வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, June 29, 2010

மாணவர்களை சீரழிக்கும் கேம்ஸ் மையங்கள்

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் இயங்கி வரும் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்கள் வளரும் மாணவ சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றன.

 தமிழகத்தின் தலைநகரான சென்னையில் முறையற்ற பல்வேறு வர்த்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் பொதுவாக தங்களது குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் என பெற்றோர்கள் புகார் தெரிவிப்பதுண்டு.

 இந்நிலையில், பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் கேம்ஸ் மையங்களில் சிக்கி தினமும் பல்லாயிரக்கணக்கில் பணத்தை வீணடித்து வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராய நகர், அடையாறு உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் இத்தகைய மையங்கள் உள்ளன.

பந்தயப் போட்டிகள்: பொழுது போக்குக்காக விளையாடிய கார் பந்தயம், பைக் பந்தயம், சண்டை விளையாட்டுகள் போன்ற விளையாட்டுகளை, இப்போது மாணவர்கள் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

 சுமார் 5 அல்லது 6 மாணவர்கள் இணைந்து ஒரு குழுவாக இந்த மையங்களுக்குச் செல்கின்றனர். இதே போன்று வரும் வேறு ஒரு குழுவினருடன் இந்த பந்தய விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

 ஒரு தடவை விளையாடுவதற்கு சுமார் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.5000 வரை பந்தயம் கட்டுகின்றனர். குழுவின் தலைவர்கள் இருவரும் விளையாடுகின்றனர். இதில் ஜெயிக்கும் குழுவுக்கு மொத்த பணமும் போய்விடுகிறது.

பள்ளி,கல்லூரிகளை புறக்கணித்து...விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள மோகத்தினால், பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்துவிட்டு இதில் புகுந்து விடுகின்றனர். பள்ளிக்குச் செல்வதுபோன்று கிளம்பி, இந்த மையங்களுக்குள் சென்று விடுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர். பள்ளி சீருடைகளுடன் மையங்களில் இவர்கள் விளையாடி வருகின்றனர்.

கடன் வைத்தும்...விளையாட்டு போதை தலைக்கு ஏற ஏற, பணம் தீர்ந்துவிட்டாலும், கடன் வைத்து விளையாடத் தொடங்குகின்றனர். கடன் தொகை சில சமயங்களில் ஒரு மாதத்துக்கு ரூ. 40 ஆயிரத்தைக்கூட தொடும் என்றும், ஒரு மாத முடிவில் தோற்றவர்கள் இதனை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் இவர்களுக்குள் விதி உண்டாம்.

புதியவர்களுக்கு வாய்ப்பில்லை...கடன் வைத்தவர்கள் தங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால், பழகிய அல்லது பல நாள்களாக அந்த மையத்தில் விளையாடுபவர்கள், அவர்கள் வீட்டின் தொலைபேசி எண், வீட்டு முகவரி, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் அறிந்த பின்னரே பந்தயம் தொடங்குகிறது. பணம் கொடுக்காமல் ஏமாற்றியவர்களின் பகுதிக்கே சென்று தகராறு செய்யவும் தயங்குவதில்லை. இதனால் கடன் வைத்து விளையாடும் பந்தயத்துக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு இல்லை எனவும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

உரிமையாளர்கள்...சாதாரண கம்ப்யூட்டர் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.10லிருந்து ரூ.25, ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கேம்ஸ் மையங்களில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50லிருந்து ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. 5 பேர் கொண்ட இரு குழுக்கள் ஒரு மணி நேரம் விளையாடினாலே ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேம்ஸ் மையங்களின் உரிமையாளர்கள் இதில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

நள்ளிரவு வரை...இவ்வாறு லாபம் கொழித்து பழக்கப்பட்ட கேம்ஸ் மையங்கள் நள்ளிரவு வரை செயல்படுகின்றன. இதனால் நள்ளிரவு வரை இந்த பந்தய ஆட்டம் தொடர்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெரிய இடத்து விவகாரம்...பெரிய இடத்துப் பிள்ளைகளும், நடிகர்களின் வாரிசுகளும், அரசியல்வாதிகளின் வாரிசுகளும் அதிக அளவில் இந்த மையங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவையெல்லாம் பெரிய இடத்து விவகாரம் என்பதாலேயே இத்தகைய மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸôர் தயங்குகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள போலீஸ்காரர்களுக்கும் மாதம் தவறாமல் "கவனித்துவிடுவதால்' அவர்களும் இதனைக் கண்டு கொள்வதில்லை. இங்கு விளையாட வரும் பெரிய இடத்து பிள்ளைகள் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களிலும் சில சமயம் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஏழை பெற்றோரின் கதி என்ன? பணக்கார வீடுகளில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. நடுத்தர வர்கத்து பிள்ளைகளுக்கும் இந்த விளையாட்டு மோகம் தொற்றிக் கொள்வதால், அவர்கள் பணத்துக்காக வீடுகளிலேயே மோசடி செய்வதாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் தந்தை கவலை தெரிவிக்கின்றார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால், தன் குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்று இரவும் பகலும் உழைக்கும் பெற்றோரின் கனவில் மண்ணை வாரி இறைப்பது எந்த விதத்தில் நியாயம்?

------------- நன்றி தினமணி (30.06.2010)




No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]