வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 06, 2010

கடவுளுக்கு பெண் தீட்டா?

புரட்சிப்பூக்களின் தொடர்சிக் கவிதை - பகுதி - II

கடவுளுக்கு பெண் தீட்டா?


பெண்களால் கடவுளுக்கு தீட்டா?
கடவுளால் பெண்களுக்கு தீட்டா?
மனிதனை படைத்தது
கடவுள் என்றால்
கடவுளும் தீட்டு தானே?
மனிதன் கடவுளை
படைத்தான் என்றால்
மனிதன் தீட்டுதானே?

படைப்பு கடவுள் பிரம்மன் என்றால்
அவர் பக்கத்தில் இருக்கும்
சரஸ்வதி தீட்டு தானே?
காக்கும் கடவுள்
திருமால் என்றால்
அவர் பக்கத்தில் இருக்கும்
இலட்சுமி தீட்டுதானே?
அழிக்கும் கடவுள்
சிவன் என்றால்
அவர் பக்கத்தில் இருக்கும்
பார்வதி தீட்டுதானே?
இப்படி பெண்களே
தீட்டு என்றால்
தன் மனைவிக்கு
தன் உடம்பில்
சரிபாதி கொடுத்த
சிவன் தீட்டானவனா?
அல்லது தீண்டதகாதவனா?
பெண் தீட்டு என்றால்
இந்த உலக மக்களே தீட்டுதானே?

பார்ப்பான் தீட்டு இல்லை என்றால்
இரவில் அவரின் மனைவியை
தீண்டிவிட்டு
பகலில் கடவுளுக்கு
அர்ச்சனை செய்தால்
தீட்டு இல்லையா?
அப்புறம் எதுதான் தீட்டு?

சமுதாயத்தை சீர் குலைக்கும் மூடநம்பிக்கை !
சமுதாயத்தில் சரி பாதி பெண்ணை
அடிமையாய் வைத்திருக்கும் ஆணாதிக்கம் !
கள்ள பணத்தை வைத்திருக்கும்
சினிமா நடிகன் நடிகை!
மக்கள் சொத்தை கொள்ளை
அடிக்கும் அரசியல் வாதி !
லஞ்சம் கேட்கும் அதிகாரி!
சமுதாயத்தை சீர்குலைக்கும் போதை வஸ்து!
இந்த திட்டுகளை
தீயிட்டு கொளுத்த வேண்டும்
கடவுளை மற!
மனிதனை நினை!!

------------ புரட்சிப்பூக்கள் தொடரும்

2 comments:

மதுரை சரவணன் said...

//சமுதாயத்தை சீர் குலைக்கும் மூடநம்பிக்கை !
சமுதாயத்தில் சரி பாதி பெண்ணை
அடிமையாய் வைத்திருக்கும் ஆணாதிக்கம் !
கள்ள பணத்தை வைத்திருக்கும்
சினிமா நடிகன் நடிகை!
மக்கள் சொத்தை கொள்ளை
அடிக்கும் அரசியல் வாதி !
லஞ்சம் கேட்கும் அதிகாரி!
சமுதாயத்தை சீர்குலைக்கும் போதை வஸ்து!
இந்த திட்டுகளை
தீயிட்டு கொளுத்த வேண்டும்//


அருமை. வாழ்த்துக்கள்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

Super.....!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]