Thursday, April 22, 2010
பெரியாரிடம் ஒருவர் கேட்ட கேள்வி.....பொதுவுடைமை என்று சொல்லுகிறீர்களே, உன் மனைவியைப் பொதுவுடைமை ஆக்குவாயா?
சென்னையில் நடைபெற்ற மாணவர் கழக மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் ஒரு புதுமை இணைப்பு!
இதுவரை எந்தக் கட்சி மாநாடும் கண்டிராத புதிய சேர்க்கை இது.
பார்வையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் விடை அளிக்கும் நிகழ்ச்சி இது.
விவாதப் போர்! என்ற தலைப்பில் இது நடை-பெற்றது. இப்படி ஒரு நிகழ்ச்சி என்றவுடனேயே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எப்படிப்பட்ட வினாக்கள் எழுப்பப்படும்? எப்படி பதில் சொல்லப் போகி-றார்கள்? என்ற எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
சிலர் மேடைக்கே வந்து வினாக்களை எழுப்-பினார்கள்.
இன்னும் சிலர் கேள்விகளை துண்டுச் சீட்டில் எழுதி அனுப்பினார்கள்.
பொதுக்கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது என்பது திராவிடர் கழகத்தில் சாதாரண-மானது.
அதுவும் தந்தை பெரியார் கூட்டத்தில் கேள்வி-களைக் கேட்பதற்கென்றே பலர் வருவார்கள். கூட்டத்தின் முடிவில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும்.
அந்தக் கேள்வி _ பதில் பகுதி உற்சாகத்துடன் நடைபெறும். விஷயத்தைத் தெரிந்துகொள்ள-வேண்டும் என்ற நோக்கில் சிலர் கேள்விகளைக் கேட்கக்கூடும்; விஷமத்தனமாகக் கேட்பதற்கென்றே சிலர் வருவார்கள். அத்தனைக் கேள்விகளுக்கும் தந்தை பெரியார் அவர்கள் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே பதில் சொல்லுவார்கள்.
தந்தை பெரியார் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்-பயணம் செய்து தாயகம் திரும்பிய நிலையில், பொதுவுடைமைப் பிரச்சாரம் தூக்கலாக இருந்தது.
அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களிடம் மன்னார்குடியில் எழுப்பிய வினா_ எல்லாம் பொதுவு-டைமை என்று சொல்லுகிறீர்களே, உன் மனை-வியைப் பொதுவுடைமை ஆக்குவாயா? என்ற வினா-வுக்குக்கூட தந்தை பெரியார் பொறுமையாகத்தான் பதில் அளித்தார்.
இதில் என்னைக் கேட்பதற்கு என்ன இருக்கிறது? என் மனைவியைக் கேளுங்கள் என்றாரே பார்க்கலாம்!
சிதம்பரத்தில் கூட்டத்தில் எதிரே உட்கார்ந்து கேள்வி எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனரின் பேனாவின் மை தீர்ந்துவிட்ட நிலையில், தன்னிடம் இருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து கேள்விகளை எழுதச் சொன்ன ஏந்தலாயிற்றே!
கோவையில் பொதுக்கூட்டம் _ சரமாரியாகக் கேள்விகள் _ அத்தனைக்கும் பதில் சொல்லி முடித்தார் அய்யா.
நான் செல்லும் ரயிலுக்கு இன்னும் நேரம் இருக்-கிறது. மேலும் கேள்விகளைக் கேளுங்கள் என்று பொது-மக்களைப் பார்த்து கேள்விகளைக் கேட்கச் சொன்ன அந்தத் துணிவு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானது.
அண்மைக்காலமாக கூட்டங்களில் கேள்வி கேட்கும் பழக்கம் ஓய்ந்துவிட்டதாகவே தெரிகிறது.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் கலி. பூங்-குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகப் பிரச்சார செய-லாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் வினாக்களுக்கு விடையளிக்கத் தயாராகவே இருந்தனர்.
கழகச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஒருங்கிணைப்பாளராக இருந்து விவாதப் போரைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
1. நாட்டில் எங்கு பார்த்தாலும் கோயில் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. குட முழுக்குகள் நடந்து-கொண்டுள்ளன. கோயில் திருவிழாக்களுக்கு மக்கள் ஏராளம் கூடுகின்றனர்.
திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் தோல்வி அடைந்து-விட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்பது முதல் கேள்வி.
துணைப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திர-சேகரன் அவ்வினாவுக்கு நல்ல வகையில் பதில் சொன்னார்.
இன்றைய தினம் பக்தி என்பது ஒரு ஃபேஷன்; பிசினஸ் என்று சங்கராச்சாரியாரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று புராணப் பிரசங்கி கிருபானந்தவாரியாரே பேட்டி அளித்தார்.
கோயில் திருவிழாக்களில் ரெக்கார்டு டான்ஸ் அரை நிர்வாண ஆட்டங்கள் நடத்தி பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றனர்.
கடவுள் மீது பக்தியுடனோ, கடவுள் சக்தி வாய்ந்தவர், பக்தி செலுத்தாவிட்டால் கண்ணைக் குத்தி விடுவார் என்று அஞ்சியோ யாரும் கோயிலுக்குப் போவதில்லை.
கோயில் சிலைகள் திருட்டும் சர்வ சாதாரணமாக நடந்துவருகின்றன. சாமியார்களின் காலித்தனமும், ஆபாச நடவடிக்கைகளும் சந்தி சிரிக்க ஆரம்-பித்து-விட்டன. கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள்ளேயே பெண்-களைக் கர்ப்பம் உண்டாக்கும் வேலையை அர்ச்சகப் பார்ப்பான் செய்கிறான்.
சங்கராச்சாரியாரே கொலை குற்றவாளியாக அலைந்துகொண்டுள்ளார்.
பக்தியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.
சங்கராச்சாரியார்களும், சாமியார்களும் தமிழ்நாட்டில் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், அது திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றிதானே என்று விலாவை முறிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார்.
2. ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்-பட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அதற்குத் துணை போனது. அத்தகைய காங்கிரசைத் தேர்தலில் ஆதரித்தது சரியா என்ற வினாவை ஒரு தோழர் எழுப்பினார்.
கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருமை-யான வகையிலே பதில் அளித்தார்.
ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலை-யில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் கொதித்-தெழுந்-தனர். ஒவ்வொரு அமைப்பும் அவர்களுக்கு உகந்த வகையில் போராட்ட நடவடிக்கைகளை மேற்-கொண்டன. 1983 இல் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமை _ ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த நிலை _ அந்தக் காலம் தொட்டு திராவிடர் கழகம் தன் கடமையைச் சரியாகவே செய்துவந்துள்ளது.
மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியின்மீது தமிழ்-நாட்டுக்கு மக்கள் கடும் அதிருப்தி இருந்தது உண்மை-தான்.
அதேநேரத்தில், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்ட அகில இந்திய கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக்கூடாது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது. காங்-கிரசைத் தோல்வி அடையச் செய்வதன்மூலம் ஒரு மதவாத பார்ப்பனீய இந்துத்துவா ஆட்சியைக் கொண்டுவரும் தவறினைச் செய்துவிடக்கூடாது என்பது தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருந்தது என்று விளக்கிக் கூறினார் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி.
3. சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவிகித ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்பதால்தான் அந்தச் சட்டம் நிறை-வேற்றப்படாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறதே என்று மாணவி ஒருவர் வினா தொடுத்தார்.
கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு அதற்கு ஆணித்தரமாகத் தக்க புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுத்தார்.
பெண்களுக்கு 33 சதவிகிதம் கூடப் போது-மான-தல்ல _ நியாயப்படி 50 விழுக்காடு கொடுக்கப்பட-வேண்டும். அதேநேரத்தில், உள் ஒதுக்கீடு கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால், பெரும்பாலும் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிப் பெண்கள்தான் சட்டமன்றங்களையும், நாடாளுமன்றத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.
இன்றைக்கேகூட இந்திய அளவில் வெளி உலகுக்-குத் தெரியக்கூடிய பெண் அரசியல்வாதிகள் யார்?
சுஷ்மா சுவராஜும், மம்தா பானர்ஜியும், பிருந்தா காரத்தும், ஜெயலலிதாவும்தானே!
அத்திபூத்ததுபோல ஒரு மாயாவதியும், உமா-பாரதியும் இருக்கிறார்கள். உமாபாரதி பிற்படுத்தப்-பட்டவர் என்பதால், பாரதீய ஜனதா அவரை ஓரங்-கட்டிவிட்டது.
மாநிலங்களவையில் உள் ஒதுக்கீடு இல்லாம-லேயே மசோதா நிறைவேற்றப்பட்டது என்றவுடன், அரசியலில் எதிரும் _ புதிருமாக இருக்கக்கூடிய பிருந்தா காரத்தும், சுஷ்மா சுவராஜும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்களே, இதன் பொருள் என்ன?
இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டை நினைத்துக்-கொண்டு மற்ற மற்ற மாநிலங்களைப் பார்க்கக்கூடாது.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், தன்மான இயக்கம் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சமூகப் புரட்சிப் பாதையில் மக்களை அழைத்துச் சென்றுள்-ளனர். பெரும் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.
இதன் காரணமாக எந்தக் கட்சியும் பார்ப்பனர்-களை வேட்பாளர்களாக நிறுத்த முன்வருவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு சட்டப்-பேரவையில் மொத்தம் உள்ள உறுப்பினர்களுள் இருவர் மட்டுமே பார்ப்பனர்.
ஒன்று ஜெயலலிதா; இன்னொருவர் எஸ்.வி. சேகர்.
விகிதாசாரப்படி அவர்கள் ஏழு பேர் வரை இருக்கலாம். அந்த அளவுகூட கொடுக்கத் தமிழர்கள் இங்கு தயாராக இல்லை. மற்ற மாநிலங்களில் அந்த நிலை இல்லையே! அதைத்தானே லாலுபிரசாத்தும், முலாயம்சிங்கும் சுட்டிக் காட்டுகிறார்கள்?
சட்டம் நிறைவேறாததற்குக் காரணம் உள் ஒதுக்கீடு கேட்பதல்ல; உள் ஒதுக்கீட்டை ஏற்காததுதான்.
முதலில் சட்டம் வரட்டும்; பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது போலியான _ ஆபத்தான சமாதானமாகும். சட்டம் செய்யும்போதே, சரியாகச் செய்துவிடவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலை என்பதை பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு விளக்கிக் கூறினார்.
4. திராவிடத்தால் வீழ்ந்தோம்; தமிழர்களை திராவிடத்திலிருந்து மீட்போம் என்று கூறி சிலர் புறப்பட்டுள்ளார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்பது ஒரு வினாவாகும்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அந்த வினாவுக்கான விடையை அளித்தார்.
திராவிடர் என்பது திராவிட இயக்கத்தவர் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட கற்பனைப் பெயரல்ல. அது வரலாற்று ரீதியான உண்மையாகும்.
சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சொல்லப்படுகிறதே அதனை மறுக்கிறார்களே! இந்தியா முழுமையும் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்பதும், ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர் என்பது வரலாற்றில் பாலபாடமாகும்.
பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் ஒரு இயக்கத்துக்கு என்ன பெயர் சூட்டுவது என்பதில் தந்தை பெரியார் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறார்.
நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது; அயலார் புகுந்துகொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்கவேண்டும். திராவிடர் என்று கூறினால், திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்துகொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை (நூல்: மொழி ஆராய்ச்சி) என்று திட்டவட்டமாக காரணா காரியத்தோடு வரையறுத்துக் கூறியுள்ளாரே தந்தை பெரியார்.
இந்தப் பார்ப்பன எதிர்ப்பு திராவிடர் இயக்கம்தானே தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டியது. தமிழன் என்ற இன உணர்வை ஊட்டியது. கல்வி வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. தமிழர்கள் உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்தது.
தமிழ்மொழியை வளர்த்தது; எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஒரு புரட்சிக்கவிஞரையளித்தது. ஒரு புலவர் குழந்தையை கொடுத்தது. நமஸ்காரம் _ வணக்கமானதும், உபந்நியாசம் _ சொற்பொழிவானதும், அக்ராசனர் _ தலைவர் ஆனதும், வந்தனோபசாரம் _ நன்றியாக மலர்ந்ததும் திராவிடர் இயக்கத்தின் கொடையல்லவா?
இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ஆக்கியது எந்த இயக்கம்?
திராவிடர் இயக்கம் என்ற பெயர் இருக்கிற காரணத்தால், சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமா?
திராவிட நாடு என்று சொல்லப்பட்ட நான்கு மாநிலங்களையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோது, அதனை எதிர்த்து தந்தி அனுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் தானே!
திராவிடர் என்பதால் எதை விட்டுக் கொடுத்தோம்? விரலை மடக்கிக் கூற முடியுமா? என்று எதிர் வினாவைத் தொடுத்தார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன். தமிழன் என்றால், சோகூட தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்காக நான்தான் தலைவன் என்பானே! என்றும் குறிப்பிட்டார் பொதுச்செயலாளர்.
5. இன்னொரு கேள்வியும் எழுத்துப் பூர்வமாக மேடைக்கு வந்தது. அது இடதுசாரி நண்பர்கள் சில நேரங்களில் வைத்த குற்றச்சாற்றாகும். (இது அடியேன் கேட்ட கேள்வி)
கீழவெண்மணியில் விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது, பெரியார் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாற்று கேள்வியாக வந்தது.
உடனே அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆதாரக் குறிப்பை எடுத்து வந்து மக்கள் மத்தியில் படித்துக் காட்டினார்.
கடைசி நடவடிக்கையாக நேற்றுமுன்தினம் தற்காப்புக்காக ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண் குழந்தைகள் உள்பட 42 பேர்கள் பதுங்கிக்கொண்ட வீட்டை பூட்டிக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும், சட்ட விரோதங்களையும் அடக்-கிட ஆட்சிகளால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியர்களுக்குத் தகுதியில்லை. இதற்காக நம் நாட்டை நாம்தான் ஆளவேண்டும் என்று கருதத் தேவையில்லை. அதற்காக அந்நியர் ஆண்டாலும் பரவாயில்லை (விடுதலை, 28.12.1968) என்று தந்தை பெரியார் அவர்கள் விடுதலையில் வெளியிட்ட அறிக்கையைப் படித்துக் காட்டியபோது, இடதுசாரிகளின் பொய்ப் பிரச்சாரம் மண்ணுக்குள் புதைந்துபோனது.
கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன. இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்கே! ஆனாலும், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் ஓட்டம் கருதி, முக்கிய வினாக்களுக்கான பதில்களுடன் விவாதப்போர் நிறைவடைந்தது.
எஞ்சிய வினாக்களுக்கு விடுதலை ஞாயிறுமலரில் கேள்வி _ பதில் பகுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் புதிய நிகழ்ச்சி இளைஞர்களையும், மாணவர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
- தொகுப்பு மின்சாரம், விடுதலை (21.04.2010

Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
பெரியாரைபற்றின தகவல்கள் அருமை...
பெரியார் என்றும் பெரியார்தான்
ஒரிறு சம்பவங்களை வைத்து நாட்டை ஆள இந்தியருக்கு தகுதி இல்லை; அன்னியரே ஆளட்டும் என்று பெரியார் சொல்லியது, நீதிக் கட்சி, ஆங்கிலேய அரசு மேல் கொண்டிருந்த பாசம். சுதந்திர நாளை கறுப்பு கொடி ஏற்றி கொண்டாடியவர் தானே! திருப்பூரில் இந்திப் போராட்டத்தில் போலீஸை எரித்தது பெரியாரின் சீடர்கள் தானே!
அறிய கண்டுபிடிப்பு ரம்மி .....ஆங்கிலேயன் ஆண்டலவது இந்த அடிமைத்தனம் ஓரளவு குறையும் என்ற நோக்கத்தில் தான்....அதே போல சீனா உடன் போர் நடந்த நேரத்தில் கூட சீன வை ஆதரித்தும் இதே நோக்கத்தில் தான்.......மற்றபடி உங்களை போன்ற சிந்தனை இல்லை தோழரே....ஏன் இந்த திரிபு வாதம்...இதில் நீங்கள் பெரியாரின் நூல்களை வேறு நாட்டுடமை ஆக்க சொல்லி பின்னோட்டம் போடுகிறீர்கள்.....என்னே உங்கள் ஒற்றுமை....கேட்டல் இந்த மாறி திரிபு வாதம் பண்ணினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லி ஒரு சாமதானம் ...இப்போ நீங்க போடுற இந்த மாறி விசயமெல்லாம் அரச பாத்துகிட்டு இருக்கும்......ஏராளம் ஏராளம் ....பெரியாரின் புரிதல் நிறைய வேண்டும்.
திரிபு வதத்தின் மொத்த உருவமே பெரியாரும் அவரின் சீடர்கள் தான். இயல்பான ஒரு விசயத்தை எதிர்மறையாக பேசுவதும், செயல்படுவதும் பெரியாருக்கும், உங்களை போன்றோர்க்கும் கை வந்த கலை. வன்முறை என்பதே அறியாத ஒரு தலைமுறையை ஏமாற்றி பிழைத்தது யார்?
பக்தி என்ற போதையில் சிக்கி மதி இழந்து மானம் கேட்டு சிந்திக்கவே நிலைமை அற்று கிடக்கும் கூட்டத்தில் என்ன சொன்னாலும் புரியாது தோழரே. நாங்க கேட்ட பேரு வாங்கத்தான் ஆசைபடுகிறோம். வன்முறை ன்ன முதல்ல என்னனே தெரியாத? போய் ஆர்.ஸ்.ஸ் கரனுகளுகிட்டே கேளுங்க தோழரே.......அவங்கதான் இந்த மக்கள் மாக ஆத்மா என்பவரின் உயிரை பறித்து அந்தகலதிலையே தடை செய்யப்பட்ட இயக்கம். பெரியாரும் அவர்களின் தொண்டர்களும் இருந்து செயல் படும் திராவிடர் கழகம் அப்படி அல்லவே தோழரே. எதனையும் கருத்தால் எதிர்கொள்பவர்கள். குடியரசு,விடுதலை,உண்மை,தி மாடேர்ன் ரச்னளிஸ்ட் தான் எங்களின் ஆயுதங்கள்.
அருமை நண்பரே வாழ்த்துகள் ..
பின்னூட்டம் இடுவது ஒரு தவறா? குருவாயூர் கோவில் தடை நீக்கம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமானால், பெரியார் எழுத்து நாட்டுடமை தடை நீக்கம்,மக்களும் முதல்வர் அவர்களும் எதிர் நோக்கும் மகிழ்ச்சி.முரண்பாடுகளின் மொத்த உருவம் பெரியார். அதற்கு சீன ஆக்கிரமப்பை பெரியார் ஆதரித்தார் என்ற தங்களின் உண்மை விளம்பளே சாட்சி.நன்றிகள். பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.பெண் விடுதலை,மூடத்தனம் விலக்கல் ஆகியவற்றில் பெரியாரின் செயல் பாடுகளை யாரும் பாராட்டுவர். ஆனால் மற்ற விஷயங்களில் அவர் நீங்கள் கொண்டாடுவதை போல் ஒரு உதாரண புருஷர் அல்ல. ராமர் படத்தை செருப்பால் அடித்தது, பூனூல் அறுத்தது இதெல்லாம் வன்முறை இல்லையா?கடவுள் இல்லை என்றவர் ஏன் ராமர் படத்தை அடித்தார்? ஆரியக் கடவுள் என்பதாலா? திராவிடக் கடவுள்கள் அவருக்கு பயமா?
இல்லை திராவிடக் கடவுள்களை துதிப்பவர் மேல் கொண்ட பயமா?வித்தியாசமாக எதிர்கிறேன் என்று அவர் பிற்காலங்களில் செய்த செயல்கள் கண்டனத்திற்கு உரியவை.(சீன ஆதரவு நிலைப்பாடு). அந்நிய ஆட்சி, அந்நிய நாட்டு மதம், ஆகியவைகளில் அவர் மிகுந்த காதல் கொண்டிருந்தார் என்பதை தாங்கள் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
ஆட்சி புரிய இந்தியருக்கு அருகதை இல்லை என்ற பெரியார் பார்பனனையும், சூத்திரனையும் சேர்த்தே தானே சொல்லியுள்ளார்?
தோழர் ரம்மி உங்களுக்கு வன்முறை ன்ன என்னனு ஒரு பெரிய விளக்கம் கொடுக்கவேண்டும் போலிருக்கே.......வேண்டாம் விடுங்கள். என் வீட்டில் நன் பிள்ளையார் செய்து உடைத்தல் உங்களுக்கு என்ன வன்முறை....நான் காசு கொடுத்து வாங்கி ராமன் படத்தை செருப்பால் அடித்தல் உங்களுக்கு என்ன வன்முறை...புரியவே இல்லை ......ஒருவரை மாக ஆத்மாவை கொலை செய்வது வன்முறைய ......இல்ல இந்தமாரி செயுறது வன்முறைன்னு நீங்களே யோசிசுகொங்கோ.......
/*ஆட்சி புரிய இந்தியருக்கு அருகதை இல்லை என்ற பெரியார் பார்பனனையும், சூத்திரனையும் சேர்த்தே தானே சொல்லியுள்ளார்? */
அப்புறம் எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்லிருக்கிறார் .....யாரா இருந்தால் என்ன அடிமைபடுத்த முயற்சிப்பவன் யாரும் கண்டிக்க தக்கவனே..தலித்துகளை கீழ்வென்மணியில் கொலை செய்தவர் ஒன்றும் பார்பனர்கள் அல்லவே........அதனால் கண்டிப்பு அப்பொழுது ஆட்சி செய்தவர்களை நோக்கிதான் .......அதுதான் பெரியார்....
Post a Comment