ஒட்டிய வயிறு
காய்ந்த கண்கள்
கடவுள் இல்லை என்பதை
இருப்பதாகச் சொல்லும்
பார்ப்பானின்
பொய் மூட்டைகளில்
மூழ்கிய மனசு
கார்த்திகையில் மாலையிட்டு
கேரளா ஐயப்பனை கும்பிட்டால்
செல்வ வளம் பெருகும்!
வாழ்க்கை செழிக்கும்!
வார்த்தைகளில்
மயங்கிய மனசு...
குடல் கருக பட்டினி கிடந்து
மனைவியை
ஒதுக்கி வைத்து
சாவுச் செய்தியைத்
தூர விரட்டி
கேரளா நோக்கி
கால் நடையாய்,
பகலிலும் நடை,
இரவிலும் நடை
இருட்டில்
உருமலோடு வரும்
லாரி...
ஐயப்ப பக்த்தனைக்
காவு வாங்க
காக்கும் கடவுள்
காணாமல் போன மாயம் என்ன?
குருவாயூர் கோவிலுக்குள்
யானைக்கு அனுமதி உண்டு!
மனிதர்களுக்கு
அனுமதி இல்லை,
ஐயப்பன் கோவிலிலே
கன்னி சாமிகளுக்கு
அனுமதி உண்டு!
பெண்கள்
சாமிகளாக
அனுமதி இல்லை!
சிதம்பரம் நடராஜருக்கு
தமிழ் நாட்டில் இடமுண்டு
கோயிலில்
தமிழுக்கு இடமில்லை!
பள்ளியில் படித்த நினைவு
"தீண்டாமை"
மனித தன்மையற்ற செயல்
உண்மைதான்!
--------------- புரட்சிப்பூக்கள் தொடரும்
No comments:
Post a Comment