வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 12, 2010

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமன் பாலத்தை இடிப்பதா?-இப்படி ஒரு புரளி

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நிறைவேறிவிட்டால் கலைஞர் அரசுக்கு, காங்கிரஸ் அரசுக்குப் பெருமை ஏற்பட்டு விடுமே என்று பா.ஜ.க., அதி.மு.க எதிர்க்கிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஒரத்தநாட்டில் 30.5.2010 அன்று நடைபெற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பெரியார் நாட்டிலே கொள்கைப் பிரச்சாரம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே திராவிடர் கழகத்தின் சார்பில் இப்படி ஒரு பொதுக்கூட்டத்தை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே இங்கே இன்றைக்கு காலை முதற்கொண்டு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல இதுவரையிலே அடர்த்தியான கொள்கைப் பிரச்சார மழை இந்த பெரியார் நாட்டிலே தொடர்ந்து பெய்யக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பை நம்முடைய தோழர்கள் மிக அருமையாக எடுத்துக்காட்டாக செய்து காட்டியிருக்கின்றார்கள்.

எல்லாம் கொள்கை மயம் என்று சொல்லக்கூடிய அளவிலே எல்லாவற்றுக்கும் துணிந்த நம்முடைய இளைஞர்கள் மிகத் தெளிவான இராணுவ கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன என்று சொல்லுவதைவிட, பெயர் உள்ள இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால் முதலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இடம் பெரியார் நாடு ஆகிய ஒரத்தநாடு பகுதிதான் என்ற பெருமைக்குரிய பகுதியிலே இந்த மண்ணிலே நின்று உங்களை எல்லாம் சந்திப்பதிலே மூடநம்பிக்கை ஒழிப்புநிகழ்ச்சியிலே நீங்கள் எப்படி எல்லாம் கணித்திருக்கிறீர்களோ அது போல அந்த மகிழ்ச்சியிலே நானும் பங்கு கொள்வதிலே பெரிய வாய்ப்பு என்று கருதுகின்றேன்.

பழைய தோழர்களை நினைத்துப் பார்த்தேன்

அருமை நண்பர்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். இந்த ஊரிலே இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் பழைய தோழர்களான ஆர்.பி.சாமி போன்றவர்கள் வை.குப்புசாமி போன்றவர்கள் இன்னும் பல நண்பர்கள் பழைய தோழர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றோம்.

இங்கே வரும் பொழுதெல்லாம் நான் அசைபோட்டுக்கொண்டு வந்தேன். இந்த ஒரத்தநாடு பகுதி பெரியார் நாடு என்றழைக்கப்படக்கூடிய தலைசிறந்த பகுதியாக இருக்கிறது.
விடுதலை நுழையாத கிராமமே இல்லை. பிரச்சாரம் நுழையாத ஊராட்சிகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிலே மகிழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் இதற்கு அடித்தளமிட்ட நண்பர்களை வேர்களாகப் புதைந்திருந்து விழுதுகளாக உங்களை எல்லாம் ஆளாக்கிக் கொண்டு வந்திருப்பதற்கு உழைத்த நம்முடைய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு நாம் அனைவரும் முதற்கண் வீரவணக்கத்தை செலுத்திக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.
ஆசிரியர் மதிவாணன் அந்த வகையிலே தோழர் மதிவாணன் அவர்கள். அவர் ஒரு ஆசிரியர். பல நண்பர்களுக்கு முதியோர்களுக்கு இங்கே தெரியும். ஒரத்தநாடு நண்பர் மதிவாணன் அவர்கள் தந்தை பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக இருந்தவர். அது போல நண்பர் சீதா அவர்கள். அவர் ஒரு விபத்திலே அகால மரணமடையக்கூடிய ஒரு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டு இயக்கத்திற்கே பலம் குன்றியது என்று சொல்லும் அளவுக்கு கம்பீரமானவர்.

எப்பொழுதும் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்து மற்ற இடங்களில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள். இலங்கையிலே ஈழத்திலே நீண்ட நாள் இருந்து பிறகு இங்கே வந்து தன்னுடைய பணியை செய்த அருமையான கழகப் பொறுப்பாளர்களிலே ஒருவர் தோழர் ஆறுமுகம் அவர்கள் ஆவார்கள்.

ஆறுமுகம் அவர்கள் பல்வேறு உடல் சங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும்கூட அவர் ஆஸ்துமா நோயினாலே தொல்லைப்பட்டவர். ஆனாலும் கூட நல்ல தெளிவானவர். தந்தை பெரியார் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று இந்த வட்டாரத்திலே கழகம் இயங்குவதற்கு மிகத் தெளிவாகப் பணிபுரிந்த ஒருவர்.

அது போலவே நம்முடைய டாக்டர் முருகேசன். அதுபோலவே இன்னொரு வைத்தியர் முருகேசன். அவர்களும் மிகச்சிறப்பாக இருக்கக் கூடியவர்கள். நைனா முகம்மது அண்மைக் காலம் வரையிலே நம்மோடு இருந்து நமக்கு அறிமுகமானவர். இப்படி ஒரு பெரிய பட்டியலையே நான் நினைத்துக் கொண்டு வந்தேன்.

கைலாசமுத்து-இராமச்சந்திரன்

இந்த இடத்தை தந்தை பெரியார் அவர்களுடைய அறக்கட்டளைக்கு இடம் வாங்கிக்கொடுக்க சர்வே முதற்கொண்டு முயற்சி செய்தவர். நம்முடைய முகிலனுடைய தந்தையார் கைலாச முத்து ஆவார்கள். பெரியார் மய்யத்திறப்பு விழாவிற்குச் சென்றபொழுது அந்த பேருந்திலே அவரும், நம்முடைய குணசேகரன் அவர்களுடைய அருமைத் தந்தையார் இராமச் சந்திரன் அவர்களும், அதுபோலவே அவருடைய தாயார் அவர்களும் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகி நம்முடைய பேபி ரெங்கசாமி அவர்கள் நல்ல வாய்ப்பாக அந்த பெரும் விபத்திலிருந்து தப்பித்து பல மாதங்கள் மருத்துவமனையிலே இருக்கக் கூடிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இப்படி எல்லாம் அவர்கள் உழைத்த உழைப்புதான் இன்றைக்கு இவ்வளவு அற்புதமான ஒரு விளைச்சலை ஒரத்தநாட்டிலே பெரியார் நாட்டிலே கொள்கை விளைச்சலைப் பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

நினைவைப் போற்றி....

முதற்கண் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்றோம். அவர்களுடைய தொண்டுக்கெல்லாம் பாராட்டுத் தெரிவித்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன். நிறைய தீர்மானங்கள் அதாவது 15 தீர்மானங்கள் அற்புதமான தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சேது சமுத்திர கால்வாய் திட்டம் ஒரத்தநாடு திராவிடர் கழக பொதுக்குழுக் கூட்டத்திலே ஒரு வரலாற்றுப் பதிவு அதற்குள்ளாகவே ஊடகங்களுக்கு வந்துவிட்டது. அந்தப் பெருமையை ஒரத்தநாடு இன்றைக்குப் பெற்றிருக்கின்றது. அதற்கு அடிப்படையான தீர்மானம் எதுஎன்றால், அதுதான் நம்முடைய பொதுச்செயலாளர் அவர்கள் விளக்கினார்களே சேது சமுத்திர கால்வாய் திட்டம்.

தேவையின்றி அது காலதாமதம் செய்யப்படுகிறது. திட்டமிட்டே துவக்கப்படுத்தப்படுகிறது. அதற்கு என்ன வழி என்று சொன்னால் நேரடியாக அதை செய்யாமல் மாறாக எப்படியாவது அதைத் தடுக்க வேண்டும். அதை கிடப்பிலே போட வேண்டும் என்பதற்காக இடையிலே இருக்கக் கூடியவர்கள் நீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

பி.ஜே.பி ஆட்சியில்....

மத்தியில் பி.ஜே.பி ஆட்சி செய்த பொழுது சேதுக்கால்வாயில் அய்ந்து வழித்தடங்களை ஆராய்ந்து பார்த்தார்கள் அது சரிவரவில்லை. இந்த வழித்தடங்களை பல்வேறு நிபுணர் குழுவினர் ஆராய்ச்சி செய்தார்கள்.

இந்தப் பணி எப்பொழுது தொடங்கியது என்று சொன்னால் வாஜ்பேயி பிரதமராக இருந்த காரணத்தினாலே தொடர்ந்து நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். பெரியார், அண்ணா, காங்கிரஸ் நண்பர்கள் எல்லாம் வலியுறுத்தி இங்கே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் வந்தால் இன்றைக்கு நமது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகமே வளம் கொழிக்கக் கூடிய பகுதியாக ஆகிவிடும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வரும் என்பதை எல்லாம் தெளிவாகப் புரிந்துதான் வலியுறுத்தினோம்.
அதை அரசியல் ரீதியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்ற திட்டத்தை அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்து அதற்கான முயற்சி செய்தது எல்லாம் அவர்களுடைய காலம். 

பல வகையில் ஆராய்ந்தார்கள்

சேது சமுத்திர கால்வாய் எந்த இடத்திலே அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக முயற்சி எடுத்தார்கள்.

சுற்றுச்சூழல் சரியாக இருக்க வேண்டும். சர்வதேச அனுமதி கிடைக்க வேண்டும். மீன்வளம், பவளப் பாறைகள், இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி பல்வேறு செய்திகளை வைத்து ஆராய்ந்து ஒவ்வொரு தடமும் சரியில்லை, சரியில்லை என்ற ஒதுக்கப்பட்டது.
  
தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப...

கடைசியாக மிக அருமையான ஆறாவது வழித்தடம் என்று சொல்லக் கூடிய அந்த வழித்தடத்தை எடுத்து நிபுணர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்கள் எல்லோருமே அதை ஆய்வு செய்த பிற்பாடுதான் பணி தொடங்கப்பட்டது.

பாரதீய ஜனதா ஆட்சி முடிந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலே, சோனியாகாந்தி அம்மையாருடைய வழிகாட்டுதலிலே திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்ற ஆட்சியின் காரணமாக சாதனையாக சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி முடிப்போம் என்று தேர்தலிலே கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய வகையிலே 2005_லே மதுரையிலே இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

குறிப்பாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட குறிப்பாக கலைஞர் அவர்கள் இந்தத் திட்டத்தைக் கேட்டுப் பெற்றார்கள்.
  
கப்பல் துறையைக் கேட்டுப் பெற்றார் கலைஞர்

சேது சமுத்திர கால்வாய் திட்டம் எப்படியும் நம்முடைய காலத்திலே முடிவடைய வேண்டுமானால் நம்முடைய அமைச்சர் இருந்தால் இன்னும் வேகமாக அதனை வற்புறுத்த முடியும் என்ற உணர்வோடு கேட்டுப் பெற்று டி.ஆர்.பாலு அவர்களின் மிகக் கடுமையான உழைப்பின் பெயரில் வேகமாக பணியாற்றினார்கள். 2400 கோடித் திட்டம். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அல்ல. இந்த ரூபாய்களை செலவழித்து வேகமாகப் பணிகளை முடுக்கிவிட்டு, கடைசியிலே முடிய வேண்டிய ஒரு பகுதி வெறும் 12 கி.மீ.தான் மீதி எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களிலே கப்பல் ஓட இருக்கிறது என்று அறிவித்தார்கள்.
  
எதிர்க்கட்சியினருக்கு என்ன நோக்கம்?

உடனே மய்யமாக இங்கேயிருக்கிற எதிர்க் கட்சிக்காரர்களுக்கு என்ன நோக்கம்? அப்படியானால் இதை அவர்கள் செய்து முடித்துவிட்டால் இவர்கள் அல்லவா அந்த பெருமைக்குரியவர்கள் ஆகி விடுவார்கள்.

இதைக்காட்டி அல்லவா திமுகவும் காங்கிரசும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆகவே இதை செய்யவிடக்கூடாது என்று அரசியல் கண்ணோட்டத்தின் காரணமாக அ.தி.மு.கவினுடைய பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏற்கெனவே அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு முறை அல்ல. இரண்டு முறை வலியுறுத்திய வர்கள்.
  
இரண்டு தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியவர் ஜெயலலிதா

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலே வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை யிலே வலியுறுத்தினார். சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது அண்ணா அவர்களுடைய கனவுத்திட்டம். எம்.ஜி.ஆர். வலியுறுத்திய திட்டம். கலைஞர் வலியுறுத்திய திட்டம். ஆனால் அதே ஜெயலலிதா அம்மையார் இப்பொழுது அப்படியே தலைகுப்புற பல்டி அடித்து நேர் எதிரிடையாக முற்றிலுமே திரும்பி சேது சமுத்திர கால்வாய் திட்டமே கூடாது என்று சொல்லக் கூடிய அளவிலே வந்துவிட்டார்கள்.
  
ராமன் பாலத்தை இடிப்பதா?-இப்படி ஒரு புரளி

பாரதீய ஜனதா கட்சிக்காரர்கள் கூட கொஞ்சம் அரசியல் தெரிந்திருக்கிற காரணத்தினாலே பெரியார் பிறந்த பூமியில் எப்படியும் காலூன்ற முடியவில்லையே என்று கருதிய காரணத்தாலே சேது சமுத்திர திட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக ராமர் பாலத்தை இடிப்பதா? என்று ஆரம்பித்து வேறு வழித்தடத்தை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று இல்லாத ஊருக்குப் போகாத பாதையை புரியாத மனிதரிடம் தெரியாத பாஷையில் பேசுவதைப் போல இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அதே நேரத்திலே அவர்கள் சொல்லுகிறார்கள். நாங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரிகள் அல்லர் என்று சொல்லு கின்றார்கள். 

கலைஞர் பெருந்தன்மையாக சொன்னார்

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கலைஞர் போன்றவர்கள் செய்கிறார்கள் என்பது தெரிந்தது. சகோதரர் வைகோ போன்றவர்கள் நானல்லவா இந்த திட்டத்திற்கு பாத்யதை உடையவன். எனவே இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர். கலைஞர் அவர்களிடம் கேட்டபொழுது கூட ரொம்ப பெருந்தன்மையாகச் சொன்னார். யாரால் இந்தத்திட்டம் வந்தது என்பது முக்கியமல்ல. இந்தத்திட்டம் முடிய வேண்டும். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. அதைத்தான் நான் சொல்லுகிறேன் என்று கலைஞர் அவர்கள் பெருந்தன்மையாகச் சொன்னார்கள்.

இந்த சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை தடுப்பதற்காக ஒரு அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி எங்கேயும், யாரையும் பிளாக்மெயில் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு ஆசாமி. நான் ஒரு பொது நல வழக்குப் போடுகிறேன். இது ராமர் பாலம் உடைக்கக் கூடாது என்று இல்லாத பாலத்தை இவர்கள் சொன்னார்கள். இடிக்கக் கூடாது என்று அதற்கு ஒரு தடையை உண்டாக்கக் கூடிய சூழலை உருவாக்கினார்கள். 

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்...

அப்பொழுது தடை ஆணை கொடுக்கவில்லை. ஆனால் நீதிபதிகள் என்ன சொன்னார்கள்? ராமன் என்ற ஒருவனே கிடையாது. அது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப் படக்கூடியதல்ல. ராமாயணம் நடந்த கதை அல்ல. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே என்று சொல்லகின்றீர்களே அத்துணை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலே முதலில் மனிதன் இருந்தானா? பொறியியல் துறை இருந்ததா? என்ற கேள்வியை எல்லாம் கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்லுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் நம்பிக்கை. நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லுகிறார்கள்.     (தொடரும்)

----- நன்றி விடுதலை

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]