுத்தறிவா(?) என்று எனக்கு புரியவில்லை. நான் அறிந்தவரையில் பெரியாரால் வலியுறுத்தப்பட்ட பகுத்தறிவுக்கொள்கையில்

கடவுள் மறுப்பு என்பதுதான் பிரதான இடம் பிடித்திருந்தது. ஆனால் தற்போது?

ஒரு மதத்துக்கெதிரான நடவடிக்கைகள் தான் பகுத்தறிவு பிரச்சாரமோ என்று என்ன தோன்றுகிறது.

என் கருத்தை பதிவு செய்யும் நோக்கில் தான் இதை தெரிவித்துள்ளேன். மற்றபடி எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

நன்றி

CM ரகு
=============================================================================================================

இந்து மதத்துல பார்பான்,பறையன்,பல்லன்,நரிக்குறவர் எல்லாரும் கட்டியணைத்து ஒரே இடத்தில அமர்ந்து கஞ்சி என்ன கூழ் குடிக்க கூப்பிட்ட கூட வர தயாராகத்தான் இருக்கிறார் தமிழக முதல்வர். பெரியார் தொண்டர்களுக்கு என்ன இந்து மதத்தில் மட்டும் வெறுப்ப என்ன மனிதனை அடிமை படுத்தி பிரித்து மூடநம்பிக்கை வளர்க்கும் யாரும் விமர்சனத்திற்கு உட்படவரே. இதன் அடிபடையில் அதிகமா அருவருப்பான பார்பனர்கள் என்ற ஒரே இனத்திற்கு மட்டும் சாதகமாக உள்ள இந்து மதம் முதல் வரிசையில் இருக்கிறது அவளவுதான். அதற்க்கு ஏற்ப அண்ணாவின் கேள்விகள் இதோ.....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்?

பாழடைந்த மாளிகையில் பறக்குமாம் வௌவால். சரிந்த சுவற்றில் வளை அமைத்து வாழுமாம் பாம்பு! குழியிலே நெளியும் தேள்! அதுபோலவே ஆபாசக் கருத்துக்களில், அறிவுக்குப் புறம்பான புராணங்களில், இழுக்கைத் தரும் இதிகாசங்களில், புல்லரும், சுயநலமிகளும் புகுந்து கொண்டிருப்பர். இந்து என்பது அவர் இட்டுக்கொண்டப் பெயர். அது நமக்கப் பொருந்துமா?

நாலு தலை, மூன்று கண் சாமி, ஆயிரம் கண் ,ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள்,காக்கை மீது பறக்கும் கடவுள்,என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே!நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும்.இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய பாசத்தை நாம் தலை...யில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!

அமெரிக்கா செல்வபுரியல்லவா? அமெரிக்காவில் ஏசுநாதருக்குத் தங்கத்தேர் செய்யமுடியாதா? இத்தலியில் செய்ய முடியாதா? இது வரையில் நம்மை ஆண்ட பிரிடிஷ் ஏகாதிபத்யம் நினைத்தால் ஏசுநாதருக்கு கருட வாகனம் செய்யமுடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்? நம் நாட்டில்தான் தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள் எல்லாம்!இ...ந்திய அரசாங்கத்தார் இந்தியாவை அடமானம் வைத்து, உலக பாங்கியிலிருந்து கடன் வாங்கப்போகிறார்கள்.

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]