வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, June 17, 2010

ஆன்மீகத்தில் அசல் என்ன? நகல் என்ன?

கும்பகோணத்திற்கு டிக்கெட் வாங்கி-விட்டுக் கோயம்புத்தூர் ரயிலில் ஏறிப் பாதியில் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு அவமானப்படும் புத்திசாலிகள் இவரைப்போல் பலர் உண்டு. அந்த இவர் சாருநிவேதிதா எனும் எழுத்தாளர். இவர் கற்றுத் தேர்ந்த ஆன்மீகப் பகுத்தறிவால் ஆரம்பத்திலேயே நித்தியானந்தா ஒரு போலி என்று எச்சரிக்கவில்லை. பாமரர்-கள் ஏமாறுவதில் வியப்பென்ன?

நித்தியானந்தா சாமியாரின் பேச்சுத்திறமை, எழுத்துத் திறமை, ஹீலிங்சக்தி ஆகியவற்றால் ஈர்க்கப்-பட்ட சாரு நிவேதிதா சாமியாரின் பப் டெக்னிக்கில் (பெண்களுக்கு மது இலவசம்) சுத்தமாக விழுந்து விட்டாராம். நித்தியானந்தா சாமியார் பேசியதும், எழுதியதும் சொந்தச் சரக்கல்ல, திருமூலரின் திருமந்திரம் நூலில் இருக்கும் கருத்துகளின் பிரதிதான் என்பதுகூடப் புரியாத பாமர எழுத்தாளரே சாருநிவேதிதா என்பதை எண்ணிப் பரிதாபப்படுகிறோம்.

நித்தியானந்தா போன்ற சாமியார்களைக்கூட மன்னிக்கலாம். ஏனென்றால் கடவுளின் பெயரால் ஏமாற்றுவதும், மோசடி செய்து பணம் சேர்ப்பதும் அவர்களின் இயற்கையான குணம். ஆனால், நித்தியானந்தா மட்டுமே மோச-மானவன் என்றும் ஆன்மீகம் அற்புதச் சக்திகளை வழங்கவல்லது என்றும் இன்னமும் ஆன்-மீகத்துக்கு வக்காலத்து வாங்கும் சாரு நிவேதிதாக்-கள் ஆயிரம் நித்தியானந்தாக்களுக்குச் சமம்.

ஒரு போலிச் சாமியார் செய்த அநியாயத்தால் எப்படி நம்மைச் சுற்றி இயங்கும் பிரபஞ்சச் சக்தியின் எல்லையற்ற அற்புதங்களையும் அதிசயங்-களையும் பகுத்தறிவு என்ற அளவு-கோலால் நாம் அளக்க முடியும்? எந்தப் பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் களிமண் உருண்டைகளைப் போன்ற கணக்கற்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சூட்சும விதிகளை எப்படிப் பகுத்தறிவால் புரிந்து கொள்வது?---- தத்துவமேதை சாரு நிவேதிதா உதிர்த்திருக்கும் இந்த மணி வாசகங்கள் போதும், இந்த ஆன்மீகப் புரோக்-கரின் அறிவுக் கூர்மையைப் புரிந்து கொள்ள.

தன்னுடைய ஆன்மீக நியாயத்திற்கு வலுச்-சேர்க்க இயேசுவையும், ஆதி சங்கரரையும், வள்ள-ளா-ரையும் சாட்சியமாக்குகிறார். இந்தக் கதை-களை எல்லாம் கண்டவர்கள் எவரும் இல்லை. சொன்னவர்களும் யார் என்று தெரியாது. மூச்சை அடக்கினால் சாவே இல்லை என்று போதித்த திருமூலரும் செத்துப்போனார்.

தோன்றுவதும், அழிவதும் இயற்கையின் பொதுவிதி. கடவுள் என்று எதுவும் இல்லை. கிரகங்-களையும், நட்சத்திரங்களையும் கடவுள்-தான் தாங்கிக்கொண்டிருந்தால் புவி வெப்பமய-மாவது குறித்து விஞ்ஞானிகள் எதற்காகக் கவலைப்படவேண்டும்? சுனாமிகளைத் தடுக்கும் சக்தி கடவுளுக்கு இல்லையா? ஏழைகளின் வயிற்றில் அடிப்பவனை, திருடனை, பெண்பித்தனை, கொள்ளையடிக்கும் வியாபாரியை, ஊழல் செய்யும் அரசியல்வாதியை, நெறிதவறி வாழும் அயோக்கியனை எல்லாம் கடவுள் தண்டிக்காது. சிவன் சொத்தைக் கொள்ளை-யடிப்பவனை மட்டும் கடவுள் நாசம் செய்து விடும் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சாரு நிவேதிதா வெளியிட்டிருக்கிறார்.

நித்தியானந்தர் பக்திவேடம் தரித்து 5000 கோடி சம்பாதித்ததை சிவன் தடுத்து நிறுத்த-வில்லை. போலீஸ்தான் அவனைக் கைது செய்தது. கடவுளின் பெயரால் எத்தனை மோசடிகள் தொடர்ந்தாலும் சாரு நிவேதி-தாக்கள் இருக்கும்வரைப் புதிய நித்தியானந்-தாக்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள். ஏமாளிகளான பக்தர்கள் கூட்டமும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

இந்தக் காலத்து வணிக எழுத்தாளர்கள் சுய அறிவில், பிறரை எடைபோடுவதில், கருத்துகளை _ தத்துவங்களை _ மனிதர்களைப் புரிந்து கொள்-வதில் எவ்வளவு அரை வேக்காடுகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே ஓர் வாழும் உதாரணம்.

நித்தியானந்தாவை அம்பலப்படுத்துவதாக எழுதத்தொடங்கி, இப்போது இமயமலைச் சாமியார் பாபாவின் அற்புதங்கள் என்றும், வீடியோ காமிரா வருவதற்கு முந்தைய காலத்தில் பரப்பப்பட்ட சாமியார்களின் அதிசயப்புளுகுக் கதைகளையும் எழுதத் தொடங்கிவிட்டார். சராசரி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படாத இந்தச் சாமியார்களின் கதைகளால் சமூகத்திற்கு என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?

வெளிச்சத்திற்கு இருள், நன்மைக்குத் தீமை, கடவுளுக்குச் சைத்தான் என்ற தத்துவ முத்துக்-களை உதிர்த்திருக்கும் சாரு நிவேதிதா, வெளிச்சமாகவும் _ இருளாகவும், நன்மையாகவும் _ தீமையாகவும், எல்லாமும் ஆக இருப்பது கடவுளே என்பதை நம்பவில்லை. ஏனென்றால், சரியான ஆன்மீக நம்பிக்கையுள்ளவன் சைத்-தானும் கடவுளின் ஒரு அம்சம்தான் என்பதை நம்பவேண்டும். சைத்தானுக்குக் கட்டுப்படும் அல்லது பணிந்துவிடும் ஒரு சக்தியை எப்படிக் கடவுள் என்பது? அவனன்றி ஓரணுவும் அசையாதென்றால் சைத்தான் எப்படி இயங்க முடியும்? ஆக, சைத்தானும் கடவுளும் வேறல்ல.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தின் குரல் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார் சாரு நிவேதிதா. அது, சரி என்றால் நித்தியானந்தா சாமியாரிடம் இருந்து வந்ததும் தெய்வத்தின் குரல்தானே?

பெரியாரால் முடியாமல் போன பகுத்தறிவுப் பிரச்சாரத்தை நித்தியானந்தா செய்து முடித்து-விட்டதாகச் சாருநிவேதிதாவின் ஒரு நண்பர் சொன்னாராம். ஆன்மீக மூடத்தனங்-களை எழுத்தாக்கி வளர்த்துவரும் சாரு நிவேதிதாவே இன்று பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு ஒரு விதையாகியிருக்கிறார். இவரது உளறல்களைப் படிக்கும் வாசகர்கள் கண்டிப்பாக பகுத்தறி-வாளர்-களாக மாறுவார்கள் என்பது நிச்சயம். கடவுள் என்று தனியாக எதுவும் இல்லை. கடவுளே பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற போலித்தனங்களின் வடிவம்தான்_ கற்பனை-யான ஒரு மோசடிதான்.

------------வெ.ஜவகர் ஆறுமுகம் , நன்றி உண்மை (June 16-30) மாதம் இருமுறை
                                                                                                                                                                 





1 comment:

Unknown said...

ஒரே தொழிலில் இருக்கும் இருவர்,தூற்றிக் கொள்வது சங்க காலத்தில் இருந்து வழக்கமானதே!
"கூட்டத்திலே கட்டுச் சாதத்தை அவிழ்க்க மாட்டாது!"

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]