வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 09, 2010

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்திற்குப் பதிலாக திருவள்ளுவர் உருவம் பொறிக்கவேண்டும்!

கடவுள் படங்களை அகற்றச் சொன்னவர் அண்ணா. நடைபாதைக் கோயில்கள் சாலைகளை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டப்பட்டதை இடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வர் கலைஞர் சுற்றறிக்கை அனுப்பி ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்றிடவேண்டும். கோபுர சின்னத்தையும் மாற்றி மதச் சார்பின்மையைக் காப்பாற்றிட தமிழக அரசும், முதல்வரும் துணிந்து முன்வரவேண்டு மென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

நேற்று (8.4.2010) சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை-பற்றிய விவாதத்தின்போது பேசிய விடுதலை சிறுத்-தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் திரு. ரவிக்-குமார் அவர்கள் மிக அருமையான, ஆக்க ரீதியான ஒரு வேண்டுகோளை தமிழக அரசுக்கு வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்றி...

தமிழ்நாடு அரசின் அடையாளமாக (Emblem of the State) கோபுரத்தைத் தற்போது போட்டிருப்பதை மாற்றி,திருவள்ளுவரைப் போட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று போடலாம் என்று கூறி-யிருக்கிறார்.

இது பாராட்டி வரவேற்கவேண்டிய முக்கியக் கருத்-தாகும். மதச் சார்பின்மை (Secular) அரசுதான் மத்திய, மாநில அரசுகள்.

அப்போதே திராவிடர் கழகம் கண்டனம்

இதில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் சின்னமே; சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்தான் அது! 1947 வாக்கில் யாரையும் கலக்காமல் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக (ஓமாந்தூரார் ஆட்சிக்காலத்தில்) எடுக்கப்பட்ட முடிவு அது.

அப்போதே திராவிடர் கழகமும், விடுதலையும் _ மதச் சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமானது இது என்பதைச் சுட்டிக்காட்டி தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது!

அசோக ஸ்தூபி சக்கரம்

இந்திய அரசுக்கு அசோக ஸ்தூபி சக்கரம் உள்பட தேர்வு செய்துள்ளது நியாயமானது. எம் மதத்தையும் சாராத ஒன்று. இஸ்லாமியரின் மசூதி, கிறித்துவரின் சர்ச், சீக்கியரின் தங்கக்கோயில் என்பது போன்ற பன் மதத்தவரின் பல சின்னங்கள் இருக்கும்போது, திடீ-ரென்று இந்துத்துவா எப்படியோ நுழைந்துவிட்டது! இது நியாயமற்றது, முரணானது.

பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்ற சமாதானத்தையோ, விளக்கத்தையோ யார் எந்தத் தரப்பிலிருந்து கூறினாலும் ஏற்க இயலாது.

தமிழ் வருட ஆபாசத்தை கலைஞர் அரசு ஒழித்தது

கணினி ஆன்லைன் நிருவாகம், வீடியோ கான்ஃபரன்சிங் பல ஆண்டுகாலமாக இல்லை. அதனை நாம் ஏற்கவில்லையா?

பல ஆண்டுகாலமான தமிழ் வருடப் பிறப்பு என்ற ஆபாசத்தைக் கலைஞர் அரசு துணிச்சலுடன் ஒழித்துக்-கட்டி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணைமூலம் அறிவித்து மிகச் சிறப்பாக கொண்டாடிடவில்லையா?

(பார்ப்பன ஏடுகள் விக்குருதி வெங்காயம் என்று விளம்பரப்படுத்திட முயன்றாலும், அம்முயற்சி வெற்றி அடையப் போவதில்லை. பழையன கழிதல் _ காலத்தின் கட்டாயம்).

அண்ணா கடவுள் படங்களை அகற்றினார்

அறிஞர் அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள், கடவுளச்சிகள் படங்களை அகற்றிட அத்துணை அரசு தலைமை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடுத்து, அகற்றும் பணியும் தொடங்கியதே!

ஆச்சாரியார் போன்றவர்கள் எதிர்த்ததைக்கூட, அறிஞர் அண்ணா உறுதியாகப் புறந்தள்ளினார்களே _ பல ஊர்களில் அரசு மருத்துவமனைகள், வட்டாட்-சியர் அலுவலகங்களில், (நடைபாதை ஆக்கிரமிப்பு கோயில்கள் தனி) ஆங்காங்கு இந்து முன்னணி தூண்டுதலில் கோயில் கட்டி, திராவிடர் கழகம், பகுத்தறி-வாளர் கழகத்தவரின் சட்டபூர்வ நடவடிக்கையால் இடித்துத் தள்ள நீதிமன்ற ஆணை _ தீர்ப்பும் பெறப்-பட்டுள்ளது!

உச்சநீதிமன்ற தீர்ப்பேயுள்ளது!

உச்சநீதிமன்றமே நடைபாதை கோயில்கள், அனுமதியின்றி ஆக்கிரமிப்புக்களாகக் கட்டப்படும் கோயில்களை இடிக்கவேண்டும் என்ற ஆணையை _ தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதுகுறித்து எல்லா மாவட்ட ஆட்சியருக்கும் மாண்பு-மிகு முதல்வர் அவர்கள் ஒரு சுற்றறிக்கை _ ஆணை _ தாக்கீது அனுப்பி, அகற்றிட வேண்டியவை-களை அகற்றிடவேண்டும்!

விஸ்வரூப அனுமார்

மதக்கலவரங்களுக்கு வித்திட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் அரசு வளாகங்களில் கோயில் கட்டுவது, நெடுஞ்சாலைகளில் விஸ்வரூப அனுமார் சிலையை வைப்பது இப்படிப் பலவும் செய்கின்றனர்! குறிப்பாக, முஸ்லிம், கிறித்துவர் வாழும் பகுதிகளில்!

இந்த அரசே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்; என்ற போதிலும், முதல்வர் கலைஞர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு திறந்து வைக்கும் தந்தை பெரியார் சிலைகளுக்குக்கூட முறைப்படி, சட்டப்படி அனுமதி வாங்காமல் நாம் ஓர் இடத்தில்கூட வைப்பதில்லையே!

கோபுரச் சின்னம் நீண்ட கால அநீதி!

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கப்படவேண்டும்; கோபுரம் போன்ற குறிப்பிட்ட மதச் சின்னம் இடம்பெற அனுமதித்ததே நீண்ட கால அநீதி; அதைச் சரிப்படுத்திட வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்!

துணிந்து நல்ல முடிவெடுத்து ஜனநாயகத்தின் முக்கிய கூறுபாடான, மதச் சார்பின்மையைக் காப்-பாற்-றிட தமிழக அரசும் முதல்வர் அவர்களும் முன்வர-வேண்டும்.

தந்திகள், தீர்மானங்களும் குவியட்டும்!

முற்போக்குச் சக்திகள் அனைத்தும் இதற்குப் பேராதரவு அளிப்பது உறுதி! உறுதி!!

--------- நன்றி விடுதலை (09.04.2010)

3 comments:

நல்லதந்தி said...

//இந்திய அரசுக்கு அசோக ஸ்தூபி சக்கரம் உள்பட தேர்வு செய்துள்ளது நியாயமானது. எம் மதத்தையும் சாராத ஒன்று.//

அட! அப்படியா?. என்னக் கொடுமை சரவணா????????????

shaan said...

சங்கமித்திரன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அசோக ஸ்தூபியும் சக்கரமும் எந்த மதத்தையும் சாராத ஒன்று என்று கூறுகிறீர்களே? தெரிந்தும் தான் பொய் சொல்லுகிறீர்களா அல்லது தெரியாமல் சொல்லுகிறீர்களா?

நம்பி said...

//shaan said...

சங்கமித்திரன் என்ற பெயரை வைத்துக்கொண்டு அசோக ஸ்தூபியும் சக்கரமும் எந்த மதத்தையும் சாராத ஒன்று என்று கூறுகிறீர்களே? தெரிந்தும் தான் பொய் சொல்லுகிறீர்களா அல்லது தெரியாமல் சொல்லுகிறீர்களா?
1:59 PM //

மௌரியரின் ஆட்சிகலாத்தில் புத்தர் பிறந்து 218 ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது...புத்தரின் கொள்கைகளை வலியுறுத்தி அசோகரால் நிறுவப்பட்டாலும் அது புத்த மதத்தின் சின்னமாக எங்கும் எவராலும் வழிபடப்படுவதில்லை. இதை புத்தர் உருவாக்கியதும் இல்லை...

அதனால் தான் அது மதசார்பற்ற சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிலுவை, பிறைநிலா போன்ற இதர மதச்சின்னங்களை உள்ளடக்கியது இல்லை...

இன்னொன்று இந்தியாவை பொருத்தவரை புத்தமதம் என்று தனிமதமாக இது பிரிக்கப்படவில்லை..அது இந்து மதத்தின் உட்பிரிவாக அரசியல் சட்டப்படி பார்க்கப்படுகிறது..சட்டத்திலும் அப்படித்தான்.

பௌத்தம் ஒரு கொள்கை..மதமல்ல. மதம் சார்ந்த எந்த விஷயத்தையும் ஒதுக்க சொன்னவர் எப்படி மதத்தை ஆதரிப்பார்?

அதை மதமாக புத்தர் வலியுறுத்தவில்லை எல்லாம் மனிதர்கள்தான் மதமாக மாற்றிக்கொண்டனர். இந்தியாவை பொருத்தவரை புத்தம் மதமல்ல.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் போதும் பொய் எது? என்று தெரிந்துவிடும்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]