வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, June 07, 2010

கர்ப்பக்கிரகம் என்றால், கர்ப்பத்தை உண்டாக்கும் கிரகமோ!


கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே, பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகள் புதைகுழிக்குள் போய்விட்டதா?
- ச.ந. தர்மலிங்கம்,சத்தியமங்கலம்

பதில்: புதிதாய்த் தோன்று-வது கோயில்கள் அல்ல; உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதை குழியில் புதைய இருப்-பவர்களைக் காப்பாற்றுவ-தற்காக. (குமுதம், 9.6.2010, பக்கம் 18, அரசு பதிலகள்)

பரவாயில்லையே, அரசு உருப்படியாக ஒரு பதிலை சித்திரம் செதுக்கியதுபோல பிசிறு இல்லாமல் கடைந்தெ-டுத்து வார்த்துக் கொடுத்துள்-ளாரே _ பலே, பலே! என்று பாராட்டவேண்டும்தான்!

கோயில்களில் உண்டியல் வைக்கக்கூடாது என்று ஒரு சட்டம் போடட்டும் _ முதலில் கோயில் அர்ச்சகனே கோயி-லுக்குப் போவானா என்பது-தான் முக்கிய கேள்வியாக இருக்கும்.

இந்து அறநிலையத்துறை சிதம்பரம் கோயிலுக்குள் உண்டியலை வைத்து, தன் கட்டுக்குள் அதனைக் கொண்டு வந்து விட்டது என்றவுடன், அந்தக் கோயில் தீட்சதப் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? நமக்குக் கிடைக்காதது நாசமாகப் போகவேண்டும் என்ற பரந்த இதயத்தால் அந்த உண்டிய-லுக்குள் எண்ணெய்யையும், நெய்யை-யும் ஊற்றி ரூபாய் நோட்டு-களைப் பாழடித்-தார்களே _ அதன் பொருள் என்ன?

சாணக்கியனாகிய கவுடில்-யனின் திட்டப்படி கோயில்கள் என்பவை வருவாய்க்காக அரசன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது-தானே!

பக்தி என்பது ஒரு பிசி-னஸ் என்று சங்கராச்சாரியார் கூறவில்லையா? கொலை, கொள்ளை செய்யத் துணி-கிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்-தனை செய்துகொண்டு தப்பித்-துக் கொள்வதற்கு வழி தேடு-கிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகிவிட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

_இப்படி சொல்லியிருப்-பவர் யார் என்றால் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிதான் (குமுதம், 12.9.1996)

உண்மை இவ்வாறு இருக்-கும்போது பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை புதை குழிக்குள் போய்விட்டது என்று கூறுவது அபத்தமே!

தங்கத்தாலேயே கோயில் முழுவதும் ஒருவர் கட்டுகிறார் என்றால், இதற்குப் பணம் கொடுத்தவர் பகவானா? மக்களைச் சுரண்டுவது, தவ-றான வகையிலே கறுப்பாக வந்தது இந்தப் பணம் என்-ப-தல்லாமல், வேறு என்னவாம்?

கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் பாமர மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

அப்பாவிப் பெண்கள் கோயில் கருவறைக்குள்ளேயே கற்பழிக்கப்படுகிறார்கள் (கர்ப்பக்கிரகம் என்றால், கர்ப்பத்தை உண்டாக்கும் கிரகமோ!) அந்தக் கடவுளும் அதனைப் பார்த்துக்கொண்டே கையாலாகாதவனாக இருக்-கிறான்.

பெரியார் கொள்கை தோற்-றது என்பதற்கு இதுதான் அடையாளமா? கோவில் விபச்சார விடுதி என்று காந்-தியார் சொன்னதும் நிரூபிக்-கப்பட்டு விட்டதே!

இந்தப் பக்திப் புதை குழியில் புதைய இருப்பவர்-களைக் காப்பதற்காகத்தான் பெரியார் கொள்கை என்று குமுதம் அரசு கூறியிருப்பது மிகமிகப் பிரமாதம்! (Million Dollar Answer).

பக்தி வேடம் போட்ட ஒரு பார்ப்பனப் பெருச்சாளி குமுதம் நிதியைப் பெரும் அளவுக்குச் சுரண்டியது!

அரசுவின் பதிலில் அனுபவமும் கைகோக்கிறது _ என்று நம்பலாம்!

- விடுதலை (07.06.2010) மயிலாடன்



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]