வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, April 23, 2010

தந்தை பெரியார்தான் முதல் தொண்டர், முதன்மைத் தலைவர் என்பதில்தான் அய்யமுண்டோ!

வைக்கம் போராட்டம் என்பது இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே - மாபெரும் திருப்பத்தைக் கொடுத்த சமூகப் புரட்சிப் போர்!


தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருந்த நிலை-யிலே_- இன்னொரு மாநிலத்-தின் பிரச்சினையிலே தலை-யிட்டு, களம் அமைத்து இந்-தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த ஈடு இணையில்லாப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களே!

உள்ளூர் காங்கிரஸ்காரர்-களின் விருப்பத்துக்கு மாறாக-வும், ஏன் காந்தியாரின் இடை-யூறுகளைப் பொருட்படுத்தா-மலும் வெற்றிக்கொடி நாட்டிய வரலாற்று நாயகர் வைக்கம் வீரர் நம் அய்யா.

வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய இந்தப் போராட்டம்தான் மாகத் என்னும் இடத்தில் உள்ள பொதுக்குளத்தில் தீண்டத்-தகாதவர்கள் என்று ஒதுக்கப்-பட்ட மக்களை அழைத்துக் கொண்டு நீர் அருந்தும் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

இந்நாள்_- அதாவது ஏப்ரல் 22 இல்தான் (1924) தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் முதலாவதாகக் கைது செய்யப்பட்டு அருவிக்-குத்தி சிறையில் அடைக்கப்-பட்டார். திருவிதாங்கூர் அரசர் தந்தை பெரியார் அவர்களின் நட்புக்கு உரிய-வர் என்பதால் தண்டனை இலேசாகவே இருந்தது. சில நாள்களிலேயே விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியார் மீண்டும் படுவேகமாகக் களத்தில் குதித்தார். மீண்டும் கைது செய்யப்பட்டு திரு-விதாங்கூர் மத்திய சிறைச்-சாலை-யில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார்.

திருவிதாங்கூர் சிறைச்-சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட்டார்? தந்தை பெரியார் எப்படி நடந்து கொண்டார்? என்பதை பாரிஸ்டர் கே.பி.கேசவமேனன் தமது சுயசரிதையில் பின்-வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்-கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்-கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது-போல் இரு மடங்கு வேலை செய்கிறார்.

ஒரு சாதி இந்து என்று சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்தி-லுள்ள தீண்டத்தகாத மக்-களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்-தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்-கின்ற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்-களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே_- அதைப் பார்த்து இந்த மாநில மக்-களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனு-பவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்-போதாவது வரவேண்டாமா?

-கே.பி.கேசவமேனன், மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108

எதிலும் தந்தை பெரியார்தான் முதல் தொண்டர், முதன்மைத் தலைவர் என்பதில்தான் அய்யமுண்டோ!

- விடுதலை மயிலாடன் (22.04.2010)

2 comments:

அமைதி அப்பா said...

//வைக்கம் போராட்டம் என்பது இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே - மாபெரும் திருப்பத்தைக் கொடுத்த சமூகப் புரட்சிப் போர்!//

உண்மைதான் அய்யா.

பரணீதரன் said...

தோழர் அமைதி அப்பா: உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]