வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, April 14, 2010

விக்ருதியாம்! பார்ப்பனீய ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துக் கூறுவதா?

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாம் -_ தெரிவித்-துள்ளார் அண்ணா திமுக பொதுச் செயலா-ளர் செல்வி ஜெயலலிதா.


உண்மையிலே அண்-ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனை-கள்-பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்தி-ரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்-தாம் பசலித்தனமான பார்ப்-பனீய ஆண்டுப் பிறப்-புக்கு வாழ்த்துக் கூறு-வாரா?

விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்-டுள்ளதே -_ இந்த சொல் தமிழ்தானா?

இந்த ஒரு சொல் இருக்கட்டும்; - 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று _ கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?

இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணி-யாவது உண்டா? துரு-நாற்றம் பிடித்த _ கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்-தான ஆபாசக் கற்-பனையில் உருவகப்-படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்பட-லாமா?

இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அள-வுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?

இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்-துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்-கத்-தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?

சரியான சந்தர்ப்பத்-தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!

அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்-கையுள்ள ஒரே ஒருவ-ராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்-கொண்டே அந்தத் தலை-மையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

அது சரி, மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மை-யாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே _ எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்-கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?

- விடுதலை மயிலாடன் (14.04.2010)





4 comments:

ராஜேஷ் said...

சங்கமித்ரன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் பகுத்தரிவு
மதங்களுக்கு அப்பாற்பட்டது என்றால் அனைத்து மதங்களையும் தாக்கவேண்டும் இந்துக்கள் எவ்வளவு அடித்தலும் தாங்குவான் என்று தாக்குவது மிகவும் கேவலமான செயல் உடனே எனக்கும் பார்பனிய முத்திரை குத்தவேண்டாம்

krishnakumar said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து மயிலாடன்.

bandhu said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரவி

நம்பி said...

//இந்துக்கள் எவ்வளவு அடித்தலும் தாங்குவான் என்று தாக்குவது மிகவும் கேவலமான செயல்//

இது தான் பிரச்சினையே....எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்...இதுதான் இழிவான செயல்...இதை வைத்து தான் திராவிடர்கள் மேல் அடித்துக்கொண்டே வருவது. யார் அடிப்பது...ஆரியப் பார்ப்பனன்...ஏனென்றால் பார்ப்பனன் அதற்காகத்தான் இந்து மதத்தை அவன் சுயநலத்திற்காக கண்டுபிடித்தான்..பிறரை அடிமைப்படுத்துவதற்காக கண்டுபிடித்தான்....அடிப்பதும் அவனே...தடுப்பது நாங்கள்...

அப்படி அடி தாங்காதவன், ஒன்று இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு ஓடிவிடுவான். அது சொற்ப எண்ணிக்கை...இது தான் பெரும்பான்மை சதவீதம்..இங்கு தான் கொடுமைகள் அதிகம்.

இப்போது தாக்குவது யார் இந்து மதமா இல்லை நாங்களா? இழிவுகளை சும்த்துவது யார்? இந்து மதமா இல்லையா? நாங்கள் தடுக்கும் கூட்டம். எதிர்க்கும் கூட்டம். எல்லாவற்றையும்...இதில் தான் அதிக இழிவுகள்...மற்றவைகளில் சில குறைபாடுகள்...மூடநம்பிக்கைகள்..

அந்த மதங்கள் இங்கிருந்து ஒடி தஞ்சமடைந்தவர்கள் மதம். அதுல இழிவுகள் அதிகமிருந்தால் அதில ஏன் போய் தஞ்சமடையப்போகிறார்கள்.

இது மோசமான மதம் என்று ஒரு இடத்திலும் குறைந்தபட்சமாக கூட கூறவில்லையே...அந்த குறைகளை களையவேண்டும் என்று நம்பிக்கையுடையோர் என்று கூறிக்கொள்வோர்கள் கூட கருத்து வைக்கவில்லையே...மாறாக அதை அப்படியே பூசி மொழுகத்தானே பார்க்கின்றனர்.

அடி கொடுத்தாலும் தாங்குவார்கள் என்றுதானே தாழ்வு மனப்பான்மையுடன் கருத்து வைக்கப்படுகிறது. (குறைகள் அதிகமிருப்பது எல்லோருக்குமே தெரிகிறது). விவேகானந்தர் சொல்லியது போல் இப்படிப்பட்ட "மதம் ஒரு தேவையா?"

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]