வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, June 01, 2010

தனியார் தொ(ல்)லைகாட்சியின்..நாளும் (சீரழிப்பே) நமதே

நான் தொலைக்காட்சியே அதிகமா பார்க்குறது கிடையாதுங்க. இந்த வாரம் எதிர்பாராத விதமா ஞாயிற்று (30.05.2010) கிழமை பக்கத்து வீட்டுல தொலைகாட்சியில்  இருந்து வர சில முற்போக்கு கருத்துகளை கேட்டதும் நானும் அந்த தனியார் அலைவரிசையை கண்டு பிடித்து அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன், நிகழ்ச்சி பேரு நாளும் நமதே (சீரழிப்பே). இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் தோழர் மதன் பாபு.

ஒரு பக்கம் சாமியார், மூடநம்பிக்கை மற்றும் ஆசிரமம் பற்றி அக்கிரமங்களையும் அதில் இருந்து எப்படி சாதாரண மக்கள் வெளியேற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்த திராவிடர் கழகத்தின் சார்பில் பட்டிமன்றம் ஊர் ஊரா நடத்திகிட்டு வரோம். இங்கே இந்த அருமை தொலைக்காட்சி நண்பர்கள் மூடநம்பிக்கைக்கும், சாமியாருக்கும் ஆதரவாக கொடி பிடிக்கிறார்கள்.

இந்த நாளை நமதே என்கிற நிகழ்ச்சியில் ஏராளமான பிஞ்சுகள் அதுவும் பெண் பிள்ளைகள் அமர்ந்து இவர்கள் பேசுவதை கேட்கிறார்கள். அதில் எப்படி பேசவேண்டும் என்று கூட தெரியாமல் தோழர் மதன் பாபு, பேசுபவர்க்கு ஏதோ மறுப்பும் அல்லது நிகழ்ச்சி சுவாரசியமா நடு நிலையா இருப்பதா நினைச்சுகிட்டு ஏதோ வாய்க்கு வந்தேதேல்லாம் பேசி, சாமியார்களை அவர்கள் சாமியார்கள் அல்ல என்றும் , ஆன்மிகம் போதிக்க ஆசிரம் வச்சு நடத்தி மிகப் பெரிய திறமைசாலிகளாக மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றும் பிதற்றுகிறார்.

அந்த நிகழ்ச்சியில் ஒரு தோழர் அவருடைய பேச்சில் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அது என்ன என்றால், பால் கிடைக்காமல் தவிக்கும் ஏராளமான குழந்தைகள் இந்த நாட்டில் இருக்கும் போது கல்லுக்கு பாலபிசேகம் தேவையா? லிட்டர் கணக்கில் பாலை அந்த கல்லில் ஊற்றி வீணடிக்கின்றனர் என்றார். அதற்க்கு திரு மதன் பாபு, நீங்க ஏன் அதை கல்லுல ஊத்தி வீனடிக்குறதா பார்குறிங்க. அங்கேதான் சமத்துவம் இருக்கு. அந்த பாலை வாங்கி எல்லோரும் ஒற்றுமையா பிரசாதமுன்னு சாபிடுறோம் அப்படி என்றாரே பார்க்கலாம். என்ன அறிவு கூர்மை அவருக்கு. அமாம் அவர் சொல்லுவதை போல கிருத்துவர்,இஸ்லாம் என்று அணைத்து சகோதரர்களும் தானே அந்த கல்லிலிருந்து கழுவி வரும் அழுக்கை சமதர்மம் என்று வாங்கி நக்குறோம். கொஞ்சமாவது யோசிச்சு பேசுறார்களா?  இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.

மேலும் அந்த இளைஞர், திரு மதன் பாபு கூறிய அந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து இன்னொரு கருத்தையும் வைத்தார்....அந்த பாழாய் போன பாலாபிசேகத்தின் போது வெளியில் வரும் அந்த அழுக்கடைந்த பால் சாலையில் ஓடி அதில் அவர் ஊர் கிராமக்களே வழுக்கி விழுந்து அடிபட்டதையும் சொன்னார். அதற்கும் திரு மதன் பாபு அவர்கள் என்ன சொல்லுகிறார் என்றால், மங்களூர் விமான விபத்து நடந்து விட்டது என்பதற்காக விமானத்தேயே மறந்து விட முடியுமா? ஆக என்ன அறிவாளித்தனம். குலவி கல்லுக்கு வக்காலத்து வாங்க ரைட் சகோதரர்கள் கண்டு பிடிச்ச விமானமே வேணுமா? வேணாமுன்னு? ஒரு உதாரணம். வெட்கமாவே இருக்காது போலிருக்கு இந்த மாறி பேச. ஏதோ காசு வந்த போதும், நாம நடுதுற நிகழ்ச்சி பிரபலம் ஆனா போதும். எவன் எக்கேடு கெட்டு போன என்ன. இப்படி இருப்பவர்கள் அந்த மாறியே பேசிட்டு போகட்டும் அப்புறம் எதுக்கு இடை இடையிலே அத முற்போக்கு நிகழ்ச்சி மாறி காண்பிச்சு ஏற்கனவே எது பகுத்தறிவு, எது மூடநம்பிக்கை ன்னு தெரியாம குழம்பி போயே இருக்குற மக்களை ஏமாத்தி குழப்புறிங்க? என்பது தான் நம்மை போன்றவர்களின் கேள்வி.

நிகழ்ச்சி தலைப்பை பாருங்கள் நாளும் நமதே...அப்படின்னா என்றைக்கும் நாம் ஆசிரமம்,சாமியார் மற்றும் மூடநம்பிக்கை எதையும் விட்டு வரக்கூடாதுன்னு இந்த தலைப்பை வச்சு இருப்பார்கள் போலும். நாளும் சீரழிப்பே என்றால் நன்றாக பொருந்தும்.

ஏதோ நிகழ்ச்சி நடத்தும் இயக்குனர் சொல்லுறாரே என்று அதை தன்னுடைய கருத்து மாறி தெரிவிப்பார்கள் போலும். நிகழ்ச்சியை பிரபலப் படுத்த வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசி பதிவு செய்யலாம் என்று நினைப்பார்கள் போலும். மேலும் அந்த நிகழ்ச்சியில் ரமண மகரசி,அரவிந்தர் ன்னு அவர்களை பற்றி ஆகா ஓகோ என்று ஒரே புகழ் மாலை. அவர்கள் எல்லோரும் மக்களுக்கு வழிகாட்டிய பெரியவர்கலாம்.என்ன கொடுமை இது. பிடிபடுற வரைக்கும் நல்ல சாமியார் ..பிடிபட்டா கெட்ட சாமியார். அவர்கள் காலத்தில் தொலை தொடர்பே அதிகம் இல்லாத காலம். அதனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்று இவர்களுக்கு என்ன தெரியும். அதனை வைத்து இப்படி ஒரு பிரச்சாரம்.

அதுவும் இவர்கள் இந்த மாறி நஞ்சை விதைத்து பேசுவது  ஆயிரக்கணக்கான இளம் பெண் பிள்ளைகள் எதிரே வைத்துக்கொண்டு என்பதை மட்டும் அறவே மறந்து விட்டார்கள். ஏற்கனவே பெண்கள் தான் அதிகமாக இந்த ஆசிரமம், மூடநம்பிக்கை என்று எளிதில் போய் மாட்டிக்கொண்டு வர முடியாமல் தான்கொன்னா துயரத்தை அனுபவிக்கிறார்கள். இதில் இவர்கள் இப்படி பேசுவது இன்னும் அந்த பெண் குழந்தைகளுக்கு எரியுற நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவது போலத்தான். அதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் அந்த இளைங்கர் பகுத்தறிவு கருத்தை சொல்லும் போது ஒருவரும் கர ஓசை எழுப்பவில்லை அதற்க்கு மாறாக இந்த பெண் பிள்ளைகள் மதன் பாபு மறுப்பு பேசும்போது கர ஒலி எழுப்புகிறார்கள்.

இப்படி இந்த சமுகத்தை அழைத்துக்கொண்டு போனால், நித்தியானந்தர்கள்,தேவனாதன்கள்,பிரேமானந்தாக்கள்,சுருட்டு சாமி, பீடி சாமி என்று யாரும் உருவாகாமல் தடுக்க முடியாது. இவர்கள் அனைவரும் இது போன்ற ஊடகத்தினால் நன்றாக பாதுகாக்கப்படும் வரை சாமியார்களை, ஆசிரமங்களை ஒழிப்பது கேள்விக்குறியே?

ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும் இவர்கள் பலூன் என்றால் திராவிடர் கழகம் குண்டூசி போன்றது. ஒரே ஓட்டை தான். நினைவில் கொள்ளுங்கள் தோழர்களே.

                                                                                                                                                                                                       

1 comment:

Unknown said...

அப்புடியே சன் டி.வீ, கலைஞர் டி.வீ இவற்றில் வரும் பல்லாயிரம் பகுத்தறிவுத் தோரணங்களைப் பற்றியும் ஒரு பதிவு போட்டால் நல்லா இருக்கும்ல.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]