வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, June 25, 2010

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே...

செம்மொழி மாநாட்டினால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு இந்து ஒரு கட்டுரை பதில் சொல்லும்..இதுபோல் செம்மொழி மாநாட்டின்  பல ஆய்வு கட்டுரைகள் நம் திராவிடர் தமிழர் பண்பாடு பற்றி விவாதிக்கிறது. இதோ ஒரு ஆய்வு கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.....
 
சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்கின்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்றுவரும் சூழலில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்துவெளிப் பண்பாடும் எழுத்துகளும் திராவிடத் தொடர்புகளும் என்ற பொருண்மையில் ஆய்வரங்கம் ஆராய்ச்சியாளர் அஸ்கோ பர்ப்போலா தலைமையில் செம்மொழி மாநாட்டில் நடைபெற்றது. சிந்துசமவெளி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஐராவதம் மகாதேவன், •ஷா யாதவ், ரோஜா முத்தையா ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுந்தர் கணேசன், ஒரிசாவில் பலகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கட்டுரைகளை அளித்தனர். 

குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் தற்போதுள்ள சில ஊர்கள், சில பெயர்களில் இருக்கும் ஒலிப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஊர், மக்கள், குழுக்கள் பெயரினை அப்படியே கொண்டிருப்பதாக ஆர் பாலகிருஷ்ணன் தனது ஆய்வுக் கட்டுரை மூலம் விளக்கினார். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்கள், ஆறுகள், மலைகள், துறைமுகங்கள், தலைநகரங்கள் பழந்தமிழ்க் குடிகள், வேளிர், அதியர் போன்ற குறு"லக் குடிகள் பெயர்களை •னைவூட்டும் இடப்பெயர்கள் இன்றும் வழக்கதில் உள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேலும் முன்னகர்த்திச் சென்றால், சிந்துசமவெளி நாகரீகம் திராவிட நாகரிகம் என்பதை •றுவ முடியும் என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதி: சிந்து சமவெளி நாகரிகம் ஒரு திராவிட நாககம் என்ற கருதுகோளும் (Dravidian Hypothesis) திராவிடர்களின் தோற்றம் பற்றிய பல்வேறு முன்மொழிவுகளும் இந்தியவியலின் மிக முக்கியமான ஆய்வுக் களங்கள் ஆகும். ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இரு வினாக்களுக்கும் இன்னும் முடிவான விடை கிட்டவில்லை. 

சிந்துவெளி நாகரிகம் தான்  திராவிட நாகரிகம் என்று கண்டறியும் சாத்தியக்கூறுகள் மிகுதி என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஐராவதம் மகாதேவன் ஒருபடி மேலாகச் சென்று, சிந்து சமவெளி எழுத்துகள் திராவிட மொழி சார்ந்தவை மட்டுமல்ல, பழந்தமிழ் அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று கருதுகிறார்.சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பது உண்மையானால் அதற்கான தடயங்கள், எச்சங்கள், சிந்து சமவெளி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தற்போது திராவிட மொழி பேசுவோர் வாழும் தென்னிந்தியப் பகுதிகளிலும் கண்டறியப்பட வேண்டும். அத்தகைய இருமுனைச் சோதிப்பிற்கான வாய்ப்பை பெயராய்வுக் களம் வழங்குகிறது. சிந்து சமவெளி ஆய்வில் இடப் பெயராய்வின் துணையை நாடுவதில் வியப்பொன்றும் இல்லை. ஹரப்பா நாககத்தின் மொழியைக் கண்டறிவதற்கு ஹரப்பா பகுதியில் வழங்கும் இடப் பெயர்கள் உதவக்கூடம் என்று அஸ்கோ பர்ப்போலோ நம்புகிறார். இந்திய ஊர்ப் பெயர்களை குறிப்பாகத் தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடங்கிய பாகிஸ்தான் மற்றும் அதன் மேற்கில், வடமேற்கில் உள்ள ஆப்கனிஸ்தான், ஈரான், இராக், அஜர்பைஜான், துருக்மினிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊர்ப் பெயர்களோடும் மேலும் இந் நாடுகளின் ஊர்ப் பெயர்களை திராவிட மொழி இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையதாகிய சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இடப் பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களோடும் கணிப்பொறியின் துணை கொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இந்த ஒப்பாய்வு இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.ஒருபுறம், சிந்து சமவெளிப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப் பெயர்கள் தற்போது தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப் பெயர்களை அச்சுமாறாமல் அப்படியே நினைவுபடுத்துகின்றன.அதுமட்டுமன்றி, அவ் வடமேற்குப் புலத்தில், சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின், பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குள்பட்ட பகுதிகளின் பெயர்களை மட்டுமன்றி பல்வேறு பழந்தமிழக் குடிகளின், மன்னர்களின் பெயர்களையும், குடிப்பெயர்களையும், வேளிர், அதியர் மற்றும் பல குறுநிலக் குடிகளையும் குறுநிலத் தலைவர்களின் பெயர்களையும் அப்படியே நினைவுறுத்துபம் இடப் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. மறுபுறம் தமிழகத்தில் இன்றும்கூட சிந்துவெளி இடப் பெயர்களுடன் ஒப்பிடத்தக்க இடப் பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன், ஏராளமான சிந்துவெளி மற்றும் வடமேற்குப் புலப் பெயர்கள் தமிழகத்தில் வாழும் பழங்குடிகள் மற்றும் வேளாண்குடிகளின் இடப் பெயர்களாகவும், குலப் பெயர்களாகவும், குடிப் பெயர்களாகவும் விளங்குகின்றன. இவை, சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்பிற்கு புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை.சிந்து சமவெளி நாககத்தின் திராவிட, மிகக் குறிப்பாகத் தொல்தமிழ்த் தொடர்பை, சிந்து, ஹரப்பா பகுதிகளிலும் அதற்கு அப்பாலும் வழங்குவது இடப் பெயர்களைக் கொண்டு நிறுவுவது இயலும். குறிப்பாகத் தமிழக, கேரளப் பகுதிகளில் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் அகழாய்வுகளும் அவை தரும் தரவுகளும் சிந்துவெளி திராவிடத் தொடர்புக்கு சான்றளிக்கின்றன.


இக்கட்டுரையாளர் தரும் தரவுகள் சில:ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் அச்சுமாறாமல் அப்படியே ஒலிக்கப்படும் பெயர்கள் வடபுலங்களில் உள்ளன.இப்பகுதிகளில் வழங்கும் அரங், கண்டீர், கவிர், குரால், மாறோக், மாந்தர், முதிரா, தொண்டக் என்ற இடப்பெயர்களுடன் அம் என்ற விகுதியைச் சேர்த்தால், சங்க இலக்கிய இடப்பெயர்களான அரங்கம், கண்டீரம், கவிரம், குராலம், மாறோக்கம், மாந்தரம், முதிரம், தொண்டகம் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்யலாம்.கடலுள் மூழ்கியதாகக் கூறப்படும் பஃறுளி ஆற்றின் பெயர் பக்ரோலி என்ற ஊரின் பெயராக இருப்பதைக் காணலாம். 


---------- நன்றி தினமணி (26.06.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]