வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 12, 2010

மானமிகு இல்லையேல் இந்த மாண்புமிகுவுக்கு அர்த்தம் இல்லை

1980 இதே நாளில்தான் (12.6.1980) குற்றாலம் _ பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மானமிகு என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
கழகத் தோழர்கள் ஒருவருக்கொருவர் அழைக்கும்பொழுதும், கடிதம் எழுதும் போதும் இனி மானமிகு தோழர் என்று குறிப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அன்று
 மாலை திருவை-குண்டம் பொதுக்கூட்டத்-திலும் அந்தச் சொல்லை வெளிப்படுத்தினார்.
அந்தச் சொல் இப்-பொழுது உலகம் முழுவதும் பரவி தனி மதிப்புடன் சுடர் விடுகிறது.

தமிழர் தலைவர் தமி-ழுக்குக் கொடுத்த பல புதிய சொல்லாக்கங்களில் மான-மிகு என்ற சொல்லும் தொண்டறம் என்ற சொல்-லும் தனித்தன்மை வாய்ந்த-வையாகும்.

1980 இல் தமிழ்நாடு சட்-டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றி பெற்ற நிலையில் கீழ்க்கண்ட சுவ-ரொட்டி ஒன்று நாடெங்கும் ஒட்டப்பட்டது.
நசுக்கப்படும் சமுதாயத்-தின் உற்ற துணைவன் _ நாடோடிகளின் மன்னன் _ வீரியத்துடன் ஆரியத்தை அரவணைக்கும் அண்ணாவின் தம்பி உன் வெற்றி வாழ்க! வளர்க!!
- - முத்து வெங்கடராமன் ஆரிய தலைவன்

ஏதோ தனி மனிதர் அச்-சிட்டதாகக் கருதத் தேவை-யில்லை. இதன் பின்னணி-யில் பார்ப்பனர்கள் _ அவர்-களின் சங்கம் பலமாகவே இருந்தது.

அந்த நிலையில்தான் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தச் சொல்லை அறிமுகப்-படுத்தியதோடு அல்லாமல், நாடெங்கும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்-டையும், அடுத்த கட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு மாநாடுகளையும் அதே திருநெல்வேலியில் தொடங்கி (12.7.1980) வேலூர் ஈறாக (24.4.1982) அலை அலையாக நடத்திக் காட்டி-னார்.

நெல்லை மாநாட்டை-யொட்டி பார்ப்பனர்கள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பல புகார்-களைத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் செயலா-ளர் கார்த்திகேயன் விளக்கம் கேட்டு கடிதமும் எழுதியி-ருந்தார்.

அதற்கு அறிவார்ந்த முறையில் பதிலடி கொடுத்து எழுதினார் தமிழர் தலைவர். இந்தப்
போலிக் கூப்பாடுகள் (False Alarm) புதிதான ஒன்-றல்ல _ கடந்த காலங்களில் கழகம் சந்தித்தவைதான். திராவிடர் கழகம் பார்ப்பன எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்லும் என்று கறாராக எழுதினார்.

இந்த மானமிகு என்ப-தற்கு இவ்வளவு பின்னணி உண்டு; நமது மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்-கள்கூட தன்னைப்பற்றி ஒரு வரியில் குறிப்பிடும்பொழுது மானமிகு சுயமரியாதைக்-காரன் என்றே பெருமை பொங்கக் கூறினார்.

அதனை-யும் தாண்டி இந்த மானமிகு இல்லையேல் இந்த மாண்புமிகுவுக்கு அர்த்தம் இல்லை என்றும் சொன்னாரே! (முரசொலி, 15.9.2006)

------ நன்றி விடுதலை மயிலாடன் (12.06.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]