Friday, June 04, 2010
இன்றைய பெண்களின் நிலையும் பெண்ணுரிமையும்...
இக்காலத்து பெண்கள் உண்மையிலேயே பெண்ணுரிமை அடைந்து விட்டார்களா? என்ற கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.இந்த கேள்வி ஏன் என்னுள் எழும்புகிறது என்றால், நான் பார்க்கும், பழகும் நிறைய பெண்கள் முழுமையான பெண் அடிமைதனத்திலிருந்து வெளியில் வரவில்லை என்பதனை வைத்துதான். ஒரு சில பெண்களுக்கு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சுதந்திரம்கொடுத்து பெண்ணடிமை தனத்திலிருந்து வெளியில் வா என்றாலும் அவர்கள் வருவதாக தெரியவில்லை.
இன்றைய பெரும்பாலான குடும்பங்களில் மூடநம்பிக்கை, பிற்போக்குதனத்துக்கு முதல் காரணம் இன்றைய தலைமுறை பெண்களே.குடும்பத்தில் இருக்கும் அனைவரும் (ஏன் பழங்காலத்து பெண்கள் கூட) சில சடங்கு சம்பிரதாயங்களை விட்டு வந்தாலும் இன்றைய இளம் பெண்கள் அதனை விடுவதாக இல்லை. இக்காலத்து இளம் பெண்கள் எதனை அவர்கள் முன்னேற்றம் என்று நினைகிறார்கள் என்றால்,ஆடையில் சில மாற்றத்தையும், தான் படித்து வேலைக்கு போவதனையும் மட்டுமே.
நான் படித்த பல பெண்களை பார்கிறேன். அவர்கள் ஏன் படித்தார்கள் என்று கூட தோன்றுகிறது.என்னதான் படித்து உயர் பதவியில் வந்தாலும், ஜீன்ஸ் மற்றும் T -ஷர்ட் அணிந்து வந்தாலும் எந்த பெண்களும் காலில் மிஞ்சு போடுவதையும், கையில் முடி கயிறு கட்டுவதையும், கழுத்தில் தாலி அணிவதையும் விடுவதே இல்லை. இது மட்டும் அல்ல...ஆசிரமம்,சாமியார்,வரலட்சுமி நோன்பு, கிருஷ்ண லீலை,கொலு வைப்பது என்று போகும் பெண்கள் யார்? படித்த பெண்கள் என்றும் கணினியில் வேலை பார்த்து வெளிநாட்டிற்கு சென்று வந்தேன் என்று தன்னை பிரபலபடுத்தி கொள்பவர்களே.இவர்களே எல்லா சாஸ்திர,சம்பிரதயத்திர்க்கும், மூடநம்பிக்கையில் மூழ்குவதற்கும் முதலில் நிற்பவர்கள்.
இப்படி பட்ட பெண்கள் முன்னேற்றம் என்றால் பிசா கார்னருக்கும், KFC, McDonald's போன்ற இடங்களுக்கு போர்ட் Ikon மகிழுந்தில் சென்று அவசர உணவை அருந்துவதையும்.....சத்தியம்,PVR,Inox போன்ற இடங்களுக்கு சென்று படம் பார்ப்பதையும் வைத்து தான் மிகப் பெரிய முன்னேற்றப் பாதையில் செல்லுவதை போலவும் பெண்ணடிமைத்தனத்திளிருந்து வெளியில் வந்து உலவுவதைப் போலவும் நினைத்து கொள்ளுகிறார்கள். முதலில் இவர்கள் கற்க வேண்டியது நாம் இன்னும் பதினேழாம் நூற்றாண்டின் வாசலில் தான் இருக்கிறோம் இன்னும் இந்த நூற்றாண்டில் அடையவேண்டிய முன்னேற்றத்தை அடைவில்லை என்பதைத் தான்.
எனவே இன்றைய இளம் பெண்களாகிய நீங்கள் இந்த சாஸ்திர,சம்பிரதாய,மத,சாதி போன்றவற்றிலிருந்து வெளியில் வந்தால் உங்களை சுற்றியுள்ள சமூகமும் , உங்கள் குடும்பமும் நிச்சயம் பகுத்தறிவு பெற்று முன்னேறும் என்பதில் சந்தேகேமே இல்லை. அறிவு ஆசன அய்யா தந்தை பெரியார் சொல்லுவது போல ஒரு பெண்ணானவள் கல்வி பயின்றால் அந்த குடும்பத்தில் இருக்கும் குழந்தையும் சேர்த்து பயன் பெரும் என்று. எனவே நீங்கள் எவளவு முற்போக்குடனும், பகுத்தறிவுடனும் இருகிரீர்களோ அவளவுக்கு இந்த சமூகமும் முன்னேற்றம் அடையும்.பணம் சம்பாதிப்பது மட்டும்
பெண்கள் முன்னேற்றம் இல்லை. பணம் சம்பாதிப்பதும் பெண்கள் முன்னேற்றத்தில் ஒன்று என்பதனை உணருங்கள். சிந்திப்பீர்களா பெண்களே!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment