வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 11, 2010

ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றவர்களுக்கு பாராட்ட?

கோழித் திருடனும் கூடவே குலவுகிறான் என்று நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதற்குப் பொருத்தமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் டில்லிக்கு உடன் வந்திருக்கிறார். அது இப்பொழுது பிரச்சி-னையாகி இருக்கிறது.

24 ஆண்டுகளாக சென்னைக் காவல் துறை-யால் தேடப்பட்ட குற்றவாளி டக்ளஸ் தேவா-னந்தா என்பதுதான் அந்தச் சர்ச்சைக்குக் காரணமாகும்.

1986 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்கி இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இவர். அப்பொழுது சென்னையில் சூளை-மேட்டில் திருநாவுக்கரசர் என்பவர் துப்பாக்-கியால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். இந்தக் குற்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் மற்றும் அவர் சார்ந்த அமைப்பினரும் குற்றவாளிப் பட்டியலில் இடம்பெற்றனர்.

நீதிமன்றத்திற்கு அவர் வராத காரணத்தால் அவர் தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்-பட்டார்.

1988 ஆம் ஆண்டில் சென்னைக் கீழ்ப்பாக்-கத்தில் வைர வியாபாரி துரைசிங்கம் என்பவரின் 10 வயது மகன் மதிவாணனைக் கடத்திய வழக்-கிலும் இவர் இடம்பெற்றார். இவர்மீது கொலை மிரட்டல் வழக்கும் உண்டு. பல வகைகளில் தேடப்பட்ட குற்றவாளியாக இவர் அறிவிக்கப்-பட்டார். ஒரு கட்டத்தில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழும் சிறையில் இருந்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்த இந்த ஆசாமி, இலங்கைக்குத் தப்பிச் சென்றார். விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்து ராஜபக்சேயின் அபி-மானத்துக்கும் ஆளாகி, அதற்குச் சன்மான-மாக அமைச்சர் பதவியும் பெற்றுக்கொண்டு விட்டார்.
இலங்கைத் தீவின் வரலாறே காட்டிக் கொடுப்-பவர்களுக்குப் பட்டமும், பதவியும் கிடைக்கும் என்பதுதானே _ இராமாயணக் கதையும் இதைத்-தானே கூறுகிறது.
தேவானந்தா சென்னைக் காவல்துறையால் தேடப்பட்டுவரும் குற்றவாளி என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்குத் தெரியாதா? நன்றாகவே தெரியும். என்றாலும், தைரியமாக தன்னோடு இந்தியாவுக்கு அழைத்து வருகிறார் என்றால், இதன் பொருள் என்ன?

ஈழத் தமிழர்களை லட்சக்கணக்கில் குரூரமான முறையில் கொன்று குவித்த போதே தட்டிக் கேட்காத அரசு இந்திய அரசு.

தட்டிக் கேட்காததோடு மட்டுமல்ல, தமிழர்-களைக் கொன்று குவித்த அந்தக் கொடூரத்திற்குப் பல வகைகளிலும் துணையாக இருந்ததும் இந்திய அரசுதான். இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்-தாவை உடன் அழைத்துச் செல்லுவதால் என்ன நேரப் போகிறது? தமக்குக் கிடைக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பில் அவருக்கும் ஒரு பகுதி கிடைக்கத்-தானே செய்யும் என்ற மனப்பான்மை-யோடுதான் தன்னோடு அழைத்து வந்திருக்க முடியும்.

இப்பொழுதுகூட என்ன நடந்திருக்கிறது? ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு விஷயத்தில் இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத சூழ்நிலையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அதிபரைச் சந்தித்து தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற வேண்டு-கோளை வைக்கவேண்டிய ஒரு சூழ்நிலையிலும்-கூட, இந்திய _ இலங்கை ஒப்பந்தம் ஜாம் ஜாமென்று நிறைவேறியிருக்கிறதே!

ஏராளமான பொருளாதார வளர்ச்சித் திட்டங்-களை இலங்கையில் நிறுவுவதற்கு இந்திய _ இலங்கை ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றனவே!
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உணர்ச்சிகளைப் பல வடிவங்களில் இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் காட்டிக் கொண்டாலும் அவற்றை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாத போக்குதான் இந்த இரண்டு அரசுகளிடமும்.

ராஜபக்சே பணிந்து வருவார், நல்லது செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்திய அரசுக்கென்று கடமை இருக்கவில்லையா? தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க-வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு இல்லாமற் போய்விட்டதா?
இந்தக் கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் சொல்லித்தான் தீரவேண்டும். பதில் சொல்லும்-வரை இந்த வினாக்களும் அவர்களைத் துரத்திக் கொண்டேதானிருக்கும்.

--------- விடுதலை தலையங்கம் (11.06.2010)

2 comments:

shiva said...

What was the Tamil Nadu highcourt doing for 24 years?If Douglas Devananda was a wanted man by the court why didnt the Govt of Tamil Nadu apparoach the Interpol and issue an international arrest warrant on Doglas.We all know the true face of the Indian Judiciary system.

செந்திலான் said...

கருத்துகளுக்கு நன்றி.அப்படியே நடுவண் அரசில் பங்கு போட்டுள்ள அதைப் பற்றி எதிர் குரல் எழுப்பாத கருணாநிதியையும் கொஞ்சம் விளக்கி எழுதினால் நலம் பயக்கும் ஏனென்றால் விழிப்புணர்வு என்பது ஒரு வழிப் பாதையல்ல

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]