வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 13, 2010

பகுத்தறிவற்ற பார்ப்பனர் எழுதிய புராணங்களை பார்ப்பனர் அல்லாதாருக்கு போதிப்பது ஏன்?

காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள விளம்பரத் தில் பார்ப்பனர் அல்லாதாருக்குப் புராணங்கள் கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பது ஏன்?

புராணங்கள் என்றாலே புளுகு மூட்டைகள்தான். அந்தப் புளுகு மூட்டைகள் கூட எதைத் திணிக்-கின்றன என்பதுதான் முக்கியம்.

பார்ப்பனீயத்தை எதிர்த்த அரசர்களை அசுரர்களை அச்சுறுத்தி அடக்கப் புனையப்பட்ட கட்டுக்கதைகள்-தான் புராணங்கள் எனப்படுபவை.

ஸ்ரீசிவமூர்த்தியினிடம் புராணங்களைக் கேட்ட நந்திமாதேவர் சநற்குமார முனிவருக்கு உபதேசிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க வியாச பகவான் சூதருக்கு உபதேசித்தனர் . . .
திரிமூர்த்திகள், எழுவகைத் தோற்றம், பிரமாண்டம் இவற்றின் நிலைகளையறிவித்துத் தான் கெடாமல் இருப்-பதால் புராணமே பிரமம் என்பன. அப்புராணங்கள்

சொல்லியவற்றைத் தவறி நடப்பதே பந்தம். இவை நீங்கிப் புராணம் சொன்ன வழியில் நடப்பது மோக்ஷம்.
(அபிதான சிந்தாமணி (1984) பக்கம் 1169_ -1170)

இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் எனும் நூலின் முன்னுரையில் (பக்கம் 8) கே.எம். முன்ஷி என்ற பார்ப்பனர் (இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கக் குழுவிலும் இடம் பெற்றவர் இவர்) புராணங்கள் பற்றிக் கூறும் கருத்தும் கவனிக்கத்தக்கது:
புராணங்களும் _ இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல. இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது  இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புகளே என்று குறிப்பிட்டுள்ளார்.
 (விரிவான தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள புரட்டு இமாலயப் புரட்டு எனும் நூலைப் படிக்கலாம்!)

புராணங்கள் _ பார்ப்பனர்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவதற்கு ஒரு புறம் _ இன்னொரு பக்கம் பார்ப்பனீய அடிமைத்தன உணர்ச்சியைப் பார்ப்பனர் அல்லாதார் 
மூளையில் ஆழமாகப் பதிவு செய்வதற்கே யாகும்.

புராணங்களில் கூறப்படும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளைக் கவனித்தால் இதன் உண்மை வெள்ளையாகும்.

தில்லைவாழ் அந்தணர் புராணம் என்றால் சுந்தரருக்கு சிவபெருமானால் முதல் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டது என்று வருகிறது.

தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் இந்த அடியைத்தான் சிவபெருமான் எடுத்துக் கொடுத்தானாம்.

தில்லையில் வாழும் பார்ப்பனர்களுக்குச் சிவபெருமானே அடியேன் என்றால், புராணம் எழுதுவதன் நோக்கம் புரியவில்லையா?

பெரிய புராணம் முழுவதும் அடியார்களின் வரலாறு; அடியார்கள் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும், கடவுளுக்காக மனைவியை கூட்டிக் கொடுத்த-வனாகவும் (இயற்பகை நாயனார்) பெற்ற பிள்ளையையே தாயும், தந்தையும் அரிந்து கறி சமைத்துச் சிவனடியாருக்குக் கொடுத்ததாகவும் (சிறுத்தொண்டர்) என்றுதானே புகழ்கின்றன.
கோட்புலி நாயனார் சோழ மன்னன் சேனாதிபதி. கோயில் சிலைக்குத் தளிகை பூசைக்காக நெல்லை வாங்கித் தன் வீட்டில் சேர்த்து வைத்திருந்தான். இவன் படை எடுத்துச் சென்றிருந்தபோது பஞ்சம் காரணமாக சுற்றத்தார் இந்த நெல்லை எடுத்துப் பயன்படுத்தி, பஞ்சம் பட்டினி கொடுஞ்சாவிலிருந்தும் தப்பித்தனர்.

ஆனால் கோட்புலியார் போர்க்களத்திலிருந்து திரும்பியதும் கோயில் நெல்லைச் சுற்றத்தார் உண்டு விட்டது அறிந்தார். வீடு சேர்ந்தார்.
இது குறித்து திரு.வி.க. எழுதுகிறார்:.

சுற்றத்தாருக்குப் பரிசில் வழங்கல் வேண்டும் என்று சொல்லி அவரை அழைப்பித்தார். கோட்புலி என்னும் தம் பெயருடைய சேவகன் ஒருவனை வாயில் காக்குமாறு செய்தார். அடாது செயல் புரிந்த இவனைக் கொல்லாது விடுவதோ என்று உருத்து எழுந்தார். எழுந்த தந்தை, தாய், உடன் பிறந்தோர், தாரம், துரோகத்துக்குட்பட்ட மற்றவர் ஆகிய எல்லாரையும் வெட்டி வீழ்த்தினார். ஓர் ஆண் குழந்தை மட்டும் எஞ்சி நின்றது.
நாயனார் அதன் மீது பாய்ந்த பொழுது, வாயில் காப்போன் அவரைப் பார்த்து, பெருமானே, இக்குழந்தை என்ன செய்தது? இது சிவ சோற்றை உண்ணவில்லையே! ஒரு குடிக்கு ஒரு பிள்ளை. அருள் செய்யும் என்று வேண்டினான். அதற்குக் கோட்புலியார் இக்குழவி சிவசொத்தை உண்ண-வில்லை. ஆனால் அதை உண்டவளுடைய முலைப்-பாலை உண்டது என்று கூறி அக்குழந்தையையும் வாளுக்கு இரையாக்கினார்.
(திரு.வி.க.வின் நாயன்மார் வரலாறு, பக்கம் 306_-307)

புராணங்களைப் பார்ப்பனர் அல்லாதாருக்குச் சொல்லிக் கொடுக்க சங்கரமடம் திட்டமிட்டிருப்பதன் சூட்சமம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே.

பார்ப்பனர் அல்லாத நாயன்மார்களின் கதை இப்படி இருக்க, பார்ப்பனப் பக்தர்களின் கதையோ வேறு மாதிரி.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மதுரையில் சிவன் எப்படி மோட்சம் கொடுத்தான்? பொற்றாமரைக் குளத்தில் குளிக்கச் சொன்னான் _ பசுமாட்டுக்குப் பசும்புல்போடச் சொன்னான்  தீர்ந்தது தாயைப் புணர்ந்த பாவம். திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் இதுதான்.

இந்தப் புராணங்கள்தான் பார்ப்பனர் அல்லாதாருக்கு! பார்ப்பனர்களுக்கோ வேதங்கள்!

----- விடுதலை ஞாயிறு மலர் (12.06.2010)
                                                                                                                                                                 


2 comments:

விஸ்வாமித்திரன் said...

ஒங்களுக்கு என்னதான் வேணும்
பிராமணர்கள் தாங்கள் நம்பும் புராணங்களை அனைவருக்கும் சொல்லித்தருகிறோம் என்று சொன்னாலும் ஆகாது. புராணங்கள் பிராமணர்களுக்குத்தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆகாது.
நீங்கள் பூணூலை, அதற்கான மந்திரங்களை நம்புவது இல்லை. பிராமணர்கள் பூணல் போட்டுகொன்டாலும் ஆவது இல்லை. பிள்ளை கறி சமைத்து கொடுத்தான் என்றால் நகைப்பு. பிள்ளைக்கு பால் கொடுத்த மார்பை அறுத்து எறிந்தாள் வீர மரப்பெண்சாமியை நம்ப மாட்டீர்கள். என்றால் பாராட்டுவீர்கள்.
சாமியை நம்ப மாட்டீர்கள், பூசாரி வேலைக்கு ரிசர்வேஷன் கேட்பீர்கள்.போங்கப்பா கண்ணா கட்டுது.

பரணீதரன் said...

விஸ்வாமித்திரன் அய்யா, கண்ண தொறக்க ஒரே வழி...நேரா பெரியார் படிப்பகம் போங்க...அங்கெ ராமாயணம், மகாபாரதம் இருக்கும் ராமாயண மகாபாரத புரட்டும் இருக்கும் .......பகவத் கீதை இருக்கும் கீதையின் மறுபக்கம் இருக்கும்......கந்த புராணம் இருக்கும் கந்தபுராணமும் ராமாயணமும் ஒன்றவும் இருக்கும் ......கம்ப ராமாயணம் இருக்கும் கம்ப ரசம் இருக்கும்.....இப்படி எல்லாம் இருக்கும்...ரெண்டையும் படிச்சி தெளிவு பெறுங்கள் ....கண்ண கட்டாது

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]