அமெரிக்கா போன்ற பல வெளி-நாடுகளில் வாழும் நம் திராவிட _ தமிழ்க் குடும்பங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட _ பலரது குழந்தைகள் தமிழ் மொழியை _ தமிழ் இலக்கியச் செல்வங்களை _ தமிழ் ஏடு-களைப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்-களாக இருந்தால்தான் தாய்மொழித் தமிழை, செம்மொழியான நம் மொழியைக் கற்றுக் கொள்ள வாய்ப்-பினை ஏற்படுத்திட முடியும்.
இதை அருமையாக உணர்ந்து தங்களது அரிய உழைப்பையும், தொண்டையும் சிகாகோ போன்ற பல பெருநகரங்களில் _ அமெரிக்காவில் _ டாக்டர் சரோஜா இளங்கோவன், திருமதி கண்ணகி விசுவநாதன், திருமதி பாபு, திரு. அருள்_பாலு போன்ற பலரும் (இப்படிப் பலர் பல ஊர்களில் உண்டு.) சனிக்கிழமைகளில் அந்த பிள்-ளைகளை ஒரு பொது அரங்கத்திற்கு அழைத்துச் சென்று தமிழ் மொழி கற்றுக் கொடுப்பார்கள்.
சிற்றுண்டிகளையும் அக்குழந்தைகளுக்குத் தருவார்கள்.
அங்கு படிக்கும் தமிழ்க் குழந்தை-கள் தமிழில் பேச முதலில் கற்றுக்-கொள்வதோடு, நமது திருக்குறள் போன்ற நல்ல இலக்கியங்களையும் கூட படிப்படியாகக் கற்கிறார்கள். இது ஒரு நல்ல தொண்டறமாகும்.
இவர்களுக்கு குறுந்தகடுகளும் மற்றும் பல கணினியுதவிகளும்கூட மிகவும் எளிதில் கற்றுக் கொள்ள வசதியாக _ பயன்படுத்துகின்றனர்!
நமது டாக்டா சரோஜா இளங்-கோவன் அவர்கள் குழந்தைகளுக்கு திருக்குறள் கதைகள் (ஜிலீவீக்ஷீளீக்ஷீணீறீ ஷீக்ஷீவீமீ யீஷீக்ஷீ நீலீவீறீபீக்ஷீமீஸீ) என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூல், ஒரு குறள் -_ அதன் ஆங்கில மொழியாக்கம் போட்டு, அதற்கேற்ப ஒரு நிகழ்வு _ அல்லது கற்பனைக் கதை _ குழந்தைகள் _ சிறுவர்-களை நன்கு ஈர்க்கும் வண்ணம் ஓரிரு பக்கங்களில் எளிய ஆங்கி-லத்தில் எழுதியுள்ளார்கள்.
அதை சென்னையில் உள்ள சாரதா பதிப்பகத்தார் (சென்னை 600 014 என்ற முகவரி) வெளியிட்டுள்ளனர்.
இந்த நூலை நமது ஆங்கில வழி பயிலும் பள்ளிகளில்கூட மாணவ_ மாணவிகள் ஒழுக்க பாட போதனை (Moral Instruction Class) என்ற வகுப்பில் பாடமாக படிக்கச் சொல்லி அறிவு கொளுத்தினால் நல்லது! எடுத்துக்காட்டாக,
பக்கம் 17 இல்
அறத்துப்பால்_ பகுதி என்று தமிழில் பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது (குறள் 103)
தரப்பட்டு _ அதற்கு ஆங்கிலத்தில்
“If anyone does a good deed without expecting anything back, the value of such deed is greater than the ocean’’ என்று போடப்பட்டுள்ளது!
இதை ஒரு பொருத்தமான நிகழ்வு ஒன்றின் மூலமாக புத்தக ஆசிரியர் டாக்டர் சரோஜா இளங்கோவன் விளக்குகிறார். உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஆர்பர்ட் ஷூவைட்சர் தலை சிறந்த மனிதாபிமானி.
அவர் 1875 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி கேயார்ஸ் பெர்க் என்ற பகுதியில் பிறந்தவர். அவர் குடும்பம் ஜெர்மனியில் வாழ்ந்தது.
அவர் ஆப்ரிக்கா சென்று, அங்-குள்ள கறுப்பினத்தவரில் அதிகமாக
தொழுநோயாளிகளானவர்களுக்கு தனது பணத்தில் மருத்துவமனை கட்டி தொண்டறம் புரிந்த கதையைக் கூறியுள்ளார்.
(திருக்குறள் மீது இந்த டாக்டர் ஆல்பர்ட் ஷூவைட்சர் மிகுந்த காதல் கொண்டவர். The Second Book of Kural’ என்ற ஒரு நூலை அவர் எழுதி-யுள்ளார்).
அவரது தொண்டறத்தினையே உதாரணம் காட்டி குறள்நெறி விளக்கம் 2 பக்கங்களில் தந்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
இது போன்று நம் நாட்டு தொண்-டறத் தலைவர்களையும் பற்றி இப்படி பல நூல்கள் வெளிவரவேண்டும்.
குழந்தைகளுக்கு இப்படி அறிவுப் பாலை ஊட்டவேண்டும்.
நல்ல தொண்டறம் செய்யும் அவர்-களது பணி தொடரட்டும்_ மற்றவர்-களும் இதை எங்கும் பின்பற்றலாமே!
4 comments:
நல்ல பதிவு!
நீதி மன்ற செய்தி ஏதேனும் உண்டா?
கூத்தாடிகள் இரண்டு பட்டதால் ஊருக்கு கொண்டாட்டமாமே!
இதிலே ஈழத்தமிழர் எங்கேய்யா வருது?
ஹ்ம்ம் நிறைய உண்டுன்களே ரம்மி அய்யா
.....உயர்நீதிமன்ற புதிய நீதிபதிய இக்பால் பதவி ஏற்று இருக்கிறார்.....நித்தியானந்தா ஜாமீன் வாங்கிட்டார்.....முக்கியமான் போபால் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் குழிதோண்டி புதைக்கபட்டு இருக்கு....இதுல நீதிமன்றமே அநீதி மன்றமா ஆயிகிட்டு வருது...இந்த மாதம் தானே விடுமுறை முடிந்து நீதிமன்றம் திறந்தது.
/*நம் திராவிட _ தமிழ்க் குடும்பங்கள் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உள்பட _ பலரது குழந்தைகள் தமிழ் மொழியை _ தமிழ் இலக்கியச் செல்வங்களை _ தமிழ் ஏடு-களைப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்-களாக இருந்தால்தான்*/
மேலே நான் குறிபிட்டதில் ஈழம் வரவில்லையா? நீங்க ரொம்ப வில்லங்கமான ஆளுதான் போலிருக்கு....
Post a Comment