வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 19, 2010

சார் நாங்க பிராமணாஸ்தான் தமிழுக்கு நாங்க எதிரி இல்லை

தமிழ் மறைகளை வழங்கிய தெய்வத் தமிழ்ப் புலவர்களின் படிமங்-களுக்கு இங்கு இடமில்லை என்றும் தமிழ் மொழியில் குடமுழுக்குக் செய்யப்பட்ட அச்சிலைகளைத் தொடுவதே தீட்டு என்றும் ஒரு கோயில் நிருவாகம் கூறியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில்தான் அது.
பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு நேரில் வந்து பாடிய திருஞான சம்பந்தர் உள்பட அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மற்றும் தமிழ் வளர்த்த அடியார்கள், மன்னர்கள், உலகப் பொதுமறை கொடுத்துச் சென்ற அய்யன் திருவள்ளுவர் என மொத்தம் 100 பேரின் உருவச் சிலைகளுக்குத்தான் இக்கோயில் நிருவாகம் இடமில்லை என்றும் அலட்சியப்படுத்தியுள்ளது.

ஏன்? என்ன காரணம்? சிவனடி-யார் திருக்கூட்டம் என்ற அமைப்பின் தலைவர் தியாகராஜனே முழு விபரத்-தையும் நம்மிடம் பேசுகிறார். அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாடல்கள், தேவாரம், திருவாசகம் எனத் தமிழின் இதிகாசப் பாடல்களைக் கடவுளிடம் பாடுவதுதான் எங்கள் வேலை. பவானியில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முடிவு செய்தோம். அறு-பத்து மூன்று நாயன்மார்கள், தொகை-யடியார் ஒன்பது, பன்னிரு திருமுறை-களை அருளிய அருளாளர்கள், மாமன்னன் ராஜ ராஜசோழன், பெரிய புராணம் பாடத்தூண்டிய அநபாயச் சோழன், ஞானசாஸ்திரங்கள் கொடுத்த சந்தானக் குரவர்கள், வாழ்வியல் நெறி வழங்கிய அய்யன் திருவள்ளுவர் வரை 100 பேரின் திருவுருவச் சிலைகள் செய்து அதைத் தமிழில் குடமுழுக்கு நடத்திப் புண்ணிய ஸ்தலமான பவானி சங்க-மேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்குவது என்பதுதான் எங்கள் முடிவு. அதன்-படித் தமிழை நேசிக்கும் அடியார்கள், பக்தர்கள், அன்பர்கள் என்று பலரிட-மும் நன்கொடை பெற்று ஒவ்வொரு சிலையையும் சுமார் இருபதாயிரம் மதிப்பில் அய்ம்பொன்னில் மிக அழ-காக நேர்த்தியாகச் செய்து முடித்தோம்.

இந்த நிலையில்தான் முறைப்படி இந்து சமய அறநிலையத்துறையிடம் அணுக வேண்டும் என்று துறை அமைச்-சர் பெரியகருப்பனைச் சந்தித்தோம். 100 சிலைகளையும் நாங்களே தமிழில் குடமுழுக்குச் செய்து கொடுக்கிறோம். அதை அப்படியே சங்கமேஸ்வரர் கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து வழிபடலாம் என்றோம். அமைச்சரும் அதிகாரிகளிடம் கூறிவிடுகி-றோம் கொடுங்கள் என்றார். அதன்பிறகு கோவையில் உள்ள இணை-யாணையாளர் எங்களை அழைத்துக் கோயில் செயல் அலுவலருக்குக் கடிதம் அனுப்பி விட்டேன். நீங்கள் போய் அவரைப் பாருங்கள் என்றார்.
தீர்மானித்தபடி நாங்கள் குட-முழுக்கு (கும்பாபிஷேகம்) வேலையில் இறங்கினோம். 16.5.2010 அன்று காலை தமிழ்ப் பண்டிதர்கள் தமிழ் மந்திரங்கள் பாட தவத்திரு குன்றக்குடி பொன்னம்-பல அடிகளார் உள்பட தமிழ் அடியார்கள் பலரது முன்னிலையில் 100 சிலைகளுக்கும் தமிழில் குடமுழுக்குச் செய்து முடித்தோம்.

இந்நிலையில், பவானி சங்கமேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சக்தி சுகர்ஸ் நிறுவனங்களின் நிருவாக இயக்குநரான மாணிக்கம் எங்களிடம் தமிழா, சமஸ்கிருதமா என்ற புதிய பிரச்சினையை உருவாக்காதீர்கள். இங்குக் கோயிலில் ஒரு நடைமுறை உள்ளது. கோயில் குருக்கள் நீங்கள் கொடுக்கும் சிலைகளைத் தண்ணி தெளித்துப் புண்ணியாட்சனை செய்து சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்துதான் _ அதுவும் நல்ல நாள் பார்த்துத்தான் வாங்குவார்கள். இது உங்களுக்குச் சம்மதம் என்றால் அதன்படி செய்யுங்கள். இல்லையென்-றால் நீங்களே தனியாக ஒரு கோயில் கட்டி அந்த 100 சிலைகளையும் வைத்து வழிபட்டுக் கொள்ளுங்கள், தேவையில்-லாமல் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம் என்றார்.

மீண்டும் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரனைப் போய்ப் பார்த்தோம். அவர், நீங்கள் தனியாகக் கோயில் கட்டிக் கொள்ளுங்கள், சிலைகளுக்கு இங்கு இடமில்லை என்று கூறிவிட்-டார். என்ன செய்வது என்றே தெரிய-வில்லை. குடமுழுக்குச் செய்யப்பட்ட 100 சிலைகளையும் எங்கள் அமைப்பின் நிருவாகி ஒருவரின் வீட்டில் வைத்துப் பூஜை செய்து பாதுகாத்து வருகிறோம். தமிழக முதல்வர் கலைஞருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். 63 நாயன்மார்கள், புலவர்கள், பண்டிதர்களின் திருமேனிச் சிலைகளைச் சமஸ்கிருதத்தில் மீண்டும் குடமுழுக்குச் செய்யாமல் அப்படியே கோயிலில் வைத்து வழிபாடு செய்ய உத்தரவிட முதல்வரால்தான் முடியும். அந்த நம்பிக்கையோடு உள்ளோம் என்றார்.
நாம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மாணிக்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். சக்தி சுகர்ஸ் நிருவாகம் பிறகு பேசுங்கள். என்ற பதிலையே தந்தது. கோயில் செயல் அலுவலர் பாஸ்கரனைக் கோயிலுக்குச் சென்று நேரில் சந்தித்தோம். அதெல்-லாம் யார் வேணும்னாலும் நான் அதைத் தர்றேன் இதைத் தர்றேனு சொல்லி வாங்கிக்க முடியுமா? அந்தச் சிலைகளை வைக்க இங்க இடம் இல்லை. அப்படியே வைக்கறதுனா இங்க உள்ள வழக்கப்படி -_ சமஸ்கிருதப்-படி-தான் நடக்கும். கோயில் அறங்காவலர் குழு முடிவும் அதுதான். அமைச்சர் வைக்கச் சொன்னார்னு சொல்றீங்க. அவரையே வந்து தமிழில் மந்திரம் ஓதி இடம் பார்த்து வைக்கச் சொல்லுங்க என வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

சார் நாங்க பிராமணாஸ்தான் தமிழுக்கு நாங்க எதிரி இல்லை. ஆனா, எங்கள் சமுதாய வழக்கப்படிச் சமஸ்-கிருதத்தில்தான் குடமுழுக்குச் செய்ய வேண்டும், சமஸ்கிருதம்தானே கடவுள் மொழி. அந்தச் சிலைகளை கொண்டு வந்தால் அப்படியே வழிபட முடியாது. தண்ணி தெளித்துத் தீட்டுக் கழிப்பது வழக்கம்தான். இதையெல்லாம் எங்கள் கருத்து என்று நீங்கள் எழுத வேண்-டாம் என் கோயில் குருக்கள் சிலர் பெயர் கூற விரும்பாமல் நம்மிடம் பேசி-னார்கள்.

அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என விஞ்ஞான வளர்ச்சியில் தமிழ் உலக-ளாவிய வளர்ச்சி பெற்றாலும் தமிழ் வளர்த்த புலவர்களும், தமிழ்மொழியும் நம் கோயில் கருவறைக்குள் கோயில் வளாகத்திற்குப் போகக்கூட முடியாமல் இன்னமும் அவாள் கூட்டம் தடுத்துக் கொண்டேதான் உள்ளது.

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்-குள் 100 சிலைகள் நுழையுமா? சமஸ்-கிருதத்தால் தீட்டுக் கழிக்கப்படுமா? இவையெல்லாம் முதல்வர் உத்தரவில்-தான் உள்ளது.

- ஜீவாதங்கவேல்
நன்றி: நக்கீரன் 4.6.2010

2 comments:

Thamizhan said...

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சிதான்.
லத்தீன் மொழியில் ஆராதனை செய்த கத்தோலிக்க மதம் இன்று அவரவர் மொழியில் செய்கிறது.
சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த கடவுள், கடவுளா,பார்ப்பனனா?
தமிழால்,தமிழ்ர்களால் உஞ்ச விருத்தி செய்து வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்களுக்குத் தமிழின் மீது பிழைப்புத்தான் உண்டே தவிர மதிப்போ,மரியாதையோ,தாய்மொழிப் பற்றோ கிடையாது.இருந்த ஒரு சிலர் மறைந்து விட்டனர்.
தி மு க என்று பார்ப்பன, பத்திரிக்கை பலம் என்று நினைப்பதிலிருந்து துணிவுடன் வெளியேறுகிறதோ அன்று தான் தமிழ் உண்மையான செம்மொழி தகுதி பெறும்.
கடந்த தேர்தல்களில் பார்ப்பனரின் பயமுறுத்துதல் வெத்து வேட்டு என்பது வெளிப்பட்டு விட்டது.
இன்னும் கலைஞர் ஏன் தான் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாரோ ?

பரணீதரன் said...

/* கடந்த தேர்தல்களில் பார்ப்பனரின் பயமுறுத்துதல் வெத்து வேட்டு என்பது வெளிப்பட்டு விட்டது.
இன்னும் கலைஞர் ஏன் தான் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாரோ ? */

பொறுத்திருந்து பார்ப்போம்.... அண்ணாவின் ஆரிய மாயை எங்கேனும் தென்படுகிறதா என்று...

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]