வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 05, 2010

எங்களுக்கு பெருமாள் தேவையில்லை!..வள்ளுவனே தேவை!!


நான் ஐந்து நாள் விடுப்பில் எங்கள் ஊருக்கு மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேலவாசல் சென்றேன். அங்கு எங்கள் கழக தோழர் ஒருவர் ஒரு கவிதை புத்தகத்தை கொடுத்து படிக்குமாறு சொன்னார்.எனக்கு கவிதை படிக்கும் பொறுமையே கிடையாது என்றேன். அப்புறம் தான் தெரிந்தது இது மிகவும் மாறுபட்ட கவிதைகள் என்று. அந்த நூலின் பெயர் "புரட்சிப்பூக்கள்". தமிழ் நாட்டின் பகுத்தறிவு, சுயமரியாதை கோட்டை என்று அழைக்கப்படும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி. அதற்க்கு அருகே உள்ள செழிப்பான வடசேரி என்ற கிராமத்தில் உள்ள திரு.க.சோ.சிவசுப்பிரமணியன் அவர்கள் இந்த அருமையான கவிதைகளை "புரட்சிப்பூக்கள்" என்ற கவிதை நூலின் வழியாக நம் இளைய தலைமுறையினரிடையே புரட்சியை தூண்டுகிறார். 144 பக்கங்களை கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு கவிதையும் புரட்சிதான். அதனை என்னுடைய வலைப்பதிவில் பகுதி பகுதியாக உங்களுடன் பங்கிட்டு கொள்ள விரும்பி ..இதோ....பகுதி - I


சாமியார் ஜாக்கிரதை
நம் நாட்டில் சாமியார்கள்
உருவாகிறார்கள்!
வெளிநாட்டில் விஞ்ஞானிகள்
உருவாகிறார்கள்!
வானத்தை முட்டும்
அறிவியல் அறிஞர்கள்
சாதனை நம்மை
வியக்க வைக்கிறது!
பெண்ணை மயக்கும்
சாமியார் கொடுமை
நம்மை மருள வைக்கிறது!
திருச்சி
பிரேமானந்தாசாமியார்,
காஞ்சிபுரம்
சங்கராச்சாரியார்,
ஆந்திர
புட்டபர்த்தி சாமியார்,
சிருங்கேரி
சங்கராச்சாரியார்,
டெல்லி
நிர்வாணச் சாமியார்,
எங்கும்
சாமியார் எனும்
சாக்கடை நாற்றம்
நச்சுக் காற்றாய்
சுற்றுகிறது!
தமிழர்களே!
ஜாக்கிரதை.....

யார் தேவை
 இரண்டு அடியில்
உலகை அளந்த
பெருமாள்
எங்களுக்கு தேவையில்லை!
ஒன்றே முக்காலடியிலே
உலகை அளந்த
வள்ளுவனே தேவை!!

--------------- புரட்சி பூக்கள் தொடரும்
                                                                                                                                                   
                                                                                                                                                     
                                        
 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]