வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, June 20, 2010

பார்ப்பனிய எதிர்ப்பை எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான்

முதலில் இதனை பற்றி எழுதவே கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் இணையத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை பற்றி  நிறைய கீழ்த்தரமான விமர்சனகளை பார்த்த பிறகு எழுத நேர்ந்தது.

பெரியாரின் குடியரசு தொகுதிகளை சில குழுக்கள் வெளியிடலாம் என்று இந்த உயர்நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்தது தான் தாமதம்...யாராரு என்ன என்ன விமர்சனம் செய்யணுமோ அனைவரும் விமர்சனம்...அதுவும் இந்த பார்ப்பன ஏடுகளுக்கு படு குசி. அதே போல facebook,twitter ப்ளாக் பூரா ஒரே விமர்சனம். அதில் ஒரு சிலர் கழகத்தை விட்டு சென்ற, கழகத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியில் அனுப்பப்பட்ட துரோகிகள். அவர்கள் தான் திராவிடர் கழகத்தின் தலைமையை ஒழிக்க இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டுகிரார்கலாம். அடையாளம் தெரியாமல் இருந்தவர்களை அடையாலப்படுத்தியவரேயே....அழிக்க ஆதரவு திரட்டுகிரர்கலாம். இன்றைக்கும் அவர்களுக்கு பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பு திராவிடர் கழத்தின் தலைமையினால் தான் என்பது  புரியுமோ என்னவோ?. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடலில் சொன்னதை போல...பார்ப்பனர்களுக்கு யாரை ஆதரித்தால் அவர்களுக்கு பாதகம் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் ஒரு சில பார்ப்பன ஊடகங்கள் ஏதோ பெரியாரின் குடியரசு தொகுப்பை வெளியிட்டதில் மகிழ்ச்சி போன்று கொடி பிடிக்கின்றன. அவர்களுக்கு அந்த குழுக்களினால் எந்த பாதகமும் வந்து விட போவதில்லை.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்ப்பு வந்த அன்றே ஒரு அறிக்கையும் கொடுத்தார்கள். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பெரியாரின் நூல்களை (குடியரசு மட்டுமல்ல...அணைத்து பெரியார் நூல்களும்) வெளியிடலாம் என்று. இதில் என்ன தவறு. பெரியார் யாரிடம் ஒப்படைத்து சென்றாரோ அவரிடம் அனுமதி பெற்று வெளியிட வேண்டியது தானே? இதோ பெரியார் அவர்கள் (6.6.1964)-விடுதலையில் எழுதிய தலையங்கம்...

வீரமணி அவர்கள்  M.A.,B.L. பட்டம் பெற்றவர்.நல்லா கெட்டி கார தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர்.அவர் MA BL பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கிய உடன் மாதம் ரூ 300,ரூ400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலயே மாதம் ரூ 500 ரூ 1000 தொழில் வளம் பெற்று வரும் நிலயை கண்டவர் .இந்த நிலையில் அவர் ஒரு சாதரண ஏழை குடும்பத்தை சார்ந்த வராகவும் இருந்து வந்தவர் .இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொது தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் ,இது போல மற்றொருவர் ,வந்தார் வருகிறார்  வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லல வேண்டும் .அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன் படுத்தி கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியமையாகவே முடியும்  என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்க தலைமை பிரச்சாரகராகவும்,நமது "விடுதலை " ஆசிரியராகவும் பயன்படுத்தி கொள்ள முன்வந்து ,அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் "விடுதலை"யை ஒப்படைத்து விட்டேன் .

"விடுதலை " பத்திரிக்கையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!
இனி "விடுதலை"க்கு உண்மையான பிரசுர கர்த்தாவாகவும் ஆசிரியராகவும் வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார் .

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் "விடுதலை"யை நான் நிறுத்தி விட போவதை அறிந்த சிலர் "விடுதலை "பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் ஒன்றுக்கு 1000  ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டு கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்கு கொடுப்பதை விட நிறுத்தி விடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லாரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்தது கொண்டிருக்கும்  நிலையில் ,இயக்க நலத்தையே குறியாக கொண்டு பொறுபேற்க முன்வந்தார் .ஆகவே "விடுதலை"யின் 25 ஆம் ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை "விடுதலை" நடப்புக்காக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி "விடுதலை"யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்க படுகிறது .

இதற்க்கு பொதுமக்கள் இல்லாவிட்டாலும் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ,நம் மக்களிடம் எந்த குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது .கிடையவே கிடையாது .அது இல்லாவிட்டலும் நம்பிக்கை துரோகம் செய்யாமலாவது இருப்பது என்பது அரிது மிக மிக அரிது .ஆதலால் விடுதலை க்கு பொது மக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை .இது எனக்கு அனுபவம் .

ஆனால் இயக்க தோழர்களை ,எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கு இயக்கத்துக்கும் கத்தி தீட்டும் ,தீட்டி வெளியேறிய தோழர்களை தவிர்த்து ,மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் எந்த பலனும் அடயாமல் அவர்களது பணத்திலேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தை செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்க தோழர்களை வேண்டி கொள்கிறேன் .

விடுதலை பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்லா நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால் ,இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தா தாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும் .இதற்க்கு பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன் .ஓர் ஆண்டுக்குள் மேலும்  5000 சந்தா பெருகி ஆகவேண்டும் .அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்து கொள்ளலாம்.இப்பொது உடனடியாக 2 மாதத்தில் 2500 சந்தாக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் .இன்று நமது இயக்கம் இதுவரை இருத்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது .இது உண்மை என்பதை மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரீட்சை .

ஆதலால் நான் வீரமணி அவர்களை பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு விடுதலை யின் 25 ஆவது ஆண்டில் அதை மறு பிறவி எடுக்கும்படி அதை அவரிடம் ஒப்புவிக்கிறேன் .

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி ,எங்களை பெருமை படுத்தி விடுதலை யை வாழவைத்து வீரமணி அவர்களையும் உற்சாக படுத்தும்படி கேட்டு கொள்கிறேன் .

நாளை முதலே தோழர்கள் இந்த காரியத்தில் இறங்கி செயல் முறையில்  ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தாக்கள் சேர்த்து தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டி கொள்கிறேன் .
நமது இயக்கம் நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள் .இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள் .

அதிகாரிகளை ,அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை ,வியாபாரிகளை விவசாய பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள் .வேட்கபடாதிர்கள் .தமிழ் நாடு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய உணர்ச்சியையும் பரிச்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு வந்து விடாது .

ஆண்டு மாத காலம் 60  நாள்களில் 2500  சந்தா .தினம் 42  சந்தா ,13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காகள்) பொது வாக ஒரு மாவட்டத்திற்கு 200  சந்தாக்கள் வீதமாகும் .இது கூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறு பிறப்புக்கு  கைகூட வில்லை என்றால் நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி இந்த வேண்டு கோளை விண்ணப்பமாக தமிழ் நாடு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன் .  -விடுதலை(6.6.1964)

இதற்க்கு மேல என்ன வேணும். இப்படி சொன்னால், ஒரு சிலர் விவாதத்துக்கு வருகிறார்கள் விடுதலை மட்டும் தான் பெரியார் ஒப்படைத்தாராம்.குடியரசு அல்லவாம். என்ன அறிவாளித்தனம். குடியரசுக்கு மாற்று தான் விடுதலை. அதனை ஒப்படைக்கும் போது அப்புறம் குடியரசு யார் பொறுப்பு?. சரி இப்படி அனுமதி இல்லாமல் வெளியிட்டு நாளைக்கு பார்ப்பனர்களால் திரிபுவாதம் வந்தால் யார் பொறுப்பு? அப்போ பெரியார் திடல் தானே வரிந்து கட்டிகொண்டு வரவேண்டும்.

பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு தீனி போடத்தான் இது உதவும். மற்றபடி அய்யாவின் குடியரசை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவாது. உண்மையில் குடியரசு தொகுதிகளை வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க நினைபவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட மாட்டார்கள். பெரியாரின் கொள்கை வாரிசு என்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி தான். அதில் ஒரு மாற்று கருத்தும் கிடையாது. பெரியாருக்கு எந்த இடையூறு வந்தாலும் முதலில் தட்டி கேட்பவர் அவராகத்தான் இருப்பார். பார்ப்பனிய எதிர்ப்பை இன்றைய சூழலில் எடுத்து செல்ல தகுதியுள்ள ஒரே தலைமை திராவிடர் கழகத் தலைமைதான். மற்றவர்கள் பார்ப்பன ஊடகங்களின் முன்னர் தவிடு பொடியாகி காணாமல் போய்விடுவர். எச்சரிக்கை!
                                                                                                                                                                     

5 comments:

ரம்மி said...

சமாளிப்பில் சாரமில்லை! சகோதர யுத்தம் நடத்திய வீரமணி அவர்களுக்கு நீதிமன்றம் அளித்த சாடலுக்கு, மற்றவரை திட்டி பயன் என்ன?

சங்கமித்திரன் said...

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நிறைய பயன் அய்யா

Thamizhan said...

பெரியாரின் கொள்கைகளை உண்மையாகப் பரப்ப நினைப்பவர்கள் எந்த விதப் பலனும் எதிர்பார்க்காமல்,தங்கள் கைகளிலிருந்து செலவு செய்து பரப்பிக் கொண்டுதான் வருகிறார்கள்.
பலனையோ,பதவியையோ எதிர் பார்ப்பவர்கள் தான் பல்லிளித்து விடுகிறார்கள்.காலம் பலரைக் காட்டி விட்டது.
நேர்மையாகப் பெறாமல் திருட்டுத் தனமாகச் செய்தவர்கள் பெருமை தேடிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.
தமிழின வளர்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் பெரியாரைப் பயன் படுத்தலாம்.தங்கள் வளர்ச்சிக்குப் பயன் படுத்தியவர்களைக் காலம் கட்டாயம் அடையாளங்காட்டி விடும்.
தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது,எந்த நன்றியோ பாராட்டுதலோ எதிர்பார்க்காது தந்தை பெரியாரின் மூளையாகச் செயல் படும் ஒரு தானைத் தலைவனை எத்தனை ஊளையிட்டுப் பார்த்தவர்களும் ஏமாந்துவிட்டார்கள்.
எதிரிகளுக்கு இடங்கொடுக்காமல் பெரியாரைக் கடைப்பிடித்தல் அனைவர்க்கும் நலம்.இல்லை சரித்திரத்தின் வடுக்களில் இன்னொரு வடு வாகத்தான் முடியும்.

சங்கமித்திரன் said...

/*********
தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது,எந்த நன்றியோ பாராட்டுதலோ எதிர்பார்க்காது தந்தை பெரியாரின் மூளையாகச் செயல் படும் ஒரு தானைத் தலைவனை எத்தனை ஊளையிட்டுப் பார்த்தவர்களும் ஏமாந்துவிட்டார்கள் **********/

இந்த துரோகிகள் நிலையும் அதேதான்...கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சபோகிறது. இருந்தாலும் இவர்களுடன் ஒப்பிட்டு தமிழர் தலைவரின் நிலையை தாழ்த்த எனக்கு மனமே இல்லாமல் தான் இந்த பதிவை போட நேர்ந்தது.

ரம்மி said...

தொடரட்டும் உங்கள் பகுத்தறிவு, தனி மனித வழிபாடு! கொடுத்த காசுக்கு மேலேயே கூவறாங்கப்பா!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]