வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, April 29, 2010

அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை...நம்புவீர்களா?

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்-வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.


இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதி-களில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்-ணீரைப் பயன்படுத்தி குஜ-ராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்ட-மான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.

பரவாயில்லையே. நற்செய்தி தானே  இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;

இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பது-தானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதர-தாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்-புக்குச் சொந்தக்காரர்.

இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்ப-தோடு -_ இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!

பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்-காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.

நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்-களே _நினைவிருக்கிறதா?

மை நாதுராம் கோட்சே போல்தா _ என்பதுதான் அந்த நாட-கத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசு-கிறேன் என்பது தலைப்பு.

நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்ல-வில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது-தான் அந்த நாடகத்தின் அடிநாதம் _ உச்சகட்டம் (சிறீவீனீணீஜ்)

இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்-ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்-மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?

படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!

- விடுதலை(29-04.2010) மயிலாடன்



4 comments:

Anonymous said...

இந்திரா காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று முரண்களோடு இருப்பதில் கருணாநிதி என்ன, மோடி என்ன.

பரணீதரன் said...

வரலாறே கொஞ்சம் நல்ல படிங்க ..........திருபுவதம் வேண்டாமே ......தோழர் கருப்பு ....இந்திரா அம்மையார் மிசா வுல எல்லாரையும் உள்ள தூக்கி போட்டு ...மீண்டு அவர்களோடு கூட்டணி வைத்தாற இல்ல நீங்க சொல்லுறது உண்மையான்னு பாருங்க.

Anonymous said...

கருப்பு சொல்வதுதான் சரி

பரணீதரன் said...

உங்கள் கோயபல்ஸ் வேலை எடுபடாது சதிஸ்குமார்

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]