வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, April 25, 2010

குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்-கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா?

கேள்வி: தமிழக அரசின் கோபுரச் சின்னம் மாற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்-தைகள் கேட்க ஆரம்பித்-துள்ளனரே?


பதில்: அரசுச் சின்னம் மதச் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று கார-ணம் கூறுகிறார்கள். சின்-னத்தை உருவாக்கிய அறிஞர்களுக்கு நமது மதச் சார்பின்மை தெரி-யாததல்ல. கட்டடக் கலை ரீதியில் தமிழகக் கோயில் கோபுரங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. கோபுரம் உடனடியாகத் தமிழகத்தை உணர்த்தும். அதற்காகத்தான் கோபுரச் சின்னமே தவிர மதத்-துக்காக அல்ல. மேலும், அசோகரின் சிங்கச் சின்ன-மும், தேசியக் கொடியும் அதில் உண்டு.

இவ்வாறு பதில் சொல்-லியிருப்பது ஒரு அக்கிர-கார இதழைத் தவிர வேறு யார்தான் சொல்லி-யிருக்க முடியும்? கல்கி (25.4.2010) இதழ்தான் இவ்வாறு பதில் சொல்லு-கிறது.

கல்கி கூறுவதை விவாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், ஓர் அரசின் சின்னம் கட்டடக் கலையைத் தான் சார்ந்த-தாக இருக்க வேண்டுமா?

திருவல்லிப்புத்தூர் கோயில் கோபுரச் சின்னம் தான் அது என்பதை மறுக்க முடியுமா? அது இந்து மதக் கோயில் என்-பதைத் தான் புறந்தள்ள முடியுமா?

மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரை-யாக இருக்கலாமா என்ற வினா-வுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்ட-டக் கலை என்ற முக-மூடிப் போடுவதன் சூட்-சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?

திருவள்ளுவர் உலக மக்களுக்கே தேவையான உயர் கருத்துகளை எடுத்துக் கூறியுள்ளவர். காலங் கடந்து நிற்கும் கருத்துகளை ஒண்ணே முக்கால் அடியில் உணர்த்-துகிறார்.

மதம் சாராத _ அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் உள்ளபடி தமிழராக இருப்பவர்கள் எவரும் ஆயிரம் கைகளைக் கடன் வாங்கியல்லவா வரவேற்று வாழ்த்துப் பா படிப்பார்கள்.

குறளா? கோயில் கோபுரமா? என்று கணக்-கெடுப்பு வைத்துக் கொள்ளத் தயார்தானா என்று சவால் விட்டுக் கேட்கி-றோம்.

நாரதன் என்ற ஆணுக்-கும், கிருஷ்ணன் என்ற ஆணுக்கும் பிறந்த பிள்ளை-தான் 60 தமிழ் வரு-ஷங்கள் என்று ஆபாச-மாக எழுதி வைத்-திருந்ததை மாற்றி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை பிறப்பித்ததையே வரவேற்க மனம் இல்லாத வஞ்சகப் பார்ப்பனர்கள், கோபுரத்துக்குப் பதில் திரு-வள்-ளுவர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்-வார்கள்?

கோயில் ஒழிந்த இடம் பார்ப்பான் செத்த இடமாயிற்றே! அது சரி, கல்கி எழுதியதை ஆதார-மாகக் காட்டி மதிமுகவின் அதிகாரப் பூர்வ சங்கொலி ஏடு (30.4.2010) திருவள்ளுவர் உருவம் கூடாது, கோபுரம் தான் இருக்க வேண்டும் என்று எழுதுகிறதே, என்ன சொல்ல! ஓ, அது தெரியாதா? இதற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி என்பதோ!

- விடுதலை மயிலாடன் (25.04.2010)



4 comments:

vino said...

மதச் சார்பற்ற ஓர் அரசுக்கு மதம் சார்ந்த ஒன்று அரசு முத்திரை-யாக இருக்கலாமா என்ற வினா-வுக்குப் பதில் சொல்ல வக்கற்ற நிலையில் கட்ட-டக் கலை என்ற முக-மூடிப் போடுவதன் சூட்-சமம் தமிழர்களுக்குத் தெரியாதா?//


நம் தமிழ் நாட்டில் பலருக்கு தெரிந்துக் கொள்ள விருப்பமே இல்லை. சினிமா, தொலைக்காட்சி மயக்கத்தில் அல்லவா இருக்கின்றனர்.

பரணீதரன் said...

உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வினோ...நல்ல சொல்லுங்கள் இவர்களுக்கு

Unknown said...

நான் பின்னூட்டம் போட்டால் வரவேற்பு இருக்குமா? சின்னத்தை மாற்றத்தான் வேண்டுமெனில் மேலும் பல சின்னங்கள் ஆய்வுக்கு/தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.புத்தாண்டு,சின்னம்,இன்னபிற மாற்றங்கள் நிரந்தரமானவை அல்ல! மீண்டும் மாற்றத்திற்கு உள்ளாகும்!

பரணீதரன் said...

மாற்றத்துக்கு உட்படவேண்டும் என்று தானே இப்போ தை முதல் நாள் தமிழரின் புத்தாண்டு ........ஒருவேளை இவைகள் மீண்டும் மாறும், எப்போது என்றால் பார்பனர்களும் அவர்களின் அடிவருடிகளாக இருக்கும் நம்மவர்களும் மீண்டும் அரியணை ஏற நேர்ந்தால்.....மற்றபடி தமிழன் ஆட்சி நடந்தால் தமிழரின் பண்பாடு நிரந்தரம்....

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]