வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, June 16, 2010

இந்து முன்னணி...நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா?

கரூரில் இந்து முன்னணி மாநாடு நடக்க இருக்கிறதாம். எதற்காக இந்த மாநாடு? அதன் மாநில அமைப்பாளர் திருவாளர் இராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இந்துக்கள் தொடர்ந்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்களாம். கோவில் நிருவாகம், கல்வி, அரசின் சட்டங்கள் மற்ற மதத்தினருக்கு உள்ளது போல இந்துக்களுக்கும் சம உரிமை கேட்க இம்மாநாடு என்று கூறியிருக்கிறார்.

இந்துக்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படு-கிறார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களுக்குள்ளேயே இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்கள் நான்காம் தர மக்களாக, அய்ந்-தாம் தர மக்களாக ஆக்கப் பட்டுள்ளார்களே, நடத்தப்படுகிறார்களே. இதற்கு என்ன பதிலாம்? அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து இந்து மதத்தில் _ உயர்ஜாதி மக்கள் உச்சநீதிமன்றம் செல்லு-கிறார்களே. அதனை எதிர்த்து இந்து முன்னணி மாநாடு கூடப் போடவேண்டாம் _ கண்டித்து அறிக்கை விடலாமே _ ஏன் செய்யவில்லை?

இந்துக்கள் பெரும்பான்மையான மக்களின் மொழி கோயில்களில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்றால் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்கள் யார்?

கோயில்களிலும் பெரும்பான்மை இந்து மக்களின் மொழியான தமிழில்தான் அர்ச்சனை நடைபெற-வேண்டும் என்று இந்து முன்னணி கரூரில் நடக்க இருக்கும் மாநாட்டில் குறைந்த பட்சம் தீர்மானம் நிறைவேற்றுமா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

இந்து முன்னணி மாநாடு நடத்த இருக்கும் அதே கரூரையடுத்த திருமுக்கூடலூர் சைவக் கோயிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்று கோயிலை இழுத்து மூடித் தோஷம் கழித்தார்களே, அப்பொழுது எங்கே போனார் இந்த ராமகோபாலன்?

சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடினார் என்பதற்-காக வயது மூப்படைந்த ஓதுவார் ஆறுமுகசாமி, தீட்சதப் பார்ப்பனர்களால் தாக்கப்பட்டபோது இந்து முன்னணி எங்கே போய் முக்காடு போட்டுக் கொண்டது?

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இந்துக்கள் என்று இந்து முன்னணி ஒப்புக் கொள்ளு-மேயா-னால், அந்தத் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்-பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியாராக அமர இந்து முன்னணி ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்விக்கும் விடை தேவை.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீர் என்று கேட்பது போல, இந்து முன்னணிக் கும்பலே முதலில் உம் மதத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை, ஜாதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநாடு கூட்டுங்கள். உம் வீட்டிலேயே வண்டி வண்டியாகக் குப்பைகளை வைத்துக் கொண்டு அடுத்தவன் வீட்டுக்கு நொட்டாரம் சொல்லுவது வீண் வேலையல்லவா?

இந்துக்களுக்கும் கல்வியில் உரிமை வேண்டுமாம். அதற்காக இந்து முன்னணி மாநாடாம். வாயால் சிரிக்க முடியாது.

இந்துக்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுதெல்-லாம் அதனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த முற்போக்குக் கூட்டம் எது?

குஜராத் பாணியிலே சென்னையில் ஊர்வலம் நடத்துவோம் என்று அறிவித்தவர்கள் யார்? எதிர் ஊர்-வலம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்த பிறகுதானே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடினீர்கள்?

இன்னும் தீண்டாமையை வைத்துக் கொண்டிருக்கிற மதம் உலகத்திலேயே இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று பச்சை-யாக சொன்னவர்தானே உங்களின் பெரியவாள் மறைந்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி?

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்-கும் இந்துக் கோயில்களின் நிருவாகம் இவர்களின் கைகளுக்கு வரவேண்டுமாம். ஏன், கொள்ளையடிக்-கவா? சுரண்டல் தொழிலை ஜாம் ஜாமென்று செய்யவா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதப் பார்ப்-பனர்கள் அடித்த கொள்ளை இப்பொழுது வீதிக்கு வந்துவிட்டதே ; இக்கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்த நிலையில் கடந்த 14 மாதங்களில் கோயில் வருவாய் ரூபாய் 29 லட்சம் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதே! அதே நேரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் கையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிருவாகம் இருந்த நேரத்தில் ஆண்டு ஒன்றுக்கு வருமானம் வெறும் ரூபாய் 37,199 என்றும், அதில் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதி ரூ.199 என்றும் உயர்நீதிமன்றத்திலே கணக்குச் சொன்னார்களே!

இதை வைத்துப் பார்க்கும் போது எத்தனை நூறு ஆண்டு காலமாக கோடி கோடியாக இந்தப் பார்ப்-பனர்கள் பணத்தைச் சுரண்டிக் கொழுத்து இருப்பார்கள்.

அந்தக் கொள்ளை மீண்டும் நடக்கத்தான் கோயில் நிருவாகம் இவர்களின் கைகளில் வரவேண்டுமா?

கரூரில் இந்து முன்னணி மாநாடு நடத்கு முன் நாணயமாக இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா? எங்கே பார்ப்போம்?

---------- விடுதலை தலையங்கம் (16.06.2010)

4 comments:

Thamizhan said...

இந்தப் பரதேசி உஞ்ச விருத்திகளுக்குப் பாது காப்பு என்ற பெயரிலே செலவளிக்கப் படும் பணம் எவ்வளவு தெரியுமா?
சு.சாமி முதல் இந்தக் கோபாலன் வரை பாதுகாப்புக்கு எதற்குப் பொது மக்கள் பணம் வீணடிக்கப் பட வேண்டும்?

ரம்மி said...

கரூர் மாநாட்டிற்கு தங்கள் குழுவுக்கு அழைப்பு உண்டா? தங்கள் பதிவு அவர்களுக்கு நல்ல விளம்பரம்!

சரண் said...

இந்த மட்டமான அரசியல் கபடதாரிகளை.. பார்ப்பன பண்ணாடைகளை இந்தியாவைவிட்டே நாடு கடத்த வேண்டும்! மனிதன் மனிதனாக வாழ வேண்டும்... தங்கள் ....யை கழுவிவிட்டு பின்பு அடுத்தவன்....

Kartheesan said...

இந்து முன்னணி என்று சொல்லும் கூட்டத்தை கட்டுபடுத்தும் சக்தி பிராமண மக்கள் சிலபேருக்கு உள்ளது, பழைய ஆகமங்கள், வெங்காயங்கள், புண்ணாக்குகளை நாம் மீறி செயல் படக்கூடாது என்று இந்துக்களில் பலபேருக்கு சங்கல்பம். இந்த முட்டாள்கள் எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை. இந்துக்களில் இவர்கள் சொல்லும் சூத்திரன், வைசியன் அனைவரும் உண்டு என்பதை மறந்ததினால் மட்டுமே இவர்கள் இப்போதும் சொந்த நாட்டில் இப்படி இருக்கிறார்கள். சொந்த மண் என்பது இங்கு உள்ளவர்களுக்கு மட்டுமே வந்தேறிகளுக்கு கிடையாது.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]