வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 08, 2010

எழுச்சி மிக்க இனத்தின் போர்வாட்களே! வாருங்கள்! வாருங்கள்!!

இளைஞர்களே!


படுக்கையிலிருந்து எழும்போது உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாகவும், உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாயும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள். உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய தபசு இருங்கள்!_ என்றார் எழுச்சிக் கதிரவனாம் நம் தந்தை பெரியார்.

நாடு இளைஞர்களை, மாணவர்களை நம்பித்தான் இருக்கிறது. அந்த இளைஞர்கள், மாணவர்கள் எப்படி உருவாகவேண்டும்?

அவர்களாக உருவாவார்களா? நிச்சயம் முடியாது _ அவர்கள் உருவாக்கப்படவேண்டும்.

எந்தப் பட்டறையில் உருவாக்கப்படவேண்டும்? சுயமரியாதைப் பட்டறையில், பகுத்தறிவுச் சாணையில் கூர் தீட்டப்படவேண்டும்.

அந்தப் பட்டறை எது? அறிவில் அழுக்கு இல்-லாத-வர்கள் நன்றாக அறிவார்கள்; மிக நன்றாகவே அறிவார்கள். அந்தப் பட்டறை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பட்டறை _ கருஞ்சட்டையின் பாடிவீடு.

ஆம், அங்கு பகுத்தறிவு மட்டும் பாடமல்ல, தன்மானம் மட்டும் தரப்படும் வகுப்பல்ல!

தனி மனித ஒழுக்கம், பொது ஒழுக்கம், சொல்-லிக் கொடுக்கப்படும், பயிற்றுவிக்கப்படும் பகுத்தறிவுச் சாலை.

இல்லறம், துறவறம்பற்றித்தான் மக்கள் அறிந்-திருக்கிறார்கள். தொண்டறம் என்ற ஒன்று உண்டு; அது அந்த இரண்டிற்கும் மேலானது, உயர்ந்த சீலம் என்ற மகரந்தத்தை உள்ளடக்கமாகக் கொண்டது.

தனி நலத்தைத் தூக்கித் தூரப் போட்டு, இன நலத்தை இருவிழிகளாகக் கொண்டது.

சமூகநீதியை சன்மார்க்கமாகக் கொண்டது. பெண்ணுரிமையை முழக்கமாகக் கொண்டது; சம தர்மத்தை தழைக்கச் செய்வதை சான்றாண்மையாகக் கொண்டது.

அரசியல் பாதையைக் காட்டக்கூடிய இயக்கமல்ல; பதவிப் போதையைப் புகட்டக் கூடிய சரக்குகள் இங்கு கிஞ்சிற்றும் கிடையாது.

வாழ்ந்த இனம் வீழ்த்தப்பட்டதை எடுத்துக்கூறி வீறு கொண்டு எழச் செய்யும் வித்தகத்தைக் கொண்டது.

எதிரிகளைப் பார்த்து பாடம் கற்றுக்கொள் என்பதைப் பாங்காக எடுத்துக் கூறக் கூடியது.

முற்போக்குச் சிந்தனை இதன் மூச்சுக்காற்று! நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை ஈரோட்டுக் கண்ணாடிமூலம் ஊடுருவிப் பார்க்கக் கூடியது.

தமிழினத்தைச் சூழும் ஆபத்துகளை அறிந்து எச்சரிக்கை ஒலியை எழுப்பக்கூடியது.

இனப் பகைவரின் தந்திர முதுகுக் கூட்டை சுக்கல் நூறாக உடைத்து நொறுக்கக் கூடியது.

கல்வி ஓடையில் நுழையும் ஆரிய முதலைகளை இனம் கண்டு அதன் மூச்சுக் காற்றை அடக்கக் கூடியது.

வேலை வாய்ப்பில் வேலை காட்டும் விஷமச் சக்திகளின் கோரப் பற்களைப் பிடுங்கி எறியக் கூடியது.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்முன் மூண்டு நிற்கும் பிரச்சினைகள் ஒன்றல்ல; இரண்டல்ல; சர்க்கரைப் பூச்சு விஷ உருண்டைகள் கல்வியின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் நம்முள் திணிக்க நயவஞ்சக நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

தமிழரா? திராவிடரா? என்ற குழப்ப மோகினிகளை அனுப்பி தமிழின இளைஞர்களைப் பாதைத் தவறிக் குழியில் வீழச் செய்யும் குழப்பவாதிகள் சிலர் தமிழ்நாட்டில் தலைதூக்கப் பார்க்கின்றனர்.

திராவிடர் என்பதன் உட்பொருளைப் புரிந்துகொள்ளா-மலும், பார்ப்பனப் பகையின் ஆபத்தை அறிந்து கொள்ளாமலும் சிறுபிள்ளைத்தனமாக ஊளையிடும் நரிகளும் மேடை போட்டு பேச ஆரம்பித்துள்ளன.

இந்த எல்லா வகைப் பிரச்சினைகளையும் முகத்துக்கு முகம் சந்தித்து, சாட்டையடி கொடுக்கும் மாநாடுதான் சென்னையில் வரும் 16 ஆம் தேதி வெள்ளியன்று காலை முதல் இரவு வரை நடக்க இருக்கும் _ திராவிடர் கழக மாணவரணி மாநில எழுச்சி மாநாடு.

தமிழர் தலைவர் சங்க நாதம் செய்கிறார் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தோள் தட்டுகிறார்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளை உள்வாங்கி அதனைச் சுவாசக் காற்றாகக் கருதும் நமது தோழர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. எழுச்சி முரசு கொட்டுகிறார்.

ஈரோட்டை முன்னொட்டாகக் கொண்டு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறாத_

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமக்கே உரித்தான
முத்திரையைப் பதிக்க இருக்கிறார்.

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?
இளைஞர்களே,
இளைஞர்களே,

எழுச்சி மிக்க இனத்தின் போர்வாட்களே!

தந்தை பெரியார் கூறிய அந்த சுயமரியாதை உணர்வுக்கு, உயிர் கொடுக்கத் தபசு இருப்போம் வாருங்கள்! வாருங்கள்!!

எங்கும் எங்கும் கருஞ்சட்டை இளைஞர் படை!

மாணவர் பட்டாளத்தின் தலைகளே தலைநகரில் காணப்படவேண்டும்!

ஏ, அப்பா பெரியார் பட்டாளம் இத்தனைப் பெரிதா? பெரியாருக்குப்பின் இளைஞர்கள் இத்தனை ஆயிரம் திராவிடர் கழகத்தில் அணிவகுப்பா?_ என்று எதிரிகள் குலை நடுங்க, தமிழர்கள் உள்ளத்-தில் ஆயிரம் ஆயிரம் நம்பிக்கை அலைகள் எழுந்து பொங்க,

தமிழர் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்!
புதிய சரித்திரம் படைப்போம், கூடுங்கள்! கூடுங்கள்!!

---------- மின்சாரம் விடுதலை (08.04.2010)

1 comment:

Harrispan said...

தமிழரா? திராவிடரா? என்ற குழப்ப மோகினிகளை அனுப்பி தமிழின இளைஞர்களைப் பாதைத் தவறிக் குழியில் வீழச் செய்யும் குழப்பவாதிகள்.
யார்? சீமான் ?
பாவம் வீரமணி. அய்யா கலைஞர் போல
மகனுக்கு மகுடம் சூட்டிவிட்டார்.

சோனியாவின் தனிப்பட்ட பழி வாங்கும்
செயலுக்கு தூபம் போட்டவர்.

கல்லூரி மட்டும் இப்ப பொழப்பு.

புலிகள் இருந்தவரை தெரியாத உண்மைகள்

அணிவகுப்பா?_ என்று எதிரிகள் குலை நடுங்க
யார் அந்த எதிரிகள்?

தமிழ் என சொல்லுபவன் தானே?

உங்களுக்கு இன்னும் பெரியார் பெயர்
சொல்ல வெட்கமாக இல்லை.

ஜெயலலிதா இப்ப எதிரி.

சோனியா சொக்க தங்கம்.
40 பாராளுமன்ற உறுப்பினர் துணை

ராஜபக்சே இப்ப உங்க தலைவன்.

ஏன் வீரமணி ஸ்ரீலங்கா போய் இப்ப
பாக்கறது?

மனம் இல்லை.

வாழ்க பெரியார்! வளரக சோனியா அறிவு!!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]