வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 06, 2010

கொடுக்குமா, கொழுக்-கட்டையில் வடக்கு தெற்கு பார்க்கும் கூட்டம்?

மத்திய அரசின் சிறு-பான்மையினர் சலுகை-கள் தொடர்ந்தால் அர-சியல் சாசனம் சமூகநீதிக்-காகத் தந்துள்ள பிற்-படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்-கான சலுகைகள் பய-னற்-றதாகிவிடும்_-(தினமலர், 4.4.2010)


திருவாய் மலர்ந்து அருளி இருப்பவர் இந்து முன்னணிப் பிர-முகர் திருவாளர் இராம-கோபாலவாள்.

அடேயப்பா! சமூக-நீதி-யில்தான் எவ்வளவு பெரிய உயரமான கரி-சனம்! அதுவும் தாழ்த்-தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான கரி-சனமோ, கரிசனம்!!

அது சரி, பிற்படுத்-தப்பட்டோருக்கும், மிக-வும் பிற்படுத்தப்பட்-டோ-ருக்கும், தாழ்த்தப்பட்-டோருக்கும் ஒதுக்கீட்டுப் பிரச்சினை தலையெ-டுத்த-போதெல்லாம் இந்தத் தாண்டவராயர்கள் எந்தக் கோயில்களுக்கு முன் தண்டால் எடுத்துக் கிடந்தார்களாம்?

50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி-மன்றம் தடாலடியாக கூறியபோது இந்தக் குடுமிகள் கோபங்-கொண்டு கூத்தாடவில்-லையே, ஏன்?

மண்டல் குழுப் பரிந்-துரைகளை அமல்படுத்-தக் கூடாது என பார்ப்-பனர்கள் உண்ணாவிர-தம் இருக்க முயன்ற-போது இந்தக் காவிக் கூட்டம் கவ்சனம் கட்டிப் போராட முன்வந்திருக்-கலாமே!

அப்பொழுதெல்லாம் சமூகநீதிக்காகப் போராட முன்வராத நிலையில், சிறுபான்மை யினரான முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும்-போது, வயிற்றிலும், வாயிலும் வாங் வாங்-கென்று அடித்துக்-கொண்டு பிலாக்கணம் பாடுவது ஏன்?

சிறுபான்மையினர் என்-றால் அப்படி ஒரு இனம் தெரியாத வெறுப்பு!

பிளவுகளும், பிளவு-களின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளும் அவற்றின் அடிப்படை-யில் கூடுதல் வாய்ப்பு-களையும், வசதிகளை-யும் வயிறு முட்ட அனு-பவித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் உயர்வு காணத் துடிக்கின்றனர். நோய்க்-கிருமிகளிடமிருந்தே நோய்த் தடுப்பு மருந்து-களை உருவாக்குவது போல_- சிறுபான்மை-யினருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு என்ற உரிமை முழக்கம் கிளம்-பியுள்ளது.

நியாயமாக இராம-கோபாலன்கள் என்ன குரல் கொடுக்கவேண்-டும்? சிறுபான்மையின-ருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், இட ஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநிலங்களே பார்த்துக் கொள்ளும் உரிமைக்காக அல்லவா குரல் கொடுக்க வேண்-டும்!

கொடுக்குமா, கொழுக்-கட்டையில் வடக்கு தெற்கு பார்க்கும் கூட்டம்?

- விடுதலை மயிலாடன் (06.04.2010)



2 comments:

Unknown said...

கொடுக்குமா, கொழுக்-கட்டையில் வடக்கு தெற்கு பார்க்கும் கூட்டம்? --- பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

பரணீதரன் said...

தோழி புனிதாவின் வருகைக்கும் பிநூடத்திர்க்கும் நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]