வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, June 28, 2010

நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று திமிரோடு பேசும் நாக்குகள் அறுந்து வீழும் வண்ணம் சமூகநீதியின் விளைச்சல் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

1916-_இல் சர்.பிட்டி தியாகராயர் அவர்களால் அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை நன்றியுள்ள பார்ப்பனர் அல்லாதார் நெஞ்சில் பசுமையாக நிலை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டிய மகத்தான ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாகவும் பல உண்மைகள் அதில் வெளிப்படுத்தப்-பட்டு இருந்தன. பிரத்தியட்சமாக கல்வி வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் அல்லாதாரின் பரிதாப நிலை என்ன என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டுவதாகவும் அது அமைந்திருந்தது.
அந்த அறிக்கையைக் கண்ட இந்து கூட்டம் எரிச்சல் அடைந்தது. தங்-களுக்கு இடையூறு ஏற்படப் போகிறது என்பதை உணரவும் செய்தது.

இந்து ஏடு எழுதியது. It is with much pain and surprise that we perused the document மிகவும் துயரத்துடனும் ஆச்சரியத்-துடனும் அந்த ஆவணத்தை ஆராய்ந்-தோம் என்று இந்து எழுதியது என்றால் அந்த ஆவணத்தின் வீரியத்தை விவரிக்கவும் வேண்டுமோ!

1928-இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக வந்த எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை _ பார்ப்பனர் அல்லாதோர் வயிற்றில் பால் வார்த்தது - _ சமூகநீதி பயிர் தமிழ் மண்ணிலே செழித்தோங்க நடவு மேற்கொள்ளப்-பட்டது. இடையிடையே எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள் _ முதுகில் குத்துகள்!

இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற வாளுக்குக் கிடைத்த முதல் பிரயோகம் தமிழ்நாட்டின் வகுப்புவாரி உரிமை மீதுதான். தந்தை பெரியார் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வரும்படி நிர்பந்தித்-தார் _ வெற்றியும் பெற்றார்.
ஆச்சாரியார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்; வழக்கம் போல தமது குருநா-தரான மனுவின் நூல் பிடித்து, சென்னை மாநிலத்தில் இருந்து வந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். குலக்கல்வித் திட்டம் என்ற நவீன வருணா சிரமத்தைத் திணித்தார்.
வாபஸ் வாங்குகிறாயா? அக்ரகாரம் பற்றி எரிய வேண்டுமா? என்ற தந்தை பெரி-யார் அவர்களின் எரிமலைக் குரலின் காரணமாகத்தான் ஆச்சாரி-யார் பதவியைத் துறந்து ஓடினார். அன்று விரட்டப்பட்டவர் (1954) கடைசி வரை அரசியலில் தலையெடுக்க முடியாத நிலையைத் தந்தை பெரியார் உருவாக்கினார்.

பச்சைத் தமிழர் காமராசர் தந்தை பெரியாரால் கண்டு எடுக்கப்பட்ட வயிரமாகும். கல்வி சகாப்தம் காமராசர் காலத்தில் தொடங்கப்பட்டது. கல்விக் கண்ணைத் திறந்த ரட்சகர் என்று உச்சி மோந்தார் தந்தை பெரியார். அவரைத் தொடர்ந்து திராவிட இயக்க ஆட்சியும் கல்விப் பயிரை வளர்த்தது.

அவ்வப்பொழுது இடையில் ஏற்-படும் தடைகளைத் தவிடு பொடியாக்-கிய தடந்தோள் திராவிடர் கழகத்திற்கு இருந்து வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பிற்படுத்தப்-பட்-டோருக்கு இருந்து வந்த இட-ஒதுக்கீடு அகில இந்திய அளவில் அம-லுக்கு வர தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடியது.

42 மாநாடுகளையும் 16 போராட்டங்-களையும் அது நடத்தியது. ஒரு சமூக-நீதிக்காவலரை - _ வி.பி.சிங் அவர்களை அடையாளம் கண்ட பெருமையும் கழகத்திற்கே உரியது.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் அனுபவித்து வருகின்-றனர். முதல் தலைமுறையாக பட்டதாரியா? இதோ சலுகைகள்என்று வாரியிறைக்-கும் வள்ளலாக மானமிகு முதல்வராக கலைஞர் அவர்கள் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

தகுதி, திறமை எங்களுக்கே உரித்தானது என்று மார்தட்டியவர்கள் இன்று மலைத்து நிற்கிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் இமயத்தின் உச்சிக்கே சென்று சாதனைக் கொடியைப் பறக்க விடக் கூடிய வர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 2009_ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைபற்றிய புள்ளி விவரம் இதோ:

திறந்த போட்டிக்குள்ள இடங்கள் 460
இதில் பிற்படுத்தப்பட்டோர் 300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72
தாழ்த்தப்பட்டோர் 18
முசுலிம்கள் 16
முன்னேறியோர் 54

இதில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்-பெண்கள் வாங்கியோர் 8 பேர்கள். இதில் பிற்படுத்தப்பட்டோர் 7 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1..

இவ்வாண்டு (2010) பொறியியல் கல்-லூரி சேர்க்கையில் முதல் 10 இடங்களைப் பெற்றோர் (200-க்கு 200) பத்து பேர்.
 அதில் பிற்படுத்தப்பட்டோர் 7
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3
(இதில் பெண்கள் இருவர்)

எவ்வளவு பெரிய மாற்றம் _ மகத்தான மாற்றம்! அன்று நாற்று நடவு _ இன்று மனங்குளிரும் மகசூல்!

இடஒதுக்கீடு என்பது ஜாதியை வளர்க்கும் ஏற்பாடு என்று கத்திப் பார்த்தனர். தகுதி போய்விடும், திறமை தீய்ந்து போய் விடும் என்று தீக்குழியில் விழுந்தது-போல குதித்தார்கள்.

இடஒதுக்கீடு வந்ததால் கல்வி வளர்ந்தது; ஒரு பக்கம் காதலும் மலர்ந்தது -; அதன் மூலம் இன்னொரு பக்கம் ஜாதிக்கும் சவக்குழி வெட்டப்-பட்டுக் கொண்டு வருகிறது.

தகுதி போய்விடும் _ திறமை போய்-விடும் என்பதெல்லாம் மாய்மாலக் கூச்சல்! வாய்ப்புக் கொடுங்கள் சாதித்-துக் காட்டுகிறோம் என்றனர் ஒடுக்கப்-பட்ட மக்கள். இதோ சாதித்தும் காட்டி விட்டனர். என்றாலும் மக்கள் தொகை எண்-ணிக்கைக்கு உகந்த இடங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கிராமப் பகுதிகளில் இன்னும் ஏமாற்றம் தான். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றாலும் அது நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கிறது. அதனு டைய அடையாளங்கள்தான் இந்த சாதனைகள்!
இலக்கை அடைவோம்!

அதுவரை சமரசங்களுக்கு
இடம் இல்லை,
இல்லவேயில்லை.
வாழ்க பெரியார்!
வெல்க சமூகநீதி! 

---------- நன்றி விடுதலை ஞரயிருமலர் (26.06.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]