வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 05, 2010

ஜோசியத்தின் பித்தலாட்டம்

மரத்தடி ஜோசியர்களிடத்தில் எனக்கு மதிப்போ நம்பிக்கையோ கிடையாது. ஆனால், சென்ற வாரம், மாம்பலத்திலுள்ள ஒரு மரத்தடி ஜோசியரை நான் சந்திக்க நேர்ந்ததி-லிருந்து, என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்.

அந்த ஜோசியரைத் தேடி அநேகர் கூட்டம் கூட்டமாக வந்து அவரை வணங்கி, அவருடைய ஜோசியத் திறமையைப் புகழ்ந்து பாராட்டியதை நானே நேரில் கண்டேன்.
வந்தவர்கள் எல்லோரும், குறிப்பாக ஒரே ஒரு விஷயத்தைப்பற்றியே அதிகம் புகழ்ந்தார்கள். அதாவது, ஒருத்திக்குப் பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைச் சரியாகச் சொல்வதில் அந்த ஜோசியர் மகா நிபுணர் என்று தெரிய வந்தது. “என் மருமகளுக்குப் பெண்தான் பிறக்கும்னு சொன்னீங்க; அதே மாதிரி போன வாரம் அவளுக்குப் பெண் குழந்தை பிறந்ததுங்க,’’ “என் பேத்திக்குப் பிள்ளை-தான் பிறக்கும்னு சொன்னீங்க. அப்படியே அவளுக்குப் பிள்ளை-தானுங்க பிறந்தது’’ என்று அநேகர் அங்கே வந்து, அவர் கூறிய ஜோசியம் பலித்ததாகத் தெரிவித்தார்கள்.

‘இவ்வளவு திறமையான ஜோசியரா!’ என்று நான் மனசுக்குள் வியந்து கொண்டு இருக்கும்போதே, பழைய விஷயம் ஒன்று என் நினைவுக்கு வந்தது. அதாவது, என் மனைவிக்குப் பிள்ளை-தான் பிறக்குமென்று அதே மரத்தடி ஜோசியர்தான் சொன்னதாக என் தாயார் ஒரு தடவை சொல்லியிருக்கி-றாள். அந்த ஜோசியம் பலிக்கவில்லை என்ற காரணத்தால் என் தாயார் அந்த ஜோசியரைச் சபித்துக்கூட இருக்கிறாள். உடனே, அந்த ஜோசியரிடம், அந்த என் சொந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் தீர்மானித்துக் கொண்டு பக்கத்தில் சென்றேன்.

என்னைக் கண்டதும் அவர், “வாங்க அய்யா, உக்காருங்க’’ என்று வரவேற்றார்.
“அதெல்லாம் இருக்கட்டும்... என் தாயார் ஒரு தடவை உம்மிடம் ஜோசி-யம் கேட்க வந்தாளே, ஞாபக-மிருக்கிறதா! மீனாட்சி அம்மாள் என்று பெயர். மயிலாப்பூர் தெற்கு மாட வீதி! அவளிடத்திலே நீங்க, என் சம்சாரத்துக்குப் பிள்ளைதான் பிறக்கு-மென்று சொன்னீங்க! ஆனா, உங்க ஜோசியம் பலிக்கலே. பிறந்தது பெண் குழந்தைதான்! இதுக்கு என்ன சொல்றீங்க?’’ என்று மடக்கினேன்.

“இருக்கவே இருக்காதுங்க!’’ என்றவர், “அவங்க எப்போ வந்தாங்கன்னு சொல்ல முடியுமா?’’ என்று கேட்டார். “போன வருஷம் இதே மாசம்தான்’’ என்று நான் சொன்னதும், தன் பைக்குள் இருந்து ஒரு டயரியை எடுத்துப் புரட்டி, அந்தத் தேதியைப் பிரித்துக் காண்பித்தார். “இதோ பாருங்க, என்ன எழுதி வைச்சிருக்-கேன்னு! ‘மயிலாப்பூரைச் சேர்ந்த மீனாட்சி அம்மாளின் மருமகளுக்குப் பெண்தான் பிறக்கும்!’ பார்த்துக்கிட்-டீங்களா? என் ஜோசியம் ஒரு நாளும் பொய்க்காதுங்க. உங்க தாயார் ஞாபகப் பிசகா சொல்லியிருப்பாங்க!’’ என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஜோசிய சாஸ்திரம் தெரிந்த அநேக நிபுணர்களால்கூடச் சொல்லமுடியாத ஒரு விஷயத்தை நீங்கள் மட்டும் எப்-படிச் சரியா சொல்றீங்க?’’ என்று கேட்டேன்.

“ஒரு பத்து ரூபா கொடுத்தா அந்த வித்தையை உங்களுக்கும் சொல்லித் தரேன்’’ என்றார்.
“இந்தாருங்கள் பத்து ரூபாய்! சொல் லுங்க சீக்கிரம்!’’ என்று பரபரத்தேன்.
“அது வேறொண்ணுமில்லை... ஜோசியம் கேட்கிறவங்ககிட்டே, ஆண், அல்லது பெண் என்று எதையாவது சொல்லி வைக்கிறது. அவுங்க போனப்-புறம் டயரியிலே, நாம சொன்னதுக்கு நேர் மாறாக எழுதி வெச்சுக்கிறது. அவங்ககிட்டே சொன்னது பலிச்-சுட்டா, நல்லது. அவங்களே தேடி வந்து புகழு-வாங்க! அப்படியாராவது பலிக்க-லேன்னு வந்து நின்னா, டயரியைப் பிரிச்சுக் காட்டி, இதோ சரியாத்தானே எழுதி வெச்சிருக்கேன்’’னு சொல்லிட வேண்டியது. அவ்வளவு-தான்!’
நன்றி: ‘ஆனந்த விகடன்’
28.4.2010 பக்கம் 76.


3 comments:

vijayan said...

இவ்வளவு தலை இருக்கிற அந்த நாய் அதை நல்ல வழியில் பயன்படுத்தலாம்.

Dr.P.Kandaswamy said...

நல்ல டெக்னிக்.

hai said...

Even without this technique, astrologers survive due to the 'confirmation bias' --- correct predictions usually spread faster than false predictions.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]