வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, June 05, 2010

கிழவிக்கு குழந்தையாம்...புளுகடா புளுகு!

தலைப்பைப் படித்து விட்டு, ‘ஆன்மிகமா’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்தச் செய்தி ஆன்மிகம் மட்டுமல்ல, சமூகப் பண்பாடும் சார்ந்தது.

மதுரை மேலூரில் சாலை-யின் மேல் அமைந்துள்ளது கிழவி அம்மன் கோயில். சுற்றிலுமுள்ள 18 பட்டியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்குப் பாத்தியப் பட்ட கோயில் இது. அது மட்டுமல்ல... அச்சமூகத்தைச் சேர்ந்த 7 கரைகளின் குல தெய்வமும் இந்தக் ‘கிழவி அம்மன்’தான். ஜாதி, மதப் பேதமின்றிக் குழந்தை வரம் வேண்டி இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

இக்கோயிலுக்குப் பின்னால் இருக்கும் வரலாறு நெகிழ்ச்சியானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வயதான தம்பதி வாழ்ந்து வந்தனர். கிழவியின் ஊர் மேலூர் அருகேயுள்ள சூரைகுண்டு. கிழவனின் ஊர் முன்றவன் கூட்டம். இவர்களுக்கு 60 வயதாகியும் குழந்தை யில்லை. இதனால் விரக்தியடைந்த கிழவன், ஒரு சந்தர்ப்பத்தில் கிழவியைத் திட்டி, அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனால் மனமுடைந்த கிழவி, தாய் வீட்டுக்குச் செல்லும் வழியிலுள்ள அழிசி மரநிழலில் அமர்ந்து அய்யனாரை நினைத்து வேண்டியிருக்கிறார். அந்தச் சமயம், அய்யனார் ஒரு சிறுவன் வடிவில் வந்து, ‘நீ உன் பிறந்தவீட்டுக்குப் போ. எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியிருக்கிறார். சிறுவன் என்றாலும் அவன் சொன்ன தொனிக்குக் கட்டுப்பட்டு, கிழவியும் தன் பிறந்த வீட்டுக்குப் புறப்பட்டி ருக்கிறார். வழியில் அவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது. பயந்து போன கிழவி, பிறந்த வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறியிருக்கிறார். கோடங்கி அடித்துப் பார்த்ததில், சிறுவனாக வந்தது அய்யனார் என்று தெரிய வந்திருக் கிறது. கிழவி மட்டுமல்ல, நடந்ததற்காக வருந்தி தன் மனைவியைப் பார்க்க வந்த கிழவனும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

கையோடு கிழவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் கிழவன். அய்யனார் வாக்களித்தபடியே அதன் பிறகு இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந் துள்ளன. அய்யனாரே வந்து அருளியதற்காகவும், 60 வயதுக்குப் பிறகு 3 குழந்தைகளைப் பெற்றதற்காகவும் கிழவியைத் தெய்வமாகவே நினைத்து அப்பகுதி மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.

“இங்க வந்து குழந்தை இல்லாதவங்க கும்பிட்டா, நிச்சயம் குழந்தை பிறக்கும். தனக்கு ஆறுதல் சொன்னது அய்யனார்தான்னு தெரிஞ்சதும், எந்த இடத்துல தனக்கு ஆறுதல் கிடைச்சுதோ, அந்த இடத்துல அய்யனாருக்குக் கோயில் எழுப்பி, தான் வாழ்ந்த காலம் முழுக்க ஆண்டுதோறும் மண்ணுல குதிரை வைச்சு கிழவி வழிபட்டாங்க. அதை நாங்களும் விடாம செஞ்சுக்கிட்டு இருக்கோம்’’ என்கிறார் கோயில் பூசாரி. (தினகரன்_வசந்தம் 16.05.2010)

மேற்கண்டவற்றைப் படிக்கும்போது, புளுகுவதிலும் ஓர் அளவு வேண்டாமா என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா?

360 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று கூறப்பட்டுள்ளது. அதற்குப் பின் இந்தக் கிழவி அம்மன் பிள்ளைப் பாக்கியம் கொடுக்காதது ஏன்?
யாரும் இந்தக் கிழவியிடம் அவ்வாறு வரம் கேட்க வாய்ப்பில்லையா!

360 ஆண்டுகளுக்கு முன் என்றால் கதையளக்கலாம். இப்பொழுது நடந்தது என்றால் அதுபற்றி விசாரணை நடத்தி உண்மையா என்று ஆராய முற்படுவார்களே. அப்பொழுது இவர்களின் குட்டு உடைபட்டுப் போகுமே! ஏமாற்றுதல் _ மோசடி இவற்றின் கூட்டுத் தொகைதான் பக்தியோ!

கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு இப்பொழுது நியாயம் தெரிந்திருக்குமே!

------ நன்றி விடுதலை ஞரயிருமலர் (22.05.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]