வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 04, 2010

கோடி சம்பாதித்தால் அவன் ஈஸ்வரனாகவும் ஆகி விடுகிறானே!

காலாவதியான மருந்து-களை விற்று பணம் குவித்த கும்பலைச் சேர்ந்த-வர்களைக் கவனித்-தீர்களா? அவர்களின் நெற்றிகளையெல்லாம் பாருங்கள், பட்டையும், குங்குமமும் அப்படியே ஜொலிக்கிறது. அப்படியே பக்திப் பழமாகக் காட்சி-யளிக்கின்றனர்.


அவர்கள் செய்த காரி-யமோ மக்களின் உயிர்க-ளோடு விளையாடும் விபரீதச் செயல்!

உண்மையைச் சொல்ல-வேண்டுமென்றால் பக்தி செலுத்துபவர்கள் தனி ஒழுக்கத்தைப் பற்றியோ, பொது ஒழுக்கத்தைப் பற்றியோ கவலைப்பட-வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நம்பும் மதமும், கடவுளும், வழிபாடும், சாஸ்திர சம்-பிரதாயங்களும் ஒழுக்கத்-தைச் சொல்லிக் கொடுப்-பவை அல்லவே!

கடவுளைக் கும்பிட்-டால் நினைத்தது நடக்-கும் என்பதுதானே! அவர்கள் நினைத்தது என்ன என்-பதுதான் முக்கியமான-தாகும்.

நினைப்பது_ - குறுக்கு வழியிலே கோடீஸ்வர-னாவது எப்படி? கோடி சம்பாதித்தால் அவன் ஈஸ்வரனாகவும் ஆகி விடு-கிறானே! (கோடி+ஈஸ்-வரன்).

பக்தி என்பதே உழைப்பு இல்லாமல் தகுதிக்கு மேல் ஆசைப்-படும் உணர்வுதானே!

தவறான வழியிலே பொருளைக் கொள்ளை யடித்தாலும் அந்தப் பாவங்-களிலிருந்து சுலபமாக வெளியேற எளிமையான பிராயச்சித்-தங்களையும் ஏற்பாடு செய்து வைத்துள்-ளார்களே!

விஷ ஊசி போட்டுக் கொன்று கொள்ளை அடித்த பணத்தில் ஒரு சிறு தொகையை திருப்பதி உண்டியலில் போடவில்-லையா?

நம் நாட்டுக் கோயில்-களில் தலப் புராணங்கள் என்ன சொல்லுகின்றன? எவ்வளவுக்கெவ்வளவு மோசமான, கொடிய பாவங்-களையும் போக்க எவ்வளவுக்கெவ்வளவு குறைந்த அளவு பரிகாரம் என்பதில்தானே கோயில்-களுக்குள் போட்டா போட்டி?

அதாவது குறைந்த முதலீடு_ கொள்ளை லாபம்!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவ-னுக்கே பாவப் பரிகாரம் ஒரு குளத்தில் குளிப்பது-தானே! இதற்கு மேல் எந்த எழவை இந்து மதத்திலிருந்து எடுத்துச் சொல்வது?

பக்தி வேடம் போடும் ஆண்களிடம் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று மக்கள் கலையரசி மனோரமா சொன்னதாக நினைவு!.

---------- நன்றி விடுதலை (04.04.2010) மயிலாடன்




1 comment:

அக்கினிச் சித்தன் said...

அந்த ஊசியில ஒன்னு எடுத்து அந்தக் கோடீஸ்வரனுக்குப் போடணுமுங்கோவ்!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]