Saturday, June 12, 2010
சூத்திரர்களுடைய பணம் வேண்டும் சங்கரமடத்துக்கு... உதவி மட்டும் அக்கிரகாரக் கும்பலுக்கே!
இந்த கருப்புச் சட்டைக்காரர்களுக்கு இதுதான் வேலை! எதற்கெடுத்தாலும்
பார்ப்பான் பார்ப்பான் என்ற பாட்-டினைப் பாடாவிட்டால் இவர்களுக்குத்
தூக்கமே வராது. ஒரு காலத்தில் எப்படியோ இருந்திருக்கலாம் _ இப்பொழுது
அவர்கள் முழுக்கவே மாறிவிட்டார்கள்; முனியாண்டி ஓட்டலில் கூட
சாப்பிடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் யார் உச்சிக் குடுமி வைத்திருக்கிறார்கள் மாடர்னாக கிராப் வெட்டிக் கொள்கிறார்-கள், பஞ்சகச்சமா கட்டுகிறார்கள் கோட்டு சூட்டுகளில் அமர்க்களமாகக் காட்சி அளிக்கிறார்கள் _ மாமி கூட மடிசார் கட்டுவதில்லை என்று அக்கி-காரத்து வக்கீல்களாக தமிழர்களில் பலர் அதுவும் மெத்தப்படித்த பலர் வக்காலத்துப் போட்டுப் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்களால் முன்பு போல் நடந்து கொள்ள முடியாதுதான் பேசமுடியாது-தான்_ உச்சிக் குடுமி வைத்துக் கொள்ள முடியாதுதான் பஞ்சகச்சம் கட்ட முடி-யாதுதான். அவ்வாறு நடந்து கொண்-டால் கோலி விளையாடும் கோவணம் கட்டாத சிறுவன்கூடக் கேலி செய்வான்_ ஏன், பைத்தியக்காரர்கள் என்று கல்லால் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கால தேச வர்த்தமானம் என்பார்-களே, அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளக் கூடியவர்கள்தான் _ மறுக்க-வில்லை.
ஆனால் சிந்தனையில், வாழ்க்கைக் கலாச்சாரத்தில், வீட்டு நடப்புகளில், பெயர்களைச் சூட்டிக் கொள்வதில், அவாள் வட்டாரத்துச் சடங்கு ஆச்சாரங்-களில் அவர்கள் அக்கிரகாரவாசிகளா ? அல்லது நம்மவர்களா? என்பதை ஒரு கணம் _ ஒரே ஒரு கணம் சிந்தனையைச் செலவிட்டு, கண்களை அகலத் திறந்து விட்டுப் பார்த்தால் _ பார்த்த மாத்திரத்-திலேயே பளிச்சென்று புலப்பட்டுவிடுமே! ஆமாம், ஆமாம்_ வெளிவேஷம்_ உத்தி-ராட்சப் பூனைகள் _ பசுத்தோல் போர்த்-திய ஓநாய்கள் என்பதை புரிந்து கொண்டு விடலாமே!
ஜூன் 4 ஆம் தேதி (2010) தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையைக் கையில் எடுங்கள்.
அதில் முழு பக்கம் விளம்பரம்!
Educate
Enlighten
Empower
என்ற தலைப்பிட்டு ஒரு முழு பக்க விளம்பரம்
இடது பக்கத்தில் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் படம். வலது புறத்தில் ஜெயேந்திர சரஸ்வதியின் படம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
காஞ்சி சங்கர மடம் நடத்தும் வேத பாடம் கலந்த பொதுக்கல்வி அளிக்கும் பள்ளி. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பிராமணப் பையன் வேதப் பாட சாலை யில் பயில வரவேற்கப் படுகிறான். வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால், இந்த ஈடு இணையற்ற செயல் திட்டத்தில் மதச் சார்பற்ற தற்போதைய கல்வியும் சேர்த்து அளிக்கப் படுகிறது. பிராமணச் சிறுவர்கள் வேதங் களைக் கற்றுக் கொள்வதுடன் அதே நேரத்தில் முறையான கல்வியையும் பெற லாம்.
புராணங்கள், இசை, வரலாறு, கலை போன்ற இந்திய கலாச்சாரப் பாடங்களைக் கற்க ஈடு இணையற்ற ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்குக் கலாச்சார மறுபயிற்சி செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படு கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அதன் குடும்ப வருவாய் பற்றிய விவரங்கள் அறிந்தபின் சேர்த்துக் கொள்ளப்படும். குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்பது-தான் இந்த விளம்பரம்.
வேதங்கள் பிராமணப் பையன்களுக்கு
புராணங்கள் பிராமணர் அல்லாத வர்களுக்கு
ஏனிந்த வேறுபாடு? ஏனிந்த பாட பேதம்?
பார்ப்பனர் அல்லாத மாணவர்-களுக்கு ஏன் வேதங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடாது?
பார்ப்பன மாணவர்கள் ஏன் புராணங்களைப் படிக்கக்கூடாது?
கொஞ்சமாவது அறிவைச் செலுத்து பவர்களுக்கு இந்த வினாக்கள் எழாமல் போகாது.
வேதங்களை ஏன் பிராமணர் அல்லாதாருக்கு _ சூத்திரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடாது?
அவர்களின் மனுதர்மம் அவ்வாறு கூறுகின்றது!
வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி ஊற்ற வேண்டும்.
சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையானதால், அவன் பக்கத்தில் வேதமோதக்கூடாது.
வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளை உணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்கவேண்டும்.என்பது பார்ப்பனர்கள் சுருதி, ஸ்மிருதிகளின் கட்டளை.
இதனைத் தெரிந்து கொண்டால், காஞ்சி மடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வெளியிட்டுள்ள முழு பக்க விளம்பரத்திற்கான தாத்பரியம் என்ன என்று புரியும்.
சூத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கலா-காது என்று மனு கட்டளையிட்ட பிறகு மறு வார்த்தை ஏது?
வேதம் விளக்கிய பிறகு, வேறு சிந்தனை சங்கர மடத்துக்கு வருமா-?
சூத்திரன் வேதங்களைப் படிக்கக்-கூடாது என்பது மட்டுமல்ல _ சூத்திர-னுக்கு வேதத்தைச் சொல்லிக் கொடுக்-காதே என்று பார்ப்பனர்களுக்கு மனு-வால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டு-விட்டதே! (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 103).
இதன் அடிப்படையில்தான் பிராமணப் பையன்களுக்கு வேதமும், பார்ப்பனர் அல்லாத சூத்திரர்களுக்கு புராணமும் சொல்லிக் கொடுக்கப்படும் என்ற சங்கர மடத்தின் விளம்பரமாகும்.
முனியாண்டி ஓட்டலில் பார்ப்பனர் சாப்பிடும் அளவிற்கு வந்து விட்-டார்கள், இப்பொழுதெல்லாம் உச்சிக் குடுமி வைப்பதில்லை என்று வக்-காலத்து வாங்கும் பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது தலையைக் கொஞ்சம் குலுக்குவார்களா? மூளைக்கு ரத்த ஓட்டத்தை உண்டாக்க முயற்சிப்பார்களா?
பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் ஒரு முடிவுக்கும் வரவேண்டாம். கருஞ்சட்டைத் தோழர்-களின் கனமான கருத்து இது என்ப-தற்காகவும் சஞ்சலப்படவேண்டாம்.
இரண்டு தரப்பு தகவல்களும் எடுத்துக் கூறப் பட்டுள்ளது. எது சரி என்ற முடிவுக்கு வரவேண்டியது பார்ப்பனர் அல்லாத மக்களின் கடமை _ இதைத்தான் நாங்கள் சுட்டிக்-காட்டுகிறோம்.
பார்ப்பனர்களை, சங்கர மடங்களின் சரிதங்களை, நடப்புகளைச் சரியாக உணர்ந்தவர்களுக்கு இந்தத் தகவல்கள் எல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்காது; அவாளின் புத்தி அப்படித்தான். சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்ற டாக்டர் டி.எம். நாயரின் கருத்து நூற்றுக்கு நூறு சரியே என்பதை ஒப்புக் கொள்வர். பக்தியின் போதை ஏறி பார்ப்பனீ-யத்தின் மடியில் வீழ்ந்து கிடப்பவர்கள் போதை தெளியும் வரை கடைத் தேறமாட்டார்கள்.
ஜெயேந்திரர் தங்கியுள்ள கலவையில் சங்கர மடத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 160 பேர்களும் பிராமணர்கள். வேதபாட சாலையில் பயிலும் 21 சிறுவர்களும் பிராமணர்களே. சொல்லுவது விடுதலை ஏடு அல்ல சங்கர மடத்தின் செல்லப் பிள்ளையான தினமணி (16_1_2005)
காஞ்சி சங்கர மடத்தால் காஞ்சியை-யடுத்த ஏனாத்தூரில் நடத்தப்படும் பல்கலைக் கழகத்தில் கூட பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்கிற பாரபட்சம் உண்டு.
நக்கீரன் இதழுக்கு (31_8_2001) மாண-வர்கள் அளித்த பேட்டி வருமாறு:
காலேஜ் அட்மிஷன்போதே நான்பிராமின் மாணவர்களிடம் லட்ச ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை நன்கொடை வசூல் பண்றாங்க . . . அதே சமயம் பிராமின் மாணவர்-கள்ட்ட வெறும் பத்தாயிரம், பதினைந்-தாயிரம் மட்டுமே வாங்கிக்கிறாங்க.
முதல்ல கடிகாஸ்தானம், அன்ன-பூரணிங்கற ரெண்டு ஹாஸ்டல் மட்டும்தான் இருந்தது. கடிகாஸ்-தானத்தில் சமஸ்கிருத வேதம் படிக்கிற மாணவர்கள் மட்டுமே தங்க வைக்கப்-பட்டாங்க. மற்ற பிராமின், நான்பிரா-மின் மாணவர்களை அன்னபூரணி ஹாஸ்டல்ல தங்க வச்சாங்க.
அதற்குப் பிறகு மூணாவது விசா-லாட்சி ங்கற பேர்ல ஒரு ஹாஸ்-டலைக் கட்டினாங்க. அதன் பிறகு போன நவம்பர், டிசம்பரில் எங்கள்ட்ட ஒரு ஃபாரத்தைக் கொடுத்து அதில் எங்கள் கேஸ்டையும் சப்--_கேஸ்டையும் தெளிவா எழுதிக் கொடுக்கச் சொன்-னாங்க. இதன் அடிப்படையில் பிரா-மின் மாணவர்களை மட்டும் தனியே பிரிச்சி அவங்களை விசாலாட்சி-யில் தங்க வைச்சிட்டாங்க.
ஹாஸ்டல் மாத வாடகையில் கூட இந்த இரண்டு கேட்டகரிக்கும் வித்தி-யாசம் உண்டு. மார்க் போடுவதிலும் பாரபட்சம்தாங்க.
உதாரணத்துக்குச் சொல்றோம். எங்க கூட படிச்ச பிராமண நண்பன் 14 பேப்பரில் 4 பேப்பரில் மட்டுமே பாஸ் பண்ணினான்; ஃபோர்த்து செமஸ்டர்ல அவனை கடிகாஸ்-தானத்தில் தங்க வைச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு அவன் எல்லா பேப்-பரையும் எழுதி கிளியர் பண்ணிட்-டான். எப்படின்னா . . . இண்டர்னல் மார்க்கை இவனை மாதிரி பிராமின் மாணவர்களுக்கு முழுசா போட்டு பாஸாக்கிடுவாங்க. நான் பிராமின் மாணவர்களுக்கு மினிமம் மார்க்கான 11 மார்க்கை மட்டுமே பெரும்பாலும் போடுவாங்க. அதே மாதிரி காலேஜ் காம்பஸ்ல உள்ள இன்டர்நெட் ப்ரவுசிங் சென்டரை பிராமின் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். யாராவது நான் _ பிராமின் மாணவர்கள் சொந்தமா ஹாஸ்டல்ல கம்ப்யூட்டர் வச்சிருந்தா அவர்களிடமிருந்து வருடம் 500 ரூபாயை வசூலிச்சுக்குவாங்க. பிராமின்-களுக்கு இந்தக் கட்டணம் கிடையாது. என்று பாதிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கொடுத்த பேட்டி நக்கீரனில் விலாவாரியாக வந்ததே. (31_8_2001)
இதற்குப் பிறகும் பிராமின் _ நான்பிராமின் பிரச்சினை எல்லாம் அவுட் டேட்டடு என்று யாராவது சொல்வார்களானால் அவர்களை விடசற் சூத்திரர்கள் (பார்ப்பனர்களின் அசல் வைப்பாட்டி மக்கள்) வேறு யாராகத்தான் இருக்க முடியும்?
வேத ரக்ஷண டிரஸ்ட்
ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்
வேத ரக்ஷணநிதி டிரஸ்ட்
வேதபாட நிதி டிரஸ்ட்
கன்னிகாதான டிரஸ்ட்
இந்த எல்லா டிரஸ்டுகளுமே காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்படுபவைதான். பார்ப்பனப் பிள்ளைகளுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பது, பார்ப்பனர்-களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பவர்-களுக்கு உதவி செய்வதற்கே.
சரி, கன்னிகாதான டிரஸ்ட் என்று சொல்லப்படுகிறதே. அதிலாவது கல்யாணம் ஆகாத பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கு ஏதாவது உதவி செய்யப்படுகிறதா என்றால், அங்கும் பூச்சியம்தான்.
இதுபற்றி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் (இரண்டாம் பாகம் - _ பக்கம் 903) ஜெகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ன எழுதுகிறார்?
மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாக காலேஜ் படிப்பு உத்தியோகம் என்று போய் சுயேச்சையாகத் திரியும்படி தண்ணித் தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழை பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டி-ருக்கிறது.
இப்படிச் சொல்கிறவர்தான் இந்த லோகத்துக்கே குருவாம் _ சூத்திர ஜாதியினருக்கு உள்பட.
என்னதான் லோகக் குரு என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் புத்தி மட்டும். எதையோதான் மேயப்-போகிறது என்பதை மறந்துவிடக்-கூடாது
இத்தனை டிரஸ்டுகளுக்கும் பணத்தை அள்ளிக் கொடுப்பது பார்ப்பனர்கள் மட்டும்தானா? எத்தனை எத்தனை சூத்திரத் தமிழர்கள் கொட்டிக் கொடுக்கிறார்கள்? காணிக்கை என்று கூறி பணத்தை வாரி இறைக்கிறார்கள்?
சூத்திரர்களுடைய பணமும், நிதியும் மட்டும் வேண்டும். ஆனால் உதவி மட்டும் அக்கிரகாரக் கும்பலுக்கே!
தமிழனின் பக்திப் போதை தலைக்கேறி ஏமாந்த சோணகிரியாக இருக்கு மட்டும் அக்கிரகார மேனிகள் ஏன் தமிழன் தலைகளைத் தடவ மாட்டார்கள் தொடையில் கயிறு திரித்துத் தூங்கவிடமாட்டார்கள்?
காஞ்சி சங்கர மட முழு பக்க விளம் பரத்தைக் கொஞ்சம் கூர்மையாகக் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு பிராமணன் வீட்டிலிருந்-தும் ஒரு பிராமணப் பையன் வேதம் படிக்க வேண்டும் என்று சொல்லு-வதைக் கூடப் புரிந்து கொள்ள முடி-கிறது _ காரணம் வேதம் அவாளுக்-காகவே உள்ளது.
சாஸ்திர சம்பிரதாயத்தை வலியுறுத்-தும் காஞ்சி மடம் வேதத்தை மட்டுமேதான் பிராமணர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் அல்லவா? ஏன் அவ்வாறு வலியுறுத்தவில்லை?
வேதபாடம் மட்டுமே வாழ்க்கையை நடத்துவதற்கான வருவாயைத் தராது என்பதால்... என்று இழுப்பானேன்? வேதபாடத்தாடு தற்கால கல்வியைப் போதிக்க திட்டமிடுவது ஏன்?
தங்கள் வசதிக்காக தங்கள் குல தருமத்தை மாற்றிக் கொள்வது ஏன்? வேத மரபையும் விட்டு விடக்கூடாது, தற்கால லவுகிக நாகரிக ஆடம்பர வாழ்-வையும் அனுபவிக்கவேண்டும் என்-பதிலே அவர்கள் குறியாக இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. அடேயப்பா! எவ்வளவு சாமார்த்தியக்காரர்கள்!
இன்னொன்றும் முக்கியமானது; கன்னிகாதான டிரஸ்ட் கல்யாணம் ஆகாத பிராமணப் பெண்களுக்கு என்று சொல்லும்போது சந்திரசேக-ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?
மற்ற ஜாதிகள் பிராமணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை
பெருவாரியாக காலேஜ் படிப்பு, உத்தியோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படி தண்ணி தெளித்து விட்டிருக்கிற நிலைமையோ இல்லை என்கிறாரே பார்க்கலாம். பார்ப்பனப் பெண்கள் பெருவாரி-யாகக் காலேஜில் படிப்பது _ பெரு-வாரியாக உத்தியோகம் பார்ப்பது என்கிற அவர்களின் வசதியான வாய்ப்-பைக் கூட குறை கூறுவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் பார்ப்பனீய சாமர்த்தியத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனப் பெண்கள் அதிகமாகப் படிப்பது _ உத்தியோகம் பார்ப்பது கிரிசை கெட்டத்தனம் என்றால் சங்கராச்சாரியாரின் கடமை என்ன?
பிராமணப் பெண்களே படிக்கா-தீர்கள் _ உத்தியோகத்துக்குப் போகா-தீகள் என்று அதட்டிச் சொல்ல வேண்-டியதுதானே _ அது போன்ற சாஸ்திரத்தைக் கட்டிக்காக்கத்தானே சங்கராச்சாரியார் இருக்கிறார்?
அவர் பாவம் பணக்காரர்! அவருக்கு ஏழடுக்கு மாளிகை. எவ்வளவு கஷ்டம் தெரியுமா? பத்து கார் சொந்தத்தில் வைத்துள்ளார். எவ்வளவு சிரமம்,
காதில் வைரக் கடுக்கண். எவ்வளவு கஷ்டம்... என்று ஒருவர் சொன்னால் அவனைச் சூதன் _ சூழ்ச்சிக்காரன் என்று சமுதாயம் சொல்லும். அதே பாணியில் அதிகப் பார்ப்பனப் பெண்-கள் படிக்கிறார்கள் _ உத்தியோகத்துக்குப் போகிறார்கள் _ இவை எவ்வளவுக் கிரிசை கெட்டத்தனம் என்று சொல்-லும் சங்கராச்சாரியாரை ஏமாற்றுக்காரர் என்று
சொல்வதில்லை. மாறாக ஜெகத்குரு என்று சொல்கிறார்கள் என்றால்
சொல்லுகிறவர்களின் மண்-டையில் பார்ப்பனிய அடிமைத்தனம் என்ற களிம்பு அளவுக்கு மீறி ஏறி இருக்கிறது என்றுதானே பொருள்?
------ மின்சாரம் விடுதலை ஞாயிறு மலர் (12.06.2010)

Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மடையர்களாகிய சூத்திர மரமண்டைகள் யோசிக்க வேண்டிய கருத்துக்கள். தகவலுக்கு நன்றி.
முனைவர் கந்தசாமி அய்யாவின் பின்னூட்டத்திற்கு நன்றி
கருத்துகளுக்கு நன்றி.அப்படியே பெரியாரின் கருத்துகளுக்கு தனியுரிமை கோரிய வீரமணியின் வழக்கு தோல்வி பற்றியும் கொஞ்சம் எழு தினால் நலம் பயக்கும் ஏனென்றால் விழிப்புணர்வு என்பது ஒரு வழிப் பாதையல்ல
Kaanikai kodukara soothirargalaiyum uthaithal intha nilamai sari aaga vaippundu. Nalla pathivu
பெரியாரை விற்று காசு பார்க்காதே! என்ற நீதியின் குரல் என் காது மடலோரம் கேட்கிறது!
வருண பேதமா ? அப்படி ஒண்ணு இப்ப கிடையேவே கிடையாது என்று சொல்லும் பருப்புகளுக்கு இந்த பதிவை நான் பரிந்துரைக்கிறேன்
Post a Comment