வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, April 13, 2010

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொடங்க....சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா?

நானும் வெளிநாட்டில் உள்ள ஒரு நண்பரும் உரையாடி கொண்டிருந்தோம். அப்போது நான் கூறினேன் இப்போ எங்கே பார்த்தாலும் வேலை நேரம் போக ஏன் வேலை நேரத்திலும் கூட நாலு பேரு சேர்ந்த (குறிப்பாக கணினி துறை அன்பர்கள்) என்ன பேசுகிறார்கள் என்றால் சினிமா,கிரிக்கெட்,பப்,வார இறுதிநாள் வெளியில் செல்லும் இடம் மற்றும் பல... தப்பி தவறி கூட பகுத்தறிவோ இல்ல நாட்டு நடப்பை பற்றியோ பேசிவிட மாட்டார்கள். நாம் இடையில் ஏதேனும் திசை திருப்பி முற்போக்கு விசயங்கள் பேசினால்...சை வந்துடன்ய என்று அலுதுகொள்ளும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றேன். உடனே அந்த தோழர் சொன்னார் நீ பகுத்தறிவு மோகம் கொண்டு அலைகிறாய் அவர்கள் சினிமா மோகம் கொண்டு அலைகிறார்கள். எப்படி அவரின் ஒப்பீடு.(மனைவியும் விபசாரியும் ஒன்றா?) எந்த அளவு அவரின் புரிதல் இருந்தால் பகுத்தறிவை மோகம் என்பார். மோகம் என்ற சொல் எதுக்கு பொருந்தும் என்பதே அறியாமல் அவரின் பேச்சு. உதரனத்திற்க்கு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் சாதா அதே நினைப்பில் இருந்து கொண்டு இருக்கிறார் என்றால் அவர் இருதய மோகம் கொண்டு அலைகிறார் என்று கூறுவோம (அவரின் அளவிற்கு இரங்கி பதில் கூற வேண்டியுள்ளது நிலைமை...கொஞ்சம் புரிந்தவர்கள் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்). அது போல பகுத்தறிவாதிகல் பகுத்தறிவு பற்றி விவாதிப்பது , சாதி ,மதம், மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றி விவாதிப்பது என்பது பகுத்தறிவு மோகம் கொண்டு அலைவதா? என்ன ஒரு அறிவாளித்தனம்...

சரி விவாதப்படி பகுத்தறிவு மோகம் கொண்டே அழைக்கிறோம் என்றாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகள் நம் வாழ்க்கையை நெறிப்படுத்தவும் அதனை மற்றவர்களுடன் விவதிப்பதினால் அவர்கள் நடைமுறை பக்குவப்பட்டு வாழ்க்கையில் நல்வழி பெறுவதும் நிச்சயம். அதில் ஏதேனும் தவறு காண இயலுமா?. பகுத்தறிவு பற்றி விவாதம் செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் (கணக்கில் இட முடியாது ..இருந்தாலும் ஒரு சில )

--- மூடநம்பிக்கை ஒழியும்.
-- பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வு ஏற்படும்
-- மதவெறி மாய்ந்து மனித நேயம் மிளிரும்
-- எந்த ஒன்றும் கேள்விக்கு உட்படும்

இப்படி அடிகிகொண்டே போகலாம்...அனால் சினிமா மோகம் என்ன பண்ணும்...அதுவும் இன்றைய சினிமா ... யோசியுங்கள்..எழுதவே கூசுகிறது..வாசகர்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

மேலும் நாம் சிலரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது முற்போக்கு சிந்தனைகள் பற்றி பேசினால் ..நீ முதலில் உன் வீட்டில் உள்ள நபர்களை திருத்து அப்புறம் உலகுக்கு  சொல்லலாம் என்ற செய்தியையும் நம்மிடம் எடுத்து வைக்கிறார்கள். நன்றாக கவனியுங்கள் இங்கு "திருத்து" என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. எப்படி என்றால் ஒருவன் தவறு செய்தால் தானே திருந்த வேண்டும் அல்லது திருத்த முயற்சிக்க வேண்டும். இங்கு நாம் என்ன தவறு செய்தோம்?. இப்படி மூடநம்பிக்கை,சாதி,மதம்,கடவுள்,சாஸ்திரம் என்று நாம் பிரிந்து கிடக்கிறோம்.இப்படி பிரிந்து கிடப்பது பற்றி ஏன் என்று பகுத்தறிவோடு விவாதம் செய்ய கூடாத? இப்படி கிடப்பது அவர்களே தவறு என்று ஒப்புகொள்ள வருகிறார்களா? எனக்கே புரியவில்லை. ஒரு மனிதன் நல்ல சிந்தனையோடு,மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நல்லொழுக்கத்துடன், ஒற்றுமையுடம் மனிதநேயம் காத்து அடிமைத்தனம் இல்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்க்கான ஒரு வழிகாட்டுதலை பகிர்ந்துகொள்ளுவது என்பது திருத்துவதா? இப்போது புரிகிறது, சுயமரியாதை என்ன எங்கள் அப்பன் வீட்டு சொத்தா என்று ஏன் பாரதிதாசன் கேட்டார் என்று. இவர்களிடம் நாம் என்ன செய்வதெல்லாம் பொது நலத்தோடு இருக்க வேண்டும் என்றா சொல்லுகிறோம்,  குறைந்த பட்ச பொதுநலம் தான் நாம் எதிர்பார்கிறோம் எப்படி என்றால் பராசக்தியில் கலைஞர் அவர்கள் சொல்லுவரே "மீன் எப்படி தன் உணவிற்காக மனிதனின் புண்ணினை பிடுங்கி தின்கிறதோ" அந்த மாறி. மீன் நம் கால் பகுதியில் உள்ள சிரங்கை பிடுங்கினால் அதற்கும் உணவாகி விடும் நாமும் விரைவில் அதில் இருந்து குணம் அடைந்து விடுவோம். அந்த அளவு பொது நலம் இருந்தால் போதும்.

சரி இப்படி இந்த அறிவை மற்றும் தமக்கு தெரிந்த முற்போக்கான விசயங்களை பகிர்ந்துகொள்ள,எடுத்துரைக்க முதலில் தன் குடும்ப உறுபினர்களிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பது எவளவு அறியாமை தனமான ஒரு பேச்சு. அவர்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதான். உதரனத்திற்க்கு புதிதாக சென்னை க்கு வந்த ஒரு தோழர் வெளியில் இரு சக்கர வாகனத்தில் கிளம்புகிறார் அப்பொழுது நாம் பக்கத்தில் இருக்கிறோம் அப்போ அவரை பார்த்து நண்பரே தலை கவசம் அணித்து, சிக்னலில் பார்த்து செல்லவும் இல்லேன்னா இங்கே அபராதம் அதிகம் வசூலிப்பார்கள் என்று சொன்னால் உடனே அவர் முதல்ல நீ இத போய் உன் குடும்ப நபர்களிடம் சொல்லு அப்புறம் ஏன் கிட்ட சொல்லலாம் என்றால் எவளவு அப்பதாமோ அவளவு அபத்தம் தன் குடும்ப உறுபினர்களிடம் சொல்லி என்னிடம் வா என்பது. குடும்பதில் உள்ளவர்களிடம் நாம் விவாதம் செய்கிறோம் ஏற்று கொள்ளுபவர்கள் ஏற்று கொள்ளட்டம் அதே போலதான் வெளியிலும் விவாதம் செய்கிறோமே தவிர அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்றைக்கும் பெரியார் தொண்டர்கள் கூறியதே கிடையாது. பிடிச்சா  ஏத்துக்கோ  இல்லையா தூக்கி போட்டு போய்கிட்டே இரு. இதேதான் குடும்ப உறுபினர்களுக்கும் பிடிச்ச ஏத்துக்க போறாங்க இல்ல அவங்க வழில போக போறாங்க. நீங்கள் விவாதம் செய்யும் பொழுது உங்கள் எதிர் வினைகளை கேள்விகளாக கேட்காமல் அதற்க்கு பதில் அளிக்க இயலாமல் தப்பிக்க பயன்படுத்தும் ஒரே வார்த்தையாக இதனை பயன்படுத்த வேண்டாமே...பேசுவது எல்லாம் நல்லதாக தெரிந்தும் நம்மால் அவைகளை ஏற்க மனம் இடம் கொடுக்க வில்லை என்பதற்காக..அதில் இருந்து விடுபட இப்படி ஒரு அறியாமை தனமான கேள்விகளை கேட்பது கண்ணிருந்தும் குருடராய்,காதிருந்தும் செவிடராய் இருப்பது போல கல்வி பெற்றும் அறியாமையின் பிடியில் இருப்பதை தானே வெளிப்படுத்துகிறது.

அய்யா பெரியார் அவர்கள் தான் சொல்லுவார்கள் இங்கே இருப்பவர்கள் மானம் கெட்டு  மதி இழந்து கிடக்கும் சுயசிந்தனை அற்ற கூட்டம் இதில் போய் எனக்கு நல்லவன் என்று பட்டம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மிக மிக முட்டாள்தனம். எனவே நான் முடிந்த அளவு கேட்ட பேரு வாங்கத்தான் ஆசை படுகிறேன் என்று கூறுவார்கள் அந்த அறிவு ஆசானின் வழி வந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய பொருட்டா. ஏதோ விவாதம் செய்தவர் ஒரு சிந்தனை வாதி என்பதினால் என் நேரம் செலவிட்டு இதனை எழுதும் நிலைமைக்கு ஆளானேன். (ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் நான் சொல்லி இருக்கும் அனைத்தும் அடிபடையே .அதனால் வாசிப்பவர்கள் இதனை ஏன் இவன் எழுதணும் என்று நினைக்கலாம் அல்லவா.அதனால்தான்.)

எவளவு இடையூறுகள் வந்தாலும் பெரியாரின் வழி சென்று சாதி,மதம்,சாஸ்திரம்,கடவுள்,மூடநம்பிக்கை ஒழித்து வளரும் சமூகம் பகுத்தறிவு ஒளி வீசும் சமூகம் ஆக மாற பெரியார் கொள்கைகளுக்கு உங்களால் முயன்ற பங்களிப்பை கொடுங்கள்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

7 comments:

senthil valli said...

Mr.Paraneetharan,

I have very much respect with all Periyar followers because as Periyar said those will respect and understand others business those are doing with very much truthful without hurt somebody.

As a Periyar Follower how can you compare the Wife and Prostitute as a example. What you find the wrong with prostitute and I would like to inform you there are many prostitution around us.

Prostitution 1: Govt and Private employees who are all getting salary those are all not use thier office hours for their assigned task.

I am having many real prostitution examples....

Now, I am coming to your argument regarding the implementation 'PAGUTHARIVU'in your family first.

If you could not implement that within your known family person then how you can expect to implement for others.

Human Family structure as below:

Father and Mother
Brothers and Sisters
Uncles and aunties
Grandmas and Grandfas

From the above you can treat as ur own family members even though those may not your Blood relation except Father and mother, hence u can understand what i tried you to explain.

I am very much happy to provide my explanantion if you or others required any clarifications on this.

Ungal
Chidavalli

ttpian said...

as long as we have bramins-well,there is no LIFE for tamil community

பரணீதரன் said...

/*As a Periyar Follower how can you compare the Wife and Prostitute as a example)*/

பெரியார் வழிசெல்பவர்கள் இந்த ஒப்பீடு செய்யகூடாது என்பதே பெரியாரின் புரிதல் இல்லை என்பதை தான் காட்டுகிறது. பெண் ஏன் அடிமையானால் புத்தகம் வாசித்தல் புரியும் உங்களுக்கு. அலங்காரம் செய்யும் பெண்ணுக்கும் விபச்சாரிக்கும் வேறுபாடு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை என்று அய்யா அவர்கள் கூரியுருப்பர்கள். அதபோல ஒன்றுதான்

/* If you could not implement that within your known family person then how you can expect to implement for others.*/

அப்புறம் மீண்டும் ரத்த பாசம் அப்படி இப்படி ன்னும் அங்கேதான் போறிங்க நீங்க...அதற்க்கு பதில் மேலே உள்ள கட்டுரையிலே கூறிவிட்டேன். சுயமரியாதை,பகுத்தறிவு கருத்துகளை பரப்ப அங்கெ இருந்துதான் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை (அவர்களும் உடன் பட்டலோலிய). அய்யா பெரியார் அவர்லே இதனை பலமுறை கூறி உள்ளார்கள்.உதரனத்திற்க்கு அய்யா அவர்களின் பெற்றோரையே அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள். மீண்டும் ஏதோ ஒரு வகையில் சமாதனம் தேடும் கேள்வியாகவே குடும்ப உறுப்பினர் வந்துள்ளது அறவே ஏற்றுக்கொள்ள முடியாதது (அப்படியே குடும்ப உறுப்பினர் கொள்கை வழி வந்தால் அடுத்து அவர்களை என்ன வசை பாடுவீர்கள் ...வாரிசு கொண்டு வந்துட்டாருய்ய...இதான் பெரியார் சொன்னது நல்ல பேரே வங்க முடியாது என்று. எவளவு பொருத்தம். அனால் நான் என் மனைவி எல்லோரும் கொள்கை வழி செல்பவர்கள் தான்.)

Unknown said...

பொதுவான கருத்துக்களை பேச வந்தால் இதில் குடும்பம் என்ன அடுத்தவர்கள் என்ன. குடும்ப உறுப்பினர் உடன்பட்டால் சேர்த்துகொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டோளியுங்கள்.....அவளவே..செந்தில் வள்ளி நல்ல காமெடி பன்னுரருங்கோ....

நாளும் நலமே விளையட்டும் said...

முடிந்த வரை மொழி பிழை திருத்தப் பாருங்கள் கட்டுரையில்!

சொல்ல வந்த கருத்து--இப்படி

ஊதுற சங்கை எங்களுக்கு சக்தி இருக்கும் வரை ஊதிக் கொண்டே இருப்போம்.
கேட்பவர்கள் கேட்கட்டும்?

இது நல்லா தான் இருக்கு!

இல்லாத சாமி இருக்கு இருக்குனு சொல்லி சொல்லி மழுங்க அடித்தாங்க.
ஒரே நாளில் ஒரே முயற்சியில் அதை கூர் செய்திட முடியுமா?
முயல்வோம். அறிவோம்.

http://ungalnanbansarath.blogspot.com/

senthil valli said...

Dear Mr.Selvam,

Can you please tell me what comedy you found from my post.

Anyway we cant mistake you because we have habit of lough if anyone is telling newly which you can not accept.(This habit we learnt from our Tamil cinema only).

So, Please post which will provide anything good for our society if not atleast for u.



Yours
Chida Valli

senthil valli said...

Dear Mr.Naalum Nalam Vilaiyattum ,

I am accepting with you.

Given below all the Social activities of Periyar:

Rationalism
Anti-Hindi Movement
Education Policy
Modern Tamil Alphabet
Anti-Brahmanism
Social Reformer

I know you well know those and why I am publishing here is because of you mentioned 'இல்லாத சாமி இருக்கு இருக்குனு சொல்லி சொல்லி மழுங்க அடித்தாங்க.
ஒரே நாளில் ஒரே முயற்சியில் அதை கூர் செய்திட முடியுமா?'words.

Already, all Periyar followers seeing as against only for GOD from our society. In reality apart from that ‘NO GOD’ Periyar explained many thing those also should reach all our society through Periyar followers. So please make to reach those activities also to society instead of always mentioning NO GOD.


Regards
Chida Valli

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]